பெண்களுக்கு குட் டச் (Good Touch), பேட் டச் (Bad Touch) என்றால் என்ன?

                                      Sri...


#வருத்தங்களுடன்
#ஒரு_விழிப்புணர்வு..😢

▪️டாக்டர் பிரியங்கா ஹைதராபாத்தில் மிருகங்களால் வன்புணர்வு செய்யப்பட்டு எரித்து கொல்லப்பட்டு விட்டார்.


▪️பெண்களுக்கு குட் டச் (Good Touch),
பேட் டச் (Bad Touch) என்றால் என்ன?
▪️ஆபத்தென்றால் எப்படி ஓடுவது?
▪️காவலன் ஆப் எப்படி பயன்படுத்துவது? என்று கற்றுக்கொடுக்கிறது..
▪️காவலன் ஆப்
  Download link  :-  https://play.google.com/store/apps/details?id=com.amtexsystems.kavalansos◾அதே நேரத்தில் இதே சமுதாயம்
ஆண்களுக்கு "டோன்ட் டச்" ( Don't Touch) என்று கற்றுக்கொடுக்கிறதா?
என்றால் பதிலில்லை.

◾குழந்தைகளுக்கு ட்ராஃபிக் ரூல்ஸை (Traffic Rules) முறையாக கற்றுக் கொடுக்காத இதே சமுதாயம் தான்,
குழந்தை கடத்தல் (Child trafficking) இல்
உலகின் முன்னோடியாக இருக்கிறது.

▪️வன்புணர்வு செய்து கொல்லப்படும் மாதர் இருக்கும் இதே சமுதாயத்தில்தான் விலை கொடுத்து புணரும் மாதரும் வாழ்கின்றனர்.


◾ஒரு இரவுக்கு
தங்கள் உடலை
இரவலாகத் தருபவர்கள்
விலைமாதர்கள்

◾உடல்பசியென்று
வருபவர்களுக்கு
தினமும் தங்கள்
உடலை தானம் செய்பவர்கள்
விலைமாதர்கள்

◾உணவுப்பசியென்று
திரிபவனை திருடாமல்
'அன்னதானம்' காக்கிறதென்றால்..?

◾உடல்பசி கொண்டு
திரிபவர்களை பிற மாதர் உடலை
திருடாமல் காப்பது இவர்கள் செய்யும் '
'உடல்தானம்' தானோ..?

◾ஒரு விலைமாதர்
ஏன் உருவாகிறாள்?

▪️கைவிட்ட  கணவன்,
▪️கைவிட்ட பெற்றோர்,
▪️கைவிட்ட தனையன்,
▪️கடைசியில் கைவிட்ட மொத்த சமூகம்.

▪️விற்க காணியில்லை,
▪️கழுத்தில் தொங்கும் தாலியில்லை,
▪️கையில் ஒரு குழந்தை,
▪️இடுப்பில் ஒரு குழந்தை.

◾வேலாவேலைக்கு
சரியாக வரும் வயிற்றுப்பசி.
ஒரு தாய் தனக்கு பசியென்றால் தாங்குவாள். அதேநேரம் தன் பிள்ளை பசியோடு உறங்குவதை எப்படி தாங்குவாள்..?

◾யாரும் வேண்டி விரும்பி
சேற்றில் புரள்வதில்லை..

◾யாரும் வேண்டி விரும்பி
இத்தொழிலுக்கு வருவதில்லை..

◾யாரும் வேண்டி விரும்பி
பேரரறியா ஆடவன் தன்னைப்
புணர அழைப்பதில்லை..

▪️வீட்டு வேலை செய்து பிழைக்கலாம்ல?
▪️பண்ட பாத்தரமாவது தேய்க்கலாம்ல?
▪️உடம்ப வித்து பொழைக்குறது ஒரு பொழப்பா..?

◾என்று கேட்கும் அதே சமுதாயம் தான்..

◾கஞ்சி காய்ச்ச வழியில்லாமல் தானே
சோனாகாச்சிக்கு வருகின்றனர்.

◾கஸ்டமர்கள் இருப்பதால் தானே
பிஞ்சுக்குழந்தையையும் பிடித்துப்போய்
பாலுங்கிணற்றில் தள்ளுகிறார்கள்.🔳எப்போதும் ஒரு தொழில் ஏன் நடக்கிறது என்பதை அதன் டிமாண்ட்  மூலம் மட்டுமே அளவீடு செய்ய முடியும்.

