Sri,,, நினைவெல்லாம் நீ | www.goldenvimal.com
      **என்றும் அன்புடன் விமல் ** 98651-38410 ** 82203-03410 ** திண்டுக்கல் ** Goldenvimal ** www.goldenvimal.ml ** குருசாமி பிள்ளை சந்து ** திண்டுக்கல் ** வி.பரமேஸ்வரி & விமல் **  

நினைவெல்லாம் நீ

                                      Sri...
நினைவெல்லாம் நீ
♥♥♥
♥♥♥
1,
சிறு வீடு
ஒரு தோட்டம்,
சில பூக்கள்
ஒரு கட்டில்,,
வானில் நிலா!
அருகில் நீ !!
வா காதலிக்கலாம் !!!
♥♥♥
2,
நீ அருகில் இருந்தால்
நான் ஔிர்கிறேன் ,,
♥♥♥
3,
கோபம் வரும் போது
வேகமாய் வரும் நீ !
காதல் வரும் போது
வேகம் குறைப்பது ஏன் !?!
என்றென்றும் உனை காதலிக்க துடிக்கும்
காதலனும் கணவனுமாகிய
   நான் ...
♥♥♥
4,
என் காதலையும் மரியாதையையும்
காக்கும் பெறுப்பு உனது !!
உன் பெண்மையையும் மரியாதையையும்
காக்கும் பெறுப்பு எனது !!
   எனில் நாம்
கணவன் , மனைவி
♥♥♥
5,
என் காதலையும் மரியாதையையும்
காக்கும் பெறுப்பு உனது !!
உன் பெண்மையையும் மரியாதையையும்
காக்கும் பெறுப்பு எனது !!
   எனில் நாம்
கணவன் , மனைவி
♥♥♥
6,
 இதற்கு பெயர் சண்டை   அல்ல

ஊடல்,
நம்மை நாம் இன்னும் அதிகமாக நேசிக்க தூண்டும் உணர்ச்சி,,
♥♥♥
7,
நிஜத்தில் நீ
மனைவியான பின்பும்,
என் கனவிற்கு நீ
காதலியாய் மட்டும்
இருக்கிறாய் !!
♥♥♥
8,
உன் மீதும் தவறு இல்லை !
என் மீதும் தவறு இல்லை !!
 நம் மீதே தவறு , எனில்
நாம் இன்னும் புரிந்து கொள்ள வேண்டியவை ஏராளம்'
    நம்மில்
♥♥♥
9,
 நம்மில் வளரும் காதலும் ,
ஊடலும் ,
நம் ரகசியங்களை நமக்கு அறிமுகம் செய்யும்,
♥♥♥
10,
 அன்பே
நீ
வெட்கப்படும் தருணங்கள் ஒவ்வொன்றிலும் ,
உன் மீது
நான்
கொண்ட காதல்
மிக ஆழமாகிறது !!!
  அழகாகிறது !!!
♥♥♥
11,
  அழகே !
  நீ ஒரு
அக்ஷய பாத்திரம் ,
எவ்வளவு எடுத்தாலும் குறையவில்லை
உன்னிடம் உள்ள
       உன் !?!
♥♥♥
12,
பெயர் :-  N.S.விமல்
வகுப்பு :- காதல்
பிரிவு :- திருமணம்
பள்ளி :- பரமேஸ்வரி
முகவரி :- இதயம்
♥♥♥
13,
 கடவுள் நம்பிக்கை
  இல்லை எனக்கு !
இருந்தும் வேண்டுகிறேன் ,
என்னவளை இப்போது காதலிப்பது போதவில்லை
இன்னும் அதிகமாக காதலிக்க

