Sri,,, www.goldenvimal.com
      **என்றும் அன்புடன் விமல் ** 98651-38410 ** 82203-03410 ** திண்டுக்கல் ** Goldenvimal ** www.goldenvimal.ml ** குருசாமி பிள்ளை சந்து ** திண்டுக்கல் ** வி.பரமேஸ்வரி & விமல் **  

13 Feb 2021

குடும்பத்தின் தலையெழுத்து ..

                     முதலிரவு அறை..


ஆண் குடும்பத்தின் உயிரெழுத்து ..
பெண் என்பவள் குடும்பத்தின் தலையெழுத்து ..


கட்டிலில் கண்ணீருடன் அமர்ந்திருந்தேன்..

கதவு திறக்கபட ..
பட்டென்று கண்களை துடைத்து கொண்டேன்..
என் கணவர்அருகில் வந்து அமர்ந்தார்.. 
"இன்னும் அழுதுட்டு தான் இருக்கியா..
இன்னமும் என் மேல உனக்கு நம்பிக்கை வரல .. "
" அப்டி எல்லாம் இல்லீங்க மாமா...!"
"என் கிட்ட வா .. ம்ம்.."
ஆதரவாய் என்னை தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டார்...
"இங்க இருக்குற யாருக்குமே என்னய பிடிக்க லியே மாமா... எதுக்கு எல்லாரையும் எதுத்து எனக்கு தாலி கட்டுனீங்க.."
சொல்லும் போதே குரல் தழுதழுத்து கரை புரண்டு ஓடிய கண்ணீர் கணவரின் நெஞ்சை நனைத்தது...

நடந்தது இதுதான்..

பணக்கார வீட்டில் செல்லமாக வளர்க்கப்பட்டவள் என் மனைவி ..
எனக்கு தூரத்து உறவான என் மாமாவின் மகள் ..
சிறு வயதிலயே தாயை இழந்து ...
தந்தையின் நிழலில் துளியும் பேராசை இல்லாமல் பணத்தை சுற்றியே வளர்ந்தாலும்..
அணை வருக்கும் எல்லையில்லா உதவிகளை செய்யும் பெருங்குணம் கொண்ட பேரழகு படைத்தவள்..

எங்களது குடும்பம் கூட்டுக்குடும்பம்...
தரகர் மூலம் வந்த வரன் அவள் ..
தூரத்து உறவினரான என் மாமாவின் மகள் என்று தெரிந்த வுடன் ..
கல்யாண வேலைகள் துரிதமாக நடந்தது..

பத்திரிக்கைகள் அச்சிடபட்டு பத்தே நாட்களில் முகூர்த்தமும் குறிக்க பட்டது...

நாம் ஒன்று நினைக்க  தெய்வம் ஒன்று நினைக்கும் என்பதை போல அடுத்து வந்த நாட்களில் அனைத்தும் மோசமாகவே நடக்க ஆரம்பித்தது...!

திருமணத்திற்கு 4 நாட்கள் இருக்க..
என் மனைவியின் அப்பா நெஞ்சுவலியால் இறந்து போனார்..

எனக்கு மட்டுமல்ல
அனைத்து உறவினர்களுக்கு மே பேரதர்ச்சியாய் இருந்தது..

என் மனைவி ஆதரவில்லாமல் நிறுத்தப்பட்டாள்..

அவளின் சொத்துக்களை பங்கு போட வந்த உறவுகள் யாரும் அவள் கஷ்டத்தை பங்கு போட தயாராக இல்லை..

அவ்வளவு ஏன்..

என் வீட்டிலும் அவளை பற்றிய பார்வைகளும் எண்ணங்களும் மாற ஆரம்பித்தன ...

சில வார்த்தைகள் என் காதில் விழுந்து ரணமாக மாற வைத்தது..

"நா அப்பவே சொன்னேன்ல .. எனக்கு தெரியும் கடைசில இந்த மாதிரி லாம் நடக்கும்னு..!" இது அப்பாவோட அக்கா..

"சின்ன வயசுலயே அம்மாவ முழுங்குனவ .. இப்ப கல்யாணத்துக்கு முன்னாடியே அப்பனயும் முழுங்கிட்டா ... தரகர் சொல்லும்  போதே எனக்கு சந்தேகம் தான்.." இது என் இன்னொரு அம்மாவாக நான் நினைக்கும் என் அண்ணி..

"எனக்கென்னமோ அவ ராசி இல்லாதவளா இருப்பானு தோனுது..." இது நான் உயிராய் நினைக்கும் என் தங்கை..

இன்னும் நிறைய .. நிறைய ..

நினைக்க நினைக்க மனம் கனத்து போனது..

என் உறவுகள் மீதான நம்பிக்கையும் தகர்ந்து போனது அந்த நொடியில் இருந்து..

இறுதியில் திருமணத்தை அனைவரும் கலந்து பேசி நிறுத்தி விட்டார்கள்...

என் மனைவியின் கண்ணீர் என் உயிரை அரித்து கொண்டிருந்தது..

இறுதி முடிவு எடுத்தவனாய் என் அம்மாவின் முன்னால் வந்து நின்றேன்..
சிறு வயது முதலே நான் கண்ட முதல் தெய்வம் அம்மாதான் என்பதை மனதார நேசிப்பவன்..

" உன் மனசாட்சிக்கு விரோதம் இல்லாம...
 உன் மனசுக்கு எது சரினு படுதோ... 
அதை செய்.. என் மகன பத்தி எனக்கு தெரியும்...!
 யார் என்ன சொன்னாலும்...  நா உன் கூடவே இருப்பேன் சரியா..? போ ...!" 

