பவியும் நானும் !!! Goldenvimal !!!

 பவியும் நானும் !!! எல்லோரும் இன்புற்று இருப்பதன்றி
வேறொன்றறியேன் பராபரமே !!!


பவி  மிருதுலாஸ்ரீ மாறிய கதை !!!!


உன்னைப் போலொரு பெண்பிள்ளை வேண்டுமடி பேரழகி; அதற்காகவேணும் என்னை நீ காதலி!
---
என்னை மட்டுமே காதலிக்க வேண்டுமென நீ இட்டகட்டளையை ஏற்க இயலவில்லை! ஏனோ, உன்னை போலவே ராட்சச்சியாய் உன் மகள்!
---

மின்னும் சின்ன நட்சத்திரமே. நீங்கள் எவ்வளவு நேசிக்கப்படுகிறீர்கள் என்று உங்களுக்குத் தெரியுமா? எங்கள் பெண் குழந்தையை அறிமுகப்படுத்துகிறோம்…
---
அப்பா என்னும் ஸ்தானத்தை அடைந்தேன்
உன் பிறப்பால் !!

பொறுப்புகள் பல உன்னுடன் சேர்ந்து சுமந்தேன் என் மார்பில் .!!

நீ பிறந்த நாள் முதல் நீ என் மகள் என்று உரைக்க பொறாமையும் வளர்கிறது என்னுள்ளே!!

சப்தம் இன்றி மாற்றம் ஏதும் இன்றி மாறினேன் தாயாய் உன்னை பார்கையில்!!!!
---
தந்தையின் போராட்டங்கள் மகளின் வாழ்க்கையை வண்ணமாக்குகிறது!
---
தான் பெற்ற மகளை மட்டுமல்ல,
மகளின் பெயரையும் சேர்த்து பாதுகாக்க!!
தங்களின் பெயரை பின்னால் துணை
அனுப்புகிறார்,தந்தை!பிறந்ததும்
ஒரு வெள்ளைத் துணி
ஏந்திக் கொடுத்தார்கள்
என் இளஞ்சிவப்புத் தேவதையை...
அதன் மூடிய இமைகளுக்குள்
இரு விழிகள்
அசைவது போலத்தான் இருந்தது
அதுவரையில் என் இதயம்...!
---

சிறந்த தகப்பன் என்பவன் தன் வாழ்க்கையில் சந்தித்த தடுமாற்றங்களையும், அனுபவங்களையும் தன் பிள்ளை சந்திக்க கூடாது என்று நினைப்பவன்.

---

உன் வயது தான் வளர அதனுடன் சேர்ந்து குறையதுடிக்கிறது என் வயது !!!

---

நீ தூங்கும் தலையணையாய் என் மார்பு மட்டுமே இருக்க துடிக்கிறேன் !!!

---

வருந்தினேன் மகளே உன்னை என் வயிற்றில் சுமக்காமல் ஒரு ஆணாய் பிறந்ததை எண்ணி

அவ்வலியை போக்கி தாய் ஸ்தானம் அடைந்தேன் அப்பா என்றழைத்து என் மார்பில் நீ துங்கும் தருணம்!!!!!

---

என் மகள் நீ என்று சொல்லாமல் உன் தந்தை நான் என்று சொல்ல கர்வம் கொள்கிறேன்!!!

---

இல்லை என்னும் சொல்லை நீ அறியாமல் வழிநடத்த விரும்பினேன் மகளே , உன் வாழ்கையை

ஒரு நல்ல தகப்பனாய்!!!

---

மகள் பிறந்ததும் புதிதாய் நடைப்பழக கற்றுக்கொள்கிறார் ஒவ்வொரு அப்பாவும்! அவள் கைகளை பிடித்தே!!

---

மகளின் எல்லா பிரச்சனைக்கும் உடனே தீர்வுகாணத் துடிக்கும் முதல் இதயம், அப்பா மட்டுமே!

---

ஆயிரம் கவலைகள் உள்ள தந்தையின் மிகப்பெரிய மகிழ்ச்சி தன் மகளின் ஒரே ஒரு சிரிப்பில் மறைந்துள்ளது!

---

என்றும் தன் இளவரசியிடம் தோற்றுப்போவதை விரும்புபவர், அப்பாதான்!

---

எழ நினைத்து தவறி விழும் குழந்தை,

கடந்து செல்லும் இரயிலுக்கு கைகாட்டும் சிறுவன்,

விரல்விட்டு நட்சத்திரங்களை கணக்கெடுக்கும் குழந்தை…

வயதோடு வளராமல் விட்டுப்போன

ஆகச் சிறந்த

நம்பிக்கைகள் இவைகள்…

---

பேரன்பின் முத்தப்பதிவுகளில் பதிந்தது அவள் வாசம் என்மீது…


அவள் வ(வா)சம் நான்…


---

தூக்கம் விழித்த

பாதி இரவுகளில்,


மகள் நெற்றி முத்தமிட்டு

மறுதூக்கம் செல்கையில்

அழகென்றாகிறது அவ்விரவு…

---

என் மகள் கோபத்தில் என் சாயல் தெரிவதாகச் சொல்கையில் தான் தெரிகிறது எவ்வளவான கோபக்காரன் நான் என்று…
---

எம் காதுகளுக்குள்  பண்பினள் இவளென எந்நேரமும் அமுதிசை கேட்கவே 


வரம்தர வேண்டும் நீ

---

உன் தாயின் கருவில் நீ ஜனித்தபோது இந்த உலகிற்கு என்னை அடையாளம் காட்டினாய்,


இந்த பூமியில் நீ பூத்த போது உலகை எனக்கு 

அடையாளம் காட்டினாய்,!


உனக்கு பெயர் சூட்டி என் கடந்தகாலத்தை அசை போட்டேன்,


உன் பெயருக்கு முன் என் பெயர் போட்டு என் பொறுப்புகளை உணர்ந்தோன் !


உன் மழலையில் என் மொழி தொலைத்தோன் !!!

---

ஊருகண்ணு

உறவுகண்ணு,


கோழிகண்ணு

கொக்குகண்ணு,


நாய்கண்ணு

நரிக்கண்ணு,


நோய்கண்ணு

நொள்ளகண்ணு,


கண்டக்கண்ணு

கள்ளக்கண்ணு,


அந்த கண்ணு

இந்த கண்ணு,

எல்லா

கண்ணும்

கண்டபடி தொலையட்டுன்னு


உன்ன

மூணு முற

துப்பச்சொல்லி

தெருவோரமா வெடிக்க வச்சேன்,

---

முன் விழுந்த இரட்டைப் பற்களின் வழியே கொட்டுகிறது முத்துக்கள் அவள் பேச்சுக்களாக…

---எல்லோருக்குமே நான் எப்போதும்

இன்னொருத்தியாகவே தெரிகிறேன்

அவருக்கு மட்டும்தான் நான்

அவராக தெரிகிறேன்..Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

👇🌎 Website Link's முக்கிய இணைப்புகள் 🌎👇