பருத்திப்பால் செய்முறை!*

*பருத்திப்பால் செய்முறை!*

தேவையான பொருட்கள்

ப‌ருத்திக் கொட்டை -‍ 100 கிராம்
ப‌ச்ச‌ரிசி – 3 டேபிள்ஸ்பூன்
வெல்ல‌ம் -‍‍‍‍‍ 300 கிராம்
சுக்கு – ‍சிறிது அள‌வு
தேங்காய் துருவ‌ல் -‍ தேவையான‌ அள‌வு

செய்முறை
ப‌ருத்திக் கொட்டையை ந‌ன்கு ஊற‌வைத்து மிக்சியில் மீண்டும் மீண்டும் அரைத்து பால் எடுத்துக் கொள்ள‌வும். ப‌ச்ச‌ரிசியை சிறிது நேர‌ம் ஊற‌வைத்து மிக்சியில் அரைத்து கொள்ள‌வும். அரைத்த‌ ப‌ச்ச‌ரிசி மாவை ப‌ருத்தி பாலுட‌ன் க‌ல‌ந்து அடுப்பில் ஏற்றி கிள‌றிக் கொண்டே இருக்க‌வும்.பால் க‌ல‌வை சிறிது கெட்டியாக‌ பொங்கி வ‌ரும் போது வெல்ல‌ம் க‌ல‌ந்து கிள‌றிக் கொண்டே இருக்க‌வும். வெல்லத்திற்கு பதிலாக கருப்பட்டியும் சேர்க்கலாம். வெல்ல‌ம் முழுதும் க‌ரைந்த‌வுட‌ன் சுக்கு, தேங்காய் துருவ‌ல் சேர்த்து கிள‌றி சிறிது நேர‌ம் க‌ழித்து இற‌க்க‌வும். சூடான‌ சுவையான‌ ப‌ருத்திப் பால் த‌யார்.பருத்திப் பால்ல B காம்ப்ளக்ஸ் சத்து இருக்குங்க. பசி உணர்வை கட்டுப்படுத்தும். நெஞ்சு சளியை குறைக்கும். அதிகமா மூட்டை தூக்கறவங்களுக்கு நெஞ்சில ஒரு வலி வரும் பாருங்க, அந்த நெஞ்சுவலியை கட்டுப்படுத்தும். உடலுக்கு குளிர்ச்சி தருவதுடன் என்றும் உடலை இளமையாக வைத்திருக்க உதவுகிறது.
Writing by Goldenvimal ♥♥♥♥♥ இவன் விமல் உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள் தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்

👇🌎 Website Link's முக்கிய இணைப்புகள் 🌎👇

Top Post Ad

Below Post Ad