🔳செக்ஸ் என்றால் கெட்ட வார்த்தை
என்று பேசக்கூட அச்சப்படும்
பெற்றோருக்குத்தான் 'தஷ்வந்த்'
போன்றோர் பிறக்கின்றனர்.

🔳இன்னும் எத்தனை நாள் தான்
நாம் செக்ஸ் பற்றி குறைவாக பேசி
அதை ஒரு மாயபிம்பமாக உருவாக்கி வைக்கப்போகிறோம்?

#நாம்_தான்_யோசிக்க_வேண்டும். ⁉️

திருமணத்திற்கு மட்டும்...
▪️மதம்
▪️சாதி
▪️ஸ்டேட்டஸ்
அனைத்தும் பார்க்கப்படும்
நம் சமுதாயத்தில்
அவள் அனுமதியின்றி
அவளைப்புணர மேலே சொன்ன
எதுவும் பார்க்கப்படுவதில்லை...

◾மதுபோதையில் ரேப்
நடந்துவிட்டது.
◾மதுபோதையில் ஆக்சிடெண்ட்
ஆகி விட்டது.

என்று எதற்கெடுத்தாலும்
'மது' தான் முன்னே வருகிறது.

◾காணுமிடமெங்கும்
"மது ஆறாக ஓடும் சமுதாயத்தில்,"
'மாது' மட்டும் எப்படி
பாதுகாப்பாக வாழ முடியும்?

◾மரண தண்டனைகள்
ஏற்பட்ட இழப்பை ஈடுசெய்ய அல்ல.
இனி ஏற்பட இருக்கும்
இழப்புகளை தடுக்க.

🔲 மாதர் மேல் வண்புணர்வு
செய்யும் மிருகங்களை நீதிமன்ற ஆணைக்கிணங்க கல்லால் அடித்துக்கொல்லப்பட வேண்டும்.

🔲 அதை அனைத்து தொலைக்காட்சிகளும்
நேரலையாக ஒளிபரப்ப வேண்டும்.

🔲 பெண்ணை அவள் விருப்பமின்றி அவள் மனைவியாகவே இருந்தாலும் தொடுதல் கூட பிழை என்று சமுதாயம் உணர வேண்டும்.

🔲 அறிவு, ஒழுக்கம் இன்னும் மிச்ச சொச்சங்களாலும் முடியாதது,
உயிர் மீதுள்ள அச்சத்தால் முடியும்.

🔲 சாவு பயத்தைக் காட்டினால் ஒழிய இது முடியாது என்றே நினைக்கிறேன்.

#மாற்றம்_ஒன்றே_மாறாதது.

நிச்சயம் ஒரு பெண்
விலைமாதராக மாறுவதற்கும்,
கொலை செய்யப்பட்டு வீழ்வதற்கும்...

சமுதாயமாகிய நாம் மட்டுமே காரணம் என்று உளமாற பல வலிகளுடன் நம்புகிறேன்.

By,
Dr. ஃபரூக் அப்துல்லா,
பொது நல மருத்துவர்,
சிவகங்கை.

படித்தேன்!
பகிர்ந்தேன்!!

நன்றி அன்புத்தம்பி Dr.Farook Abdullah.

நம்பிக்கையுடன்,
     இவன் விமல்

மேலும் தகவல்களுக்கு ; Please click 👇 

https://goldenvimal.business.site/?m=true 

https://sites.google.com/site/nsvimalgolden/www-goldenvimal-com **என்றும்  அன்புடன்  விமல் ** 98651-38410  ** 82203-03410 ** திண்டுக்கல் ** Goldenvimal ** www.goldenvimal.ml ** குருசாமி பிள்ளை சந்து ** திண்டுக்கல் ** இதுபாேன்ற இணையதளம் உங்களுக்கு உருவாக்க அனுகவும் 98651-38410 ** Writing by Goldenvimal ♥♥♥♥ இவன் விமல் உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள் தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
                             தாெடரும்,,,

👇🌎 Website Link's முக்கிய இணைப்புகள் 🌎👇

Top Post Ad

Below Post Ad