அம்மாவை தவிர
யாருக்குமே என் மனைவியை பிடிக்கவில்லை...

அனைவரின் எதிர்ப்பையும் மீறி ..
எனக்கு குறிக்கப்பட்ட அதே முகூர்த்தத்தில் ....
ஒரு சின்ன காேவிலில் ...
என் அம்மா தாலியை எடுத்து கொடுக்க ..
மூன்று முடுச்சி போட்டு அவளை என் மனைவி ஆக்கினேன்..

தன் கெளரவம் பாதித்ததாக அப்பா சொல்ல..
தன் எதிர்காலமே நாசமானதாக என் தங்கை சொல்ல..
என் கூட பிறந்தவன் செத்து விட்டான் என்று அண்ணன் சொல்ல..
இன்னும் எண்ணற்ற உறவினர்களின் சாபங்களோடு ..

என் எதிர்காலம் தொடங்கியது...

அம்மாவின் அடம் பிடிப்பால் எங்கள் சாந்தி முகூர்த்தமும் குறிக்கப்பட்டது..

தற்சமயம்..

அவளின் கண்ணீர் நெஞ்சை நனைத்துக் கொண்டிருந்தது..

"அம்மு .. டேய், .. என்ன பாரு .. என்ன  பாரு .. சொல்றேன்ல..."
மெல்ல நிமிர்ந்தாள்...
"உன் கண்ணுல கண்ணீர பாக்க வா எல்லாரையும் எதுத்து உன் கழுத்துல தாலி கட்டின .. ம்ம்ம்..."
அவள் கண்கள் சிவந்து ... கன்னங்களும் சிவந்து ...
அவளின் காயங்களை எனக்கு தெரியபடுத்த ...

அவளை சமாதானம் செய்யும் பொருட்டு.. என் மடியிலேயே ஆறுதல் படுத்தினேன்..
அவளது கண்களுக்கே வலிக்குமளவுக்கு அழுது இருந்தபடியே ..
உறங்க அதிகாலை ஆனது.. என் மடியிலே இருந்த அவளை எழுப்ப என் மனதும் இடம் தரவில்லை.. 

என் கண்களுக்கு விழித்தவாறே..
விடிந்தும் போனது...

7 நாட்கள் ரணமாக கரைய ..
ஏச்சுக்களும் பேச்சுக்களும் நான் இல்லாத தருணங்களில் என் உறவுகள் என்னவளை வதம் செய்ய ..

எனக்குள் அடக்கி வைத்திருந்த ஆத்திரங்கள் அனைத்தும் வெளியே வரும் தருணமும் வந்தது...

எதார்த்தமாக நான் உள்ளே நுழைந்த சமயத்தில் என் தங்கையும் அண்ணியும் என் மனைவிைய வார்த்தைகளால் வசை பாடிக் கொண்டிருக்க..  கண்களில் கண்ணீருடன் பாத்திரங்களை கழுவிக் கொண்டு இருந்தாள் என் மனைவி ..
எதையுமே கண்டுக்காதது போல என் அப்பா ஊஞ்சலில் பேப்பர் படித்துக் கொண்டிருந்தார், ..

இதுவரை வராத கோ பங்கள் அனைத்தும் ஒன்று சேர..
என் தங்கையை அருகே அழைத்தேன்...

"பளார்...." னு விழுந்த அறையில் பொறிகலங்கி 3 முறை சுற்றி சுவற்றில் மோதி கீழே விழுந்தாள்..
அவளிடம் இந்த 20 வருடங்களில் கண்டிப்பாய் கூட நான் பேசியதில்லை ..
என்னிடம் செல்லமாய் வளர்ந்த என் தங்கை வாங்கிய முதல் அரை ...

அப்பா பதறிய படி ஓடி வர.. அண்ணி பயத்தில் நடுங்க..

என் மனைவி என்னை தடுக்கும் பொருட்டு குறுக்கே வந்து நின்றாள்..

அம்மா வீட்டில் இல்லை என்பது உறுதியானது..

சத்தம் கேட்டு வெளியே இருந்த பெண்களும் உள்ளே ஓடி வந்தனர்...

"ச்சி.. நீங்கல்லாம் பொம்பளைகளே தானா..
அவளும் ஒரு சராசரி பொண்ணு தானே.. இதுவே உங்க கூட பொறந்த பொறப்பா இருந்தா இப்டிலாம் பேச மனசு வருமா ... ஏற்கனவே காயப்பட்டு வந்து நிக்கறவள எல்லாருமா சேர்ந்து அவ மனச குத்தி கிழிக்கிறிங்க.. " 
ஆட்காட்டி விரலை உயர்த்தினேன்.. 
"உங்க எல்லாருக்கும் அவ்ளோதான் மரியாதை... உங்களாலே அவ கண்ல இருந்து ஒரு சொட்டு கண்ணீர் வந்தாலும் .. எல்லாரையும் தூக்கி தொங்க விட்ருவேன் ஜாக்கிரதை...!"
ஆத்திரம் ரணகளமாக ..
"நா உன் தங்கச்சி டா .. நேத்து வந்தவளுக்காக என்னையே அடிச்சிட்ட லே...!"
"நா உன் மேல எவ்வளவு பாசம் வச்சிருந்தேன்னு தெரியுமாடி உனக்கு .. என்னைய மாதிரியே நா இல்லாத சமயத்துல உன் அண்ணியா நினைக்கலனா கூட பரவாயில்ல.. அவள ஒரு மனுஷியா கூட நினைக்காத உன்னை.. என் தங்கச்சினு வேற சொல்றியா...?
இதோ பாரு...!
 நீ என் தங்கச்சி அவ்ளோதான்.. அவ என்னோட உசுரு.. அவ மனச கஷ்ட்டபடுத்துறது யாரா இருந்தாலும் என்னாலே மன்னிக்கவே முடியாது.."