வரம்
  வேண்டுகிறேன் !!
♥♥♥
14,
என்னவரின் திருட்டுப்பார்வையில்
 மயங்கினேன் ,, ஆனால்
இன்னும் எழவில்லை
        பரமு
♥♥♥
15,
அழகே !
உன்னைப்பற்றி யாரிடமும்
 நான் பேசுவதேயில்லை என்றேன்
நான் ,
ஏன் என்றாய் நீ '
கவிதைகளாய்த்தான்
சொல்கிறேன்
     நான் ,,,
♥♥♥
16,
நீ கொடுத்த
 அசைவ முத்தத்திற்கு
 பிறகு தான்
உலகின் மிகப் பெரிய
பரிசு
 முத்தம் என்று
 உணர்ந்தேன்,,
♥♥♥
17,
என்ன சுவை என்றே
தெரியவில்லை,
எப்போதும்
இனித்துக்கொண்டே இருக்கிறது
    உன் முத்தம் !!!
♥♥♥
18,
என்னவள் சொன்ன ஒரு வார்த்தை ,,
நீண்ட நாட்களாக நினைத்து , நினைத்து
  நான் ரசித்து சிரித்தது ,,
?
?
?
அது வந்து,,
  அது வந்து ,,
  அது
அது 
ஒன்னுமில்ல !!!!
♥♥♥
19,
இப்போது குவிந்த உதடுகள்
குவிந்தபடி இருக்க
முத்தமிட அருகில்
 நீ இல்லை !!!
♥♥♥
20,
அன்பே பயம் வேண்டாம்
 உனக்கு ,
  நான் கலியுக ராமன் ,,
♥♥♥
21,
மேலே காத்தாடி
 ஓடிக்கொண்டிருக்க
  கீழே
   கட்டிலில் நாம்
          மயங்கி கிடக்க ,,
          மோகத்தில் !!!
♥♥♥
22,
உன் வெள்ளிக் கொலுசில்
என் மனம் சிணுங்கிக்
கொண்டிருக்கும்
 அனுதினமும் ,,,
♥♥♥
23,
 அவன் கண்ணடித்தால்,
        நான் கஞ்சா அடித்தேன்,,
♥♥♥
24,
 23.08.84 ல்
     ராமன் பிறந்தான் ,
   திருவாதிரை , மிதுனம் ,
25.10.90 ல்
          சீதை 
       பூராடம் , தனுசு ,
♥♥♥
25,
 பஞ்சர் :-

     அழகே ,
         நீ சொன்ன
      ஒரு வார்த்தையில்
    பஞ்சரானேன் ,
     அது ,,,
            பிடிக்காமலா !?!
♥♥♥
26,
காதலியே ,
   கட்டழகே,
      கண்ணுக்குட்டியே ,
கவிதை எழுத ஆரமித்த
    கவியழகே ,
   காதல் கொண்டேன்
       வேடபட்டி
          வெள்ளக்குட்டியே !!!!
♥♥♥
27,
என்னிடம் கடைசி மூச்சு
இருக்கும் வரை

நான் சொல்லும் ஒரு வார்த்தை
   I love you
மாமா
♥♥♥
28,
என்னவரிடம் நான் தோற்றுப் போனது
 அவர் அழகில் அல்ல ,,
  அவர் என் மீது வைத்த பாசத்தில் !!
  நான் தோற்றுப்போனேன்

இன்னும் ஜெயிக்க முடியவில்லை !!!!
♥♥♥
29,
 அன்பே
 நீ என்னிடத்தில் சொல்ல தவறும்
 ஒவ்வொரு வார்த்தையிலும்
என் மரணம் என்னை
தொட்டு சொல்கிறது ,,
♥♥♥
30,
என் அன்பு
     கண்மனியே
    நான் சொல்ல தவறும் வார்த்தைகள் தெரிந்து செய்வதில்லை
சிறு மறதியால் தான்
  மன்னித்துக்கொள்
என் மான் குட்டியே !!!!
♥♥♥
31,
மல்லாக்க படுத்துறங்கும்
மாங்குயிலே !!
மன்னவன் மயங்கினேன் ,
உன் உறக்கத்தை ரசித்தவாரே !!!
♥♥♥
32,
வேடபட்டி வெள்ளகுட்டி
  உன் கருவிழி
என்னிடம்
 ஓராயிரம் கதை சொல்கிறது ...
♥♥♥
33,
கண்ணே நீ என் கண்ணத்தை
 கிள்ளும் போது தான்
      நான் கவிஞனாகினேன் !!!
♥♥♥
34,
கண்ணே நீ தாடி வைத்தால்
காட்ஸில்லா போல் இருப்பாய் !
♥♥♥
35,

