திண்டுக்கல் சுற்றுலாத் தலங்கள் - காணவேண்டியவை

                                  Sri...

 திண்டுக்கல் சுற்றுலாத் தலங்கள் - காணவேண்டியவை

கற்களைத் தலையணையாகக் கொண்ட ஊர் என்ற பொருளில் திண்டுக்கல் என்று பெயர் பெற்று விளங்குகிறது பூட்டுக்கு பெயர் பெற்ற மாவட்டம். மதுரைக்கு அருகில் அமைந்துள்ளதாலும், இயற்கையாகவே பல சுற்றுலா தலங்களை பெற்றிருப்பதாலும் இது மிகவும் அதிக அளவு சுற்றுலாப் பயணிகளை கவரும் மாவட்டமாக உள்ளது. திண்டுக்கல்லில் என்னவெல்லாம் பார்க்கலாம் எங்கெல்லாம் செல்லலாம், திண்டுக்கல்லில் என்னென்ன கிடைக்கும் என்பன உட்பட பல தகவல்களை இந்த சுற்றுலா வழிகாட்டியில் காண்போம்.
பழனி மலை தொடருக்கும் சிறுமலை மலைத்தொடருக்கும் இடையே இந்நகரம் அமைந்துள்ளது மற்றும் விவசாயம் செய்வதற்க்கு ஏற்ற வளமான நிலத்தை பெற்றுள்ளது. திண்டுக்கல் நகரம் பிரியாணி நகரம், பூட்டு நகரம், ஜவுளி மற்றும் தோல்பதனிடும் நகரம் என்ற பல்வேறு பெயர்களில் பிரபலமானது.

                                   

திண்டுக்கல்லில் இருக்கும் சுற்றுலாத் தளங்கள்

300 ஆண்டுகள் பழமையான ரோமன் கத்தோலிக்க தேவாலயம், கிறிஸ்து அரசர் ஆலயம், புனித ஜோஸப் தேவாலயம், பெகாம்பூர் பெரிய பள்ளிவாசல், ஸ்ரீகோட்டை மாரியம்மன் கோவில், காசி விஸ்வநாதன் கோவில், காமாட்சியம்மன் கோவில்,தாடிகொம்பு பெருமாள் கோவில், அபிராமி அம்மன் ஆலயம், குட்லாடம்பட்டி , ஆஞ்சனேயர் ஆலயம் என ஆன்மீகம் புகழும் அழகிய மாவட்டமாக இருக்கிறது இந்த திண்டுக்கல்.

இது மட்டும் இல்லாமல், திண்டுக்கல்லின் இயற்கை வனப்புக்கு எடுத்துக்காட்டாக விளங்கும், இன்னொரு முக்கியமான கண்கவர் பகுதி வைகை, மருதை மற்றும் மஞ்சலாரு நதிகள் சங்கமமாகும் இடமாகும். மலையேறுபவர்கள் இந்நகரில் உள்ள சிறுமலையில் மலையேற்றத்தில் ஈடுபடலாம்.

ஆத்தூர் காமராசர் ஏரி, காமராசர் சாகர் அணை முதலியன திண்டுகல்லை சுற்றி அமைந்துள்ள பிற முக்கிய சுற்றுலா அம்சங்கள்.

கொடைக்கானல் மலை, பழநி மலை, சிறுமலை, திண்டுக்கல் கோட்டை இவை மிக முக்கியமாக கட்டாயம் யாரும் தவறவிடக்கூடாத இடங்களாகும்.

மறக்காமல் பிரியாணியையும் சுவைத்துவிட்டு வாருங்கள்.

எப்படி எப்போது செல்வது

விமான வசதி

திண்டுக்கல்லுக்கு அருகிலேயே மதுரை விமான நிலையம் அமைந்துள்ளது.

தொலைவு - 85 கிமீ
பயண நேரம் - 1.30மணி

ரயில் வசதிகள்
ரயில் வசதிகள் பற்றி மேலும் படிக்க இங்கே க்ளிக்செய்யவும்

திண்டுக்கல்லில் ரயில் நிலையம் உள்ளது.

