காதலர் தின ஸ்பெசல் 2019

                                   Sri...
காதலர் தின ஸ்பெசல்- என்ன கலர் ட்ரெஸ் போட்டா என்ன அர்த்தம் தெரியுமா?

காதலர்கள் கொண்டாடும் திருவிழா. காதல் சம்பந்தமான ஒவ்வொரு நிகழ்வும் அரங்கேறும் சுவாரஸ்யமான  நாள். லவ் ப்ரப்போஸ் பண்ண உகந்த காதல் முகூர்த்த நாள்னு கூட சொல்லலாம். மத்த நாள்ல 10 மணிக்கு எழுற பையன், அன்னிக்கி மட்டும் அதிகாலை அஞ்சு மணிக்கே எழுந்தானா  "இவனும்  பாதிக்கப்பட்டிருக்கான்" னு அர்த்தம். அட!  காதல்ல சொன்னேங்க...
இப்ப நம்ம சப்ஜெக்ட் என்னனா,  மற்ற நாட்கள்ல கலர்கலரா சட்டை போட்டுட்டு போனா கண்டுக்கவே மாட்டாங்க நம்ம அருமை நண்பர்கள். இந்த  காதலர்  தினத்துக்கு  மட்டும்  நிம்மதியா  ஒரு சட்டைய போட்டு  வெளியப் போக முடியாது நம்மால. ஒவ்வொரு சட்டைக்கும்  காதலர் தினத்தன்னைக்கு மட்டும் புதுசா காரணம் கண்டுபிடுச்சு ரிவிட் அடிப்பாங்க பாருங்க.

ஏன்னா இந்த காதலர் தினத்திலதாங்க உடைகளின் வண்ணங்களே இளைஞர்களோட எண்ணங்களை பிரதிபலிக்கிற விதமா இருக்கும். ஒவ்வொரு உடைக்குள்ளும் ஒளிந்திருந்திருக்கும் தத்துவத்தை பாருங்க. ஒவ்வொரு உடை அணிவதற்கும் ஒவ்வொரு காரணம் உள்ளதாம். என்னமா கண்டுபிடிக்கிறாங்க...?  அதையும்தா பாத்துடுவோமே....

பச்சை நிற உடை- எனக்கு விருப்பம் உங்களுக்காகக் காத்திருக்கிறேன்

ரோஸ் நிற உடை- இப்பதான் காதலை ஏற்றேன்

நீல நிற உடை- இன்னும் தனியாகத்தான் இருக்கிறேன்

மஞ்சள் நிற உடை- காதல் தோல்வியடைந்தேன்

கறுப்பு நிற உடை – காதல் நிராகரிக்கப்பட்டது

ஆரஞ்சு நிற உடை- நிச்சயதார்த்தம் செய்ய ரெடி

சிவப்பு நிற உடை- என்னை விட்டுவிடுங்கள்

கிரே கலர் உடை-  காதலில் இன்ரெஸ்ட் இல்லை

வெள்ளை நிற உடை-  ஏற்கனவே காதலிக்கிறேன்

பச்சை நிற உடை அணிந்தவர்களின் குணம்:

பச்சை வண்ண உடையை விரும்புபவர்களிடம் எளிதில் மனதில் என்ன உள்ளது என்பதை அறிய இயலாது. இவர்கள் அதிகம் பேச மாட்டார்கள். காதலை வெளிப்படையாக கூறமாட்டார்கள், காதல் உணர்வுகளை வெளிப்படுத்த மாட்டார்கள். ஆனால் இதிலிருந்து பெண்கள் வேறுபடுவார்கள். இவர்களுக்கு காதல் உணர்வுகள் அதிகமானதாக இருக்கும். காலம் முழுக்க காதலித்துக் கொண்டு இருக்கவேண்டும் என நினைப்பர்.

ரோஸ் நிறம்:

ரோஸ் நிறத்தை விரும்புபவர்கள் காதல் கனவுகள் நிறைய காண்பவராக இருப்பார்கள். தினமும் சிலரிடமிருந்து காதல் அழைப்பு வந்துகொண்டே இருக்கும். காதலை அனுபவித்து உணர்வார்கள்.

நீல நிற உடை:

இவர்களின் காதல் ஆராய்ந்து தெளிந்து எடுக்கப்பட்டதாக இருக்கும். காதல் ரசம் சொட்டச் சொட்ட அனுபவிப்பவர்களாக இருப்பார்கள். ஒரு முடிவு எடுத்தால் அதிலிருந்து மீளமாட்டார்கள். இவர்கள் காதல் செய்வது அரிது. காதலித்ததால் காதலுக்காக உயிரையே கொடுக்கக் கூடிய அரிய வகையினர்.

மஞ்சள் நிற உடை:

இவர்களின் காதல் அளவுக்கு அதிகமாக இருக்கும். காதலிக்கும்போதே தன் துணை இப்படி இருக்க வேண்டும் என மனக்கோட்டை கட்டி விடுவர். இவர்களுக்கு துணை கிடைப்பது அரிது. இருந்தாலும் அது பொய்யான அன்பாகவே இருக்கும். தன் மனைவியை காதலித்து மகிழ்வர்.

 கருப்பு நிறம்:

இவர்கள் இயல்பாகவே அமைதியாக இருப்பார்கள். எளிதில் அனைவரையும் பேச்சின் மூலம் கவர்ந்துவிடுவர். இருந்தாலும் காதல் என்று வரும்போது காரணமில்லாமல் இவர்களின் காதல் நிராகரிக்கப்படும். மனஅழுத்தம் அதிகம் உண்டு. இறுக்கமான முகத்துடன் காணப்படுவதால் இவர்கள் ரொமான்ஸ் பக்கமே செல்லமாட்டார்கள்.

