காஷ்மீர் என்னதான் பிரச்சினை ???

                           
 1. காஷ்மீர்: என்னதான் பிரச்சினை ?


  காஷ்மீர் உலகிலேயே மிக ஆபத்தான பகுதி என்கிறது நியூயார்க் டைம்ஸ். காண்க:
  உண்மைதானா... என்னதான் அங்கே நடக்கிறது... சற்று தேடித்தான் பார்ப்போமே.  பொதுவாக நமது இந்திய வரைபடம் முழு ஜம்மு காஷ்மீர் உடன் இருக்கும்.
  இது உண்மையா ??

   நிலவியல் நிலவரத்தை முதலில் காண்போம். 
  பொதுவாக கீழே காண்பதுதான் ஜம்மு காஷ்மீர் என்பது நமக்கு தரப்படும் வரைபட காஷ்மீர்.  இது உண்மையல்ல...

  1. காஷ்மீர் தற்சமயம் 3 நாடுகளின் கைகளில். 
  கீழே உள்ள வரை படம் காட்டுவது போல்


  1. இந்தியாவிடம்  (பழுப்பு நிற ஜம்மு, காஷ்மீர், லடாக் பகுதி)
  2. பாகிஸ்தானிடம்  (பச்சை நிற காரகோரம் மற்றும் மர நிற ஆசாத் காஷ்மீர் - இதில் ஒரு பகுதியை பாகிஸ்தான் சீனாவிடம் இலவசமாக கொடுத்து விட்டது)
  3. சீனாவிடம் (மஞ்சள் நிற அக்சாய் சின், 1962 போரில் இந்தியா இழந்த பகுதி)


  இது தான் உண்மை. பழுப்பு நிற காஷ்மீர் மட்டுமே இந்தியாவுக்கு சொந்தம் என்று எல்லா கட்சி அரசியல்வாதிகளுக்கும் தெரியும். இருந்தாலும் நாட்டுப்பற்று என்று பாவ்லா காட்ட முழு காசுமீரும் இந்தியாவுடையது என்று இன்னும் சொந்தம் கொண்டாடுவதாய் மக்களை ஏமாற்றுகிறார்கள், வரைபடத்தில் போட்டுக்கொள்கிறார்கள்.
  மற்றபடி
    
   இந்தியப் பகுதி ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு இரண்டு தலைநகரங்கள்
  கோடை காலத்தில் ஸ்ரீநகர்; 
  குளிர் காலத்தில் ஜம்மு. 
  (குளிர்காலத்தில் ஸ்ரீநகரில் பனி, குளிர் அதிகம் என்பதால் தலைநகர் ஜம்மு)
  மேலுள்ள படத்தில் அந்த இரண்டு நகரங்களைக் காணலாம்.

  முழு காஷ்மீரும் இந்தியாவுடையது என்று இருந்தால் இந்த இரண்டு தலை நகரங்களில் ஒன்றாவதுபழுப்பு நிற ஜம்மு காஷ்மீரைத் தவிர்த்து வேறு இடத்தில் இருக்க வேண்டும் அல்லவா? இல்லையே, ஏன்?

  2014 ல் நடந்த பாராளுமன்ற தேர்தல் முடிவுகளில் ஜம்மு காஷ்மீரில் இந்தியா பகுதியில் மட்டுமே ஏன் இந்தியா தேர்தல் நடத்தியது.முழுகாஷ்மீரும் இந்தியாவுடையது என்று இருந்தால் அங்கும் தேர்தல் நடத்தப்பட்டிருக்க வேண்டும் அல்லவா?  2. கார்கில் போரும் காஷ்மீர் பிரச்சினையும்


  இன்று 26 ஜூலை கார்கில் நினைவு தினம். 

  பிரதமர் வாஜ்பாய் காலத்தில் நடந்தகார்கில் போர் கூட நமது பழுப்பு நிற காஷ்மீர் எல்லையில் நடந்தது தான். மேலே உள்ள வரைபடத்தில் கார்கில் தெரியும். 

  கார்கில் போரில் வெற்றி என்று சொல்லும்போது காசுமீர் முழுவதையும் வென்றோம் என்ற அர்த்தத்தில் அல்ல. நமது பழுப்பு நிற பகுதி காஷ்மீருக்குள்ளேயும் அவர்கள் நுழைந்த போது விரட்டி அடித்தது மட்டுமே.


  3. எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடும் (LoC) காஷ்மீரும் 

  1972 ம் ஆண்டு சிம்லா ஒப்பந்தத்தைஇந்தியா- பாகிஸ்தான் இரு நாடுகளும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று ஒரு சமயம் எல்லா வெளிநாட்டு தலைவர்களும் இந்தியா வரும்போது சொல்வது வழக்கமாக இருக்கும். 

  அந்த ஒப்பந்தம் மேலே உள்ள இன்றைய  நிலையை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதே.காண்க: இந்த எல்லையைத்தான் (Line of Control) என்பார்கள். கீழே உள்ள வரைபடம் (சிவப்புக்கோடு)  தெளிவாக்கும்.

  • ஜனவரி 1948 - இந்தியா பாகிஸ்தான் போர் மூண்டது. போரின் முடிவில் லைன் ஆப் கண்ட்ரோல் எற்படுத்தப்பட்டது. காண்க:
  • ஆகஸ்ட் 5, 1965 - காஷ்மீர் உரிமை தொடர்பான போர் மூண்டது. போர் முடிவில் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் முன்னிலையில் லைன் ஆப் கண்ட்ரோலை எல்லையாக கொள்ள இரு நாடுகளும் சம்மதித்து போர் நிறுத்தம் அறிவித்தன. காண்க:
   மேலுள்ள படத்தில் வர்த்தக பாதை ஒன்று உள்ளது.

