சிக்கல் சிங்காரவேலனின் தரிசனம் கிடைக்கப் பெருவாேம்...

                                      Sri...

சிக்கல் சிங்காரவேலனின் தரிசனம்வான் உலாவும் மதி வந்து உலவும் மதில் மாளிகை
தேன் உலாவும் மலர்ச்சோலை மல்கும் திகழ் சிக்கலுள்
வேனல் வேளை விழித்திட்ட வெண்ணெய்ப்பெருன் அடி
ஞானம் ஆக நினைவார் வினை ஆயின நையுமே. 

சம்பந்தர் சிக்கல்வெண்ணெய் நாதர்' இறைவன் மேல் பாடியருளிய இரண்டாம் திருமுறையில் இடம் பெற்ற பதிகம்
Sri Singara Velavar, Sikkal
சிக்கல் மேவிய சிங்கார வேலவா - என்
பக்கலில் நின்றே பரிவுடன் ஆளவா 
துள்ளிக்குதித்தோடும் தோகை மயில் மீது
வள்ளிதெய்வயானையுடன் வந்தெனக்கருளும் 

Gate to Sikkal Temple
ஒருமுறை, மழை பொய்த்து, பஞ்சம் தலைவிரித்தாடிய காலத்தில் பசியின் கொடுமையால், பஞ்சத்தில் பிடியில் சிக்கிய தேவலோகப் பசு காமதேனு , நாயின் ஊனைத் தின்றதால் ஏற்பட்ட சாபம் தீர்த்த தலம் சிக்கல். 

பாவம் பற்றியதால், புலியின் முகத்தைப் பெற்றது. பிறகு, தவற்றை உணர்ந்து சிவனாரை வழிபட்டு, தனது புலிமுகம் நீங்குவதற்காக வழி கோரியது. 'பூலோகத்தில், மல்லிகாவனத்துக்குச் சென்று தங்கி வழிபட்டால், புலி முகம் நீங்கும்’ என்று அருளினார் சிவபெருமான். 

அதன்படி, மல்லிகை வனமாக விளங்கிய இந்தத் தலத்தை அடைந்து, சிவனாரை வேண்டி, வணங்கியது.

 ஈசனின் கருணையால் புலிமுகம் நீங்கியது. மனதில் பொங்கிய மகிழ்ச்சியால், காமதேனு பாலைப் பொழிய, அந்த இடத்தில் பால் குளம் உருவானது. 

இதனால், காமதேனு தீர்த்தம் என்றும், தேனு தீர்த்தம் என்றும், பால் குளமானதால் க்ஷீர புஷ்கரிணி என்றும் இங்கேயுள்ள தீர்த்தக்குளம் பெயர் பெற்றது. 

பின்னர், வசிஷ்டர் சிவத்தை வழிபட ஆசை கொண்டார். கயிலைநாதரின் திருவுள்ளக் குறிப்பையும் உணர்ந்தார். 


காமதேனு குளித்தபோது பெருகிய பால் குளத்தைப் பார்த்து வசிஷ்ட முனிவர்அதில் இருந்து வெண்ணையை எடுத்து சிவலிங்கமாக்கி அதற்கு பூஜை செய்தார். 
பூஜையை முடித்தபின் அந்த சிவலிங்கத்தை வேறு
இடத்தில் வைக்க எண்ணி அதை எடுக்க முயன்றார். அது இயலாமல் அந்த வெண்ணை லிங்கம் அவர் கையில் சிக்கிக் கொண்டது.

 இறைவன் "வெண்ணெய் நாதர்' வழிபாடு முடிந்தவுடன் இந்த லிங்கத்தை பெயர்த்து எடுக்கும் போது அது வராமல் சிக்கலை ஏற்படுத்தியதால் இத்தலம் "சிக்கல்' என்றழைக்கப்பட்டது.