மடியில் முடிய ஆசை
அதில்

முதலாமவர் :-
 3, வேடந்தாங்கல் பறவைகள் மடியில்
2, இரண்டாமவர் :-
   நைல் நதிக்கறையில்
1, என்னவளின் பூ மடியில்,,!!!
♥♥♥
36,
என்ன தவம் செய்தேன்,
 என்னவரை
கணவராய் அடைவதற்கு ,
இன்னும் என்ன தவம் செய்ய வேண்டும்..
ஏழேழு ஜென்மத்திலும்
இவரே கணவராய் அமைவதற்கு ....
♥♥♥
37,
விட்டு விட்டு துடிக்கும்
   இதயத்தில்

விடாமல் துடிக்கும்
      உன்
  நினைவுகள் , காதலியே  ,,
♥♥♥
38,
கவிஞர்கள் அனைவரும்
கண்ணுக்கு மை அழகு  என்பார்கள் ,
  இது வரை அது பொய் என்ற நான் ,,
    நானும் கவிஞனாய் ஆனேன் ,

ஆம்
     கண்ணுக்கு மை அழகு தான் !!!
♥♥♥
39,
கொட்டாவி

அவள் கொட்டாவி விடும் போதேல்லாம்
   நான் மயங்கி போகிறேன் ஆம் காதலில் !!
♥♥♥
40,
எனக்கு என்னிடத்தில்
பிடிக்காத மூக்கை ,,
   அவள் மூக்கு மாமா என்பதால்
எனக்கும் என் மூக்கை பிடித்துப்போனது,,,
♥♥♥
41,
காமத்தில் " காதல் "
சொல்வதும்
   ஒரு அழகு தான்

' love you 'மாமா'
♥♥♥
42,
 என் எட்டுதிசையையும்
   கட்டிப்போடும்
    கட்டழகி இவள் ,,,!
♥♥♥
43,
உன் கண்களை என் கண்கள்
 சந்திக்கும் போதெல்லாம்,
உன் கண்கள் என்னிடம்
 ஓராயிம் காதல் சொல்கிறது,,,

என் கண்கள் உன்னிடம்
என்ன சொல்கிறது ?
♥♥♥
44,
 அன்பே ,
   ஆருயிரே ,
  அனார்கலியே ,
அன்னப்பறவையே
 அடியே அழகே
I love you
♥♥♥
45,
அழகு ஆபத்து என்பவன் நான் ,
ஆனால் இவள்
   நாட்கள் செல்ல செல்ல
அழகாகிறாள்!!
அழகு அழகு தான் !!!
♥♥♥
46,
பாவடை சட்டை
    பவள மல்லி ,
♥♥♥
47,
அவள் என்னை சைட்
அடிப்பதாய் சொன்னாள்,,
   அவள் என்னை ரசிக்கிராளே,,
♥♥♥
48,
இனியவள்
என்னை முத்தமிடும்
போதெல்லாம்
நான் இறந்து இறந்து
பிறக்கிறேன் !!
♥♥♥
49,
என்னிடத்தில்
எனக்கு பிடிக்காதது

  " மறதி "
♥♥♥
50,
 என் காதலன்
என் மீது கொண்ட
கோபத்திலும் ஓர் காதல் உண்டு!
  அதை அவர் என் மீது கோபத்தில் உணர்ந்தேன்
   Love you  மாமா
♥♥♥
51,
 அன்று அவர் அம்மாவுக்காக
என்னிடம் கோபம் கொண்டார் ,
 இன்று எனக்காக
 அவர் அம்மாவிடம் கோபம் கொண்டார் ,
     அவர் மகனாகவும்
தவறவில்லை,
   கணவராகவும் தவறவில்லை ,,
என் செல்ல மாமா
♥♥♥
52,
என்னவர் எனக்காக எழுதும் கவிதைகளில்
அவர் காதலும் , உயிருமாக நான் ஔிந்திருக்கிறேன்!!!
♥♥♥
53,
உன் கண்ணீரின் ஒவ்வெறு
துளியிலும் என் உயிர் நிறைந்திருக்கிறது

அதை  வீணாக்காதே
              உயிரே ,,,
♥♥♥
54,
உனக்காக கொடுப்பதற்கு
 ஓராயிரம் இதயம் துடித்து கொண்டிருக்கிறது ,,
  ஆனால்
      என்னிடம் இருப்பதோ
ஓர் இதயம்