  4. இந்திய ஸ்ரீநகரிலிருந்துபாகிஸ்தானின் முசாபராபாத்நகருக்கு பேருந்து விட்டதை நினைவில் கொள்வோம்.

  நம்ம பிரதமர்கள்  அந்த நகரத்திற்குபேருந்து விடும்போது தெரியாதாமுசாபராபாத் பாகிஸ்தானின் காஷ்மீரில் தான் இருக்குது என்று.


  5. இந்தியா-பாக்கிஸ்தான் இடையே ஆன Line of Control எல்லைக்கோடு தவிர,

  சீனாவோடு இந்தியா காஷ்மீரில் ஏற்படுத்திக் கொண்ட எல்லைக்கோடு 
  Line of Actual Control எனப்படும். 
  1962 ல் ஏற்பட்ட உடன்பாடு. காண்க:


  6. இந்தியா தவிர்த்த பிற உலக நாடுகள் 
   25 வருடங்களுக்கும் மேலாக இருக்கும் இந்த உண்மையை தான் உலக வரைபடத்தில் போடுவார்கள். 
  ஆனால் இந்தியா அதை கொள்கை ரீதியாக ? ஏற்றுக்கொள்ளாது.

  7.  சியாச்சின் போர்ப் பிரதேசம் (Siachen Glacier) 

  உலகின் மிக உயரமான, கடும் பனிமிக்க போர் பிரதேசம். 1984 முதல் இந்தியா உரிமை கொண்டாடுவதால் எப்போதும் இந்திய ராணுவம் அங்கே கடும் குளிரில் இருக்க வேண்டிய சூழல். அதனால் வீரர்களின் இழப்புகளும் அதிகம். இராணுவ செலவுகளும் அதிகம்.

  8. காஷ்மீர் பிரச்சினை பற்றி ஒரு சுருக்கமான வரலாறு.  1. இன்றைய இந்தியப்பகுதி காஷ்மீர் 3 பகுதிகள் உடையது. லடாக், ஜம்மு, காஷ்மீர்.


  12 க்கும் அதிகமான மொழிகள் பேசப்பட்டாலும் காஷ்மீரி, டோக்ரி, பஹாரி, லடாக்கி, உருது என 5 முக்கிய மொழிகள். இசுலாமியர் 70 %, இந்துக்கள் 25% மீதம் புத்தமும் சீக்கியமும்.

  2.  ஆனால் காஷ்மீரில் 150 ஆண்டு கால விடுதலைப் போராட்டம்நடைபெறுகிறது என்பதை நினைவில் கொள்வோம். 
  1846 க்கு முன்பு வரை  

  ஜம்மு பகுதியை ராஜஸ்தானின் ராஜ்புட் இன டோக்ரா இந்து குடும்ப அரசன் குலாப் சிங்கும்,
  காஷ்மீர் பகுதியை சீக்கிய அரசன் ரஞ்சித் சிங்கும் ஆண்டனர்.


  ஆங்கிலேயன் வழக்கம் போல பிரித்தாளும் சூழ்ச்சியின் மூலம் இந்து குலாப் சிங் கின் உதவியால் சீக்கிய அரசனை தோற்கடித்துகாஷ்மீரை இந்து குலாப் சிங்கிற்கே விற்றனர்.

  ஆக 1846 ல் இந்தியப்பேரரசின் இரண்டாவது மிகப்பெரிய இராஜ்ஜியத்தின் (ஜம்மு-காஷ்மீர்) மன்னர் ஆனார் குலாப் சிங்.

  3. இந்து குலாப் அரசனின் நிர்வாகிகள் 90% இந்துக்கள். ஆனால் காஷ்மீர் பள்ளத்தாக்கில் இசுலாமியர் 90%.
  இசுலாமியர் பெரும்பாலும் சூஃபி (Sufi), அதாவது எளிமையான பக்தி மார்க்கம் தான் அவர்கள் மதம்.


  4. டோக்ரா இந்து வம்ச கொடூர ஆட்சி எதிர்ப்பு இயக்கம் 1931 ல் அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழக மாணவரான ஷேக் அப்துல்லா போன்றவர்களால் உருவாக்கப்பட்டு

  1932 ல் "ஜம்மு காஷ்மீர் முஸ்லீம் மாநாடு" என்ற பெயரிலும், பின்னர் பெயர் மாற்றப்பட்டு
  1938 ல் "ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாடு" என்ற பெயரிலும்
  மதச்சார்பற்ற ஜனநாயக காஷ்மீரை உருவாக்க இந்துக்கள், சீக்கியர்கள், இசுலாமியர்கள் இணைந்து போராடினர்.


  5. 1946 ல் டோக்ரா ராஜாவே காஷ்மீரை விட்டு வெளியேறு, சுதந்திரக் காஷ்மீர் எங்கள் பிறப்புரிமை எனப் போராட்டம் வெடித்தது. 1947 ல் இந்திய-பாகிஸ்தான் விடுதலை. ஆங்கிலேயர் கட்டுப்பாட்டில் இருந்த 562 ராஜாக்களும் இந்தியாவுடனோ, பாகிஸ்தானுடனோ, அல்லது தனித்திருக்கவோ முடிவெடுக்கலாம் என ஆங்கிலேயர் அனுமதித்தபோது ஹைதராபாத் நிஜாமும் (முஸ்லீம்), காஷ்மீரின் ஹரி சிங்கும் (இந்து)தனித்திருக்க முடிவு செய்தனர்.

