Sri,,, மனம் சோர்வடைவதற்கு காரணம் | www.goldenvimal.com
      **என்றும் அன்புடன் விமல் ** 98651-38410 ** 82203-03410 ** திண்டுக்கல் ** Goldenvimal ** www.goldenvimal.ml ** குருசாமி பிள்ளை சந்து ** திண்டுக்கல் ** வி.பரமேஸ்வரி & விமல் **  

6 Mar 2019

மனம் சோர்வடைவதற்கு காரணம்


மனம் சோர்வடைவதற்கு காரணம்
மனதின் பலவீனமான எண்ணங்கள், மனம் வீண் சிந்தனையினால் சோர்வடைகின்றது....

மனம் உற்சாகம் குறைவதற்கான இரண்டு காரணங்கள் ஒன்று கடந்ததை சிந்திப்பது,
இன்னொன்று எதிர்காலத்தை நினைத்து கவலைப்படுவது.இவை வாழ்க்கையின் பிரச்சனையாக இருக்கலாம், தொழில் ரீதியான சங்கடங்களாக இருக்கலாம், சந்தேகத்தின் காரணமாக இருக்கலாம்.எதுவாக இருந்தாலும் கடந்தது, வருவது இவ்விரண்டு விஷயங்களின் கவலை மனம்சோர்வடைய செய்து விடுகின்றன.

இதிலிருந்து எப்படி விடுபடுவது.சிலருக்கு தமது அன்றாட டைம் டேபிளை உருவாக்க தெரிவது இல்லை.பாருங்கள் பெரிய வி.ஐ.பி. க்களுக்கு இந்த நேரம் இந்த காரியம் என்ற அட்டவணை இருக்கும்.
இதைப் போன்ற மனதிற்கான அட்டவணை தயாரிக்கவேண்டும்.

மனதை பிஸியாக வைத்து கொண்டால் உடல் தன்னால் பிஸியாகிவிடும்.மனதில் எந்தெந்த விஷயங்களில் உங்களுக்கு சோர்வு வருகின்றது என்று முதலில் ஒரு பேப்பரில் எழுதுங்கள்.
அது உங்கள் குடும்ப பிரச்சினையாக இருந்தாலும் சரி, அல்லது தொழில் பிரச்சனையாக இருந்தாலும் சரி, எழுதிய பிரச்னைகள் உங்களுக்கு எந்தெந்த நேரத்தில் மனத்தாக்கத்தை ஏற்படுத்துகின்றன அதையும் எழுதுங்கள்.அந்த தாக்கம் வெளிப்படும்பொழுது எந்தெந்த பாதிப்புக்கள் வாழ்வில் ஏற்படுகின்றன என்று சோதனை செய்யுங்கள்.அந்த பாதிப்பு எவ்வளவு சூழ்நிலையை கெடுக்கின்றது.நஷ்டத்தை ஏற்படுத்துகின்றது என்று எழுதுங்கள்.


உதாரணமாக ஒருவருக்கு தொழில் நஷ்டம் அது அவரை மனமுடைய செய்கின்றது..அவருக்கு வாழ்க்கையை அது கேள்விக்குறி ஆக்கி மிகுந்த மனசோர்வை ஏற்படுத்துகிறது.இந்நேரத்தில் மனசோர்வை அகற்றி வெற்றி அடைவதை சிந்திக்க அவருக்கு மனோபலம் வேண்டும்.அந்த மனோபலம் சக்தி வாய்ந்த எண்ணங்களின் மூலம் உற்பத்தியா கின்றது.ஒருவர் எப்படிபட்ட சூழ்நிலையிலும் நல்லதே நினைப்பாராகில் அவர் எந்தவொரு சூழ் நிலைகளை எதிர்கொண்டாலும் நல்ல நிலையை விரைவில் அடைவார்.

ஒருவருக்கு தொழில் நஷ்டம் என்றால், உங்களு டைய நஷ்டமான பணம் இன்னொருவரின் கையில் லாபமாக இவ்வுலகில் சுற்றிக்கொண்டுதான் இருக்கின்றது.அது எங்கேயும் செல்லவில்லை. இதுதான் கீதையின் சாரம்.திடமாக நம்புங்கள்
அந்த பணம் பலமடங்காக என் கைக்கு திரும்ப வரும்.அதெப்படீங்க, திருடன் வீட்ல வந்து திருடிட்டு போய்ட்டான், அதெப்படி பலமடங்கா திரும்பவரும்.
மனசோர்வுதான் வரும்.யாரோ ஒருவர் சொல்வது என் காதில் விழத்தான் செய்கின்றது.இறந்தவர் திரும்ப வரமாட்டார் என்று தெரிந்தும் நாமும் அவருடன் சேர்ந்து இறப்பதில்லை.மீண்டும் வாழ முயற்சிக் கின்றோம்.