சண்டைகள் பெரிதாக .. அண்ணன் வந்து பிரிவினை உண்டாக்க ..
அப்பா வீட்டை விட்டு ெவளியே போக சொல்ல..
இறுதியாக அம்மா வந்து சேர்ந்தாள்..
வீட்டில் நடந்த களேபரங்களை அனைவரின் முகங்களை வைத்தே யூகித்து விட்டாள்..

கண்ணீருடன் என் முன்னால் வந்து நின்றாள்.. 
அம்மாவின் கண்களில் ஆயிரம் அர்த்தங்கள்..
புரிந்து கொண்டேன்..

வாடகை கார் வந்து நிற்க..
"நீ போய் கார்ல உக்காரும் மா.. நா அம்மாகிட்ட பேசிட்டு வந்திடேறன்.."
"இல்ல மாமா .. நானும் உங்க கூட வே இருக்கேன்.. நீங்க பேசுங்க மாமா  நாம சேர்ந்தே போயிடலாம்.." குரல் தழுதழுத்த படியே சொன்னாள்...
அம்மா விடம் திரும்பினேன்... 
எனக்கும் கண் களில் நீர் கோர்த்தது..
" அம்மா ... இவ எல்லாத்தையும் விட்டுட்டு வந்தவ இல்ல.. எல்லாத்தையும் இழந்துட்டு வந்த வ ... 
எல்லாமே நான் தான்னு என்ன மட்டும் நம்பி வந்திருக்கா ... நீதானே  சொல்லுவ.. உன்ன நம்பி வந்தவங்களுக்காக உயிரையே கொடுக்கலாம்னு.. 
உயிராவே வந்தவள மட்டும் எப்டி மா விட்டுக் கொடுக்கிறது..? 
நா உன் பையன் மா .. எந்த சந்தர்ப்பத்திலும் தடம் மாற மாட்டேன்..."
 கனத்த பெருமூச்சுடன்..
 "நா போறேன் மா .. நாங்க எங்க இருந்தாலும் .. எங்க நினைவு எல்லாமே உன்னை சுற்றியே இருக்கும்..!
யாருக்காகவும் பேச முடியாமல் கண்ணீருடன் வழியனுப்பி வைத்தாள் என் அன்னை...

ஊட்டி யில் ஒரு அழகான  எஸ்டேட் கிராமத்தில் குடியேறினோம்..

நாட்கள் நொடிகளாகி பறக்க..

அவள் அழுகை மட்டும் ஓய்ந்தபாடில்லை, ..
  
கடுமையாக உழைத்தேன்..
15 வருடங்கள் உருண்டோடியது.. 
எனக்காய் என் மனைவியும் மாறினாள்..

ஆணின் தன்னம்பிக்கையே பெண் தான் என்பதை போல ஓவ்வொரு நிமிடமும் புரிய வைத்தாள்..

வசதி வந்தது..
அழகான இரட்டை பெண் குழந்தைகள் அவளை உறித்து வைத்தாற் போலவே...

நீலகிரி மாவட்டத்தில் பெரிய எஸ்டேடக்கு அதிபதி ஆனேன்..

குடும்பம் அழகானது...

இன்று ..

"மாம்ஸ்..."துணி காய போட்டவாறே மனைவி அழைக்க..
"என்ன மேடம்.. ரொம்ப ஹேப்பி மூடுல இருக்கிங்க போல.."
"ம்ம்ம்ம்.. ஆமா.. இப்ப நீங்க என்ன கேட்டாலும் கிடைக்கும்.. !"
"என்னாது, ...
என்னடி மளிகை கடைகாரன் சம்சாரம் கேக் கற மாதிரி இருக்கு...! அது சரி.. பொண்ணுங்கலாம் எங்கடி.. இன்னும் ஸ்கூல் பஸ் வரலியா..?.."
" வந்துட்டாளுக மாமா .. Home Work பண்ணிட்டு இருக்காளுக..!"
சொல்லியபடியே நெருக்கமாக வந்து நெஞ்சில் சாய்ந்தபடியே ..
" மாமா.."
"என்ன மா"
"எனக்கு ஒரு பையன் வேணும்..!"
"வரும் போது மளிகை கடைல வாங்கிட்டு வரட்டுமாடி தங்கம்..!"
"கிண்டல் பண்ணாதிங்க மாமா.. அப்டியே உங்கள மாதிரியே அம்மா மேலயும்.. பொண்ணுங்க மேலயும் பாசம் வச்சு .. நேசத்தாலே எல்லாரையும் உருக வெக்கற மாதிரி.' உறிச்சு வெச் சமாதிரி.. ப்ளீஸ்மாமா ..."
"அது சரி.. வெவரம் தெரி ற வயசுல பொண்ணுங்கள வச்சுக்கிட்டு .. ஏண்டி இப்டிலாம் பேசற ..!"
பட்டென விலகினாள்..
"நைட் பெட்ரூம்க்கு வருவீங்கல்ல.. ம்ம்ம்ம்.. வாங்க.. உங்கள ரேப் பண்ணிடேறன்...!" என் கன்னத்தை கிள்ளியவாறே சொல்லிவிட்டு திரும்ப .. " அடிப்பாவி..." அசந்து போய் நின்றேன்..

இருவரும் சிரித்தபடியே மாடியில் இருந்து கீழே இறங்க ..
உள்ளே ஒரே சிரிப்பு சத்தம்..
என் அம்மா வந்திருந்தார்கள்..