  தொடர்பான ஹைதராபாத் நிஜாம்-தெலுங்கானா பற்றி ஒரு சிறு குறிப்பு:

  6. 1946 ல் தெலுங்கானாவில் தொடங்கிய தெலுங்கானா உழவர்கள் போராட்டம் வேகமாகப் பரவி போராளிகள் ஹைதராபாத் நிஜாமின் 3000 க்கும் அதிகமான கிராமங்களைத் தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து ஜமீன்தார்கள் ஆக்கிரமித்திருந்த நிலங்களை விவசாயிகளுக்கு பிரித்தளித்தார்கள், நிலச்சீர்திருத்தம் செய்தார்கள்.

  7. தனியாக ஆள நினைத்த ஹைதராபாத் நிஜாம் உழவர்களின் பொதுவுடைமைப் போராட்டத்தால் பயந்து, இந்திய உதவியை நாட 1948 செப்டெம்பரில் இந்திய ராணுவம் தன் சொந்த மக்களையே வேட்டையாட துவங்கியதுநிலசீர்திருத்தம் செய்த ஆயிரக்கணக்கான போராளிகளைக் கொன்றது. 50 ஆயிரம் பேரை சிறையிலடைத்து சித்திரவதை செய்தது. கம்யூனிஸ்ட் கட்சியை தடை செய்தது. 1951 வரை சொந்த நாட்டின் மக்கள் மீது நடந்த இந்த கொடுங்கோன்மை காங்கிரஸ் மற்றும் அன்றைய பிரதமர் நேருவின் கோர முகத்தைவெளிக்காட்டியது. இந்தியாவின் மையப்பகுதியில் பொதுவுடைமை அரசு வருவதை ஏற்றுக்கொள்ள முடியாத நிலப்பிரபுத்துவ பாசிச அரசு இந்தியா என்பது வெளிப்பட்டது. 1948 ல் தொடங்கிய அந்த தெலுங்கானா போராட்டம் தான் குறைந்த பட்சம் ஒரு தனி மாநிலமாவது பெறுவதில் 2014 ஜூன் 2 ல் சிறு வெற்றி பெற்றிருக்கிறது. காண்க: 

 2. 9. காஷ்மீரில் சூழ்நிலை வேறு வகையில்:

  இந்து அரசன் ஹரிசிங் (கரண் சிங்கின் தந்தை )
  ஆட்சியைத் தக்கவைக்க, மக்களின் சுயாட்சி எதிர்ப்புகளை மீறி பாகிஸ்தானுடன் சேர 1947 ல் ஒப்பந்தம் போட்டார். ஷேக் அப்துல்லாவின் தேசிய மாநாட்டுக் கட்சியும் ஜின்னாவின் முஸ்லீம் லீக் கட்சி ஜமீன்தாரிகளின் கட்சிஎன்பதால் சுதந்திரமாகவோ, இந்தியாவுடனோ இருக்கவே விரும்பினார்.


  10. 1947 ல் இந்தியப்-பாகிஸ்தான்பிரிவினையின்போதுஏராளமான இந்துமுஸ்லீம்கொல்லப்பட்ட போது ஜம்மு-காஷ்மீர் கலவரமின்றிஅமைதியாகவே இருந்ததுகுறிப்பிடத்தக்கது
  ஆனால் வேறு வகையில்பிரச்சினை உருவானது. 1947அக்டோபரில் அரசர் ஹரிசிங்கிற்கு எதிராக கலவரம்உருவாகபாகிஸ்தான்பகுதியில் இருந்துகலவரத்தில் தப்பிக்க காஷ்மீர்வந்த இந்துக்கள் இருந்தசூழலில் 
  1. ஒரு புறம் அரசன் ஹரிசிங்ஆர்எஸ்எஸ் துணையுடன்முஸ்லிம்களை விரட்ட,  
  2. மறுபுறம் பாகிஸ்தானின்ராணுவம் கலகக்காரர்களுக்கு ஆயுதம் தந்துஊடுருவ 
  பொது மக்கள் ஏராளமாககொல்லப்பட்டனர்பாலியல்வன்முறைக்கு உள்ளாகினர்.

  11
  சிக்கலான சூழ்நிலையில்அரசர் ஹரிசிங்இந்தியாவோடு இணையசம்மதித்தார்
  1947 அக்டோபர் 26 ல்இணைப்பு சாசனம்கையெழுத்தானது.

  ஏற்றுக்கொண்ட அன்றையபிரதமர் நேருவும்உள்துறைஅமைச்சர் படேலும் இந்தியராணுவத்தை அனுப்பிகாஷ்மீரை இந்தியாவோடுசேர்த்துக்கொண்டனர். 1951 ல்நடந்த தேர்தலில் ஷேக்அப்துல்லாவின் தேசியமாநாடு கட்சி பெரு வெற்றிபெற, 1952 ல் இந்தியாவோடுசெய்த ஒப்பந்தம் 370  உறுதிசெய்தார்இந்தியாவுடனானகாஷ்மீர் இணைப்பைபாகிஸ்தான் தொடக்கம்முதலே ஏற்கவில்லைகாண்க:  இந்தியா அளித்த உறுதியும்அதை ஏமாற்றியதும். 

  12.  இணைப்பு சாசனத்தின்இரண்டு முக்கிய சரத்துகள்:

  1. காஷ்மீரின் பாதுகாப்பு,அயலுறவுநாணயம்செய்தித்தொடர்பு ஆகியவை இந்தியஅதிகாரத்தின் கீழ் வரும்.

  2. சட்டம் ஒழுங்குசீரடைந்தவுடன் ஜம்மு-காஷ்மீர்மக்களின் சம்மதத்தை அறிந்துஇந்தியாவுடனான இணைப்புமுடிவு செய்யப்படும்அதுவரைஇணைப்புதாற்காலிகமானதுதான்எனவும் முடிவு செய்யப்பட்டது.

