Sri,,, உலக வரலாற்றில் மிகவும் தீய பெண் யார்? | www.goldenvimal.com
      **என்றும் அன்புடன் விமல் ** 98651-38410 ** 82203-03410 ** திண்டுக்கல் ** Goldenvimal ** www.goldenvimal.ml ** குருசாமி பிள்ளை சந்து ** திண்டுக்கல் ** வி.பரமேஸ்வரி & விமல் **  

9 Jul 2021

உலக வரலாற்றில் மிகவும் தீய பெண் யார்?

                                      Sri...

"இளம் பெண்களை கொன்று அவர்களின் ரத்தத்தில் குளித்து வந்தால் என்றென்றும் இளமையாகவே இருக்கலாம்."

இதை நம்பி, 650க்கும் மேற்பட்ட கொலைகளை செய்த எலிசபெத் பத்தோரி என்பவர், உலகிலேயே அதிக கொலை செய்த பெண் என்று கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார்

பத்தோரியை பற்றி..

16 ஆம் நூற்றாண்டுகளில் ஹங்கேரியில், செல்வ வளம் மிகுந்த பணக்கார குடும்பத்தில் பிறந்து வாழ்ந்தாள்.

யாரேனும் குற்றம் செய்தால் ஒரு குதிரையின் வயிற்றை கிழித்து அந்த குற்றவாளியை, அதனுள் வைத்து தைத்து இரண்டும் இறக்கும் வரை பார்த்துக் கொண்டே இருப்பது ஒரு தண்டனை அந்த நாட்டில். இது போன்ற பல கொடூரமான சம்பவங்களை கண்டு வளர்க்கிறாள். அப்போதே தன் பணியாளர்களை மிகவும் கொடுமை படுத்துவாள்.

தனது 15 வயதில் பெரேக் நடாஸ்டி என்பருடன் திருமணம் நடக்கிறது. பணியாளர்களை சித்திரவதை செய்யும் பழக்கம் அங்கும் தொடர்கிறது. கணவரும் சில சமயங்களில் இவளுடன் சேர்ந்து சித்திரவதை செய்வாராம்.

கணவர் பெரும்பாலும் எங்காவது போருக்கு சென்று விட்டால், இவள் தனியாகவே இருப்பாளாம்.

ஒரு நாள் ஒரு பணிப்பெண் இவளுடைய தலைமுடியை திருத்திக்கொண்டிருக்கும் போது சற்று வேகமாக இழுத்துவிட்டாள். இதனால் ஆத்திரம் அடைந்த பத்தோரி அந்த பெண்ணை, ரத்தம் வரும் அளவிற்கு கடுமையாக தாக்கினாள். இதில் சிறிதளவு ரத்தம் பத்தோரியின் கைகளில் பட்டுவிட்டது. பிறகு இரவு நேரத்தில், தன் கையில் அந்த பணிப்பெண்ணின் ரத்தம் பட்ட இடம் அழகாகவும் இளமையாகவும் தெரிவதை கவனித்தாள்.

பிறகு தன் வாழ்நாள் முழுவதும் தன் உடல் இளமையாக இருக்க வேண்டும் என்று எண்ணி, இளம் பெண்களை கடத்தி, கொலை செய்ய தொடங்கினாள்.

இவளே ஊருக்குள் சென்று பெண்களை கடத்திக் கொண்டு வருவாள். இவளால் ஊருக்குள் சென்று பெண்களை கொண்டு வர முடியாத சமயங்களில் தனது காவலர்களை அனுப்பி பெண்களை கொண்டுவரும் படி உத்தரவிடுவாள்.

இதனால் ஊரில் பெண்கள் காணாமல் போக தொடங்கினர். கொலை செய்து ரத்தத்தை எடுப்பது மட்டுமன்றி சில சித்தரவதைக்களும் செய்வாள்.

