விஸ்வகர்மா வரலாறு.

                                      Sri...

ஸ்ரீவிஸ்வகர்மா

ஸ்ரீசதாசிவமூர்த்தி
    
நமது குடும்பத்தில் வழிவழியாய் வந்த விலைமதிப்பற்ற ரத்தினக்கல் ஒன்று இருந்தால் அதை நாம் போற்றிப் பாதுகாத்து, மற்றவர்களுக்குக் காட்டி பெருமைப்படுவோம். இது மனிதனுக்கே உரிய இயல்பாகும். அவ்வாறே, நான் சார்ந்த மதத்தின் – இனத்தின் பெருமையை, புகழை இன்றைய இளம் சமுதாயத்தினர் அறிந்துகொள்ளும் வகையில் பழமையான நூல்களில் இருந்தும் பெரியோர் பலரின் அனுபவங்களிலிருந்தும், கலைகளை வளர்க்கும் வலைத்தளங்களில் இருந்தும் சிறிது சிறிதாய் சேமித்துத் தொகுத்துத் தந்துள்ளேன்.

          இது யாருடைய மனதையும் புண்படுத்த அல்ல. என்னை உயர்ந்தவன் என்று பறைசாற்றிக் கொள்ளவும் அல்ல. வரலாற்றில் கரைந்துவிட்ட சில இழைகளை அறிந்தவர்களுக்கு நினைவூட்டி, அறியாதோருக்கு எடுத்துக்காட்டவும் எடுக்கப்பட்ட ஒரு சிறு முயற்சியே.


           இதில் தவறுகள் இருந்தாலும், திருத்தங்கள் இருந்தாலும் கோலோய்ச்சிக் கூறலாம், பாராட்டுக்களையும் பணிவோடு ஏற்கிறேன்.

விஸ்வகர்மா வரலாறு...


       சுமார் 5000 ஆண்டுகளுக்கு மேலாக இந்த தேசத்தின் ஆணிவேராகவும், எல்லா கலைகளுக்கும் மூலவித்தாகவும், ஹிந்து மதத்தின் தலைமகனாகவும், 2300 வருடங்களுக்கு முன் படையெடுத்து வந்த அலெக்சாண்டர் முதல் தற்போது இந்தியாவிற்கு சுற்றுபயணம் வரும் வெளிநாட்டுக்காரர்கள் வரை வந்து பிரமித்து பார்க்கும் அனைத்து கலைப் பொக்கிஷங்களையும் படைத்து இந்தியாவின் அடையாளமாகவே வாழ்ந்து வந்த நம் விஸ்வகர்மா சமுதாயத்தின் இன்றைய வீழ்ச்சிக்கும், முன்னேற்றமின்மைக்கும், ஒற்றுமையின்மைக்கும் மிக முக்கிய காரணம் நம் விஸ்வகர்மா இன மக்கள் தங்கள் குலக்கடவுளான ஸ்ரீவிஸ்வகர்மாவிற்கும், ஸ்ரீகாயத்ரி தேவிக்கும் உரிய முக்கியத்துவம் தராமல் மறந்து போனது தான் என்று உத்திரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஸ்ரீவிஸ்வகர்மபுத்ர மகரிஷி அவர்கள் வருத்ததுடன் தெரிவித்து உள்ளார்.


   தென்னிந்தியாவில் குறிப்பாக, தமிழ்நாட்டில் வாழும் 65சதவிகித  ஐந்தொழில் விஸ்வகர்மா இன மக்களுக்கு தங்கள் கடவுள்
ஸ்ரீவிஸ்வகர்மா மற்றும் ஸ்ரீகாயத்ரி தேவி என்பதே தெரியாமல் வாழ்கிறார்கள்.
இதில் மீதி 30 சதவிகித பேர் கூட ஸ்ரீசதாசிவமூர்த்தியை தான் ஸ்ரீவிஸ்வகர்மா என்று வணங்குகிறார்கள்.
ஸ்ரீவிஸ்வகர்மா
ஸ்ரீவிஸ்வகர்மா
ஸ்ரீசதாசிவமூர்த்தி
ஸ்ரீசதாசிவமூர்த்தி