  1. அன்றைய இந்திய கவர்னர்ஜெனரல் மவுண்ட் பேட்டனும்தற்காலிக இணைப்பைஏற்றார்

  2. 1947 நவம்பர் 2 ம் நாள்இந்திய வானொலியில்ஆற்றிய உரையில் நேருவும்,"ஜம்மு-காஷ்மீர் மக்களின்எதிர்காலத்தை மக்களேதீர்மானிப்பார்கள்," என்றார்

  3. 1947 டிசம்பர் 31 ல் .நா.சபைக்கு கொடுத்த புகாரிலும்.நாசபையின்மேற்பார்வையில் அந்த மாநிலமக்களின் கருத்தை அறியவாக்கெடுப்பு நடத்தப்படும் எனஇந்திய அரசு உறுதிஅளித்ததுஅந்த உறுதிமொழிஇன்று வரைநிறைவேற்றப்படவில்லை.  13இந்தியா சாதுரியமாக பலகாரணங்களைக் கூறி பொதுவாக்கெடுப்பு நடத்தாமல்காலம் கழித்தது.

  1. 1953 
  ல் பாகிஸ்தான்அமெரிக்காவுடன்இணைந்ததை காரணம்காட்டியது.
  2. 1957 ல் காஷ்மீர்இந்தியாவின்ஒருங்கிணைந்த பகுதி என்றுகாஷ்மீர் சட்டமன்றம்நிறைவேற்றிய சட்டத்தைசுட்டிக் காட்டியது.  

  3. இந்திய அரசியல்சாசனத்தின் 370ஆம்பிரிவின்படிஜம்மு-காஷ்மீருக்குத் தன்னாட்சிஉரிமையும் சிறப்பு அந்தஸ்தும்வழங்கப்பட்டன 

  ஆனால் பல விதி மீறல்கள்நடந்தன.

  1. 1951 
  ல் ஷேக் அப்துல்லாகாஷ்மீரின் பிரதமர் (370பிரிவின்படி தன்னாட்சியில்அவர் பிரதமர்ஆனார்.அம்மாநிலத்தின்ஜனாதிபதியை (ஆளுநர்)காஷ்மீர் சட்டமன்றம் தான்முடிவு செய்ய வேண்டும்.ஆனால் நேரு ஷேக்அப்துல்லாவை நிர்பந்தித்து 30வயதான கரண் சிங்கை (எந்தஅரச வம்சத்துக்கு எதிராகமக்கள் போராடினார்களோஅந்த மன்னர் ஹரிசிங் கின்மகன் தான் கரண் சிங்மாநிலஆளுநர் ஆக்கியதுகாண்க:


  2. 1952 லேயே ஆர்.எஸ்.எஸ்சின் ஒரு பிரிவான பிரஜாபரிஷத் என்ற இந்து அமைப்புகாஷ்மீர் மாநில சுயாட்சியைநீக்க வேண்டும் எனடில்லியின் தூண்டுதலால்போராட்டம் நடத்தியது.

  3. இந்தியாவின் மீதுநம்பிக்கை இழந்த ஷேக்அப்துல்லா முழுச்சுதந்திரமேதங்கள் நோக்கம் என்று பேசஆரம்பிக்க 1953 ல் நேருகாஷ்மீர் மக்களால்தேர்ந்தெடுக்கப்பட்ட ஷேக்அப்துல்லா ஆட்சியினைகலைத்துவிட்டு அவரையும்சிறையில் அடைத்தார்ஷேக்அப்துல்லா 18 ஆண்டுகள்சிறையில் இருந்தார்.

  4. 1953 லிருந்து டில்லியின்பொம்மை அரசு பக்ஷி குலாம்முகம்மது தலைமையில்காஷ்மீரில்ஒப்பந்தங்கள்அவ்வளவுதான்

  மேலும் நடந்த சட்ட விதிமீறல்கள்:

  5. 1954 ல் டில்லியில் இருந்துகாஷ்மீருக்கு சட்டம் இயற்றசட்ட திருத்தம்.
  6. 1957 ல் ஜம்மு-காஷ்மீர்இந்தியாவின் ஒரு அங்கமேஎன இன்னொரு சட்டம்.
  7. 1958 ல் ஜம்மு-காஷ்மீர்மத்திய நிர்வாகத்தின் கீழ்தான் என இன்னொரு சட்டம்.
  8. 1964-65 ல் ஜம்மு-காஷ்மீரில்தேர்ந்தெடுக்கப்படும் மக்கள்அரசை கலைக்க டில்லிக்குஅதிகார சட்டம்.

  9. 370 பிரிவை மீறிய இந்தியநடவடிக்கைகளைஅதிகாரப்பெருமையோடுஎல்.கேஅத்வானி தனதுசுயசரிதையில் எழுதினார்:"ஜம்மு-காஷ்மீர்சட்டமன்றத்தில் அனுமதிபெற்றுத்தான் எதையும் செய்யவேண்டும் என்றவெறுக்கக்கூடிய முறையைஇந்திய அரசு நீக்கியது.அம்மாநிலத்தில் இந்தியக்குடியரசின் நிறுவனங்களுக்குவிதிக்கப்பட்டிருந்த பலகட்டுப்பாடுகள் நீக்கப்பட்டன.தேர்தல் ஆணையம்தலைமைதணிக்கை அதிகாரியின்அதிகாரம்காஷ்மீருக்குவிரிவாக்கப்பட்டதுஅம்மாநிலமுதல்வரை பிரதமர் என்றுஅழைக்கப்படும் முறைஒழிக்கப்பட்டது." என்று.