இணைப்பு - மதுரை, கோவை, சென்னை

சென்னையிலிருந்து மதுரை, திருநெல்வேலி, திருவனந்தபுரம்,கன்னியாகுமரி,தூத்துக்குடி செல்லும் ரயில்கள் திண்டுக்கல் வழியாக செல்கின்றன. இதுதவிர திண்டுக்கல்லுக்கு சிறப்பு ரயில்களும் இயக்கப்படுகின்றன.

மதியம் 1.30 மணிக்கு வைகை விரைவு வண்டியும், அதன்பின் மாலை 5.30மணிக்கு குமரி விரைவு, அடுத்து பொதிகை, நெல்லை,பாண்டியன்,செங்கோட்டை,நாகர்கோவில்,முத்துநகர்,அனந்தபுரி,பழனி,மட்கோவன்,திருச்செந்தூர்என அதிக ரயில் வசதியைக் கொண்டது திண்டுக்கல் மாவட்டம்.

பேருந்து வசதிகள்

சென்னை,கோவை,பெங்களூர்,கன்னியாகுமரிஎன நான்கு திசைகளிலிருந்தும் பேருந்துகள் மூலமாக இணைக்கப்பட்டுள்ளது திண்டுக்கல் மாநகரமும் அந்த மாவட்டமும்.


மாவட்டத்தைப் பற்றி :

தமிழக அரசின் அதிகாரப் பூர்வ தகவலின் படி, திண்டுக்கல் மாவட்டம் 6266 சகிமீ பரப்பளவு கொண்டது.

திண்டுக்கல் மாவட்டம் இரும்பு மற்றும் கற்பாறைகள் அதிகம் கொண்ட பகுதி ஆகும். இதனாலேயே கோட்டைகளும், பூட்டும் இங்கு பிரபலம்

திண்டுக்கல்லிலிருந்து 11 கிமீ தொலைவில் அமைந்திருக்கும் சின்னாளப்பட்டி கைத்தறிக்கு பெயர் பெற்ற கிராமம் ஆகும். கலை அம்சங்கள் நிறைந்த புடவைகள், சுங்குடி புடவைகள் ஆகியன இங்கு சிறப்பாகும்.

வெங்காயம், மற்றும் வேர்க்கடலைக்கு மிகவும் பெயர் பெற்றது திண்டுக்கல். இங்கிருந்து கோவை, ஈரோடு, திருச்சி, கரூர், மதுரை மற்றும் சிவகங்கை ஆகிய மாவட்டங்களுக்கு பரிமாற்றம் நிகழ்கிறது.

இனி ஒவ்வொரு சுற்றுலாத் தளங்கள் குறித்தும் தனித்தனியாக காண்போம்.


திண்டுக்கல் கோட்டை


திண்டுக்கல் மலை திண்டுக்கல்லின் முக்கிய சுற்றுலா அம்சமாகும். திண்டுக்கல்லின் பெயர் இம்மலையில் இருந்தே பெறப்பட்டது.
‘திண்டு' என்றால் தலையணை என்று அர்த்தம், ‘கல்' என்றால் மலை என்று அர்த்தம். இந்த மலையானது

இந்நகரத்தை துருத்தி கொண்டு தலையணை போன்ற வடிவத்தில் காணப்படுவதால் இந்த பெயர் வந்தது.

இந்த மலைகளின் உச்சியில் திண்டுக்கல் கோட்டையானது அமைந்துள்ளது. இந்த மலை உச்சியில் இருந்து திண்டுக்கல் நஙகரை முழுவதுமாக பார்த்து ரசிக்க முடியும்.

இந்த மலை உச்சியில் உள்ள சுத்தமான காற்று உங்கள் சோர்ந்த ஆன்மாவிற்கு ஒரு புத்துணர்வை தரும்.


காேட்டை மாரியம்மன் பற்றி
மேலும் படிக்க இந்த லிங்கை க்ளிக் செய்யவும்
👇👇
https://www.goldenvimal.ml/p/blog-page_1.html?m=0

 
தாடிக்கொம்பு பெருமாள் கோயில் :
Image result for தாடிக்கொம்பு பெருமாள் கோயில்
தாடிக்கொம்பு பெருமாள் கோயில் திண்டுக்கல்லில் இருந்து 5 கி.மீ தொலைவில் திண்டுக்கல் கருர் செல்லும் பாதையில் அமைந்துள்ளது.

