.
.புதிதாக பிறந்த குழந்தைக்கு அம்மாவை அடையாளம் காண்பதென்பது அம்மாவின் சத்தம் ,தொடு உணர்ச்சி அப்புறம் மிக முக்கியமாக வாசனை உணர்ச்சி மட்டுமே.
ஏனென்றால் சுமார் 45 நாள்கள் வரையிலும் குழந்தைக்கு கண்கள் சரிவர தெரியாது பழகவும் செய்யாது .எனவே அம்மாவின் அரவணைப்பும் ,அம்மாவின் வாசனையும் மட்டுமே அது புரிந்துகொள்ளும் .
இன்னும் சொல்லப்போனால் அம்மாவின் வியர்வை வாசனையும் அது படிந்த சேலை வாசனையும் முக்கியமாக சொல்வார்கள் .அதனால் தான் அம்மாவின் சேலையில் தூளி கட்டுவது .அம்மாவே தொடுவதுபோல் குழந்தை உணரும் என்பதற்காக .
அதனை கெடுக்கும் விதமாக நீங்கள் மஞ்சள் தேய்ப்பது வாசனை திரவியம் பூசுவது போன்ற விஷயங்கள் செய்தால் குழந்தை அதனை ஏற்காமல் இவ்வாறு தவிர்க்கும் .
எனவே குறைந்த பட்சம் தாய்ப்பால்கொடுக்கும் வரை அல்லது சுமார் மூன்று மாதங்களாவது அவற்றை தவிருங்கள் .பிறகு சரியாகிவிடும் .வாழ்த்துக்கள்
https://goldenvimal.business.site/?m=true
https://sites.google.com/site/nsvimalgolden/www-goldenvimal-com Writing by Goldenvimal ♥♥♥♥ இவன் விமல் உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள் தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.