  14இப்படியாக தொடர்ந்துஜம்மு-காஷ்மீர் மக்களின்உரிமைகள் அவமதிக்கப்பட்டேவந்ததுஎதிர்த்த மக்களின்போராட்டங்கள் தீவிரவாதம்என்ற பெயரிலும்பாகிஸ்தான்தூண்டுதல் என்ற பெயரிலும்நசுக்கப்பட்டது.

  உண்மையில் இந்தியா-பாகிஸ்தான் இரண்டுநாடுகளுமே காஷ்மீரைபயன்படுத்திக் கொண்டனவேதவிர அம்மக்களின்நியாயமான உரிமைகளைமதிக்கத் தயாராக இல்லை 


  உண்மையில் காஷ்மீரிகள்என்ற மண்ணின் மக்கள்மதங்களால் பிளவுபடவேஇல்லைஇந்துக்கள்சீக்கியர்,இசுலாமியர் அனைத்துகாஷ்மீரிகளின் அடிப்படைதன்னுரிமை மத்திய அரசுமற்றும் பத்திரிக்கைகளால்வஞ்சகமாகதிட்டமிடப்பட்டு,மத சாயம் பூசப்பட்டுகொச்சைப்படுத்தப்பட்டேவந்துள்ளது.

  15இன்று அங்குள்ள உண்மைநிலையை அறிய சென்ற குழு

  1. கர்நாடகாவின் மக்கள்ஜனநாயக மன்றத்தைச் (PDF)சேர்ந்த நான்கு பேர்
  2. ஆந்திராவின் மனித உரிமைஅமைப்பைச் (HRF) சேர்ந்தஇருவர்
  3. ஆந்திரப் பிரதேச சிவில்உரிமை மையத்தைச் சேர்ந்தஇருவர்
  4. டெல்லியிலுள்ள வளரும்சமுதாயங்களின் ஆய்வுமையத்திலிருந்து (SDS)ஒருவர் 
  5. மற்றும் இரண்டுபத்திரிகையாளர்கள் என 11பேர் கொண்ட உண்மைஅறியும் குழு மே 4ஆம் தேதிஸ்ரீநகரை அடைந்தது.

  இவர்கள் இரண்டு முக்கியவிசயங்களைத்தெரிவிக்கிறார்கள்.

  1. 
  ராணுவத்தினரின்அடக்குமுறை 
  காஷ்மீர் பள்ளத்தாக்கின்மொத்த மக்கள் தொகை 35லட்சம். (சென்னை நகர மக்கள்தொகை 47 இலட்சம் 2011ல்காண்க:ஆனால் அங்குள்ள 5லட்சத்துக்கும் அதிகமாகஇராணுவ வீரர்கள்

  இராணுவத்தினருக்கு உள்ளவரம்பற்ற அதிகாரத்தால்யாரைஎப்போதுவேண்டுமானாலும் வாரண்ட்இல்லாமல் கைது செய்யலாம்,கொல்லலாம்காணாமற்போகச் செய்யலாம்பாலியல்வல்லுறவு செய்யலாம்பொய்வழக்கு சுமத்தி பணம்பறிக்கலாம்அதற்காகஅவர்கள்நாடாளுமன்றத்துக்குக் கூடபதில் சொல்ல தேவைஇல்லை. கடந்த 18வருடங்களில் 80,000 க்கும்அதிகமானவர்கள்கொல்லப்பட்டுள்ளனர்.அவர்களில் தீவிரவாதிகள்கொன்றது 20,000. ராணுவம்கொன்றது 60,000 க்கும்அதிகம்பல சமயங்களில்பணம் கொடுத்தால் உயிர்பிழைக்கலாம்,இல்லையென்றால் ரோட்டில்பிணம் கிடக்கும்.

  நடந்த பல துயரங்களில் ஒருதுயரம்:  பாரா முல்லா மாவட்டத்தைச்சேர்ந்த பண்டிபோராநகரத்திலிருந்து 15 கிமீதொலைவில் உள்ள கிராமம்சும்லார்ஒரு நாள் பிற்பகல்அங்குள்ள ஒரு வீட்டைக்காவல் துறையினர்சோதனையிட்டார்கள்.வீட்டிலிருந்தவர்கள்எல்லோரும் வெளியேநிறுத்தப்பட்டார்கள்ஒருமணி நேரத்துக்குப் பிறகுஅவர்கள் வீட்டுக்குள்போகலாம் எனச்சொல்லிவிட்டுக் காவல்துறையினர்வெளியேறினார்கள்.அக்குடும்பத்தைச் சேர்ந்தஒரு மகனையும் அவர்கள்அழைத்துச் சென்றதுபிறகுதான் தெரியவந்தது.குடும்பத் தலைவர் அரசியல்பிரமுகர் ஒருவரதுதுணையுடன் காவல்நிலையத்துக்குச் சென்றுவிசாரித்தார்பையன்விசாரணைக்காகராணுவத்தினரிடம்ஒப்படைக்கப்பட்டதுதெரியவந்ததுஇருவரும்அங்குச் சென்றார்கள். ஒருதொகை கொடுத்தால்,சிறுவனை அன்று மாலையேஅனுப்பிவிடுவதாகராணுவத்தினர்கூறினார்கள்.அத்தொகையைப் பையனின்தந்தையால் திரட்டமுடியவில்லைநான்குநாள்களுக்குப் பிறகுமகனின் பிணம்தான்அவரிடம்ஒப்படைக்கப்பட்டது.
  ரௌடிகளைதீவிரவாதிகளுக்கு எதிராகபயன்படுத்துவதுஇந்தரௌடிகளின் கொலை,கொள்ளைகள்கண்டுகொள்ளப்படாது.ஸ்ரீநகரிலிருந்து 25 கி.மீ.தொலைவில் உள்ளபாம்போர் கிராமம்இங்குபாபா கிஷ்த் வாரி என்பவன்80 களின் இறுதியில்எதிர்புரட்சிக்குஇராணுவத்தால்பயன்படுத்தப்பட்டவன்.இராணுவத்தின்துணையுடன் இவன் செய்தபாலியல் வல்லுறவுகளும்,கொலைகளும் 150க்கு மேல்.அவன் மேல் எந்தக் குற்றமும்இதுவரை பதிவாகவில்லை.