தன் ஐந்து நெற்றிகளில் திருநாமம் அணிந்தவர் தான் ஸ்ரீவிஸ்வகர்மா (படைப்புக் கடவுள்) மாறாக, விபுதி பட்டை அணிந்தவர் ஸ்ரீசதாசிவமூர்த்தி (அழிக்கும் கடவுள்). நம்மவர்கள் பெரும்பாலும் ஸ்ரீசதாசிவமூர்த்தியையே ஸ்ரீவிஸ்வகர்மா என்று நினைத்து வணங்கி வருகிறார்கள். இது இரு பெரும் கடவுள்களும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி இருப்பதால் ஏற்பட்ட குழப்பம் மற்றும் இது ஏற்படுத்தப்பட்ட குழப்பம். ஸ்ரீவிஸ்வகர்மாவின் முக்கிய ஆயுதமான சுத்தியல் ஸ்ரீசதாசிவமூர்த்தியின் கரங்கள் எதிலும் இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது மற்றும் கவனிக்கத்தக்கது. ஆதியில் சிவபெருமானும் நாமத்துடன் தான் ஸ்ரீவிஸ்வகர்மாவால் படைக்கப்பட்டார் ஆனால் பிறகு வந்த காலத்தி்ல் தனது அழிக்கும் பணி சிறப்பாக நடைபெறுகிறது என்பதை உலகிற்கும் மற்றவர்களுக்கும் உணர்த்தும் பொருட்டே சிவபெருமான் தான் அழித்தப் பொருட்களின் சாம்பலை எடுத்து விபுதியாகப் புசிக் கொண்டார் என்பது வரலாறு.

    
    உலகின் முதல் வேதமான ரிக் வேதம் ஸ்ரீவிஸ்வகர்மா-வை அனைத்து கடவுள்களையும் படைத்தவர் என்றும் அவர்களுக்கு பெயரிட்டவர் என்றும் பிரபஞ்சத்தின் மூலக்கருவையே தோற்றுவித்தவர் என்றும் 10ம் அதிகாரம் முழுவதும் தெளிவாக கூறுகிறது. ரிக் வேதம் மட்டுமல்ல, யஜுர், சாம, அதர்வணம் என அனைத்து வேதங்களும் நம் கடவுள் ஸ்ரீவிஸ்வகர்மாவை துதிப்பாடுகின்றன. எந்த யாகம் நடத்தப்பட்டாலும் அதில் ஸ்ரீவிஸ்வகர்மாவிற்கு உரிய அவில்பாகம் கொடுக்கப்படுகிறது. எந்த கோயில் கும்பாபிஷேகம் நடந்தாலும் புனித நீரை நம் குலக்கடவுள் ஸ்ரீவிஸ்வகர்மாவின் பெயரை சொல்லி தான் தெளிக்கப்படுகிறது. அப்படிப்பட்ட உயர்ந்த கடவுளை நாம், அதாவது அவரின் குழந்தைகள் மறந்து விட்டு கஷ்டப்பட்டு கொண்டு இருக்கிறோம்.

நம்மை வீழ்த்த நினைத்தவர்கள் 11ம் நூற்றாண்டில் செய்து வைத்த தவறான, குழப்பமான மற்றும் நம் சமுதாயத்தையே வேரறுக்கும் அளவிற்கு நம்மையும் நம் குலக்கடவுளையும் பிரித்து வைக்கும் படியான வழிபாட்டு முறையை தான் நாம் தற்போது பின்பற்றிக் கொண்டு இருக்கிறோம். இந்த தவறான முறையால் நாம் நம் கடவுளை மறந்து விட்டோம் அல்லது இழந்து விட்டோம் அல்லது தவறாக வணங்கிக் கொண்டிருக்கிறோம். அந்த காலக்கட்டத்தில் தான் நமது ஸ்ரீவிஸ்வகர்மாவின் புகழைப்பரப்பி வந்த நமது மடங்கள் எல்லாம் வலுக்கட்டாயமாக சைவ(சிவ)மடங்களாக மாற்றப்பட்டன. அங்கு சிவபெருமானுக்கும், லிங்கத்திற்கும் தான் முக்கியத்துவம் தரப்படும் படி செய்யப்பட்டன. இதன்படி ஸ்ரீவிஸ்வகர்மாவை மறக்கடிக்க செய்து விட்டனர். நம்மையும் நம் கடவுளையும் பிரித்து வைக்கும் அந்த தவறான முறையை மாற்றி அமைத்து மீண்டும் நம் விஸ்வகர்மா இன மக்களை அதாவது ஸ்ரீவிஸ்வகர்மாவின் குழந்தைகளை மீண்டும் ஸ்ரீவிஸ்வகர்மாவின் பக்தர்களாக மாற்றுவதே எங்களின் புனிதமான லட்சியமாகும்.