தீராத சிக்கலெல்லாம் தீர்க்கும் சிக்கல் சிவன்..நவநீதேஸ்வரர் (வெண்ணெய் பெருமான்)

.
Sikkal Tirukkulam

 • ஒவ்வொரு வருடமும் ஐப்பசி மாதம் கந்தசஷ்டி திருநாளின் முதல் நாள் முருகன் சூரபத்மனை அழிப்பதற்காக தன் தாயிடம் வேல் வாங்கி முருகப்பெருமான் தன் கோவிலில் வந்து அமர்ந்த பிறகு, வேலின் வீரியம் தாங்காமல் சிக்கல் சிங்காரவேலருக்கு வியர்க்கும் ...

பட்டுத்துணியால் துடைக்கத் துடைக்க முத்து முத்தாக வியர்வை துளிர்த்துக் கொண்டே இருக்கும் அற்புதம் இன்றளவும் நடைபெறும் தலம் சிக்கல். 

சிக்கலில் வேல் வாங்கி செந்தூரில் சம்ஹாரம் என்பது ஒரு பழமொழி. இத்தலத்தில் கோயில் கொண்டுள்ள அம்பாள் வேல்நெடுங்கண்ணியிடம் வேல் வாங்கி திருச்செந்தூரில் சூரபத்மனை முருகப்பெருமான் சம்ஹாரம் செய்தார். 

அம்மனின் 64 சக்தி பீடங்களில் ஒன்று. 

 கந்தசஷ்டி விழா மிகவும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
அம்மன் வேல்நெடுங்கண்ணி
[Gal1]
விசுவாமித்திரர், அகத்தியர், காத்தியாயனர், நாரதர், முசுகுந்த சக்கரவர்த்தி ஆகியோர் இத்தலத்தில் வழிபாடு செய்துள்ளனர். 


சிவன், பெருமாள், முருகன், அனுமன் என நால்வரும் இத்தலத்தில் அருள்பாலிப்பது கோயில் தனி சிறப்பாகும். 

அருணகிரிநாதர் இத்தல முருகனை குறித்து திருப்புகழ் பாடியுள்ளார். கோச்செங்கட் சோழன் கட்டிய 72 மாடக்கோயில்களில் இதுவும் ஒன்று.
Sikkal Singaravelar
தேவர்கள், சூரபத்மனிடமிருந்து தங்களை காக்க முருகப்பெருமானுக்கு 
"திரி சதை' செய்து வேண்டிக்கொண்டனர். இதனால் முருகப்பெருமான் சூரனை அழித்து தேவர்களை காத்தார். சிங்கார வேலனுக்கு, அம்மன் தன் சக்தியை வேலாக வழங்கிய இத்தல முருகனுக்கு 
"சத்ரு சம்ஹார திரி சதை' அர்ச்சனை செய்தால் எதிரிகள் தொந்தரவு விலகி நலம் விளையும் என்பது நம்பிக்கை.
[murugan_silai.jpg]
ஒரு முறை தேவர்கள், அசுரகுலத்தை சேர்ந்த மகாபலி சக்கரவர்த்தியால் ஏற்படும் கஷ்டங்கள் குறித்து பெருமாளிடம் முறையிட்டனர்.
இதற்காக திருமால் வாமன அவதாரம் எடுத்த போது இத்தலம் வந்து சிவனை வழிபட்டு மகாபலியை அழிக்கும் ஆற்றல் பெற்றதாக கூறப்படுகிறது. எனவே இத்தல பெருமாள் "கோலவாமனப்பெருமாள்' என்ற திருநாமத்துடன் தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார்.

