சீனாவின் “பட்டுப் பாதை”? இந்தத் திட்டம் பற்றி கொஞ்சம் விரிவாக

                                      Sri...

இந்த சீனாப் பட்டுச்சாலை வெகு நாட்களாக என் கையில் நழுவி விட்டது. இன்று இந்த சாலையில் பயணித்தே தீர வேண்டும் என்ற வைராக்கியத்துடன் இந்த முயற்சி.

இந்த வரைபடத்தில் காணப்படும் சிவப்பு கோடுகள் தான் பண்டைய பட்டுச்சாலை ஆகும்.

இந்த நீண்ட நிலப்பாதை என்பது கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் இருந்து கி.பி. 1400 கள் வரையில் உபயோகத்தில் இருந்தது.

இந்த பாதை சீனாவின் கிழக்கு கடற்கரை பகுதியில் இருந்து ஐரோப்பா கண்டத்தில் இத்தாலி நாடு வரைக்கும் சென்றது.

இந்த சாலைக்கு பட்டுச்சாலை என பெயர் வரக் காரணம், புகழ்பெற்ற சீனப்பட்டு வியாபாரம் என்பது இதன் மூலம் தான் நடந்தது. இந்த சாலை வழியாக விலை மதிப்புள்ள ஆபரண கல் வகைகள், இதர துணி வகைகள், தானியங்கள், மசாலா பொருட்கள், பழங்கள், காய்கறிகள், விலங்கு தோல்கள், மரம் என பல்வேறு முக்கியமான பொருள்கள் வியாபாரம் செய்யப் பட்டன. அந்த காலத்து பண்டம் மாற்று வியாபாரம் முறையில் இந்த பாதை சிறந்து விளங்கியது.

அக்காலத்து பயணிகள், காரவான்கள் குடிநீர் மற்றும் உணவு, விலங்கு தீவனங்கள் பெற வசதியாக ஆங்காங்கே விடுதிகள், நீர் வசதி எல்லாம் கிடைக்கும் படி வசதிகள் இருந்தன.

அக்காலத்தில் சீன கிழக்கு கடற்கரையிலிருந்து அயல் நாடுகளுக்கு கடல் மார்க்கமாக செல்வது என்பது பல அபாயங்கள் கொண்டதாக இருந்தது. புயல் காற்று, கடல் கொள்ளை, அதிக துறைமுக வசதி இல்லாமை என பல காரணங்களால், நிலம் வழியாக பயணம் செய்வது எளிதாக இருந்தது. மேலும், தங்கள் சாம்ராஜ்யத்தை பெருக்க சீனா இதை உபயோகித்து.

ஆனால் காலப்போக்கில் பல ஆட்சி மாற்றங்கள் ஏற்பட்டு, வியாபாரம் தடைபெற்று நாளடைவில் பல பகுதிகள் உபயோகிக்கப் படவில்லை.

இப்போது சீனா இந்த பட்டுச் சாலையை மீண்டும் உருவாக்கி தன் வியாபாரத்தை பெருக்கவும், உலகில் முதல் சக்தி வாய்ந்த நாடாக உருவாக்கவும் மாற்ற திட்டமிட்டு செயல்படுகிறது. கீழ்க்கண்ட வரை படத்தில் இந்த புது பாதையை காணலாம்.

இதைத்தவிர, சீனா கோடை காலங்களில் உபயோகிக்க ஆர்க்டிக் சமுத்திர மார்க்கம் ஒன்றையும் உருவாக்கி வருகிறது. ஆனால் இதற்கு அமெரிக்காவும் இரஷ்யாவும் ஆதரவு அளிக்க மாட்டார்கள். தங்கள் வல்லரசு நிலைமையையும் தாழ விட மாட்டார்கள்.

(படம் : கூகுள்)

என் பதிவில் உங்கள் நேரத்துக்கு நன்றி சொல்லும் அதேவேளையில், எனக்கு தகவல் கொடுத்த அனைத்து புத்தகங்களுக்கும், இணையதளங்களுக்கும், பதிவுகளுக்கும் என் மனமார்ந்த நன்றி. மேலும் தகவல்களுக்கு ; Please click 👇 

https://goldenvimal.business.site/?m=true 

https://sites.google.com/site/nsvimalgolden/www-goldenvimal-com **என்றும்  அன்புடன்  விமல் ** 98651-38410  ** 82203-03410 ** திண்டுக்கல் ** Goldenvimal ** www.goldenvimal.ml ** குருசாமி பிள்ளை சந்து ** திண்டுக்கல் ** இதுபாேன்ற இணையதளம் உங்களுக்கு உருவாக்க அனுகவும் 98651-38410 ** Writing by Goldenvimal ♥♥♥♥ இவன் விமல் உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள் தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
                             தாெடரும்,,,

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

👇🌎 Website Link's முக்கிய இணைப்புகள் 🌎👇

Top Post Ad

Below Post Ad