தாடிக்கொம்பு பெருமாள் கோயிலின் முக்கிய தெய்வம் அழகர் கடவுள். இந்த கோயிலின் முக்கிய திருவிழா தமிழ் மாதமான சித்திரை மாதத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது. இது ஆங்கில மாதமான ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் வருகிறது.

திருவிழாவின் போது 12 நாட்கள் பூஜையானது நடைபெறுகிறது.


300 வருட பழமை கொண்ட பெகாம்பூர் பெரிய பள்ளி வாசல்
Image result for பெகாம்பூர் பெரிய பள்ளி வாசல்
பெகாம்பூர் பெரிய பள்ளி வாசல் ஹைதர் அலி ஆட்சி காலத்தில் கட்டப்பட்டது. இந்த பழமையான மசூதி 300 வருடங்களுக்கும் முந்தையது.

ராஜா ஹைதர் அலி அவர்களின் இளைய சகோதரி, அம்மீர்-உன்-நிஷா பேகம் இந்த மசூதியின் வளாகத்தில் அடக்கம்செய்யப்பட்டுள்ளார். அவருடைய பெயரால் இந்த மசூதி அன்போடு பெகாம்பூர் என்று திண்டுக்கல் பகுதியில் அழைக்கப்படுகிறது.

அருள்மிகு கோட்டை மாரியம்மன் கோவில்
Image result for பெகாம்பூர் பெரிய பள்ளி வாசல்
அருள்மிகு கோட்டை மாரியம்மன் கோவில் தேவி மாரியம்மனுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

200 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த பழங்கால கோவில் சிலை சிறந்த ஆட்சியாளர் திப்பு சுல்தான் மூலம் நிறுவப்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது.

அருள்மிகு கோட்டை மாரியம்மன் கோவிலில் விநாயகர் சிலைகள், முருகன், மதுரை வீரன், காளி மற்றும் துர்கா சிலைகள் காணப்படுகின்றன.

கோவில் அமைப்பு ஒரு சதுர வடிவத்தில் கட்டப்பட்டுள்ளது. ஒரு அறங்காவலர் குழு இந்த கோவில் நிர்வாகத்தை நடத்துகிறது.

சின்னாளப்பட்டி:
Image result for சின்னாளப்பட்டி
சின்னாளப்பட்டி திண்டுக்கல் பகுதியில் அமைந்துள்ள ஒரு சிறிய அழகிய இயற்கை எழில் கொஞ்சும் நகரம் ஆகும்.

வாடிப்பட்டி மாதா கோயில், ஆத்தூர் காமராஜர் அணை, சிறுமலை மலைதொடர், குத்தாலம்பட்டி நீர் வீழ்ச்சி, அதிசயம் தீம் பார்க் போன்ற பல சுற்றுலா இடங்கள் இதன் அருகாமையில் உள்ளன.

சின்னாளப்பட்டியில் நடத்தப்படும் அழகர் திருவிழா மக்கள் கூட்டத்தை வெகுவாக ஈர்த்து வருகிறது. அதிக அளவில் சுற்றுலாப் பயணிகளும், உள்ளூர் மக்களுடன் இந்த விழாவில் கலந்துகொள்கின்றனர்.


பறவை ஆர்வலர்கள் விரும்பும் ஏரி;
Image result for காமராஜர் ஏரி

காமராஜர் ஏரி மற்றும் காமராஜர் அணை ஆத்தூர் கிராமத்தில் அமைந்திருக்கின்றன.

காமராஜர் ஏரியானது 400 ஏக்கர் பரந்து மேற்கு தொடர்ச்சி மலை நோக்கி அமைந்துள்ளது.

காமராஜர் ஏரி மற்றும் அணையை சுற்றி வாழைத் தோட்டங்கள் , தென்னை மரங்கள், ஏலக்காய் தோட்டங்கள் சூழப்பட்டுள்ளன.
ஆயிரக்கணக்கான பறவை இனங்கள் இந்த பகுதியை வசிப்பிடமாக கொண்டுள்ளதால் பறவை ஆர்வலர்கள் மத்தியில் இந்த இடம் மிக பிரபலமானது.

பழநி மலை;
Image result for palani temple
பழம் நீ அப்பா, ஞானப் பழம் நீ அப்பா எனும் பாடலில் இருந்து பழநி அல்லது பழனி என்ற சொல் உருவானதாக சிலரால் நம்பப்படுகிறது. பழம் மற்றும் நீ எனும் இரு சொற்கள் இணைந்ததே பழனி என்றும் கூறுகிறார்கள். இங்குள்ள தண்டாயுதபாணி கோவில் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.

