Sri,,, லாபம் ஈட்டவும் அடகு வைக்கலாம்! | www.goldenvimal.com

2 Oct 2021

லாபம் ஈட்டவும் அடகு வைக்கலாம்!

                                      Sri...

லாபம் ஈட்டவும் அடகு வைக்கலாம்!


டகு... போலீஸ் ஸ்டேஷன், கோர்ட் படிக்கட்டு என வாழ்க்கையில் போகவே கூடாத இடங்களின் வரிசையில் ஒருகாலத்தில் அடகு வைப்பதுவும் இருந்தது. ஆனால் இப்போது காலம் மாறிவிட்டது; கருத்துகளும் மாறிவிட்டது. ஓர் ஆத்திர அவசரத்துக்கு யாரிடமும் கையேந்தாமல் நம்மிடம் இருக்கும் நகைகளையோ, சொத்துகளையோ அடகு வைத்து நிலைமையைச் சமாளிப்பதே நல்லது என்ற எண்ணம் எல்லோருக்கும் ஏற்பட்டு விட்டது. இப்போது அடுத்தகட்டமாக அவசர நிலைமைகளைச் சமாளிப்பதற்காக மட்டுமின்றி, லாபம் சம்பாதிக்கும் ஒரு வழியாகவும் அடகு வைப்பதைப் பயன்படுத்த ஆரம்பித்திருக்கிறார்கள் புத்திசாலிகள்.

தனிநபர் கடன், கிரெடிட் கார்டு கடன், வீட்டுக் கடன் உள்ளிட்ட பல்வேறு கடன்களுக்கு கொடுக்கும் வட்டியைவிட அடமானக் கடனுக்கு குறைவான வட்டி என்பதால் அதன் மூலம் தங்கள் சுமையைக் குறைத்துக் கொள்கிறார்கள். இன்னும் சிலரோ ஒருபடி மேலேபோய் தங்கள் சொத்தை பாதுகாப்பாக வைத்திருப்பதற்கு ஒரு வழியாகவே அடகு வைப்பதை மாற்றியிருக்கிறார்கள். சுருக்கமாகச் சொல்வதென்றால் குறைந்த வட்டியில் அடகு வைத்து, அதில் வரும் வருமானத்தைக் கொண்டு முதலீடு செய்து அதிக லாபம் பார்க்க முடியும். அல்லது அதிக வட்டி கட்டுவதிலிருந்து நமது சுமையைக் குறைத்துக் கொள்ள முடியும். அல்லது சொத்தை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள முடியும். யோசித்துப் பார்த்தால் இன்னும் எத்தனையோ விதங்களில் அடகு வைப்பது லாபம் தரக்கூடியதாகவே இருக்கிறது. 

இப்படி நல்வாய்ப்புகளை வழங்குவதாக மாறியிருக்கிறது அடகு. இந்நிலையில் எவற்றையெல்லாம் அடகு வைக்கலாம், அடகு வைக்கும்போது எதிலெல்லாம் கவனமாக இருக்க வேண்டும் என்பதைப் பற்றியும் சொன்னால், அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்பதால் அவற்றைப் படித்துப் பயனடையுங்கள்!தங்கத்தை தாராளமாக 'அடகின் ராணி’ என்றே சொல்லலாம். காரணம் மற்ற எந்த கடன் வாங்குவதை விடவும் டக்கென்று நகையை அடகு வைத்து கடன் வாங்கிவிடலாம் என்பதால்தான். நகை இருந்தால் கிட்டத்தட்ட கையில் ரொக்கம் இருப்பதற்குச் சமம்! அதனால்தான் தங்கம் இன்றைக்கும் பளபளக்கிறது!

சாதகங்கள்!

பத்திரங்களையும் ஆவணங்களையும்போல அல்லாமல் சில நிமிடங்களி லேயே தங்க நகையின் தரத்தை யும் மதிப்பையும் சோதித்து அறிந்து கொள்ள முடியும். இந்த கையில் நகையைக் கொடுத்து அந்த கையில் பணத்தை எளிதாக வாங்கி விடலாம்!
கூட்டுறவு உள்ளிட்ட சில வங்கிகளில் அடகு வைக்க வங்கிக் கணக்குக்கூட தேவைப் படாது. கூட்டுறவு வங்கிகளில் ரேஷன் கார்டு நகல் மட்டும் கொடுத்தால் போதும்; உடனடி யாக உறுப்பினராகி, நகைக் கடனைப் பெற்று விடலாம். 


ஒருவர் அதிகபட்சமாக 20 லட்சம் ரூபாய் வரை தாராளமாக நகைக் கடன் பெற முடியும். இருப்பினும் இத்தொகை வங்கிக்கு வங்கி மாறுபடும். தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துக்கு ஏற்ப கடன் தொகையும் மாறுபடும். தற்போது கிராமுக்கு சுமார் 1,400 ரூபாய் வரை கடன் தருகிறார்கள்.