  தீவிரவாதிகளைப் பிடிக்கமக்கள் கேடயமாகபயன்படுத்துவது


  இராணுவம் செய்துவரும்இன்னொரு தொழில் காட்டுமரக்கடத்தல்.

  2. இந்திய அரசுக்கு காஷ்மீர்மக்களைவிட அந்த மண் தான்முக்கியம்

  இந்தியாவின் பிறமாநிலத்தவர்களை அவர்கள்இந்தியர்கள் என்றேஅழைக்கிறார்கள்காரணம்இந்திய ராணுவம் அயல்நாட்டு இராணுவம் அதுஎங்கள் நாட்டை ஆக்கிரமித்துஅடக்கு முறையில் ஈடுபட்டுவருகிறது என்ற கருத்தே,மனநிலையே அங்குமேலோங்கி நிற்கிறதுஇந்தியஇராணுவத்தின் தொடர்அத்துமீனால் இந்த உணர்வைஅதிகப்படுத்தவே செய்கிறது.

  மேலும் காஷ்மீரில் இந்துக்கள்கொல்லப்படுகிறார்கள்,இந்துக் கோயில்கள்இடிக்கப்படுகின்றன என்றுஊடகங்கள் பொய்ப்பிரச்சாரம்செய்கின்றன. 

  இது உண்மையில்லை என்று1993 ல் டெல்லியைச்சேர்ந்தஆங்கிலப்பத்திரிக்கைக் குழுஅம்பலப்படுத்தியதுபா...இடிக்கப்பட்டதாகக் கூறிய 23கோயில்களில் 21 கோயில்கள்அனந்த்நாக் பகுதியில் எந்தவித சேதாரம் இல்லாமல்இருந்ததை புகைப்படங்கள்மூலம் ஆதாரங்களைமுன்வைத்தனர்

  அதே போல் 1990 களில்காஷ்மீரின் ஆளுநராய் இருந்தஆர்.எஸ்.எஸ்காரரானஜக்மோகன் தேசவிடுதலைப்போராட்டத்தைமதவாதப் போராட்டமாக காட்டமத்திய அரசோடு சேர்ந்துகொண்டு பல காரியங்களைசெய்தார்இந்து பண்டிட்களைதூண்டிவிட்டார்அவர்களைபொய்யான அகதிகள்ஆக்கினார்ஆனால்காஷ்மீரில் இந்துபண்டிட்டுகளும்,முஸ்லிம்களும் காஷ்மீரிகள்என்ற நேச உணர்வுடனேஇருக்கிறார்கள். 1947 ல்நாட்டின் பல பாகத்திலும்மதக்கலவரம் ஏற்பட்ட போதுஅமைதிபூமியாய் இருந்ததுகாஷ்மீர்ஆனால்அன்றிலிருந்தே காஷ்மீரின்மைய நிர்வாகச் செயல்பாட்டில்90 சதவிகிதம் பிராமணஇந்துக்களின் தலையீட்டைவலியத் திணித்தேவந்திருக்கிறது மைய அரசு

  16இன்று இந்திய அரசும் பலபத்திரிக்கைகளும் முன்வைக்கும் வாதம் இதுதான்

   ஆண்டொன்றுக்கு 6000 கோடிரூபாய் செலவிட்டு ராணுவம்மூலம் காஷ்மீர் மண்ணைகாப்பாற்றி வருகிறோம்.இந்தியாவின் பாதுகாப்பிற்குகாஷ்மீர் இந்தியாவின் ஒருபகுதியாக இருப்பதுஅவசியம்

  ஆனால்

  1. இன்று ஒரு நாட்டுக்குஅச்சுறுத்தல் ஏற்படுத்தஅண்டை நாடாகத்தான்இருக்க வேண்டுமென்பதல்ல.
  எங்கோ இருக்கும் அமெரிக்காஈராக்கைசின்னாபின்னமாக்குகிறது.
  எங்கோ இருக்கும் சீனாஇலங்கையில் கடற்படைஅமைக்கிறதுநிலவியல்எல்லை என்பது பிற நாடுகள்மீதான ஆக்கிரமிப்பிற்கு ஒருஅடிப்படையாக இருக்கும்தேவை இந்தக் காலத்தில்இல்லை

  2. காஷ்மீரிகள் சுய நிர்ணயஉரிமை மதிக்கப்படும்போதுநமதுஇராணுவத்தேவைகளும்குறையும்பிறராஜ்ஜியங்களின் சுயமரியாதையை மதிக்கும்இந்தியாவை பிற பிராந்தியநாடுகளும் மரியாதையோடுநேசிக்கும். காண்க:


  17. ஆனால் இன்றைய

   புதிய பொருளாதாரக் கொள்கையின் தனியார்மய, உலகமய சூழலில் இரண்டு முக்கிய காரணிகள் பங்கு வகிக்கின்றன.