தைப்பூசம் உள்ளிட்ட விழாக்களின்போது அதிக அளவில் சுற்றுலாப் பயணிகளுடன் முருக பக்தர்களும் இந்த கோவிலுக்கு வருகை தருகிறார்கள்.

பழநி குறித்து மேலும் தெரிந்து கொள்ள ஆசைப் படுகிறீர்களா இதோ இதை சொடுக்குங்கள்.

கொடைக்கானல் மலை;
Image result for கொடைக்கானல் மலை;
திண்டுக்கல் மாவட்டத்தின் அழகிய மேற் கு தொடர் ச்சி மலையில் அமைந்துள்ள ஒரு சிறப்பான சுற்றுலாத் தளம் கொடைக்கானல் மலை ஆகும். இங்கு கோடைக் காலங்களில் அதிக அளவு சுற்றுலாப் பயணிகள் வருகை தருகிறார்கள்.

கோக்கர்ஸ் வாக்,
பியர் ஷோலா நீர்வீழ்ச்சி,
பிரையண்ட் பூங்கா,
கொடைக்கானல் ஏரி,
தற்கொலை முனை,
செண்பகனூர் அருங்காட்சியம்,
கொடைக்கானல் அறிவியல் வானாய்வகம்,
தூண் பாறைகள்,
குணா குகைகள்,
வெள்ளி நீர்வீழ்ச்சி,
டால்பின் நோஸ் பாறை,
குறிஞ்சி ஆண்டவர் கோயில்,
பேரிஜம் ஏரி

போன்ற பல சுற்றுலாத் தலங்கள் கொடைக்கானலின் சுற்றுப்புறத்தில் அமைந்துள்ளன. இவை ஒரு நாள் முழுவதும் நம்மை புத்துணர்ச்சி அடைய வழி வகுக்கும்.


 கிறிஸ்து அரசர் ஆலயம்;
Image result for கிறிஸ்து அரசர் ஆலயம் kadaikkanal

கிறிஸ்து அரசர் ஆலயம் கொடைக்கானலில் கோக்கர்ஸ் வாக்கில் அமைந்துள்ளது. இந்த தேவாலயம் கிரானைட் கற்களால் கட்டப்பட்டுள்ளது. காலனி ஆட்சியில் கட்டப்பட்ட இந்த தேவாலயமானது காலனித்துவ கட்டிட கலையின் தாக்கத்தை அதன் கண்ணாடி ஜன்னல்கள் மற்றும் கலை வேலைப்பாடுகள் மூலம் பிரதிபலிக்கிறது. சுற்றுலாவாசிகள் மத்தியில் இந்த தேவாலயமானது ஒரு முக்கிய இடமாக உள்ளது.

புனித ஜோஸப் தேவாலயம்,
Image result for கிறிஸ்து அரசர் ஆலயம் kadaikkanal
1866ம் ஆண்டிற்கும் 1872ம் ஆண்டிற்கும் இடைப்பட்ட காலத்தில் இந்த தேவாலயம் கட்டப்பட்டது. இந்த 100 வருட பழமையான தேவாலயமானது திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள எல்லா ரோமன் கத்தோலிக்க தேவாலயங்களுக்கும் தலைமையகமாக இருப்பதால் இப்பகுதியின் மிக முக்கியமான வழிபாட்டு தலங்களில் ஒன்றாக திகழ்கிறது

 பெகாம்பூர் பெரிய பள்ளி வாசல்;


Image result for பெகாம்பூர் பெரிய பள்ளி வாசல்      

பெகாம்பூர் பெரிய பள்ளி வாசல் ஹைதர் அலி ஆட்சி காலத்தில் கட்டப்பட்டது. இந்த பழமையான மசூதி 300 வருடங்களுக்கும் முந்தையது. ராஜா ஹைதர் அலி அவர்களின் இளைய சகோதரி, அம்மீர்-உன்-நிஷா பேகம் இந்த மசூதியின் வளாகத்தில் அடக்கம்செய்யப்பட்டுள்ளார். அவருடைய பெயரால் இந்த மசூதி அன்போடு பெகாம்பூர் என்று திண்டுக்கல் பகுதியில் அழைக்கப்படுகிறது.