வங்கிகளில் மட்டுமின்றி அடகுக் கடைகள், தனிநபர்கள் என எல்லா இடத்திலும் தங்கம் செல்லுபடியாகும்!

கவனத்தில் கொள்ள வேண்டியவை!

வங்கிகளில் கடன் தொகையில் சுமார் 0.56% செயல்பாட்டுக் கட்டணம் இருக்கும்.
வங்கிகளில் ஒரு குறிப்பிட்ட காலம் வரை மட்டுமே அடகில் வைத்திருக்க முடியும். அதன் பிறகு மீட்டாக வேண்டும். ஆனால், மீட்ட மறுநாளே மீண்டும் அடகு வைத்து நிலைமையைச் சமாளிக்கலாம்.

வங்கிகளில் ஒரு குறிப்பிட்ட காலம் வரை மட்டுமே அடகில் வைத்திருக்க முடியும். அதன் பிறகு மீட்டாக வேண்டும். ஆனால், மீட்ட மறுநாளே மீண்டும் அடகு வைத்து நிலைமையைச் சமாளிக்கலாம்.

தனியார் நிதி நிறுவனங் களில் வட்டி மிக அதிகம். சில தனியார் நிறுவனங்களில் முதல் மூன்று மாதங்களுக்கு ஒரு வட்டியும், அதன் பிறகு மிக அதிக வட்டியும் வசூலிக் கிறார்கள். இதில் கொடுமை, மூன்று மாதங்கள் தாண்டிய பிறகுதான் அதிக வட்டி விதிக் கிறார்கள் என்றாலும், கடன் வாங்கிய முதல் நாளிலிருந்தே அந்த அதிக வட்டியை கணக்குப் பண்ணி கறந்து விடுகிறார்கள்! 

தனியார் நிதி நிறுவனங் களில் நகை அடமானம் வைக்கும் சூழ்நிலை ஏற்பட்டால், விதிமுறைகளை ஒரு முறைக்கு இரு முறை படித்து பார்த்துவிட்டு கையெழுத்து போடவும்.

தனிநபர்கள், பான் புரோக்கர்கள் ஆகியோரிடம் அடகு வைப்பதை கடைசிக் கட்டமாக வைத்துக் கொள்ளவும்.

வரிச் சலுகை!  
  
நகை அடமானக் கடனுக்கு மாதச் சம்பளம் வாங்கும் நபர்களுக்கு வரிச் சலுகை கிடையாது. ஆனால், பிஸினஸ் செய்யும் நபர்களுக்கு வட்டியை லாபத்தில் கழித்துக் கொள்ளலாம். அதாவது இந்தத் தொகையை தொழில் செலவில் கணக்கு காண்பித்து, சலுகை பெறலாம். நகைக் கடன் அத்தாட்சி கடிதம் மற்றும் வட்டி ரசீது போன்றவைகளை பாதுகாப்பாக வைத்துக் கொள்வது அவசியம்.    


கையில் காசில்லை; தவிர்க்க முடியாத தேவைக்கு பணம் தேவை. இந்த மாதிரி சமயங்களில் சொத்து இருந்தால் கவலையில்லை. வீடோ, மனையோ, ஃப்ளாட்டோ அதன் மதிப்புக்கேற்றவாறு அடமானம் வைத்து பணம் பெற்றுக் கொள்ளலாம். வாங்கிய கடனை வட்டியோடு அசலையும் ஒவ்வொரு மாதமும் கட்டினால் சொத்தும் கையை விட்டுப் போகாது; நம் பிரச்னையும் தீரும்.

வீட்டை அடமானம் வைப்பது என்று முடிவு செய்யும் பட்சத்தில் தனிப்பட்ட ஆட்களிடம் அடமானம் வைப்பதைவிட வங்கிகளில் அடமானம் வைப்பது பாதுகாப்பானது. தனியார் வங்கிகளில் தாராளமாக கடன் கிடைக்கும். ஆனால் வட்டி அதிகமாக இருக்கும். பொதுத்துறை வங்கிகளில் நிறைய அலைய வேண்டியிருந் தாலும் வட்டி குறைவு.  

சாதகங்கள்!


 ஜாமீனாக நம் சொத்தைக் கொடுப்பதால் கடன் எளிதாகக் கிடைக்கும்.

மாதத் தவணை முறை என்பதால் கடன் கட்டுவதில் அதிக சிரமம் இருக்காது.

அடமானம் வைத்திருந்தாலும், அந்த வீட்டில் குடியிருக்கலாம். வாடகைக்கு விடுவதிலும் பிரச்னை இருக்காது.  

