சிவராத்திரி உருவான வரலாறும், சிவராத்திரியில் கலந்து கொள்வதன் பயன்களும்..

                                      Sri...
🙏🙇‍♂🙏🙇‍♂🙏🙇‍♂🙏🙇‍♂🙏🙇‍♂🙏

🔆 *சிவராத்திரி உருவான வரலாறும், சிவராத்திரியில் கலந்து கொள்வதன் பயன்களும்...* 🔆

🙏 *'சிவம்'* என்ற சொல்லுக்குத் துன்பத்தை நீக்கி இன்பத்தை அளிப்பவர்  என்று பொருள். ஆனால் சிவபெருமானாரை கோபக்காரர், அழிப்பவர், துடைப்பவர் என்று சொல்வதெல்லாம் எவ்வளவு பெரிய (பாவம்), பொய் என்று நாம் உணர வேண்டும்.

🙏 மாசி மாதம் அமாவாசைக்கு முன்னாள் (சதுர்த்தசி திதி) சிவராத்திரி எனக் கொள்ளப்படுகின்றது. *சிவபெருமானின் வழிபாட்டிற்கு உரிய
இரவு என்பது பொருளாகும்.*
ஏன் இந்த நாளை சிவராத்திரி என்கிறோம் என்று சிந்திப்போம்.

🙏 *திருமாலும் பிரமனும் தாமே உயர்ந்தவர்கள் என்று சண்டையிட்டுக் கொண்டார்கள். இவர்களது ஆணவத்தைப் போக்குவதற்காக, அன்பே வடிவான சிவ பரம்பொருள் அவ்விருவருக்கும் இடையே, அடியும் முடியும் காணமுடியாத ஒரு சிவசோதியாய் - பேரொளிப் பிழம்பாய்த் (நின்றார்) தோன்றினார். அந்த நாள்தான் சிவராத்திரி எனப்படுகின்றது.*

🙏அக்காலம் மாசி மாதம், அமாவாசைக்கு முன் நாள் (சதுர்த்தசி திதி) திங்கட்கிழமை, திருவோண நட்சத்திரம் கூடிய மேலான புண்ணிய காலம்.

🙏 *அப்படிப் பேரொளிப் பிழம்பாய்ப் பரம்பொருள் எழுந்தருளிய காலம், இரவு 11.30 மணிக்குமேல் 1.00 மணி வரையிலான காலமாகும்.*

 🙏 இன்று இரவு முழுவதும் கண் விழித்துச் சிவ சிந்தனையுடன் இருக்க வேண்டும். சிவாலயம் வலம் வருதல், திருமுறைகளை ஓதுதல், திருஐந்தெழுத்தினைச் (சிவாயநம) செபித்தல், கூட்டு வழிபாடு செய்தல் ஆகியவற்றால், அன்று இரவைக் கழித்தல் நலம்.

🙏 *இந்த ஒரு நாள் வழிபாடு ஆயிரம் நாள் சிவபூசை செய்த பலனை அளிக்கும் என்பது அருளாளர்கள் அனுபவத்தால் கூறியுள்ள உண்மையாகும்.*

🙏 சிறிய வழிபாட்டினால் பெரிதும் மகிழ்ச்சி அடைபவர் சிவபெருமான். அதிலும் சிவராத்திரி போன்ற புண்ணிய நாட்கள் வழிபடுதல் அளவிலா நலன்களை அளிக்கும்.

🙏 இன்னொரு வரலாறு:-
*எல்லா உயிர்களும் ஒடுங்கும் கற்ப முடிவின் இரவில் நான்கு யாமத்தும் உமையம்மையார் சிவபெருமானாரை விதிப்படி பூசித்து மகிழ்ந்த இரவே சிவராத்திரி என வழங்கப் பெறுகின்றது.* *இந்நாளில் வழிபடுகின்ற அனைவருக்கும் எல்லா நன்மைகளையும் அருள வேண்டும் என்று இறைவி வேண்ட, இறைவரும் அவ்வாறே அருள் புரிந்து, காத்தருள் புரிவதாகக் திருவாய் மலர்ந்தருளினார்.*

🙏 சிவராத்திரி வழிபாட்டினால் நீண்ட ஆயுளைப் பெறலாம், நிறைந்த செல்வத்தை பெறலாம், நல்ல மக்கட் பேறு பெறலாம், தீரா நோய்கள் நீங்கப் பெறலாம், முடிவாக பிறவாமையையும் பெறலாம்.

🙏 இந்த நாளில் செய்யும் தான தருமங்கள், மந்திர ஜபங்கள் யாவையும் பல நூறு மடங்காக பெருகி எல்லா நலன்களையும் அளித்து, மறுமையில் முக்தியையும் அளிக்கும் என்பது அருளாளர்கள் அனுபவத்தால் கூறிய உண்மையாகும்.

🙏 *அனைவரும் இன்று சிவராத்திரி வழிபாட்டில் கலந்து கொள்வோம் எல்லா நலன்களையும் பெறுவோம்.*

        திருச்சிற்றம்பலம்
என் பதிவில் உங்கள் நேரத்துக்கு நன்றி சொல்லும் அதேவேளையில், எனக்கு தகவல் கொடுத்த அனைத்து புத்தகங்களுக்கும், இணையதளங்களுக்கும், பதிவுகளுக்கும் என் மனமார்ந்த நன்றி. மேலும் தகவல்களுக்கு ; Please click 👇 

https://goldenvimal.business.site/?m=true 

https://sites.google.com/site/nsvimalgolden/www-goldenvimal-com **என்றும்  அன்புடன்  விமல் ** 98651-38410  ** 82203-03410 ** திண்டுக்கல் ** Goldenvimal ** www.goldenvimal.ml ** குருசாமி பிள்ளை சந்து ** திண்டுக்கல் ** இதுபாேன்ற இணையதளம் உங்களுக்கு உருவாக்க அனுகவும் 98651-38410 ** Writing by Goldenvimal ♥♥♥♥ இவன் விமல் உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள் தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
                             தாெடரும்,,,

👇🌎 Website Link's முக்கிய இணைப்புகள் 🌎👇

Top Post Ad

Below Post Ad