என் செய்வேன் என்னவளே !!!
♥♥♥
55,
அவளை அவள்
என்று சொல்லக்கூட பிடிக்கவில்லை
அவள் என்றால் அந்நியமாக
தோன்றும் என்பதால்
 
அவளை இவள் என்கிறேன் ,,
♥♥♥
56,
 கண்டவுடன்
காதலில் விழுந்தேன் என்றான்
என் நண்பன் ,
நம்பவில்லை நான் ,,

ஆனால் நானும் விழுந்தேன் காதலில் 20.11.13ல்
♥♥♥
57,
அன்னை தந்தை போல வேண்டும்,
அத்தை மாமா
அன்பில் எனை ஆழ வேண்டும் நாத்தநாரும் தான்
தோள் மீது என்னைத் தாங்கும்
 ஸ்ரீ ராமன்,
ஆசையில் பாடவேண்டும்
தோழி ராகம் தான்,
இறைவா உன் பாதங்களில்
 இது தான் என் கோாிக்கை

(  சொந்தபந்தம் நாடகம் )
♥♥♥
58,
முதலில் எல்லாம் எனக்கு
 வேர்த்தால்,
   வோ்வை வாடைதான் வரும்
ஏனோ தெரியவில்லை
      இப்போதெல்லாம்
   உன் வாசம் தான் வருகிறது
    வான்மதியே !!!
♥♥♥
59,
ஆம்
 உன் கண்ணில்
 காதலையும் என்னையும்,
 காண்கிறேன் கண்மணியே!!!
♥♥♥
60,
மனைவி உறவுகளைத் தான் கொண்டுவருவாள்
என்பார்கள்,,
அது பொய்,
    நீ  என்னையும், என் காதலையும்,
என் வெட்கத்தையும், என் உணர்வுகளையும்,
சோ்த்து கொண்டு வந்தாய், உன்னதமானவளே!!!
என் உரிமையானவளே !!!
♥♥♥
61,
பெண்ணின் புன்னகையில்
உலகம் உறையும் என்பார்கள்,
  ஆனால்,
உன் புன்னகையில்
 உலகை அறிந்தேன்
நான் !!!
♥♥♥
62,
அ - அழகியே,
ஆ - ஆருயிரே,
இ - இனியவளே,
ஈ - ஈ என்று சிரிப்பவளே,
உ - உண்மையானவளே,
ஊ - ஊர் போற்றும்
உன்னதமானவளே,
எ - எளிமையானளே,
ஏ - ஏக பத்தினி விரதனின்
 மனைவியே,
ஐ - ஐ லவ் யூ என்றவளே,
ஒ - ஒன்றுக்குள் ஒன்றானவளே,
ஓ - ஓயாமல் காதல் செய்ய தூண்டுபவளே,
ஒள - ஒள என்று வடிவேல் மாதிரி சிரிப்பவளே,
ஃ - ஃ என் அனைத்தும் ஆனவல் நீ,
♥♥♥
63,
ஒரு நாள் உன் பாதம் நோக்கி பயணிக்கிறேன்,

ஒரு நாள் உன் உச்சந்தலை நோக்கி பயணிக்கிறேன்,

ஆம்,
 நீ   மிக பெரியவள்!!!
♥♥♥
64,
உன் கண்ணத்தில் குழி இல்லை,
இருந்தாலும் நான்
          விழுந்தேன்

ஆம் உன் காதலில்...
♥♥♥
65,
அப்படி பார்க்காதே
   உன் கண்கள் எனக்கு
களவியை கற்று தருகிறது!!!
♥♥♥
66,
அவள் அதிசயமான பெண் தான்
 ஆம்,
  என்னையும் காதலிக்கிறாள்!!!?
♥♥♥
67,
அவள் என் உச்சந்தலையில்
முத்தமிட்ட போது தான்
நான் உணர்ந்தேன்
     என் காதலியின்
முதல் குழந்தை
நான் என்று ,,,!!!
♥♥♥
68,
ஜாகே ஜகாஜே அச்சா
பூபதி எனக்கு மச்சான்!!!
♥♥♥
69,
உன் கை கோர்த்து
நடக்கும் நேரம்,
உன் ஸ்பரிசம் தீண்டும் நேரம்,
உன் வாசம் முகறும் நேரம்,
உன்னிடம்
சரணடைந்தேன் நான்!!!!
♥♥♥
70,
அவள் மூக்கு மூக்கள்ள
என் இதய துடிப்பின்
கவசம்,,,!!!
♥♥♥
71,
அவர் மூக்கு மூக்கள்ள
ஏவுகனைகளை
தாங்கி செல்லும் பீரங்கீ!!!
♥♥♥
72,
அவளின் முதுகு பட்டிககல்லு,