ஆரஞ்சு நிற உடை:

இவர்கள் இயற்கையிலேயே கூச்ச சுபாவம் உடையவர்களாக இருப்பார்கள். எளிதில் எதையும் நம்பிவிடுவார்கள். காதலித்த சில மாதங்களிலேயே நிச்சயதார்த்தத்துக்கு ரெடியாகிவிடுவார்கள். இவர்கள் நிச்சயாதார்த்தம் செய்த பெண்ணிடம் தன் மனதில் உள்ளவற்றை கூறிவிடுவர். பெண்கள் இதற்கு நேர்மாறாக தைரியமாக இருப்பர். எதையும் ஆழ்ந்து யோசித்து முடிவெடுப்பர்.

கிரே கலர்-காதலை விரும்பாதவர்கள் :

இவர்களின் மனநிலை எப்போதும் காதலை பற்றி யோசிக்காது. காதலுக்கு எதிராகவே பேசிக்கொண்டு இருப்பர். காதலிப்பவர்களை தூற்றிக்கொண்டே இருப்பர். திருமணமான பின் மனைவியை காதலிப்பர்.

 சிவப்பு நிற உடை:

இவர்கள் தீவிர பக்தி பழமாக இருப்பர், எந்நேரமும் கோயிலை சுற்றி வருவர். இவர்களிடம் காதல் விருப்பம் தெரிவித்தாலும் தத்துவ மழை பொழிந்து நிராகரித்து விடுவர். இவர்களை சாமியார்கள் எனலாம்.

வெள்ளை நிற உடை:

இவர்கள் ஆசைப்பட்டதை அடையாமல் விட மாட்டார்கள். வெள்ளை நிறம் பிடிப்பவர்கள் அனைவருக்கும் பிடித்தவர்களாக இருப்பார்கள். பரந்த மனதுடன் உதவுவார். காதலை நன்கு ஆழ்ந்து ரசிப்பார். ஆனால் தப்பித்தவறி மட்டும் காவிச்சட்டை பக்கத்தில போய்டாதீங்க அம்புட்டுதான்.

அப்புறமென்ன உங்களுக்கு பிடிச்ச கலர் சட்டையை போட்டுகிட்டு கிளம்பவேண்டியதுதானே....

காதலர் தினம் தோன்றிய வரலாறு....

ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் வந்ததுமே நினைவுக்கு வருவது காதலர் தினம் தான். காதலிக்கும் இளைஞர்கள் காதலர் தினத்தன்று தான் தங்களது காதலை தெரிவிக்க வேண்டும் என்று விரும்புவார்கள். ரோமானிய அரசனின் ஆட்சிக்காலத்தில் தான் காதலர் தின கொண்டாட்டம் துவங்கியதற்கான சான்றுகள் இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

கிளாடியுஸ் மிமி ஆட்சிக் காலத்தில் ரோமாபுரி நாட்டில் இனி யாரும் திருமணம் செய்து கொள்ளக்கூடாது எனவும், ஏற்கனவே நிச்சயிக்கபட்ட திருமணங்களை ரத்து செய்ய வேண்டும் எனவும் ஒரு அதிரடி உத்தரவை விட்டுள்ளார். இந்நிலையில் அந்நாட்டு பாதிரியார் வாலண்டைன் அரசனின் அறிவிப்பை மீறி இரகசியமாக அனைவரும் திருமணங்களை நடத்தி வைத்தான்.

முதல் காதல் மடல்:இதனையறிந்த மன்னன் வால்ண்டைனை கைது செய்த்ததோடு, மரணதண்டனையை நிறைவேற்ற நாளும் நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், இதற்கிடையில் சிறைக்காவலரின் பார்வை இழந்த மகள் அஸ்டோரியசுக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளது. ஆனால், சிறைக்காவலருக்கு இது தெரியவர அஸ்டோரியசை வீட்டு காவலில் வைத்தான். அப்போது தான் வாலண்டைன் அஸ்டோரியசுக்கு தனது முதல் காதல் வாழ்த்து அட்டை மூலம் செய்தி அனுப்பினார்.

இதே நேரத்தில் தான் வாலண்டைன் கல்லால் அடிக்கப்பட்டு சித்தரவதை
செய்த நிலையில் தலை துண்டிக்கப்பட்டு நிலையில் கொல்லப்பட்டார். அந்தநாள் கி.பி.270, பிப்ரவரி 14ம் நாள். இந்த நாளை வாலண்டைன் தினம் காதலர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.,,
மேலும் தகவல்களுக்கு ; Please click 👇 

https://goldenvimal.business.site/?m=true 

https://sites.google.com/site/nsvimalgolden/www-goldenvimal-com **என்றும்  அன்புடன்  விமல் ** 98651-38410  ** 82203-03410 ** திண்டுக்கல் ** Goldenvimal ** www.goldenvimal.ml ** குருசாமி பிள்ளை சந்து ** திண்டுக்கல் ** இதுபாேன்ற இணையதளம் உங்களுக்கு உருவாக்க அனுகவும் 98651-38410 ** Writing by Goldenvimal ♥♥♥♥ இவன் விமல் உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள் தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
                            தாெடரும்,,,

👇🌎 Website Link's முக்கிய இணைப்புகள் 🌎👇

Top Post Ad

Below Post Ad