  1. உலகமயத்துக்கு  
  கட்டுப்பாடுகளை ஒரே மைய இடத்தில் கொண்டுள்ள பொது சந்தை தேவைப்படுகிறது. ஒரே மொழி, ஒரே நாடு, ஒரே சிவில் சட்டம், ஒரே பொருளாதாரக்கொள்கை போன்றவைகள் கொண்ட பரந்த நிலப்பரப்பு, வசதிபடைத்த மத்திய தர வர்க்கம் இவை இந்தியாவில் இருப்பதால் இந்த கட்டமைப்பு குலைக்கப்படாமல் இருப்பது பன்னாட்டு கார்பொரேட் கொள்ளைக்கு எளிது.

  2. தீவிரவாத எதிர்ப்பு, மாவோயிஸ்ட் எதிர்ப்பு, நக்சலைட் எதிர்ப்பு, தேசிய இனங்களின் எழுச்சி அடக்குதல் மூலம் நாட்டில் எப்போதும் ஒரு நிலையற்ற தன்மை இருப்பது போல் காண்பித்து காவல் துறை, இராணுவம், பாதுகாப்பு போன்றவைகளுக்கான செலவினங்கள் பெயரில் ஊழல் செய்யவும், மக்களை எப்போதும் ஒரு அச்ச நிலையிலேயே  வைத்திருந்து கேள்வி கேட்க பயப்பட வைத்தல், 
  நியாயத்திற்கு யாரும் குரல் எழுப்ப விடாமல் அடக்குதல்,
  நாட்டின் முக்கிய பிரச்சனைகளில் இருந்து பொது மக்களின் கவனம் திசை திருப்புதல், மது போதை போன்றவை மூலம் மயக்க நிலையில் வைத்திருத்தல் இவை மூலம் உலகமயத்தை உள்நாட்டின் அடிப்படை தேவை ஆக்குதல். 

  18. காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சட்டத்தின் 370வது பிரிவை நீக்க வேண்டும் என்பது பா.ஜனதாவின் கொள்கை.ஆனால், காஷ்மீரில் உள்ள அரசியல் கட்சிகள், அப்பிரிவை நீக்கக்கூடாது என்று போர்க்கொடி உயர்த்தி வருகின்றன.


  இது உண்மையல்ல 
   காஷ்மீர் மாநில முதல்வர் ஒமர் அப்துல்லா"காஷ்மீருக்கும், நாட்டின் இதர பகுதிக்கும் இடையிலான ஒரே அரசியல் சட்ட தொடர்பு 370வது பிரிவுதான். எனவே, ஒன்று, 370வது பிரிவு இருக்கும் அல்லது காஷ்மீர் இந்தியாவில் இருக்காது. இதை நினைவில் கொள்ளுங்கள்" என்று கூறினார்.
    
  19. அது என்ன 370?

   370 சிறப்புத்தகுதியின் சில முக்கிய அம்சங்கள்:

  * இந்திய அரசியல் சாசனத்தின் 370 வது பிரிவு, ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு தற்காலிகமாக சிறப்பு அந்தஸ்தை அளிக்கிறது. இந்த சிறப்பு அந்தஸ்தின்படி இந்திய பாராளுமன்றத்தில் ராணுவம், தகவல் தொடர்பு, வெளியுறவு விவகாரம், ஆகிய துறைகளை தவிர்த்து மற்ற துறைகளில் இயற்றப்படும் எந்த சட்டமும் ஜம்மு காஷ்மீர் சட்டசபையின் ஒப்புதல் இன்றி அம்மாநிலத்தில் செல்லாது. 

  * இந்திய மாநிலங்களில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மட்டுமே தனிக்கொடியும், தனி அரசியல் சாசனமும் உண்டு.


  இந்தியாவின் பிற மாநிலங்களைச் சார்ந்த மக்கள் இந்த மாநிலத்தில் நிலம் முதலான அசையா சொத்து வாங்குவதும் தடை செய்யப்பட்டுள்ளது.  இது இந்திய புதிய பொருளாதாரக் கொள்கைக்கு இடைஞ்சல் தானே. பெரிய நிறுவனங்களும், அந்நிய நாட்டு நிறுவனங்களும் அங்கே நிலங்களை வாங்க முடியாது அல்லவா. இன்று நாட்டையே அந்நிய நாட்டு கார்பொரேட் நிறுவனங்களுக்கு விற்றுக்கொண்டிருக்கும் பாரதீய ஜனதா மோடிக்கும், காங்கிரசின் மன்மோகன்சிங்கிற்கும் இது எப்படி பிடிக்கும். 

  * ஜம்மு காஷ்மீர் மாநில பெண்கள் மற்ற மாநில ஆண்களை திருமணம் செய்து கொண்டால் அப்பெண்கள் நிலம் வாங்கும் உரிமையை இழந்துவிடுவார்கள், ஆண்கள் மற்ற மாநில பெண்களை மணந்தாலும் அவர்கள் நிலம் வாங்க முடியும். ஆனால் 2002 ல் காஷ்மீர் மாநில உயர்நீதிமன்றம் மாற்றி காஷ்மீர் பெண்களுக்கு சொத்துரிமை உண்டு என்பதை உறுதி செய்தது.

  * ஜம்மு காஷ்மீர்  மாநில சட்டமன்றத்தின் பதவி காலம் ஆறு ஆண்டுகள் ஆகும், மற்ற எந்த இந்திய மாநிலங்களின் சட்டமன்ற காலம் 5 ஆண்டுகளாகும். 


  * அரசியல் சாசனத்தின் 370 வது பிரிவின்படி மாநிலத்தின் எல்லையை இந்திய நாடாளுமன்றத்தால் கூட்டவோ அல்லது குறைக்கவோ முடியாது.


