இணையம் இல்லாமல் பண பரிவர்த்தனை வசதி அறிமுகம்

                                      Sri...
இணையம் இல்லாமல் பண பரிவர்த்தனை வசதி
அறிமுகம்நெட் பேங்கிங், மொபைல் வாலெட்கள் என, டிஜிட்டல் பரிவர்த்தனை மேற்­கொள்ள பல வழிகள் இருந்தாலும், இவற்றை பயன்படுத்த இணைய வசதி இருக்க வேண்டும்.

ஸ்மார்ட் போன் இல்லாத அல்லது இணைய வசதி இல்லாத போது என்ன செய்வது?

இது போன்ற நேரங்களில், யு.எஸ்.எஸ்.டி., தொழில்நுட்பம் மூலம் இணைய வசதி இல்லாமலேயே, பணப்பரிவர்த்தனை மேற்­கொள்­ளலாம். இதன் அடிப்படையில், நேஷனல் யூனி­பைடு, யு.எஸ்.எஸ்.டி., பிளாட்பார்ம் இயங்­கு­கி­றது. அனைவருக்கும் வங்கிச் சேவை அளிக்கும் நோக்கத்தின் ஒரு பகுதியாக, இந்த வசதி அமைகிறது.

யு.எஸ்.எஸ்.டி., என்றால் என்ன?

அன்ஸ்டக்சர்டு சப்ளி­மென்ட்ரி சர்வீஸ் டேட்டா என்பதே, யு.எஸ்.எஸ்.டி., என, குறிப்பிடப்படுகிறது. மொபைல் போனில், குரல் சேவைகள் மேற்கொள்ள உதவும், ஜி.எஸ்.எம்., நெட்வொர்க் மூலம் தகவல் பரி­வர்த்தனைக்கு உதவும் தொழில்நுட்பமாக இது விளங்­கு­கி­றது. வங்கிச் சேவை உள்ளிட்ட பரி­வர்த்தனைகளுக்கு இதை பயன்­ப­டுத்­தலாம். இந்த சேவையில், வங்கி மற்றும் தொலை தொடர்பு நிறு­வனம் இணைந்து, பரி­வர்த்­த­னைக்கு உதவுகின்றன. குறுஞ்­செய்தி வசதி உள்ள எந்த போனிலும், இது செயல்படும்.

எப்படி பயன்படுத்துவது?

இந்த வசதியை வங்கிக் கணக்கில் உள்ள தொகையை சரி பார்க்க, மினி ஸ்டேட்மென்ட் பெற, எம்.எம்.ஐ.டி., (மொபைல் வங்கிச் சேவை குறி­யீடு), ஐ.எப்.எஸ்.சி., குறி­யீடு அல்­லது ஆதார் எண் மூலம் பணப் பரிவர்த்தனை செய்ய பயன்படுத்தலாம். ஒரு முறை பாஸ்­வேர்டு பெற, எம்பின் எண் பெற மற்றும் வங்கிக் கணக்குடன், ஆதார் இணைப்பு நிலை அறிய உள்ளிட்ட வசதிகளுக்கும் இதை பயன்படுத்தலாம்.

என்ன தேவை?

இந்த வசதியை, சாதாரண மொபைல் போனிலும் பெற முடியும். ஆனால், மொபைல் வங்கிச் சேவைக்காக பதிவு செய்து கொண்டிருந்தால் மட்டுமே, இதை பயன்படுத்த முடியும். ஆனால், பணம் பெறுபவருக்கு இது கட்டாயமில்லை.
ஆங்கிலம், தமிழ் உள்ளிட்ட, 12 மொழி­களில் பயன்படுத்தலாம். ஆங்கிலம் எனில், *99# என, டைப் செய்து அணுக வேண்டும்.
தமிழ் எனில், *99* #23 என, டைப் செய்ய வேண்டும். அதன்பின், பட்டியலில் இருந்து தேவையான சேவையை தேர்வு கொள்ளலாம்.

கட்டணம்

இந்த சேவைக்காக, சிறிய கட்டணம் வசூலிக்கப்படும். பரிவர்த்தனை நிகழவில்லை என்றாலும், கட்டணம் உண்டு. ஆனால், ரோமிங் போன்ற கட்டணம் கிடையாது.
இந்த கட்டணம், தற்போது பரிவர்த்தனைக்கு, 0.50 பைசாவாக குறைக்­கப்­பட்டு உள்­ளது. இது மொபைல் பில்லில் சேர்ந்து­விடும். இந்த சேவை மூலம் அதி­க­பட்­ச­மாக, 5,000 ரூபாய் பரிவர்த்தனை மேற்கொள்ளலாம்.
இந்த பரிவர்த்தனையை துவக்கிய பின், ரத்து செய்ய முடியாது.
ஆதாரம் : தேசிய பணம் வழங்கும் நிறுவனம்
என் பதிவில் உங்கள் நேரத்துக்கு நன்றி சொல்லும் அதேவேளையில், எனக்கு தகவல் கொடுத்த அனைத்து புத்தகங்களுக்கும், இணையதளங்களுக்கும், பதிவுகளுக்கும் என் மனமார்ந்த நன்றி. மேலும் தகவல்களுக்கு ; Please click 👇 

https://goldenvimal.business.site/?m=true 

https://sites.google.com/site/nsvimalgolden/www-goldenvimal-com **என்றும்  அன்புடன்  விமல் ** 98651-38410  ** 82203-03410 ** திண்டுக்கல் ** Goldenvimal ** www.goldenvimal.ml ** குருசாமி பிள்ளை சந்து ** திண்டுக்கல் ** இதுபாேன்ற இணையதளம் உங்களுக்கு உருவாக்க அனுகவும் 98651-38410 ** Writing by Goldenvimal ♥♥♥♥ இவன் விமல் உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள் தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
                             தாெடரும்,,,

👇🌎 Website Link's முக்கிய இணைப்புகள் 🌎👇

Top Post Ad

Below Post Ad