பார்த்தவுடன் எங்களுக்கு கண்ணீரே வார்த்தை களாக வர.. 
ஓடி வந்து அணைத்துக் கொண்டாள் இருவரையும் ..

இனிதாய் தொடங்கியது என் வாழ்க்கை பயணம்..!

குறிப்பு : 
அம்மாவிடம் மகனாக இருக்கலாம்..
அக்காவிடம் தம்பியாக இருக்கலாம்..
தங்கை யிடம் அண்ணனாக இருக்கலாம்..
ஆனால்..
மனைவி யிடம் மட்டுமே எல்லாமுமாக இருக்க முடியும்..!

மனைவி என்பவள் மனையை ஆள்பவள் மட்டுமல்ல..
மனதுக்கு பிடித்த குடும்பத்தினர் அனைவரின் மனதையும் ஆள்பவள்..!

ஆண் குடும்பத்தின் உயிரெழுத்து ..
பெண் என்பவள் குடும்பத்தின் தலையெழுத்து ..

மனைவியை எந்த சந்தர்ப்ப சூழ்நிலையிலும் யாருக்காகவும் விட்டுக் கொடுக்காதீர்கள்..

ஏனெனில் ..

குடும்பம் தான் அவள் காணும் அழகான உலகம்..

என்றென்றும் அன்புடன்..
இவன் விமல்          

என் பதிவில் உங்கள் நேரத்துக்கு நன்றி சொல்லும் அதேவேளையில், எனக்கு தகவல் கொடுத்த அனைத்து புத்தகங்களுக்கும், இணையதளங்களுக்கும், பதிவுகளுக்கும் என் மனமார்ந்த நன்றி. மேலும் தகவல்களுக்கு ; Please click 👇 

https://goldenvimal.business.site/?m=true 

https://sites.google.com/site/nsvimalgolden/www-goldenvimal-com **என்றும்  அன்புடன்  விமல் ** 98651-38410  ** 82203-03410 ** திண்டுக்கல் ** Goldenvimal ** www.goldenvimal.ml ** குருசாமி பிள்ளை சந்து ** திண்டுக்கல் ** இதுபாேன்ற இணையதளம் உங்களுக்கு உருவாக்க அனுகவும் 98651-38410 ** Writing by Goldenvimal ♥♥♥♥ இவன் விமல் உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள் தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
                             தாெடரும்,,,

13 Jan 2021

காலண்டரில் இருக்கும் மேல்நோக்கு நாள், கீழ்நோக்கு நாள், சமநோக்கு நாள் எதற்காக இருக்கிறது தெரியுமா???

                                      Sri... 
*💫🌹காலண்டரில் இருக்கும் மேல்நோக்கு நாள், கீழ்நோக்கு நாள், சமநோக்கு நாள் எதற்காக இருக்கிறது தெரியுமா???*💫🌹நம் வீட்டு காலண்டரில் இருக்கும் ஒவ்வொரு பக்கத்திலும், ஒரு குறிப்புகள் மூலம் அம்பு குறியீடு இருக்கும். இந்த அம்பு குறியீடு எதற்காக குறிப்பிடப்பட்டு இருக்கிறது? என்று பலருக்கும் தெரிவதில்லை. இந்தக் குறியீடு மேல் நோக்கி இருந்தால், மேல்நோக்கு நாள் என்றும், கீழ் நோக்கி இருந்தால் கீழ்நோக்கு நாள் என்றும், இருபுறமும் சமமாக இருந்தால், சமநோக்கு நாள் என்றும் குறிப்பிட்டு கூறப்படுகிறது. இந்த குறியீடு அந்தந்த நாட்களில் வரும் நட்சத்திரத்தின் அடிப்படையில் கணிக்கப்பட்டுள்ளது. இந்த குறியீடு தெரிந்து கொண்டு சில காரியங்களை நாம் செய்யும் பொழுது அதிர்ஷ்டமான பலன்கள் உண்டாகும். 

மேல்நோக்கு நாள் என்பது உத்திரம், உத்திராடம், ரோகினி, திருவாதிரை, பூசம், அவிட்டம், சதயம், உத்திரட்டாதி, திருவோணம் போன்ற 9 நட்சத்திரங்கள் கொண்ட நாட்களை குறிக்கிறது. பொதுவாக சுப காரியங்கள் செய்ய மேல்நோக்கு நாளைத் தேர்ந்தெடுப்பது ஜோதிடர்களின் வழக்கம். மேல்நோக்கு நாள் நல்ல அதிர்ஷ்டமான நாளாக அமையும். இந்த நாளில் மேல் நோக்கி நடக்கக் கூடிய நல்ல விஷயங்களை செய்வது மிகவும் நல்லது.

அதாவது மேல் நோக்கி வளரும் மரம், செடி, கொடி போன்ற தாவரங்களை வளர்ப்பதும், மதில் சுவர் கட்டுவது, கட்டிடம் எழுப்புவது, பயிர் விதைப்பது என்று வானை நோக்கி செய்யக் கூடிய காரியங்களை செய்வது அதிர்ஷ்டம் தரும். மேலும் சுப காரியங்கள் செய்வது, உத்தியோகம் சார்ந்த நல்ல விஷயங்களை செயலாற்றுவது, புதிதாக வேலைக்கு சேருவது, புதிய ஒப்பந்தங்களை ஏற்றுக் கொள்வது போன்ற விஷயங்களை செய்யலாம்.

