Sri,,, குட்லாடம்பட்டி சுற்றுலா | www.goldenvimal.com
      **என்றும் அன்புடன் விமல் ** 98651-38410 ** 82203-03410 ** திண்டுக்கல் ** Goldenvimal ** www.goldenvimal.ml ** குருசாமி பிள்ளை சந்து ** திண்டுக்கல் ** வி.பரமேஸ்வரி & விமல் **  

27 Mar 2019

குட்லாடம்பட்டி சுற்றுலா

                                  Sri...
மதுரையில் ஓர் குற்றாலம்...
             குட்லாடம்பட்டி
Image result for குட்லாடம்பட்டி
கண்ணுக்குக் குளிர்ச்சியாய் விரிந்து பரவியுள்ள சிறுமலையின் சரிவில், வழிந்தோடி வரும் தண்ணீர் அருவியாகப் பெருகி, இதமான சூழலைத் தருகின்ற ஓரிடம்தான் இந்தக் குட்லாடம்பட்டி தடாகை நாச்சியம்மன் அருவி.

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே குட்லாடம்பட்டி என்ற மலையோர
கிராமத்தில் அமைந்துள்ளது இந்த தடாகை நாச்சியம்மன் அருவி.அடிவாரத்திலிருந்து அருவிக்குச் செல்லும் படிக்கட்டுகள் மற்றும் பாதை சிதிலமடைந்துவிட்டது. அண்மையில் வனத்துறை ரூ.51 லட்சம் செலவில் செம்மைப்படுத்தி அழகுபடுத்தியுள்ளது.

பட்ஜெட்டுக்கு ஏற்ற சுற்றுலாவை விரும்புகின்ற மக்களுக்கு ஏழைக்கு ஏற்ற எள்ளுருண்டையாக அமைந்ததுதான் குட்லாடம்பட்டி அருவி.

தற்போது குற்றாலம் பக்கமெல்லாம் செல்ல முடியாது. காரணம் அபாயகட்டத்தைத் தாண்டி அருவியில் தண்ணீர் பெருக்கெடுத்துள்ளது.

அதுமட்டுமன்றி, குற்றாலம் செல்வதென்றால் ஆகக்கூடிய செலவில் பாதிக்கும் குறைவாகவே குட்லாடம்பட்டிக்கு ஆகும். ஆகையால் ஒரு நாள் நேரம் ஒதுக்கி, உணவு வகைகளோடு குடும்பம் குட்டிகளோடு சென்று உங்களை புத்தெழுச்சி செய்து கொள்வதற்கு ஏற்ற அருவி.
வாகனத்தில் சென்றால் அதனை நிறுத்துவதற்குக் கட்டணம் ரூ.15. நுழைவுக் கட்டணம் ரூ.10 இதைத் தவிர வேறு எந்த செலவும் இங்கில்லை.

மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து ஏறக்குறைய 30 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. நகரப்பேருந்திலேயே பயணம் செய்யலாம். இங்கிருந்தே குட்லாடம்பட்டி அருவிக்குச் செல்ல நேரடி பேருந்து வசதி உண்டு. ஆனால் அது குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டும்தான்.

ஆனால் வாடிப்பட்டி சென்றுவிட்டால் அங்கிருந்து ஷேர் ஆட்டோக்கள் அடிக்கடி பயணிகளை ஏற்றிக் கொண்டு செல்கின்றன.

அருவியில் குளித்துவிட்டு வெளியே வந்ததும் குட்டியாக ஒரு பரோட்டா கடையும் அங்கிருக்கிறது. வெரைட்டியான உணவுகள் எதுவும் இல்லையென்றாலும் சாதாரண பரோட்டா, தண்ணியாக இருக்கும் சால்னாவை ஊற்றி குழைத்து அடிக்கலாம்.

ரம்யமான வனப்பகுதி... பாதுகாப்பான குளியல்... தொந்தரவில்லாத மகிழ்ச்சி... செலவில்லாத பயணம்...
தமிழகத்தில் குற்றாலம், திற்பரப்பு உள்ளிட்ட பிரபலமான அருவிகள் உள்ளன. இவை தவிர, குறிப்பிட்ட ஒரு சீசனில் மட்டும் நீர் கொட்டும் அருவிகள் அதிகம்.மேற்குத் தொடர்ச்சி மலைகள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் உள்ள மலைகளிலும் இவ்வாறான அருவிகள் காணப்படுகின்றன. இவற்றில் பல அருவிகள் சுற்றுலா தலங்களாக அறிவிக்கப்படவில்லை.

இந்த வகையில், மதுரை மாவட்டம், வாடிப்பட்டியை அடுத்த குட்லாடம்பட்டியில் அவ்வப்போது கொட்டும் தடாதகை நாச்சியம்மன் அருவி அப்பகுதியில் பிரபலம். சிறுமலையில் மழை பெய்யும் காலங்களில், இந்த அருவியில் தண்ணீர் கொட்டும்.
இதுபோன்ற நேரங்களில் சுற்றுலா பயணிகள் ஏராளமான அளவில் இங்கு குவிகின்றனர். சமீபத்திய மழை காரணமாக தற்போது குட்லாடம்பட்டி அருவியில் நீர் கொட்டுகிறது


மேலும் தகவல்களுக்கு ; Please click 👇 

https://goldenvimal.business.site/?m=true 

https://sites.google.com/site/nsvimalgolden/www-goldenvimal-com **என்றும்  அன்புடன்  விமல் ** 98651-38410  ** 82203-03410 ** திண்டுக்கல் ** Goldenvimal ** www.goldenvimal.ml ** குருசாமி பிள்ளை சந்து ** திண்டுக்கல் ** இதுபாேன்ற இணையதளம் உங்களுக்கு உருவாக்க அனுகவும் 98651-38410 ** Writing by Goldenvimal ♥♥♥♥ இவன் விமல் உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள் தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
                            தாெடரும்,,,

உங்கள் கருத்துக்கள் பதிவிட

Name

Email *

Message *

வாசிக்க வந்து சென்றவர்கள் ,,

Sign Up

photo

photo

👇🌎 Website Link's 🌎👇

                                      Sri...

**********************🌎***********************
👨‍💻 👨‍💻 👨‍💻
👉 TNPDS 👉 FLIGHTS timetable 👉 EB Bill
👉 Railway 👉 Gold rate dindigul 👉 Google
👉 Lic 👉 Vikaspedia 👉 DINDIGUL
👉 G Photos 👉 Wixsite 👉 Exchange rates
👉 G Mail 👉 Blog template 👉 G Notes
👉 G Site 👉 G Business 👉 G Drive
👉 My Real games 👉 paramu 👉 VIMAL
👨‍💻 👨‍💻 👨‍💻
**********************🌎***********************

cricet live

maps