Who is this பட்டிககல்லு,
♥♥♥
73,
காதலியே
கண்டமேனிக்கு
காதல் செய்ய
காலம் போதவில்லை,
ஆதலால்
காலத்திடம்
கடன் வாங்கி
காதலிக்கிறேன் ,,,
காதலியே
கட்டலகை
காண்பதற்கு
கண் இரண்டும் போதவில்லை
கடவுளிடம் கேட்கிறேன்
 இன்னும்
இரண்டு கண்கள் தர,
காதலையும்,
காதலியையும்
காண்பதற்கு
கண்டவுடன்
கடவுள் தந்தார்
'' கண்களை"
♥♥♥
74,

வரம் கொடுத்துப் பழகியவன்,

வரம் வேண்டி நிற்கிறேன்,

வரப்போகும் 
     வரபிரசாதத்திற்காக!♥♥♥!
♥♥♥
75,
உன் ஒரு வார்த்தையில்
என் உயிர்
துடித்துக்கொண்டிருக்கும்
 தூயவளே
ஆதலால் அன்பே

உன் வார்த்தையில்
  எனை கொல்லாதே,,,
♥♥♥
76,
கண்மனியே
   காதல் ஒரு
காவியம்  அல்ல ,
அது ஒரு கலக்கல் காமடி
நினைத்து நினைத்து
   நாம் சிரித்து வாழ,,,
♥♥♥
77,
உன்னோடு நான் இருக்கும்
 நிமிடங்கள்
அனைத்தும் ரசித்திருப்பேன்,
நீ இல்லாத சில நொடிகள் தவித்திருப்பேன்,
நான் உன்னோடு இருக்கும் சில நொடிகள் போதும் கண்ணே,,,
♥♥♥
78,
அவள் கொட்டாவி விட்டால்

நான் தூங்கிப்போகிறேன்,,
♥♥♥
79,
அவள் குளித்து விட்டு வந்தாள்,,,
நான்அழுக்காகினேன்,,
♥♥♥
80,
 விசிறி இல்லாமல்
இருந்ததில்லை நான்,,
அவளுக்கு நான் (விசிறியானேன்) ரசிகனானேன்!!!
♥♥♥
81,
அவளிடம் ஆட்டோகிராப்
வாங்கினேன்,
ரசிகனாக அல்ல,,
அவள் சொத்தை அபகரிக்க,?
அவள் சொத்து நான்!!!
♥♥♥
82,
திருமணம் சொா்க்கத்தில் நிச்சயக்கப்படும் என்பார்கள்
ஆனால்,
எங்கள் திருமணம்
வேடப்பட்டியில் நிச்சயக்கப்பட்டது,,
♥♥♥
83,
 காதல் அனைத்தையும்
கற்றுதரும் என்பார்கள்,
ஆனால் ,,
பிரிவை கற்றுதருவதில்லை,,
பிாிவு தான் காதலை கற்றுதரும்,,!
♥♥♥
84,
 அவள் என் விரல் பிடித்து எழுதும்
     முதல் கவிதை
V.பரமேஸ்வரி
♥♥♥
85,
 அவர் மூச்சுக்காற்று எனை தீண்டும்போதேல்லாம்,
ஓராயிரம் ராகம் கேட்கிறது,,
என் உள்ளத்திலும், என் செவிகளிலும்,,,!!!
♥♥♥
86,
 அவள் எனக்கு காதலிக்க கற்றுத்தந்தாள்,,
நான் அவளுக்கு கவிதை எழுத கற்றுதந்தேன்,,,!!!
♥♥♥
87,
நானும் பாக்கியவான் தான்
பரமு கிடைத்ததால்,,,
♥♥♥
88,
அவள் என் மொபைலில்
விளையாடும் போதெல்லாம்,
நான் அவளின் சிணுங்களோடு
விளையாடுகிறேன்,
♥♥♥
89,
 அன்பே,
நீ என் ஆடைகளை
   வாசிங்மிசினில் போடும்போதெல்லாம்,
என் மனம் கதறுகிறது,
ஏன் என்றால்
    அதி்ல்
       உன் வாசமும் இருப்பதால் பயப்படுகிறது