எத்தனையோ கைக்குழந்தையுடன் விட்டுவிட்டு இறந்த கணவன்மார்களை இழந்த பெண்கள் தன்னம்பிக்கையை உறுதுணையாக ஆக்கி தைரியத்தை கணவனாக்கி தன்னுடைய குழந்தைகளை கலெக்டர், டாக்டர், என்ஜினீயர் ஆக்கியிருக்கின்றனர்.இதற்க்கெல்லாம் என்ன காரணம் மனச்சோர்வை தூக்கி எறிந்துவிட்டு, அடுத்த வழியை உற்சாகத்துடன் தேடியதுதான்.
எங்கே, நீங்கள் புதிதாக ஒன்றை கற்றுக் கொள்ள விளைகின்றீர்களோ அங்கே புதிய வாழ்க்கையின் கதவு உங்களுக்கு திறந்து வைக்கப்பட்டிருக்கின்றது.
ஒவ்வொரு நாளும் கற்றுக்கொள்ள உலகில் ஏராளமான வழிகாட்டி கள் உண்டு.

அனுபவங்களை பகிர்ந்துகொள்ள ஏராளமான மனிதர்கள் எழுதிய புத்தகங்கள் உண்டு.நீங்கள் மட்டுமல்ல வாழ்க்கையில் அடிபட்டவர்கள் அதை தாண்டிய விதத்தை அனுபவமாக எழுதிய கட்டுரைகள் உண்டு.அனுபவமில்லாமல் செய்யும் பயணம்தான் இப்படி ஆபத்தி்ல் முடிகின்றது,
"இருள் இருள் என்று சொல்வதை விட்டு ஒரு தீக்குச்சியை தேடு"...என்னாகும் என்ற கேள்வியை எழுப்பாதீர்கள் இப்படியாகும் என்று முடிவு பண்ணுங்கள்.முடிவு செய்துவிட்டு முடிவாக உட்கார்ந்து விடாதீர்கள்.. அதைநோக்கி பயணியுங்கள்.

உங்களுக்கு மனசோர்வு வரவில்லையா, என்று கேட்டால், இவ்வுலகில் 100க்கு ஒருத்தருக்கு மன சோர்வு வராமல் இருந்தால் அது உலக அதிசயம் ஆகும்.மனசோர்வு கண்டிப்பாக வந்துள்ளது, உண்மையில் அப்படி ஒருநிலை வந்த பொழுது  அருகிலிருந்த வானொலியில்காதி்ல் ஒலித்த ஒரு வார்த்தை...

"போடா.. ஆண்டவனே நம்ம பக்கம் இருக்கான் "..இது திரைப்பட வார்த்தையோ என்னவோ, இதை கேட்கும் பொழுதெல்லாம் இமயமலை மீது கொடியை நட்டுவிட்ட மாதிரி ஒரு சந்தோஷம்.
ஆண்டவன் ஜோதியான பரமேஸ்வரன் என்னோட துணையா இருக்கார், என்னால என்ன சாதிக்க முடியாது..முடியும் ஜெயிப்பேன்..இதுதான் இக்கட்டான நேரத்தில் நமக்கு தேவையான மனவுறுதி..எதை கொண்டுவந்தோம் எதை கொண்டுசெல்வோம் இந்த கீதையின் வார்த்தை இழந்தவனுக்கு சோகம் பாட அல்ல.. இருப்பவனுக்கு பாடம் புகட்ட..

எனவே, பலவீனத்தை பேப்பரில் எழுதி அதை எரித்துவிடுங்கள். இன்றிலிருந்து நீங்கள் புது மனிதன்,வெளிச்சத்தை ஏற்றுங்கள் வழி தெரியும்.
இருட்டுக்குள் இருந்துகொண்டு தெரியவில்லை, தெரியவில்லை.. என்று சொல்வதைஇந்நொடியோடு முடித்து விடுங்கள்.......


மேலும் தகவல்களுக்கு ; Please click 👇 https://goldenvimal.business.site/?m=true https://sites.google.com/site/nsvimalgolden/www-goldenvimal-com Writing by Goldenvimal ♥♥♥♥ இவன் விமல் உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள் தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

உங்கள் கருத்துக்கள் பதிவிட

Name

Email *

Message *

வாசிக்க வந்து சென்றவர்கள் ,,

Sign Up

photo

photo

👇🌎 Website Link's 🌎👇

                                      Sri...

**********************🌎***********************
👨‍💻 👨‍💻 👨‍💻
👉 TNPDS 👉 FLIGHTS timetable 👉 EB Bill
👉 Railway 👉 Gold rate dindigul 👉 Google
👉 Lic 👉 Vikaspedia 👉 DINDIGUL
👉 G Photos 👉 Wixsite 👉 Exchange rates
👉 G Mail 👉 Blog template 👉 G Notes
👉 G Site 👉 G Business 👉 G Drive
👉 My Real games 👉 paramu 👉 VIMAL
👨‍💻 👨‍💻 👨‍💻
**********************🌎***********************

cricet live

maps