சர்க்கரை நோயாளிகளும் பழங்கள் சாப்பிடலாம்

சர்க்கரை நோயாளிகளும்
பயமில்லாமல் பழங்கள் சாப்பிடலாம்.

எல்லாப்பழங்களையும் அல்ல. க்ளுகோஸ் அளவை அதிகரிக்காத நல்ல பழங்களைத்தான் அவர்கள் சாப்பிடலாம்.
சர்வதேச சர்க்கரைநோய் தினமான நவம்பர்14 அன்று சர்க்கரைநோயாளிகளுக்கான சிறப்புக்கட்டுரையை தொடர்ந்து வாசியுங்கள்.


மாதுளை:ரத்தத்தை சுத்திகரிப்பதில் இப்பழம் முக்கியப்பங்கு வகிக்கிறது. ரத்தத்தின் மோசமான கொழுப்புகளை கரைக்க உதவுகிறது. ரத்தம் உற்பத்தியாவதை ஊக்குவிக்கும்பழமாகவும் உள்ளது. இதிலுள்ள ஆண்டிஆக்சிடண்ட்கள் சர்க்கரை நோயாளிகளை தொந்தரவு செய்வதில்லை.


ஆப்பிள்: ஆயுள்வளர்க்கும் கனி இது. இப்பழத்தில் உள்ள பெக்டின் என்ற வேதிப்பொருள் ரத்தத்தில் சர்க்கரை சத்தை வெகுவாக குறைக்கிறது. இப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டுவந்தால் இன்சுலின் சாப்பிடும்அளவை பாதியாக குறைக்கலாம். நார்ச்சத்து நிறைந்தது இப்பழம். ரத்தத்தில் குறைந்தளவு சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு இப்பழம் நல்லது.

பெர்ரி: குளுகோஸை சக்தியாக மாற்றும் திறனுடைய பழம் இதுவாகும். இதனை தொடர்ந்து எடுத்துக்கொள்வதால் சர்க்கரை அளவு நன்கு குறையும். மேலும், இன்சுலின் சுரப்பையும் இப்பழம் ஊக்குவிக்கிறது.


கொய்யா:செரிமானத்துக்கேற்ற நார்ச்சத்தை கொண்டுள்ளது. இதனால் மலச்சிக்கல் ஏற்படுவது தவிர்க்கப்படுகிறது. சர்க்கரை நோயாளிகள் பொதுவாக மலச்சிக்கலால் பாதிக்கப்படுவர். இப்பழங்களில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி சத்துக்கள் உள்ளன. டைப்-2சர்க்கரை நோய் ஏற்படுவதை இப்பழங்களை சாப்பிட்டு தடுக்கமுடியும்.


பப்பாளி:பலநோய்களுக்கு காரணமான நோயாக சர்க்கரை நோய் விளங்குகிறது. ரத்தத்தில் சர்க்கரை அளவு மாற்றத்தால் இருதயம், கல்லீரல் போன்ற உறுப்புகள், நரம்பு பலகீனமும் ஏற்படுகிறது. இப்பழங்கள் சாப்பிடுவதால் வளர்சிதை மாற்றம் சீர்படுத்தப்படுகிறது.

நாவல்பழம்:சர்க்கரை நோயாளிகள் மருந்தாகவே சாப்பிடவேண்டிய பழம் இது. அடிக்கடி சிறுநீர் கழிப்பது, தாகம் போன்ற சர்க்கரை நோயாளிகளின் பிரச்சனைகளை தீர்க்கும். ஸ்டார்ச்சை சக்தியாக மாற்றும் பணியை சிறப்பாக இப்பழம் செய்கிறது.

ஆரஞ்சு, நெல்லிக்காய் ஆகியவற்றையும் சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாம். இதனால் அவர்கள் கல்லீரல் தூண்டப்படுகிறது. சர்க்கரை அளவும் கட்டுக்குள் வைக்க உதவுகிறது.மேலும் தகவல்களுக்கு ; Please click 👇 https://goldenvimal.business.site/?m=true https://sites.google.com/site/nsvimalgolden/www-goldenvimal-com Writing by Goldenvimal ♥♥♥♥ இவன் விமல் உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள் தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

👇🌎 Website Link's முக்கிய இணைப்புகள் 🌎👇

Top Post Ad

Below Post Ad