என் மனம்,,!!
♥♥♥
90,
அழகே
      நீ நமது அறையின்
  கதவை தாளிடும் போதெல்லாம்
உன் இதயக்கதவைத் திறந்து வைக்கிறாய்,,,
என் இதயக்கதவையும் சோ்த்து,,
♥♥♥
91,
உன்னோடு நான் வாழ
நூறாண்டு போதாது

      பூங்குயிலே.,!!!
♥♥♥
92,
பாடல் வரி

   அன்பே அன்பே நீ என் பிள்ளை,
தேகம் மட்டும் காதல் இல்லை,
♥♥♥
93,
அவள் செல்ப்பீ எடுக்கும்
போதெல்லாம்,
என் செல்கள் சிதறுகிறது,
சின்னவளே,,!!!
♥♥♥
94,
மலைக்கோட்டை
சென்றிருந்தோம், இருவரும்,,
மனம் முழுவதும் மழை பெய்தது அந்நேரம்,
மனம் இரண்டும் இணைந்தது பொன்நேரம்,,,!!!!
♥♥♥
95,
உன்னாலானது!!
எனதனைத்தும்...

உனக்காகவே!!
இவையனைத்தும்...
♥♥♥
96,
உனது வாசிப்பின் முடிவில்  இந்த பூமியின்  எட்டாவது அதிசயமாகிப்போனது  என் காதல் கடிதம்.....
♥♥♥
97,
எங்கும் அடைபடாத இந்தக்காதல்
உன்னில் சிறைபடவே
தவமிருக்கின்றது...!!!
♥♥♥
98,
♥♥♥
100,
வார்த்தைகளில்
பிரியம் வைத்து 
உன்னை வாழ்த்த
புதிதாய் யோசித்து, யோசித்து
நானே புதியதாய் மாறிப்போனேன்.
யோசித்து, யோசித்தும்
பிறக்கவில்லை கவிதை??...,

புதியதாய் இன்று
பிறந்த நீயே
*கவிதைதானே பரமு,*,
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
*இவன் விமல்*
♥♥♥♥♥♥♥

என்றென்றும் காதலுடன்
 உன் விமல்
♥♥♥♥♥♥♥

your content here
மேலும் தகவல்களுக்கு ; Please click 👇 

https://goldenvimal.business.site/?m=true 

https://sites.google.com/site/nsvimalgolden/www-goldenvimal-com **என்றும்  அன்புடன்  விமல் ** 98651-38410  ** 82203-03410 ** திண்டுக்கல் ** Goldenvimal ** www.goldenvimal.ml ** குருசாமி பிள்ளை சந்து ** திண்டுக்கல் ** இதுபாேன்ற இணையதளம் உங்களுக்கு உருவாக்க அனுகவும் 98651-38410 ** Writing by Goldenvimal ♥♥♥♥ இவன் விமல் உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள் தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
                             தாெடரும்,,,

உங்கள் கருத்துக்கள் பதிவிட

Name

Email *

Message *

வாசிக்க வந்து சென்றவர்கள் ,,

Sign Up

photo

photo

👇🌎 Website Link's 🌎👇

                                      Sri...

**********************🌎***********************
👨‍💻 👨‍💻 👨‍💻
👉 TNPDS 👉 FLIGHTS timetable 👉 EB Bill
👉 Railway 👉 Gold rate dindigul 👉 Google
👉 Lic 👉 Vikaspedia 👉 DINDIGUL
👉 G Photos 👉 Wixsite 👉 Exchange rates
👉 G Mail 👉 Blog template 👉 G Notes
👉 G Site 👉 G Business 👉 G Drive
👉 My Real games 👉 paramu 👉 VIMAL
👨‍💻 👨‍💻 👨‍💻
**********************🌎***********************

cricet live

maps