திலோத்தமையால் தன் தவவலிமையை இழந்த விசுவாமித்திர முனிவர் இழந்த தவவலிமையை திரும்பப் பெற்ற தலம் சிக்கல்

முசுகுந்தச் சக்கரவர்த்திக்கு ஒரு அந்தணனைக் கொன்றதால் ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷமும் சாபமும் நீங்கிய தலம் சிக்கல்

கோவிலின் மையத்தில் 12 படிகள் கொண்ட ஒரு கட்டுமலை மேல் மூலவர் நவநீத நாதர் லிங்க வடிவில் அருள் புரியும் சந்நிதியும், சிக்கல் சிங்காரவேலர் என்று பிரசித்தி பெற்ற முருகப்பெருமான் சந்நிதியும் உள்ளன. 

கீழ்ப்படிக்குப் பக்கத்திலுள்ள சுந்தர கணபதியை தரிசித்த பிறகே கட்டுமலை மேலே செல்ல வேண்டும் என்பது வழக்கம். 

மேலே சென்று மண்டபத்தை அடைந்ததும் நேரே தியாகராஜ சந்நிதி உள்ளது. இது சப்தவிடங்கத்தலங்களுள் அடங்காது. 

இங்குள்ள மரகதலிங்கம் மிகவும் சிறப்புள்ளது. உள்ளே வெண்ணைப் பிராண் இருக்கும் கருவறை உள்ளது. சிக்கல் சிங்காரவேலர் வள்ளி, தெய்வானையுடன் நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார். 

ஐப்பசி மாத விழாவில் வியர்வை சிந்தும் வேலவர் இவர்தான். கட்டுமலயின் கீழ்பக்கம் இறைவி வேல் நெடுங்கண்ணியின் சந்நிதி அமைந்துள்ளது. 

இறைவி முருகனுக்கு வேல் தருவது போன்ற சிற்பம் சந்நிதியின் மேல்பாகத்தில் இருக்கிறது.

வடமேற்கு மூலையில் ஆஞ்சனேயர் சந்நிதி அமைந்திருக்கிறது.

வரத ஆஞ்சநேயர்

  Sikkal Singaravelan Temple Nagapatnam
  மேவிய வடிவுறும் வேலவா போற்றி!
  தேவர்கள் சேனா பதியே போற்றி!
  குறமகள் மனமகிழ் கோவே போற்றி!
  திறமிகு திவ்விய தேகா போற்றி!

  இடும்பா யுதனே, இடும்பா போற்றி!
  கட்மபா போற்றி கந்தா போற்றி!
  வெட்சி புனையும் வேளே போற்றி!
  உயர்கிய கனக சபைக்கும் ஓர் போற்றி!

  மயில் நடம் இடுவோய் மலரடி சரணம்;
  சரணம் சரணம் சரஹண பவஓம்,
  சரணம் சரணம் சண்முகா சரணம்
  சரணம் சரணம் சண்முகா சரணம்

  கருத்தைக்கவரும் கருட வாகனம்


  சிக்கலில் தேர்த்திருவிழா...
  என் பதிவில் உங்கள் நேரத்துக்கு நன்றி சொல்லும் அதேவேளையில், எனக்கு தகவல் கொடுத்த அனைத்து புத்தகங்களுக்கும், இணையதளங்களுக்கும், பதிவுகளுக்கும் என் மனமார்ந்த நன்றி. மேலும் தகவல்களுக்கு ; Please click 👇 

  https://goldenvimal.business.site/?m=true 

  https://sites.google.com/site/nsvimalgolden/www-goldenvimal-com **என்றும்  அன்புடன்  விமல் ** 98651-38410  ** 82203-03410 ** திண்டுக்கல் ** Goldenvimal ** www.goldenvimal.ml ** குருசாமி பிள்ளை சந்து ** திண்டுக்கல் ** இதுபாேன்ற இணையதளம் உங்களுக்கு உருவாக்க அனுகவும் 98651-38410 ** Writing by Goldenvimal ♥♥♥♥ இவன் விமல் உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள் தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
                               தாெடரும்,,,

  👇🌎 Website Link's முக்கிய இணைப்புகள் 🌎👇

  Top Post Ad

  Below Post Ad