அது போல் வியாபாரத்தில் இருப்பவர்கள் வளரக்கூடிய விஷயங்களை செய்வதும் நன்று. வீடு, மனை வாங்குவது வீட்டிற்கு புதிய பொருட்கள் வாங்குவது, விலை உயர்ந்த ஆபரணங்களை வாங்குவது, பத்திரப்பதிவு செய்வது போன்ற செயல்களை செய்யலாம். சுருக்கமாக சொல்லப் போனால் வளரக்கூடிய, மற்றும் மேலும் வளர வேண்டிய விஷயங்களை செய்வதன் மூலம் பல்வேறு நன்மைகளை அடையலாம்.

கீழ்நோக்கு நாள் என்பது கீழ்நோக்கி நடக்கக்கூடிய நல்ல விஷயங்களை செய்யலாம். கிருத்திகை, பரணி, ஆயில்யம், விசாகம், பூரம், பூரட்டாதி, பூராடம், மகம், மூலம் போன்ற ஒன்பது நட்சத்திரங்களை குறிப்பது தான் கீழ்நோக்கு நாட்கள். கீழ்நோக்கு நாட்களில் சுரங்கம் தோண்டுவது, மண்ணிற்கு அடியில் வளரும் கிழங்கு வகைகள், செடிகள் நடுவது, கிணறு தோண்டுவது, போர்வெல் அமைப்பது, கீழ்நிலை தொட்டிகளை உருவாக்குவது போன்ற விஷயங்களை செய்வதன் மூலம் தடையில்லாத நல்ல அதிர்ஷ்டம் உண்டாகும்.

சமநோக்கு நாள் என்பது மிருகசீரிஷம், அஸ்தம், அஸ்வினி, சுவாதி, புனர்பூசம், சித்திரை, ரேவதி, கேட்டை, அனுஷம் ஆகிய 9 நட்சத்திரங்களை கொண்ட நாட்களை குறிக்கிறது. இதில் சமமாக செய்யக் கூடிய சில விஷயங்களை செய்வதன் மூலம் நல்ல அதிர்ஷ்டம் உண்டாகும் என்பது ஐதீகம். அப்படி என்னென்ன விஷயங்கள் செய்யலாம்? சமமாக இருக்கும் சாலைகள் அமைப்பது, மற்றும் அதன் மீது ஓடும் வாகனங்கள் வாங்குவது, புதிதாக வீடு கட்டுபவர்கள் தளம் அமைப்பது, விவசாய நிலத்தில் சமமாக உழவு செய்வது போன்ற விஷயங்களை செய்தால் யோகம் உண்டாகும் என்பது நம்பிக்கை.

எந்த ஒரு விஷயத்தையும் எதற்காக கடைபிடிக்கப்படுகிறது? என்பதை தெரிந்து வைத்திருக்க வேண்டும். உண்மையில் கடவுள்களை விட நாளும், கோளும் நமக்கு நன்மைகளை அதிகமாக செய்யும் என்று ஜோதிட சாஸ்திரம் குறிப்பிடுகிறது. ஜோதிடத்தின் மீது நம்பிக்கை உள்ளவர்களும், நாள், நட்சத்திரம் பார்ப்பவர்களும் தவறாமல் இந்த நாட்களை மனதில் நிறுத்தி செயல்களை செய்யும் பொழுது அதற்குரிய பலன்களையும் அவர்கள் அனுபவிக்கிறார்கள். நாமும் இந்த நாட்களை தெரிந்து கொண்டு அதற்கேற்ப செயல்படுவோம், நன்மைகள் பெறுவோம்.

என் பதிவில் உங்கள் நேரத்துக்கு நன்றி சொல்லும் அதேவேளையில், எனக்கு தகவல் கொடுத்த அனைத்து புத்தகங்களுக்கும், இணையதளங்களுக்கும், பதிவுகளுக்கும் என் மனமார்ந்த நன்றி. மேலும் தகவல்களுக்கு ; Please click 👇 

https://goldenvimal.business.site/?m=true 

https://sites.google.com/site/nsvimalgolden/www-goldenvimal-com **என்றும்  அன்புடன்  விமல் ** 98651-38410  ** 82203-03410 ** திண்டுக்கல் ** Goldenvimal ** www.goldenvimal.ml ** குருசாமி பிள்ளை சந்து ** திண்டுக்கல் ** இதுபாேன்ற இணையதளம் உங்களுக்கு உருவாக்க அனுகவும் 98651-38410 ** Writing by Goldenvimal ♥♥♥♥ இவன் விமல் உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள் தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
                             தாெடரும்,,,

26 Sept 2020

மு.க.ஸ்டாலின் கடந்து வந்த அரசியல் பாதை

                                      Sri...

உறுப்பினர் முதல் செயல் தலைவர் வரை: மு.க.ஸ்டாலின் கடந்து வந்த அரசியல் பாதை

திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல் தலைவராக தேர்வு செய்யப்பட்டுமு.க.ஸ்டாலின் கடந்து வந்த அரசியல் பயணம் பல சவால்களும் சோதனைகளும் நிறைந்தவை.

திமுகவின் செயல் தலைவராக மு. க. ஸ்டாலின் தேர்வு: திமுகவின் செயல் தலைவராக மு.க. ஸ்டாலின் தேர்வு

திமுகவின் செயல் தலைவராக மு.க. ஸ்டாலின் தேர்வு
படக்குறிப்பு,

திமுகவின் செயல் தலைவராக மு.க. ஸ்டாலின் தேர்வு

திமுகவின் முதல் செயல் தலைவர்

இதற்கு முன்பு, திமுகவில் செயல் பதவி இல்லாத நிலையில், அக்கட்சியின் முதல் செயல் தலைவராக மு.க. ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

1970-களில், மிசா அவசரச் சட்ட காலத்தில் சிறை சென்ற ஸ்டாலின், தமிழகத்தின் முக்கிய கட்சிகளில் ஒன்றான திமுகவின் செயல் தலைவராக தற்போது ஆகியுள்ள நிலையில், அவர் இதுவரை திமுகவில் பல பதவிகளை வகித்துள்ளார்.