    நம்மவர்கள் மற்ற கடவுள்களுக்கு தரும் முக்கியத்துவத்தை நம் குலக்கடவுள்களான ஸ்ரீவிஸ்வகர்மாவிற்கும், ஸ்ரீகாயத்ரி தேவிக்கும் அளிப்பது கிடையாது. ஸ்ரீவிஸ்வகர்மாவின் பக்தர்கள் என்றால் மற்ற கடவுள்களை வணங்கக் கூடாது என்று அர்த்தமல்ல. அப்படி சொல்வது மிகப்பெரிய காட்டுமிராண்டித்தனம். அப்படி நாங்கள் சொல்லமாட்டோம். நாங்கள் கேட்பதெல்லாம் ஆயிரம் கடவுள்களை கூட வணங்குங்கள் தவறில்லை. ஆனால் நம் குலக்கடவுள் ஸ்ரீவிஸ்வகர்மாவையும் ஸ்ரீகாயத்ரி தேவியையும் வணங்காமல் அல்லது தவறாக ஸ்ரீசதாசிவமூர்த்தியை ஸ்ரீவிஸ்வகர்மா என்று வணங்கி விட்டு ஆயிரம் கடவுள்களை வணங்கி என்ன பயன்? என்று தான் கேட்கிறோம்.

    நாம் சைவ மதமா? வைணவ மதமா? என்று நம் சமுதாயத்தைச் சேர்ந்த ஆன்மீகப் பெரியவர்களே சந்தேகத்துடன் கேட்கிறார்கள். உண்மையில் நாம் சைவ மதமும் அல்ல (அனைத்தும் ஒரு நாள் சாம்பலாகும் என்ற கொள்கை) வைணவ மதமும் அல்ல (நமக்கு விதிக்கப்பட்ட கடமையை நாம் செய்ய வேண்டும் என்ற கொள்கை). நாம் படைப்பவர்கள். நாம் தனி மதம். சிவபெருமானை வணங்கும் சைவம், விஷ்ணுவை வணங்கும் வைணவம், சக்தியை வணங்கும் சாக்கியம், விநாயகரை வணங்கும் கணபாத்தியம், சூரியபகவானை வணங்கும் சௌமாரம், முருகப்பெருமானை வணங்கும் கௌமாரம் போல விஸ்வகர்மா என்பது ஸ்ரீவிஸ்வப்பிரம்மனாகிய ஸ்ரீவிஸ்வகர்மாவையும், ஸ்ரீகாயத்ரி தேவியையும் மற்றும் ஐந்து ரிஷிகளையும் வழிபடும் தனி மதம் அதுவும் விஸ்வகர்ம மதம் என்பது ஹிந்து தர்மத்தின் முதல் மதம். இதை மறந்து விட்டு நாம் அடிப்படையிலேயே தவறு செய்கிறோம்.

