பேய் பிடித்தல் என்பது உண்மையா? அல்லது மனநல பிரச்னையா?

                                      Sri...

ஒரு சிறுமியை ஆவி ஆட்கொள்வதை சித்தரிக்கும் The Exorcist, ஹாலிவுட் பேய் படங்களில் ஒரு கிளாசிக்.

Exorcism என்ற பெயரில் ஆவிகளை விரட்டுவது பல நூற்றாண்டுகளாக ஐரோப்பிய நாடுகளில் கடைபிடிக்கப்படுகிறது.

ஆப்பிரிக்கா நாடுகளில் இது உயிர் பலி போன்ற விபரீதங்களில் முடியும்.

சென்ற வாரம் திருவண்ணாமலை ஆரணியில் ஒரு சம்பவம். ஏழு வயது சிறுவனுக்கு பேய் பிடித்திருப்பதாக கூறி 3 பெண்கள் அவனை அடித்தே கொன்றுவிட்டார்கள்.

மூவரில் சிறுவனின் தாயும் ஒருவர். இந்த சம்பவம் மருத்துவ உலகில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

'பேய் பிடித்தல்' என்ற வார்த்தையை கேள்விப்படாதவர்களே இருக்க முடியாது.

இறந்த ஒருவரின் ஆவி, உயிருடன் இருப்பவரின் உடலில் புகுந்து அவரை ஆட்டுவிப்பதே பேய் பிடித்தல் என்று கூறப்படுகிறது.

இந்த பேய் விஷயத்தை பலர் நம்புவதில்லை.

படித்த IAS, IPS அதிகாரிகளை, மருத்துவர்களை, பொதுவாக படித்த ஆண்களைகூட ஏன் பேய் பிடித்துக்கொள்வதில்லை?

பாலின பாகுபாடு போல, பேய்கள் ஜாதி பாகுபாடும் பார்க்குமா?

சமுதாயத்தில் பேய்களின் செயல்பாடு அப்படித்தான் இருக்கிறது. பேய்களால் சில பிரிவினர் தொந்தரவு செய்ய பட்டதாக யாரும் கேள்விப்பட்டதில்லை.

பேய்கள் அதிகம் விரும்பும் பிரிவினர்:

  • கிராம மக்கள்,
  • அதிலும் படிப்பறிவு இல்லாதவர்கள்,
  • அதிலும் குறிப்பாக பெண்கள்.

பேய் பிடித்தலுக்கு பல்வேறு காரணங்கள். ஒவ்வொரு மதத்திலும் வெவ்வேறு அணுகுமுறைகள்.

பேய் பிடித்ததாக கூறப்படுபவர்கள், இயல்புக்கு மாறாக பேசுவார்கள், செயல்களை செய்வார்கள் என்பது மட்டும் பொதுவில் புரிந்து கொள்ளப்படுகிறது.

மருத்துவ அறிவியல் சொல்வது என்ன?

  • இது முழுக்க மனநலம் சார்ந்த பிரச்னை.
  • உடலும் மனமும் ஒன்றிணைந்து செயல் படாத, ஒருவகை ஆளுமைச் சிதைவே (Dissociation) காரணம்.

குழந்தைகளுக்குப் பேய் பிடித்துவிட்டது என்று கிராமங்களில் சொல்லப்படுவதற்கு மூன்றே காரணங்கள். (நகரங்களில் பேய் கான்செப்ட் வேறு மாதிரி)

1 . பரம்பரை மனநோய்

பரம்பரை மனநோயில், சிறுவர்கள், தங்களை யாரோ தொடர்ந்து பார்த்துக்கொண்டே இருப்பதைப்போலவும், தங்களிடம் யாரோ பேசுவதுபோலவும் உணர்வார்கள்.

2. குடும்பம், பள்ளியில் ஏற்படும் ஸ்ட்ரெஸ்

பெற்றோர் ஒருவருக்கொருவரோ, கோராவிலோ சண்டையிடுவதைப் பார்ப்பதால் சில நேரங்களில் குழந்தைகள் அசாதாரணமாக நடந்துகொள்ளக்கூடும்.

3. பெற்றோரை கவனம் ஈர்க்க

ஃபிட்ஸ், மயக்கம் போட்டு விழுவதெல்லாம் மூன்றாம் வகையில் வருகிறது.

இது பெரும்பாலும் 10 வயதுக்கு மேல் வெளிப்படும். எளிதில் தீர்க்கக்கூடிய விஷயம்.

உடனே மனநல சிகிச்சையளிக்க வேண்டும். மனம் விட்டுப் பேச வைத்தாலே இரண்டு மாதங்களுக்குள் சரியாகிவிடும்.


பெரியவர்களுக்கு 'பேய் பிடிப்பது' கிராமப்புறங்களில் அதிகம்.

பேய் விரட்டுதல் என்பதும் அங்கேதான் சிரத்தையாக ப்ராக்ட்டிஸ் செய்யப்படுகிறது.