மேலும், கடந்த காலங்களில் சென்னை மாநகராட்சி மேயராகவும், தமிழக அமைச்சராகவும், துணை முதல்வராகவும் மு. க. ஸ்டாலின் பதவி வகித்துள்ளார்.

திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து வாழ்த்து பெற்ற மு. க. ஸ்டாலின்
படக்குறிப்பு,

திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து வாழ்த்து பெற்ற மு. க. ஸ்டாலின்

பள்ளிப் பருவத்திலேயே அரசியல் பணி

 • தனது பள்ளிப் பருவத்திலேயே அரசியலில் ஈடுபாடு காட்டிய மு.க. ஸ்டாலின், தனது வீடு அமைந்திருந்த சென்னை கோபாலபுரம் பகுதியில் திமுக பிரதிநிதியாக செயல்பட்டார். அப்பகுதியில் இளைஞர் திமுக என்ற அமைப்பை அவர் ஏற்படுத்தினார்.
 • 1970-களில் திமுக வட்டப் பிரதிநிதியாகவும், மாமன்ற பிரதிநிதியாகவும் இருந்த மு.க. ஸ்டாலின், இளைஞர்களை ஒருங்கிணைத்து கட்சி கூட்டங்களில் பங்கேற்கவும், கட்சி பிரசாரத்திலும் ஈடுபட்டார்.
 • பின்னர், 1980-இல் மதுரையில் நடந்த திமுக கூட்டத்தில் இளைஞரணி அமைப்பை திமுக தலைவர் கருணாநிதி துவக்கினார்.
 • ஆரம்பத்தில் திமுக இளைஞரணியின் அமைப்பாளராகத் செயல்பட்ட மு.க. ஸ்டாலின் , பின்னர் நீண்ட காலமாக திமுகவின் இளைஞரணி செயலாளராக செயல்பட்டு வருகிறார். கடந்த 1984-இல் மு.க. ஸ்டாலின் திமுகவின் இளைஞர் அணி செயலாளராக நியமிக்கப்பட்டார்.
திமுகவில் பல பதவிகளை வகித்த ஸ்டாலின்
படக்குறிப்பு,

திமுகவில் பல பதவிகளை வகித்த ஸ்டாலின்

பொருளாளராக நியமனம்

 • சிறிது காலம் திமுகவின் துணை பொதுச் செயலாளராக பதவி வகித்த ஸ்டாலின், 2008-இல் திமுகவின் பொருளாளராக நியமனம் செய்யப்பட்டார்

மு. க. ஸ்டாலின் கண்ட தேர்தல் களங்கள்

 • கடந்த 1984-ஆம் ஆண்டில், முதல்முறையாக ஆயிரம் விளக்கு சட்டமன்ற தொகுதியில் களமிறங்கிய மு.க. ஸ்டாலின் வெற்றி வாய்ப்பை இழந்தார்.
 • அதன் பின்னர், 1989, 1996, 2001 மற்றும் 2006 ஆகிய ஆண்டுகளில் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு, மு.க. ஸ்டாலின் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1991ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மு.க. ஸ்டாலின் வெற்றி வாய்ப்பை இழந்தார்.
 • 2011-ஆம் ஆண்டிலும், கடந்த ஆண்டு ( 2016) நடைபெற்ற சட்டமன்ற தேர்தல்களில் கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு மு. க. ஸ்டாலின் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஆறு முறை சட்டமனற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்டாலின்
படக்குறிப்பு,

ஆறு முறை சட்டமனற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்டாலின்

சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர்

 • தற்போது தமிழக சட்டமன்ற எதிர்கட்சித் தலைவராக மு. க. ஸ்டாலின் செயலாற்றி வருகிறார்.

சென்னை மாநகர மேயர்

 • நீண்ட இடைவெளிக்கு பிறகு, 1996-ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக உள்ளாட்சி தேர்தலில், சென்னை மாநகராட்சி மேயர் வேட்பாளராக திமுகவின் சார்பில் களமிறங்கி வெற்றி பெற்ற மு.க. ஸ்டாலின் சென்னை மாநகராட்சி மேயராக பதவி வகித்தார்.
 • கடந்த 1996-ஆம் ஆண்டு முதல் 2001-ஆம் ஆண்டு வரை மாநகராட்சி மேயராக மு.க. ஸ்டாலின் இருந்த போது, சென்னையில் பல மேம்பாலங்கள் கட்டப்பட்டன.
 • 2001-ஆம் ஆண்டு மு.க.ஸ்டாலின் மீண்டும் சென்னை மாநகராட்சி மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போதைய அதிமுக அரசு கொண்டு வந்த 'ஒருவருக்கு ஒரு பதவி' என்ற சட்டத்தால் தனது மேயர் பதவியை துறந்து, ஆயிரம் விளக்கு தொகுதியின் சட்டசபை உறுப்பினராக தொடர்ந்தார்.
 • 2006-ஆம் ஆண்டில் மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்த போது, உள்ளாட்சித்துறை அமைச்சராக ஸ்டாலின் நியமிக்கப்பட்டார். 2006 முதல் 2011 வரை அவர் தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சராக பதவி வகித்தார்.
தேர்தல் பிரசாரத்தில் மு. க. ஸ்டாலின்
படக்குறிப்பு,

தேர்தல் பிரசாரத்தில் மு. க. ஸ்டாலின்

முதல் துணை முதல்வர்

 • கடந்த 2009-ஆம் ஆண்டு, தமிழக வரலாற்றிலேயே முதன்முறையாக துணை முதல்வர் பதவியை மு.க. ஸ்டாலின் வகித்தார்.
 • கடந்த 2014 நாடாளுமன்ற தேர்தல் மற்றும் 2016 தமிழக சட்டமன்ற தேர்தல்களில், திமுகவின் தேர்தல் கூட்டணியை முடிவு செய்ததிலும், பல வேட்பளார்களை முடிவு செய்ததிலும் ஸ்டாலின் பெரும் பங்காற்றியதாக கூறப்படுகிறது.