அடிப்படைத் தகவல்கள்!
வீடு/மனை உள்ளாட்சி அமைப்பின் முறையான அங்கீகாரம் பெற்றதாக இருக்க வேண்டும்.

வங்கியின், சொத்துகள் தொடர்பான மதிப்பீட்டாளர் ஆய்வு செய்து சொத்தின் மதிப்பை தீர்மானம் செய்வார். அதனடிப்படையில் வங்கி கடன் வழங்கும்.
கடன் தொகை!


சொத்தின் மதிப்பில் ஐம்பது சதவிகிதம் வரை அடமானக் கடன் பெறலாம். குறைந்தது ஒரு லட்சத் திலிருந்து அதிகபட்சம் ஒரு கோடி ரூபாய் வரை கடன் கிடைக்கும். இதிலும் நகர்ப்புறம், கிராமப்புறம் என அடமானத் தொகை வேறுபடும்.   

சொத்தின் மதிப்பில் பாதி கடன் தொகையாகக் கிடைக்க வாய்ப்புள்ளது என்றாலும், கடனைத் திருப்பிச் செலுத்தும் திறனைப் பொறுத்தே கடன் தொகை தீர்மானமாகும். மாதச் சம்பளம் பெறுகிறவர் எனில் அவருடைய திருப்பிச் செலுத்தும் திறன் 60% என பொதுவாக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.
கடன் தொகை மற்றும் திரும்பச் செலுத்தும் திறன், இதில் குறைந்தபட்ச தொகை எதுவோ அந்த அளவுக்கே கடன் கிடைக்கும்.

கடனை அதிகபட்சம் 84 மாதங்கள் வரை திரும்பக் கட்டலாம்.

தகுதி!

கடனுக்கு விண்ணப் பிப்பவர் குறைந்தபட்சம் இரண்டு வருடங்களாவது நிரந்தர பணியில் இருக்க வேண்டும்.

சொந்தத் தொழில் எனில் மூன்று வருடங்கள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்திருக்க வேண்டும். இல்லையெனில் சம்பந்தப்பட்ட வங்கியில் ஆறு மாதங்களாவது வாடிக்கையாளராக இருக்க வேண்டும்.

வயது வரம்பு 18 லிருந்து 60 வரை. சில வங்கிகளில் 21 லிருந்து 60 வரை..

தேவையான ஆவணங்கள்!
பட்டா, சொத்து மதிப்பு சான்றிதழ், 30 வருட வில்லங்கச் சான்றிதழ், தாய்ப் பத்திரம், கிரயப் பத்திரம், சொத்துவரி ரசீது, முகவரிச் சான்று, அடையாளச் சான்று.மாறுபடும் வட்டி விகிதத்தில் கடன் வழங்கப்படும். வட்டி 12-16% வரை.
என் பதிவில் உங்கள் நேரத்துக்கு நன்றி சொல்லும் அதேவேளையில், எனக்கு தகவல் கொடுத்த அனைத்து புத்தகங்களுக்கும், இணையதளங்களுக்கும், பதிவுகளுக்கும் என் மனமார்ந்த நன்றி. மேலும் தகவல்களுக்கு ; Please click 👇 

https://goldenvimal.business.site/?m=true 

https://sites.google.com/site/nsvimalgolden/www-goldenvimal-com **என்றும்  அன்புடன்  விமல் ** 98651-38410  ** 82203-03410 ** திண்டுக்கல் ** Goldenvimal ** www.goldenvimal.ml ** குருசாமி பிள்ளை சந்து ** திண்டுக்கல் ** இதுபாேன்ற இணையதளம் உங்களுக்கு உருவாக்க அனுகவும் 98651-38410 ** Writing by Goldenvimal ♥♥♥♥ இவன் விமல் உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள் தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
                             தாெடரும்,,,

உங்கள் கருத்துக்கள் பதிவிட

Name

Email *

Message *

வாசிக்க வந்து சென்றவர்கள் ,,

Sign Up

👇🌎 Website Link's 🌎👇

                                      Sri...

**********************🌎***********************
👨‍💻 👨‍💻 👨‍💻
👉 TNPDS 👉 FLIGHTS timetable 👉 EB Bill
👉 Railway 👉 Gold rate dindigul 👉 Google
👉 Lic 👉 Vikaspedia 👉 DINDIGUL
👉 G Photos 👉 Wixsite 👉 Exchange rates
👉 G Mail 👉 Blog template 👉 G Notes
👉 G Site 👉 G Business 👉 G Drive
👉 My Real games 👉 paramu 👉 VIMAL
👨‍💻 👨‍💻 👨‍💻
**********************🌎***********************

cricet live

maps