    அது எந்த அளவிற்கு நம்மையும், நம் தலைமுறைகளையும் பாதிக்கிறது என்பதையும் உணராமல் வாழ்கிறோம். ஸ்ரீவிஸ்வகர்மாவையும், ஸ்ரீகாயத்ரி தேவியையும் முறையாக வணங்கி வரும் நம் ரத்த சொந்த பந்தங்களான வட இந்திய விஸ்வகர்மாக்கள் தங்கள் தொழில்கள் உள்பட அனைத்து துறைகளிலும் கொடிக்கட்டிப் பறக்கின்றனர். பெரிய பெரிய தொழில் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் உள்பட பலவற்றை ஆரம்பித்து வட இந்தியாவில் உள்ள மற்ற சமுதாயத்தினருக்கு உதாரணமாக திகழ்கிறார்கள். மற்ற சமுதாயத்தினருக்கு மட்டுமல்ல, நமக்கும் கூட உதாரணமாக திகழ்கிறார்கள். நாமும் நம் கடவுள்களை வணங்க ஆரம்பித்தால் வாழ்வில் என்றென்றும் சுபிட்சமும், உண்மையான நிம்மதியும், நிலையான சுபிட்சமும் பெறலாம்.

     நாம் புனிதமான விஸ்வகர்மாக்கள், மற்றவர்களைப் போல பிரம்மனால் படைக்கப்பட்டவர்கள் அல்ல. உயர்ந்த கடவுளின், அதுவும் எல்லா கடவுள்களையும் படைத்த ஸ்ரீவிஸ்வப்பிரம்மனாகிய ஸ்ரீவிஸ்வகர்மாவின் ஐந்து தலைகளில் இருந்து நேரடியாக படைக்கப்பட்டவர்கள். நமக்கு என்று தனியாக நியதிகள், முறைகள், குல மரபுகள், தனி அடையாளங்கள் உண்டு. மற்றவர்கள் போல் நாம் நடந்து கொண்டால் அதில் நமக்கு பலன்கள் கிடையாது அல்லது குறைவு. நாம் யார் என்பதை உணர்ந்தால் தான், நாம் யாருடைய ரத்தம் என்பதை உணர்ந்தால் தான், நமது குலமரபுகளை நாம் பின்பற்றினால் தான, நம்மால் அனைத்தையும் சாதிக்க முடியும். நம் முன்னோர்களைப் போல காலத்தால் அழியாத கலைப் படைப்புகளை ஏன் தனி சரித்திரத்தையே கூட படைக்க முடியும்.


வரலாறு
ரிக் வேதத்தில் கூறப்பட்டுள்ளவாறு:தேவ சிற்பி என்று புகழப்படும் ஸ்ரீ விஸ்வகர்மாவே ஸநாதனமான ஸப்த ரிஷிகளுக்கும் முதன்மையானவர். பிரபாஸூக்கும், யோக சித்தைக்கும் மகனாய் அவதரித்தவர். யோக சித்தை மஹா பிரஹஸ்பதியின் சகோதரி. பிராஸ் அட்டம பஸூவின் எட்டாம் தலைமுறை ரிஷிகுமாரர்.

ரிக் வேதம் விஸ்வகர்மாவைப் புகழ்வதைக் கண்ணுறுங்கள்:

முழு உலகத்தையும் வடிவமைத்த தெய்வீக கைவினைஞன் விஸ்வகர்மா. (ரிக் வேதம் 10.81.03)இவரே தெய்வங்களின் வசிப்பிடங்களையும், அவர்களது வாஹனங்களையும், பறக்கும் இரதங்களையும் வடிவமைத்தவர்.நான்காவது துணை வேதமாகிய ஸ்தபத வேதத்தை வெளிப்படுத்தியவர்.அறுபத்து நான்கு ஆய கலைகளுக்குத் தலைவரானவர்.சொர்க்கம், நரகம் இவைகளோடு பதினான்கு உலகங்களையும் படைத்த ஆதி பிரம்மன்.தெய்வங்களுக்கு ஆயுதங்களையும் செய்தளித்தருளியவர். குறிப்பாக இந்திரனுக்காக ததிச்சி என்ற முனிவரின் முதுகெலும்பிலிருந்து வஜ்ராயுதத்தையும், விஷ்ணுவிற்காக சாரங்கம் என்னும் வில்லையும், சிவபெருமானுக்காக பிங்களம் என்னும் வில்லையும் படைத்தளித்தவர்.சிவ-பார்வதி திருமணத்தின் போது லங்கா பட்டிணத்தை ஸமுத்திரத்தின் மத்தியில் படைத்தவர்.இராமபிரானுக்கு உதவுவதற்காக கடலினில் ஸேதுவை கட்டும் வல்லமையுள்ள நளன் என்னும் வானரத்தைப் படைத்தவர்.ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவின் ஆட்சிப்பீடமான துவாரகையையும், எமபுரத்தையும் சிருஷ்டித்தவர்.