நமக்கு நாமே சுற்றுப்பயணம்

 • 2015-ஆம் ஆண்டு 'நமக்கு நாமே' என்ற சுற்றுப்பயணத்தை தொடங்கி தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் சென்று மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.
நமக்கு நாமே சுற்றுப்பயணம் மேற்கொண்ட மு. க. ஸ்டாலின்
படக்குறிப்பு,

நமக்கு நாமே சுற்றுப்பயணம் மேற்கொண்ட மு. க. ஸ்டாலின்

மு. க. அழகிரியுடன் கருத்து வேறுபாடு

 • மு. க. ஸ்டாலினுக்கும், அவருடைய சகோதரரும், முன்னாள் மத்திய அமைச்சரும் திமுகவின் தென் மண்டல செயலாளருமான மு. க. அழகிரிக்கும் பலத்த கருத்து வேற்றுமை ஏற்பட்டதால், கடந்த காலங்களில் இருதரப்பு ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. தற்போது மு. க. அழகிரி திமுகவிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
 • கடந்த 2001-ஆம் ஆண்டில், சென்னையில் மேம்பாலங்கள் கட்டியதில் ஊழல் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு தி.மு.க. தலைவர் கருணாநிதி,சென்னை நகர மேயர் மு.க.ஸ்டாலின், முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டனர். ஆனால், இது தொடர்பாக அரசு தரப்பில் எந்த குற்றப்பத்திரிக்கையும் தாக்கல் செய்யப்படவில்லை
என் பதிவில் உங்கள் நேரத்துக்கு நன்றி சொல்லும் அதேவேளையில், எனக்கு தகவல் கொடுத்த அனைத்து புத்தகங்களுக்கும், இணையதளங்களுக்கும், பதிவுகளுக்கும் என் மனமார்ந்த நன்றி. மேலும் தகவல்களுக்கு ; Please click 👇 

https://goldenvimal.business.site/?m=true 

https://sites.google.com/site/nsvimalgolden/www-goldenvimal-com **என்றும்  அன்புடன்  விமல் ** 98651-38410  ** 82203-03410 ** திண்டுக்கல் ** Goldenvimal ** www.goldenvimal.ml ** குருசாமி பிள்ளை சந்து ** திண்டுக்கல் ** இதுபாேன்ற இணையதளம் உங்களுக்கு உருவாக்க அனுகவும் 98651-38410 ** Writing by Goldenvimal ♥♥♥♥ இவன் விமல் உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள் தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
                             தாெடரும்,,,

திமுகவில் இணையுங்கள்

                                      Sri...

திமுகவில் இணையுங்கள்

என் பதிவில் உங்கள் நேரத்துக்கு நன்றி சொல்லும் அதேவேளையில், எனக்கு தகவல் கொடுத்த அனைத்து புத்தகங்களுக்கும், இணையதளங்களுக்கும், பதிவுகளுக்கும் என் மனமார்ந்த நன்றி. மேலும் தகவல்களுக்கு ; Please click 👇 

https://goldenvimal.business.site/?m=true 

https://sites.google.com/site/nsvimalgolden/www-goldenvimal-com **என்றும்  அன்புடன்  விமல் ** 98651-38410  ** 82203-03410 ** திண்டுக்கல் ** Goldenvimal ** www.goldenvimal.ml ** குருசாமி பிள்ளை சந்து ** திண்டுக்கல் ** இதுபாேன்ற இணையதளம் உங்களுக்கு உருவாக்க அனுகவும் 98651-38410 ** Writing by Goldenvimal ♥♥♥♥ இவன் விமல் உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள் தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
                             தாெடரும்,,,

1 Sept 2020

திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று இயக்கப்படும் அரசு பேருந்துகள் எண்ணிக்கை அதன் வழித்தடங்கள்

                                      Sri...
திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று  இயக்கப்படும் அரசு பேருந்துகள் எண்ணிக்கை  அதன் வழித்தடங்கள்

இன்று  முதல்  காலை 6 மணி முதல் இரவு 9 மணிவரை பேருந்துகள் இயக்கப்படுகிறது. 

* திண்டுக்கல் மாவட்டத்தில்
மதுரை சாலையில் கொடை ரோடு,
அம்மை நாயக்கனூர்,
வரையிலும்.

* நத்தம் சாலையில் நத்தம் வரையிலும்.

