என்னைப்பற்றி

                                      Sri...

என்னைப்பற்றி

பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பித்துள்ள எங்களின் முதல் முயற்சியான தமிழ் வழியில் இணையதளத்தை மேம்படுத்துதல்.

படிப்பதோடு மட்டுமல்லாமல் மற்றவர்களுக்கும் புரியும் வகையில் விளக்கவும் முயற்ச்சிக்கிறேன்….அந்த முயற்சியில் உருவானது தான் இந்த இணையதலம் www.goldenvimal.ml

என்னைப் பற்றி,,


தமிழ்நாட்டில் உள்ள திண்டுக்கல் என்னும் மாநகரில் வாழும் ஒரு இளைஞன். நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன் என்று யாராவது  கேட்டால், வார்த்தைகளை கோர்த்து சரியாக அதை விளக்கிட எனக்கே சற்று கடினமாக இருக்கும்.

சரியாக சொல்லப்போனால்,

நான் ஒரு தங்கநகை வடிவமைப்பாளன்,
(Gold jewelry designer),
தேடு பொறி பயிற்சியாளன்” (Search Practitioner),

இணையம் பெரிய கடல். அறிந்துக்கொள்ள அளவா இருக்கிறது?

நான் இந்தியாவின் பலகோடி இளைஞர்களில்  நானும் ஒருவன், முன்னேறும் முனைப்புடயவன்.

கற்றோர்களிடம் இருக்கும் "களை"களை களைய விழைபவன்.

கல்லாதோரின் எண்ணிக்கையை குறைக்க விரும்புபவன்.

 தமிழின் நேர்த்தி குறைவு, பரவலாகத் தெரியலாம். மெனக்கெடாமல் கற்றுக் கொண்ட மொழியாதலால் நேர்த்தி பழகப் பழக வந்துவிடும் என்றேண்ணுகிறேன்.
  தவறிருக்கும் நிச்சயம், மன்னிக்கவும்.

என்  பள்ளி  பருவ எழுத்துக்கள் பல கால ஓட்டத்தில் காணாமல் போனது. இருப்பினும் ஒரு சிறு முயற்ச்சி, நினைவில் நின்ற சில எழுத்துகளையும் என்னுள் தொடரும் சில வரிகளையும் இந்த வலைத்தளத்தில் பதிவிட்டு மகிழ விழைகிறேன்,

இணையத்தின் பின்னாடி நான்:
நான்  2014ஆம் வருடம் இருந்தே எனக்கு இணையத்தின் மீது ஒரு தீராத காதல்… போதுமான அளவு கையில் பணம் கிடைக்கும் போதெல்லாம் என் கால்கள் ஏதேனும் ஒரு இணையமையத்தை நோக்கியே செல்லும்.  என்னுடைய கைப்பணம் எல்லாமே இணையத்தை வலம்வருவதற்கே செலவு செய்து கொண்டு இருந்தேன்,

உங்கள் விமர்சனமும், ஊக்கமும் என்னை உற்சாகபடுத்தும்.

எதாவது தமிழுக்கு நம்மால் முடிந்த சேவையைச் செய்யவேண்டும் என்று எண்ணம் உதித்தபோது உருவாக்கப்பட்டதே இந்த goldenvimal23blog.blogspot.com என்ற வலைத்தளம். இதில் முழுக்க முழுக்க
எனக்கு தெரிந்த தகவல்ளை உங்களுடன் பகிரவே இந்த முயற்சி,

இந்தத் தளத்தில் மற்றத் தளங்களைப் போல் சினிமா செய்திகளோ, நடிகர், நடிகை பற்றிய செய்திகளோ, அரைகுறை படங்களோ போட்டு பார்வையாளர்களின் எண்ணிகையை அதிகபடுத்திக் காண்பிக்கவேண்டும் என்ற தேவையில்லை.
அதற்கு நிறையத் தளங்கள் உண்டு. தகவல்களுக்கு என இதுபோன்ற தளங்கள் மிகவும் குறைவு.
நானும் மெத்தபடித்த மேதாவி இல்லை. ஆனால் தேவையான அளவு படித்த ஒரு சராசரி மனிதன்,

எனது அன்றாடம் அலுவல்களுக்கு இடையே செய்து வரும் இந்தப் பணிக்கு எதையும் நான் எதிர்பார்க்கவில்லை,

உங்கள் அன்பினும் மேலான கருத்துகளை மட்டும் தான்.,,

என் விருப்பப்படி.. 
    நீங்கள் விரும்பும்படி..

நான் கவிஞனில்லை, 
அறிஞனில்லை, 
சாதனையாளனில்லை, 
ஆனால் ஒரு சராசரி மனிதனுமில்லை..