இப்படி பலப்பல அற்புத நிகழ்வுகளை வேதப்பதிவுகளிலிருந்து கூறிக்கொண்டே போகலாம்.

வசிஸ்ட புராணம் (3.6.11)ல் கூறப்பட்டுள்ளவாறு,
ஸ்ரீ விராட் விஸ்வகர்மாவானவர், தனது ஐந்து முகங்களிலிருந்தும் ஐந்து பிரம்மாக்களை படைத்தார். பஞ்ச பிரம்மாக்கள் என்றும் பஞ்ச பிரம்ம ரிஷிகள் என்றும் அழைக்கப்பட்ட இவர்கள்:
1. சானக பிரம்ம ரிஷி,          2.ஸநாதன பிரம்ம ரிஷி,                3. அபுவநஸ பிரம்ம ரிஷி,         4. ப்ரத்னஸ பிரம்ம ரிஷி,       5. ஸூபர்ணஸ பிரம்ம ரிஷி

ரிக் வேதம் (10.81. மற்றும் 10.82) ஸ்ரீ விராட் விஸ்வகர்மாவின் சொரூபத்தை சித்தரிக்கிறது:
          உலகத்தின் முழு முதல் தோற்றுவிக்கும் சக்தியாகவும், உலகத் தந்தையாகவும் விளங்குபவர் தனது அனைத்துப் புறங்களிலும் விழிகளையும், வதனங்களையும், புஜங்களையும், பாதங்களையும் உடையவர்.
மஹாபாரதம், ஹரிவம்சம் போன்ற மஹா காவியங்கள் “கலைகளின் தேவன். ஆயிரக்கணக்கான தொழில்நுட்பங்களை விளைவிப்பவர், கடவுளர்களின் சிற்பி, மிகவும் முதல்தரமான, மேம்பட்ட, தலைமையான தொழில் நிபுணர், அணிகலன்களில் புதுமைகளைப் புகுத்துபவர், முடிவும்-அழிவும் அற்ற நிலையான இறைவன்.” என்று விராட் ரூபத்தைப் புகழ்கின்றன.நான்கு கரங்களையுடைத்தும், மணிமுடி தரி்த்தும், மணம் நிறைந்த மலர்களைச்சூடியும், பட்டாடை உடுத்தும், நவரத்ன சிம்மாஞஸத்தில் வீற்றும், தனது நான்கு கரங்களில் புனிதநீர்க் கமண்டலமும், ஒலைச்சுவடியும், பாசக் கயிறும், அளக்கும் கருவியும் தாங்கியவராய் வேத-புராண-சாஸ்த்ரங்களிலே வர்ணிக்கப்படுகிறார்.

மேலும் தகவல்களுக்கு ; Please click 👇 

https://goldenvimal.business.site/?m=true 

https://sites.google.com/site/nsvimalgolden/www-goldenvimal-com **என்றும்  அன்புடன்  விமல் ** 98651-38410  ** 82203-03410 ** திண்டுக்கல் ** Goldenvimal ** www.goldenvimal.ml ** குருசாமி பிள்ளை சந்து ** திண்டுக்கல் ** இதுபாேன்ற இணையதளம் உங்களுக்கு உருவாக்க அனுகவும் 98651-38410 ** Writing by Goldenvimal ♥♥♥♥ இவன் விமல் உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள் தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
                             தாெடரும்,,,

👇🌎 Website Link's முக்கிய இணைப்புகள் 🌎👇

Top Post Ad

Below Post Ad