  20. காஷ்மீருக்கு மட்டுமல்ல வேறு சில மாநிலங்களிலும் சில சிறப்புத் தகுதி சட்டங்கள் உண்டு.
  இந்திய அரசியல் சாசனத்தில்:
  1. 371 பிரிவின்படி மகாராஷ்டிராவில் விதர்பா, மரட்வாடா, குஜராத்தின் சவுராஷ்டிரா, கட்ச் (பாகிஸ்தானுக்கு அருகில் உள்ள பகுதிகள்) பகுதிகளுக்கு சிறப்பு சலுகைகள் உண்டு.
  2. 371 ஏ. பிரிவின்படி நாகாலாந்திலுள்ள ஒரு மாவட்டத்திற்கும் (மியான்மர் நாட்டுக்கருகில் உள்ள பகுதி),
  3. 371 ஜே பிரிவின்படி ஐதராபாத்திற்கும்சிறப்புத்தகுதிகள் உண்டு.  


  21. காஷ்மீரிகளின் விடுதலைப்போராட்டம் சரியாகப் புரிந்து கொள்ளப்படவேண்டும். அந்நிய ஆட்சியாளர்களின் ஆக்கிரமிப்பிலிருந்து விடுபட அவர்கள் 150 ஆண்டுகளாக நடத்தும் போராட்டம். இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்பிருந்தே நடைபெறும் போராட்டம்.

  பாகிஸ்தான் பிரிந்தது; பிரியக்கூடாது என்று சொல்கிறோமா, ஏன் பர்மா கூட ஆங்கிலேய இந்தியாவோடு தான் இருந்தது, பிரிந்த போது தடுத்தோமா, அதையெல்லாம் விட பாகிஸ்தானிலிருந்து கிழக்கு பாகிஸ்தானை பிரித்து பங்களாதேஷ் என்ற தனி நாட்டை பிரித்து கொடுத்ததே இந்தியாதானே. அப்போதெல்லாம் பிரிவினை வாதம் என்று கூக்குரல் வரவில்லை. ஏன் இப்போது மட்டும். 

  இந்த இராணுவ அத்துமீறல் என்பதனை இந்திய இறையாண்மை, நாட்டின் பாதுகாப்பு என்பதைத் தாண்டி மத்திய அரசு அந்நிய நாட்டு கார்பொரேட் நிறுவனங்களுக்காக இந்தியாவின் சொந்த மக்களையே, சொந்த மண்ணையே விலை பேசி விற்கும் விபச்சாரத்தொழில் செய்கிறது, அதற்கு இராணுவம், காவல்துறைகளை பயன்படுத்திக் கொள்கிறது,  கொல்கிறது என்பதை மட்டும் நாம் புரிந்து கொண்டால் போதும். 

  உதாரணமாக 

  இந்த இராணுவம் வட கிழக்கு மாநிலங்களில் செய்யாத அட்டூழியம் இல்லை.

  நம்ம தமிழீழத்தில் IPKF (Indian Peace Keeping Force) ஆனால்  (Indian People Killing Force) என்று நம் தமிழ் மக்களைக் கொன்றது போல வடகிழக்கு மாநிலங்களிலும் கொடூரங்கள் புரிய

  அஸ்ஸாமின் இராணுவத்தின் அடக்குமுறை, பாலியல் வன்முறைகள் அளவுக்கு அதிகம் மீறவே, கொடுமைக்கு ஆளான பெண்கள் போராடத்தொடங்கினர், ஒரு கட்டத்தில் அடக்குமுறை தாங்காமல் எந்த அளவிற்கு போராட்டத்தை எதிர்த்தார்கள் என்பதற்கு கீழே உள்ள படமே போதும்.  மணிப்பூரில் இராணுவ சிறப்பு சட்டம் [Armed Forces Special Powers Act (AFSPA)]அமலில் உள்ளதால் அவர்கள் வைத்ததுதான் சட்டம்.

  இந்த அடக்குமுறைக்கு எதிராக
   ஐரோம் சர்மிளா (Irom Sharmila)என்பவர் தனது 28 வயது முதல், 2000 நவம்பர் 5 முதல் உண்ணாநிலைப் போராட்டம்நடத்துகிறார்.

  கட்டாயப்படுத்தி மூக்கின் வழியே திரவ உணவு கொடுக்கப்படுகிறது. காண்க:  வருகிற ஆகஸ்ட் 9 ந் தேதியோடு (2016) தனது 16 ஆண்டு கால உண்ணாவிரத போராட்டத்தை முடித்துக்கொள்வதாக இன்று அறிவித்துள்ளார். காண்க:

  மேலும், பல வழிகளில் வஞ்சிக்கப்படும் இனமாகத்தானே தமிழ்நாடும் இருக்கிறது, இல்லையா?

     அப்படியே கூட்டாட்சி அமைப்பை ஏற்றுக்கொள்வது என்றால் கூட 
  பிற இனங்களை, மொழிகளை அடிமைப்படுத்தாத கூட்டாட்சியா என்றால் அதுவும் இல்லையே.


மேலும் தகவல்களுக்கு ; Please click 👇 

https://goldenvimal.business.site/?m=true 

https://sites.google.com/site/nsvimalgolden/www-goldenvimal-com **என்றும்  அன்புடன்  விமல் ** 98651-38410  ** 82203-03410 ** திண்டுக்கல் ** Goldenvimal ** www.goldenvimal.ml ** குருசாமி பிள்ளை சந்து ** திண்டுக்கல் ** இதுபாேன்ற இணையதளம் உங்களுக்கு உருவாக்க அனுகவும் 98651-38410 ** Writing by Goldenvimal ♥♥♥♥ இவன் விமல் உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள் தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
                             தாெடரும்,,,

👇🌎 Website Link's முக்கிய இணைப்புகள் 🌎👇

Top Post Ad

Below Post Ad