சிறுமலை;
Image result for sirumalai 

சிறுமலை என்றால் பலர் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ளது என்று நினைத்து கொள்வர். சிறுமலை வனப்பகுதி பெரும்பாலும் திண்டுக்கல் வனத்துறையின் கீழ் இருக்கிறது. அதில் 5000 ஹெக்டேருக்கும் அதிகமான பரப்பளவு மதுரை வனத்துறையின் கீழும் வருகிறது. சிறுமலையை சுற்றி புதூர், பனையூர், சக்கிலிப்பட்டி, அரளக்காடு, தவிட்டுக்கடை, தாழைக்காடு, கடமான்குளம் உள்ளிட்ட மலைகிராமங்கள் உள்ளன. வளர்ந்தோங்கிய மரங்கள், சோலைகள் என பசுமையில் ரம்மியாக காட்சியளிக்கிறது சிறுமலை. சிறுமலையில் முதன்முதலாக 1838 ல் காப்பி பயிரிடப்பட்டது. இதை பயிரிட்ட ஆங்கிலேயர் வில்லியம் எலாய்டு. மலையில் 895 வகையான தாவர வகைகள் உள்ளன என்று நாளிதழ் ஒன்றில் வெளியாகியுள்ளது. சிறுமலை வாழைப்பழத்தின் சுவை புகழ் பெற்றது. மலையின் உயரமான இடம் முள்ளுபன்றி மலை. சிறுமலையில் வெள்ளி மலைக்கோயில் உள்ளது. சிறுமலையின் குறைந்தபட்ச வெப்பநிலை 14 டிகிலி செல்சியஸ், அதிகளவு 30 டிகிரி செல்சியஸ். சிறுமலையிலுள்ள மீன்முட்டிபாறை பகுதியில் உள்ள குகைகளில் ஆதிவாசிகளின் ஓவியங்கள் காணப்படுகின்றன.

காட்டெருமை, செந்நாய், மான், கேளையாடு, கரடி, முள்ளம்பன்றி, நரி, குரங்கு, சாம்பல் அணில், கீரி, பாம்பு, உடும்பு, ஆந்தை, கழுகு, பட்டாம்பூச்சிகள், தனக்கு, உசில், மருத மரம் என பல்லுயிர் பெருகிகிடக்கும் பசுஞ்சோலை சிறுமலைக் காடு. கடல் மட்டத்தில் இருந்து 1600 கி.மீ. உயரத்தில் அமைந்துள்ள சிறுமலையில் இரண்டு ஆறுகள் உற்பத்தியாகிறது. ஒன்று திண்டுக்கல் நோக்கி பாயும் சந்தானவர்த்தினி ஆறு. மற்றொன்று மதுரையை வாழ வைக்கும் சாத்தையாறு. ஆக சிறுமலைகாடு உயிர்ப்போடு இருந்தால்தான் மதுரை மற்றும் திண்டுக்கல் மக்கள் உயிர் வாழ முடியும்.

குட்லாடம்பட்டி;
Image result for குட்லாடம்பட்டி

கண்ணுக்குக் குளிர்ச்சியாய் விரிந்து பரவியுள்ள சிறுமலையின் சரிவில், வழிந்தோடி வரும் தண்ணீர் அருவியாகப் பெருகி, இதமான சூழலைத் தருகின்ற ஓரிடம்தான் இந்தக் குட்லாடம்பட்டி தடாகை நாச்சியம்மன் அருவி.மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே குட்லாடம்பட்டி என்ற மலையோர கிராமத்தில் அமைந்துள்ளது இந்த தடாகை நாச்சியம்மன் அருவி.


அடிவாரத்திலிருந்து அருவிக்குச் செல்லும் படிக்கட்டுகள் மற்றும் பாதை சிதிலமடைந்துவிட்டது. அண்மையில் வனத்துறை ரூ.51 லட்சம் செலவில் செம்மைப்படுத்தி அழகுபடுத்தியுள்ளது.

பட்ஜெட்டுக்கு ஏற்ற சுற்றுலாவை விரும்புகின்ற மக்களுக்கு ஏழைக்கு ஏற்ற எள்ளுருண்டையாக அமைந்ததுதான் குட்லாடம்பட்டி அருவி.