என்னை பற்றி சொல்லிக்கொள்ளும் படியாக எதுவும் இல்லை. சராசரி வாழ்க்கை வாழும் ஆயிரக்கணக்கான ஆண்களில் நானும் ஒருவன்.

பெரிய அளவில் லட்சியங்களோ, எதிர்ப்பார்ப்புகளோ இல்லை என்றாலும் எடுத்துக்கொண்ட வேலை எதுவானாலும் அதை திறம்பட செய்து முடிக்க வேண்டும் என நினைப்பவன்,
என் நகைத் தாெழில் வேலைகளிலும் அதை கடைபிடித்தும் வருகிறேன்.

எனக்கு கவிதைகள் பிடிக்கும்.
– மற்றவர்களின் கவிதைகளை படிக்க அதிகம் பிடிக்கும்,
– கொஞ்சம் கொஞ்சம் எழுதுவதற்கும் பிடிக்கும்..

படித்து பார்த்து நான் மேலும் தொடர தகுதி உடையவனா எனக் நீங்கள்தான் கூறவேண்டும்.

எனக்கு புத்தகங்கள் மிகவும் பிடிக்கும். என் உலகமே புத்தகங்களை சுற்றிதான்.
– தலைவர்களின் சுயசரிதம், வரலாற்று புதினங்கள், சமூக நாவல்கள், தமிழ் இலக்கியங்கள் என்று எதுவாக இருந்தாலும் அதை படித்து முடிக்காமல் எனக்கு தூக்கம் வராது.
கம்பன், கல்கி, சாண்டில்யன், ரமணிசந்திரன், , பாரதியார், பட்டுக்கோட்டை, வைரமுத்து இப்படி பிடித்தவர்களின் பட்டியல் நீண்டு கொண்டே போகும்.

இசையில் மிகவும் விருப்பம் உண்டு. அதுவும் பழைய பாடல்கள் என்றால் சொல்லவே வேண்டாம். யாருக்கு தான் பிடிக்காமல் போகும். எம்.எஸ்.வி,
இளையராஜா, ரகுமான்  இசை மிகவும் பிடித்தமானது. நெடுந்தூர இரயில்,பேருந்து பயணங்களில் இவர்களின் இசையை கேட்பதில் கிடைக்கும் சுகமே தனிதான்.

   ♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
       ஸ்ரீ

        எனக்கு
     தெரிந்த தகவல்களை
          உங்களிடம் பகிரவே
                 இந்த முயற்சி
   ♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥

 பெயர் : நா.சா.விமல்
பிறந்தது : திண்டுக்கல்
 படித்தது : (எஸ்.எஸ்.எல்.சி)
வேலை : நகைத் தாெழில்
மொபைல்:   +91 9865138410
  ஈ.மெயில்:  goldenvimal23@gmail.com
♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
          ஆர்வம்:
        தன்னம்பிக்கை கொடுத்து
         மனிதத்  திறமைகளை   
         வெளிக்கொண்டுவந்து
        அவர்கள்   வாழ்கையில்     
       வெற்றி பெறச்  செய்வதோடு
                    மகிழ்ச்சிக்கு
                  வழிவகுப்பது,
♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥

  ♥♥  என்றென்றும்  ♥
              அன்புடன்
  ♥   இவன் விமல்,,,  ♥

     சிறந்த   முறையில்
          தங்க நகைகள்
      செய்து தரப்படும்,
♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
    you con win
          I  help you
♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
பிறரிடம்  எதுவும்  கேட்காதவன் 
                     பெரும் பணக்காரன்,
♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
      உன்னால் வெல்ல முடியும்
            நான்  இருக்கிறேன்
                    உதவிக்கு,
♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥


                 www.goldenvimal.ml
       புகைப்படம்
என் பதிவில் உங்கள் நேரத்துக்கு நன்றி சொல்லும் அதேவேளையில், எனக்கு தகவல் கொடுத்த அனைத்து புத்தகங்களுக்கும், இணையதளங்களுக்கும், பதிவுகளுக்கும் என் மனமார்ந்த நன்றி. 

மேலும் தகவல்களுக்கு ; Please click 👇 

https://goldenvimal.business.site/?m=true 

https://sites.google.com/site/nsvimalgolden/www-goldenvimal-com **என்றும்  அன்புடன்  விமல் ** 98651-38410  ** 82203-03410 ** திண்டுக்கல் ** Goldenvimal ** www.goldenvimal.ml ** குருசாமி பிள்ளை சந்து ** திண்டுக்கல் ** இதுபாேன்ற இணையதளம் உங்களுக்கு உருவாக்க அனுகவும் 98651-38410 ** Writing by Goldenvimal ♥♥♥♥ இவன் விமல் உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள் தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
                             தாெடரும்,,,

👇🌎 Website Link's முக்கிய இணைப்புகள் 🌎👇

Top Post Ad

Below Post Ad