* தேனி சாலையில் வத்தலக்குண்டு வரையிலும்,

* பழனி சாலையில் பழனி மற்றும் சாமிநாதபுரம் வரையிலும்,

* தாராபுரம் சாலையில் கள்ளிமந்தையம் வரையிலும்,

* கரூர் சாலையில் வேடசந்தூர் வரையிலும்,

* திருச்சி சாலையில் அய்யலூர் வரையிலும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

________

மலைப்பகுதிகளைப் பொறுத்தவரை வத்தலக்குண்டில் இருந்து கொடைக்கானலுக்கு ஒரு பேருந்தும்,
வத்தலக்குண்டில் இருந்து தாண்டிக்குடி, பட்டிவீரன்பட்டி வழியாக சித்தரேவு வரையிலும்,

திண்டுக்கல்லில் இருந்து ஆடலூர் வழியாக பன்றிமலைக்கும், சிறுமலைக்கும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கொடைக்கானலில் இருந்து பெருமாள்மலை வரையிலும், வில்பட்டி, கிளாவரைக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன
என் பதிவில் உங்கள் நேரத்துக்கு நன்றி சொல்லும் அதேவேளையில், எனக்கு தகவல் கொடுத்த அனைத்து புத்தகங்களுக்கும், இணையதளங்களுக்கும், பதிவுகளுக்கும் என் மனமார்ந்த நன்றி. மேலும் தகவல்களுக்கு ; Please click 👇 

https://goldenvimal.business.site/?m=true 

https://sites.google.com/site/nsvimalgolden/www-goldenvimal-com **என்றும்  அன்புடன்  விமல் ** 98651-38410  ** 82203-03410 ** திண்டுக்கல் ** Goldenvimal ** www.goldenvimal.ml ** குருசாமி பிள்ளை சந்து ** திண்டுக்கல் ** இதுபாேன்ற இணையதளம் உங்களுக்கு உருவாக்க அனுகவும் 98651-38410 ** Writing by Goldenvimal ♥♥♥♥ இவன் விமல் உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள் தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
                             தாெடரும்,,,

28 Aug 2020

தமிழில் எழுதும் போது நாம் செய்யும் சில தவறுகள்...

                                      Sri...
*தமிழில் எழுதும் போது*
நாம் செய்யும் சில தவறுகள்......
1. வாழ்த்துக்கள் என்பது தவறு.
   "வாழ்த்துகள் "என்பதே சரி. " க் " வரக்கூடாது.

2. வாழ்க வளமுடன் என்பது தவறு.
 " வாழ்க வளத்துடன் " என்பதே சரி.

3." நிகழும் மங்களகரமான ஆண்டு " என்று அழைப்பிதழில் அச்சிடுவது தவறு. "மங்கலமான " என்பதே  சரி.

 " மங்கள இசை " என்றால் ஒப்பாரி. அதாவது கடைசிப் பயணத்தின் போது இசைப்பது.
 
 *" மங்கல இசை "* என்றால் தொடக்கம். ( துவக்கம் என்பது தவறு ).

4. நச்சுன்னு ஒரு பாட்டு, நச்சுன்னு பேசு
    என்பது தவறு. *நச்சு என்றால் நஞ்சு (விஷம்)(விடம்)*.
   நச்சுன்னு ஒரு பாட்டு என்றால் விஷம் போன்ற ஒரு பாட்டு என்று பொருள்.
   *நறுக்கென்று* என்பதே நச்சுன்னு என்று மருவி வந்துள்ளது.

 நான் நறுக்கென்று சொல்லிவிட்டேன்.
சுருக்கென்று எடுத்துக் கொள்க.

*விளக்கம்.....*

இசை நிகழ்ச்சியில் கடைசியில் பாடும் பாட்டுக்கு " மங்களம் "என்பர். கச்சேரியை முடிப்பதற்கு மங்களம் பாடு என்பர்.

ஒரு நூல் (புத்தகம்) எழுதிய ஆசிரியர் அதை எழுதி முடிக்கும்போது கடைசிப் பக்கத்தில் " சுப மங்களம் " என்று முடிப்பார். *இனிதே முடிவுற்றது* என்று பொருள்.

ஆரியர்கள் தங்களுக்குப் பிறக்கும் குழந்தை பெண்ணாகப் பிறந்து இனி குழந்தையே வேண்டாம் என்று முடிவெடுத்தால் அப் *பெண் குழந்தைக்கு "மங்களா " என்று பெயர் சூட்டுவர்.* இத்துடன் ஊற்றி மூடிவிட்டேன் என்று பொருள்.

*திருவள்ளுவர் தம் குறளில் ,*

*மங்கல மென்ப மனைமாட்சி மற்றதன் நன்கலம் நன்மக்கள் பேறு* - என்று பாடியிருக்கிறார்.  காண்க - *மங்கலம்.* ( மங்களமில்லை )

*வாழ்க வளத்துடன் ....*

மேலும் தகவல்களுக்கு ; Please click 👇 

https://goldenvimal.business.site/?m=true 

https://sites.google.com/site/nsvimalgolden/www-goldenvimal-com **என்றும்  அன்புடன்  விமல் ** 98651-38410  ** 82203-03410 ** திண்டுக்கல் ** Goldenvimal ** www.goldenvimal.ml ** குருசாமி பிள்ளை சந்து ** திண்டுக்கல் ** இதுபாேன்ற இணையதளம் உங்களுக்கு உருவாக்க அனுகவும் 98651-38410 ** Writing by Goldenvimal ♥♥♥♥ இவன் விமல் உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள் தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
                             தாெடரும்,,,

உங்கள் கருத்துக்கள் பதிவிட

Name

Email *

Message *

வாசிக்க வந்து சென்றவர்கள் ,,

Follow by Email

Sign Up

photo

photo

👇🌎 Website Link's 🌎👇

                                      Sri...

**********************🌎***********************
👨‍💻 👨‍💻 👨‍💻
👉 TNPDS 👉 FLIGHTS timetable 👉 EB Bill
👉 Railway 👉 Gold rate dindigul 👉 Google
👉 Lic 👉 Vikaspedia 👉 DINDIGUL
👉 G Photos 👉 Wixsite 👉 Exchange rates
👉 G Mail 👉 Blog template 👉 G Notes
👉 G Site 👉 G Business 👉 G Drive
👉 My Real games 👉 paramu 👉 VIMAL
👨‍💻 👨‍💻 👨‍💻
**********************🌎***********************

cricet live

maps