ஆள் நடமாட்டம் இல்லாத இடங்களுக்கு இரவில் போவது, அகால மரணங்களை ஒட்டி நடக்கும் சம்பவங்கள் - இவற்றை சுற்றியே பேய் பிடித்த சம்பவங்கள் அறியப்படுகிறது.

'இதற்கெல்லாம் ஆளுமை கோளாறே பிரதான காரணம்' என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள்.

சுற்று சமுக சூழலில் ஒருவரது 'அடையாளம்' (Self-identity), ஏற்கப்படவில்லை என்றால் அவர் இயல்புக்கு மாறான செயல்களை செய்யக்கூடும்.

பெண்ணடிமை சமூகங்களில் பெண்களுக்கு பேய்பிடிப்பது சகஜம்.

ஆரணி சம்பவத்தில் சிறுவனுக்கு பேய் பிடிக்கவில்லை - மாறாக சிறுவனின் தாய் உள்ளிட்ட மூன்று பெண்களும் மனரீதியாக பாதிக்கப்பட்டவர்கள் என்று முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

பாதிக்கப்பட்டவரை கம்பால் அடிப்பது, பேய் விரட்டுவது இதெல்லாம் கிராமங்களில் அதிகம் நடக்கும் .

நகரங்களில் இதுவே தனி அறையில் அடைப்பது, ஒதுக்குவது என்று கையாளப்படும்.

நகரங்களிலும் பதின்ம வயதினர்தாம் அதிகமாக பாதிக்கப்படும் ஏஜ் குரூப்.

தகுந்த மருத்துவ உதவி கிடைக்கவில்லையென்றால் எதிர்காலத்தில் முற்றிலும் குணப்படுத்த முடியாத பிரச்னையாக கூட உருவெடுக்கலாம்.

திடீரென தனக்குள்ளாகவே பேச ஆரம்பித்தல், சம்பந்தமற்ற செயலை மேற்கொள்ளல், இயல்புக்கு மாறாக அமைதி காத்தல், ஆக்ரோஷமாக இருத்தல் போன்றவை தொடக்க அறிகுறிகள்.

மன அழுத்தத்தை கட்டுப்படுத்தும் மாத்திரைகளில் ஆரம்பித்து மனம் விட்டு பேச செய்வது, கவுன்சலிங் என்று சிகிச்சை அளிக்கப்படும்.


இன்னொரு விஷயம். ஒரு சில இடங்களுக்கு போனால், சும்மா போகிற ஆவியை பிடித்து உங்கள் மேல் இறக்கி விடுவார்கள்.

குறிப்பிட்ட தாளக்கட்டில் வாத்திய இசை, கைதட்டும் ஓசை, நடனம், அங்க அசைவுகள் போன்ற செயல்கள் மூலம் உணர்ச்சி பூர்வ அனுபவங்களை உண்டாக்க முடியும் என்பது உளவியலாளர் கருத்து.

சில மதப்பிரிவினரின் பக்தி அசைவுகள், ஆவேச கூச்சல் போன்றவை நரம்பு மண்டல இயக்கத்தை தூண்டக் கூடியவை (Rythmical stimulations of the nervous system).

அந்த குறிப்பிட்ட அலைவரிசையில் இணையும்போது, தெளிவான மனமும் அசைக்கப்பட்டு விடலாம்.

அப்போது நீங்கள் ஆட்கொள்ளப் படுவீர்கள்..

படத்தேடல் : கூகிள்

  1. சிறுவனுக்கு பேய் பிடித்ததாக கூறி அடித்துக் கொன்ற தாய் உள்பட மூவர் கைது
  2. The centuries-old practice of exorcism is on the rise. Why now?
  3. Exorcism – why is it on the rise?
  4. health-professionals-on-exorcism
  5. Psychotherapy+Treatment
என் பதிவில் உங்கள் நேரத்துக்கு நன்றி சொல்லும் அதேவேளையில், எனக்கு தகவல் கொடுத்த அனைத்து புத்தகங்களுக்கும், இணையதளங்களுக்கும், பதிவுகளுக்கும் என் மனமார்ந்த நன்றி. மேலும் தகவல்களுக்கு ; Please click 👇 

https://goldenvimal.business.site/?m=true 

https://sites.google.com/site/nsvimalgolden/www-goldenvimal-com **என்றும்  அன்புடன்  விமல் ** 98651-38410  ** 82203-03410 ** திண்டுக்கல் ** Goldenvimal ** www.goldenvimal.ml ** குருசாமி பிள்ளை சந்து ** திண்டுக்கல் ** இதுபாேன்ற இணையதளம் உங்களுக்கு உருவாக்க அனுகவும் 98651-38410 ** Writing by Goldenvimal ♥♥♥♥ இவன் விமல் உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள் தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
                             தாெடரும்,,,

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

👇🌎 Website Link's முக்கிய இணைப்புகள் 🌎👇

Top Post Ad

Below Post Ad