தற்போது குற்றாலம் பக்கமெல்லாம் செல்ல முடியாது. காரணம் அபாயகட்டத்தைத் தாண்டி அருவியில் தண்ணீர் பெருக்கெடுத்துள்ளது.

அதுமட்டுமன்றி, குற்றாலம் செல்வதென்றால் ஆகக்கூடிய செலவில் பாதிக்கும் குறைவாகவே குட்லாடம்பட்டிக்கு ஆகும். ஆகையால் ஒரு நாள் நேரம் ஒதுக்கி, உணவு வகைகளோடு குடும்பம் குட்டிகளோடு சென்று உங்களை புத்தெழுச்சி செய்து கொள்வதற்கு ஏற்ற அருவி.

வாகனத்தில் சென்றால் அதனை நிறுத்துவதற்குக் கட்டணம் ரூ.15. நுழைவுக் கட்டணம் ரூ.10 இதைத் தவிர வேறு எந்த செலவும் இங்கில்லை.

மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து ஏறக்குறைய 30 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. நகரப்பேருந்திலேயே பயணம் செய்யலாம். இங்கிருந்தே குட்லாடம்பட்டி அருவிக்குச் செல்ல நேரடி பேருந்து வசதி உண்டு. ஆனால் அது குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டும்தான்.

ஆனால் வாடிப்பட்டி சென்றுவிட்டால் அங்கிருந்து ஷேர் ஆட்டோக்கள் அடிக்கடி பயணிகளை ஏற்றிக் கொண்டு செல்கின்றன.

அருவியில் குளித்துவிட்டு வெளியே வந்ததும் குட்டியாக ஒரு பரோட்டா கடையும் அங்கிருக்கிறது. வெரைட்டியான உணவுகள் எதுவும் இல்லையென்றாலும் சாதாரண பரோட்டா, தண்ணியாக இருக்கும் சால்னாவை ஊற்றி குழைத்து அடிக்கலாம்.

ரம்யமான வனப்பகுதி... பாதுகாப்பான குளியல்... தொந்தரவில்லாத மகிழ்ச்சி... செலவில்லாத பயணம்...

தமிழகத்தில் குற்றாலம், திற்பரப்பு உள்ளிட்ட பிரபலமான அருவிகள் உள்ளன. இவை தவிர, குறிப்பிட்ட ஒரு சீசனில் மட்டும் நீர் கொட்டும் அருவிகள் அதிகம்.மேற்குத் தொடர்ச்சி மலைகள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் உள்ள மலைகளிலும் இவ்வாறான அருவிகள் காணப்படுகின்றன. இவற்றில் பல அருவிகள் சுற்றுலா தலங்களாக அறிவிக்கப்படவில்லை. இந்த வகையில், மதுரை மாவட்டம், வாடிப்பட்டியை அடுத்த குட்லாடம்பட்டியில் அவ்வப்போது கொட்டும் தடாதகை நாச்சியம்மன் அருவி அப்பகுதியில் பிரபலம். சிறுமலையில் மழை பெய்யும் காலங்களில், இந்த அருவியில் தண்ணீர் கொட்டும்.
இதுபோன்ற நேரங்களில் சுற்றுலா பயணிகள் ஏராளமான அளவில் இங்கு குவிகின்றனர். சமீபத்திய மழை காரணமாக தற்போது குட்லாடம்பட்டி அருவியில் நீர் கொட்டுகிறது                                  https://youtu.be/Krq-R6vTzuo


மேலும் தகவல்களுக்கு ; Please click 👇 

https://goldenvimal.business.site/?m=true 

https://sites.google.com/site/nsvimalgolden/www-goldenvimal-com **என்றும்  அன்புடன்  விமல் ** 98651-38410  ** 82203-03410 ** திண்டுக்கல் ** Goldenvimal ** www.goldenvimal.ml ** குருசாமி பிள்ளை சந்து ** திண்டுக்கல் ** இதுபாேன்ற இணையதளம் உங்களுக்கு உருவாக்க அனுகவும் 98651-38410 ** Writing by Goldenvimal ♥♥♥♥ இவன் விமல் உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள் தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
                            தாெடரும்,,,

👇🌎 Website Link's முக்கிய இணைப்புகள் 🌎👇

Top Post Ad

Below Post Ad