  1. பெண்களை கூண்டில் அடைத்து வைப்பாள்.
  2. பின் அவர்களை பனிக்கட்டியில் வீசி, அவர்கள் உறைந்து இறக்கும் வரை பார்த்து ரசிப்பார்.
  3. கைகளில் நெருப்பு வைத்து சுடுதல், நெருப்பு பந்தை பெண்களின் முகத்தில் எறிதல் போன்ற கொடூர செயல்களிலும் ஈடுபட்டாள்.
  4. கொதிக்கும் நீரை அவர்கள் மீது ஊற்றி தோலை தனியே பிரித்தெடுப்பாள்.
  5. பெண்களின் உடலில் தேனை ஊற்றி தேனீக்கள் மற்றும் பிற பூச்சிகளை அவர்களின் மீது விட்டு கடிக்க விட்டு சித்திரவதை செய்வாள்.
  6. நரமாமிசம் உண்ணும் படி கட்டாயப்படுத்துவாள்.
  7. பெண்களை இரவு நேரத்தில் கட்டி வைத்து, ஊசியை வைத்து குத்துவது உடலைப் பாகங்களை வெட்டுவது போன்ற செயல்களிலும் ஈடுபட்டுள்ளாள்.

The True Story of Elizabeth Báthory “The Blood Countess”

The Legend of Elizabeth Báthory: The Blood Countess - Medical Bag

இன்னும் பல கொடுமைகள் செய்துள்ளாள்.

இவளின் இந்த கொடூரங்கள் தெரிந்ததால் மக்கள் யாரும் வேலைக்கு செல்லவே பயந்தனர். சிலர் இவளுக்கு அஞ்சி தன் பெண் பிள்ளைகளை மறைத்து வைக்க தொடங்கினர்.

1610 ஆம் அண்டிற்கு பிறகு துர்சோ என்பவர் பத்தோரிக்கு எதிராக ஆதாரங்களை திரட்ட தொடங்கினார். கோட்டையை ஆராய்ந்த போது, கண்ணை இழந்த, கை கால்களை இழந்த நிலையில் பல அடையாளம் தெரியாத பெண் சடலங்கள் கண்டறியப்பட்டது.

அதன் பின் விசாரணை நடத்தி பத்தோரி நீதிமன்றத்தில் ஆஜராகும்படி உத்தரவிடப்பட்டது. ஆனால் அவர் ஆஜராகமல் தன் பணியாளர்களை தனக்கு பதில் குற்றங்களை ஒப்புக்கொண்டு சரணடையும்படி செய்தாள்.

இருப்பினும் இவள் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டது. ஒரு தனிக் கோட்டையில் சிறை வைக்கும் படி ஹங்கேரி அரசு உத்தரவிட்டது. அவளுக்கு உதிவிய பணியாளர்களுக்கு மரண தண்டணை வழங்கப்பட்டது.

அந்த மூடப்பட்ட கோட்டையில் இருந்த பத்தோரி, தனது 54 ஆவது வயதில் உயிரிழந்தாள் என கூறப்படுகிறது.

படங்கள்: Google

என் பதிவில் உங்கள் நேரத்துக்கு நன்றி சொல்லும் அதேவேளையில், எனக்கு தகவல் கொடுத்த அனைத்து புத்தகங்களுக்கும், இணையதளங்களுக்கும், பதிவுகளுக்கும் என் மனமார்ந்த நன்றி. மேலும் தகவல்களுக்கு ; Please click 👇 

https://goldenvimal.business.site/?m=true 

https://sites.google.com/site/nsvimalgolden/www-goldenvimal-com **என்றும்  அன்புடன்  விமல் ** 98651-38410  ** 82203-03410 ** திண்டுக்கல் ** Goldenvimal ** www.goldenvimal.ml ** குருசாமி பிள்ளை சந்து ** திண்டுக்கல் ** இதுபாேன்ற இணையதளம் உங்களுக்கு உருவாக்க அனுகவும் 98651-38410 ** Writing by Goldenvimal ♥♥♥♥ இவன் விமல் உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள் தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
                             தாெடரும்,,,

உங்கள் கருத்துக்கள் பதிவிட

Name

Email *

Message *

வாசிக்க வந்து சென்றவர்கள் ,,

Sign Up

photo

photo

👇🌎 Website Link's 🌎👇

                                      Sri...

**********************🌎***********************
👨‍💻 👨‍💻 👨‍💻
👉 TNPDS 👉 FLIGHTS timetable 👉 EB Bill
👉 Railway 👉 Gold rate dindigul 👉 Google
👉 Lic 👉 Vikaspedia 👉 DINDIGUL
👉 G Photos 👉 Wixsite 👉 Exchange rates
👉 G Mail 👉 Blog template 👉 G Notes
👉 G Site 👉 G Business 👉 G Drive
👉 My Real games 👉 paramu 👉 VIMAL
👨‍💻 👨‍💻 👨‍💻
**********************🌎***********************

cricet live

maps