முதியோருக்கான சுற்றுலா டிப்ஸ்…

 முதியோருக்கான  டிப்ஸ்…

வயதானவர்களை உடன் அழைத்துச் செல்லும்போது, காரில் செல்வதைத் தவிர்த்து ரயிலில் பயணம் செய்யுங்கள். அதுவே பாதுகாப்பானது.

செல்லும் இடத்துக்கு அருகில் இருக்கும் ஆன்மிக முக்கியத்துவம் வாய்ந்த இடங்களைப் பற்றி விசாரித்து பெரியவர்களை அழைத்துச் சென்றால், மிகுந்த மகிழ்ச்சி அடைவார்கள் என்பதை கவனத்தில்கொள்ளுங்கள்.


வெளியிடங்களில் தங்கும்போது அந்த இடத்துக்கு அருகில் இருக்கும் மருத்துவர் அல்லது மருத்துவமனை பற்றித் தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள்.

சுற்றுலா மையங்களுக்கு செல்லும்போது பெரும்பாலான நேரம் வெளியில் சுற்றிக்கொண்டிருப்போம். இரவில் தங்குவதற்கு மட்டுமே அறைக்கு செல்வோம். அதனால் தேவையில்லாமல் அதிக கட்டணம் உள்ள விடுதிகளைத் தேர்வு செய்யாதீர்கள். அதேசமயம், மோசமான விடுதிகளைத் தேர்வு செய்துவிடாமலும் கவனமாக இருங்கள்.

நீங்கள் செல்ல வேண்டிய இடத்துக்கான டிக்கெட்டை முன்கூட்டியே பிளான் செய்து புக் செய்து விடுங்கள்.

வயதானவர்கள் மலை வாசஸ்தலங்களுக்கு செல்வதை தவிர்க்கலாம். எந்த மாதிரியான சீதோஷ்ண நிலை அவர்களது உடல் நலத்துக்கு ஆகாது என்பதைத் தெரிந்து கொண்டு அந்த இடங்களைத் தவிர்த்துவிடுங்கள்.

சுற்றுலா செல்லும் ஊரில் முக்கியத்துவம் வாய்ந்த உணவை சுவைத்துப் பாருங்கள். அதேசமயம், அதீத ஆசையில் அளவுக்கு அதிகமாக சாப்பிட்டு வயிற்றுக் கோளாறு ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
Image result for முதியோருக்கான சுற்றுலா
சிலர் ரெகுலராக மருந்து மாத்திரைகளை எடுக்கக்கூடும். அவற்றை மறக்காமல் பயணத்தின் போது எடுத்துச் செல்லுங்கள். குடும்ப மருத்துவரின் தொடர்பு எண்ணை கையோடு வைத்திருங்கள். இது அவசரகாலத்தில் ஆலோசனை கேட்க உதவும்.

நீங்கள் செல்லக்கூடிய ஊரில் பார்க்க வேண்டிய முக்கிய இடங்களை லிஸ்ட் எடுத்துக் கொள்ளுங்கள். அதில் எந்த இடத்துக்கு விடுமுறை என்பது போன்ற தகவல்களைக் குறித்துக் கொள்ள தவறாதீர்கள்.

சுற்றுலாவின் நிறைவு நாளில் ஷாப்பிங் செல்லுங்கள். நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு ஒரு சில பொருட்கள் வாங்கி வாருங்கள். வெளியூர் சென்றாலும் அவர்களை நினைவில் வைத்திருந்தீர்கள் என்பதை இதன் மூலம் தெரிவிக்க இயலும்மேலும் தகவல்களுக்கு ; Please click 👇 https://goldenvimal.business.site/?m=true https://sites.google.com/site/nsvimalgolden/www-goldenvimal-com Writing by Goldenvimal ♥♥♥♥ இவன் விமல் உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள் தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

👇🌎 Website Link's முக்கிய இணைப்புகள் 🌎👇

Top Post Ad

Below Post Ad