இந்திய தேசியக் காெடியின் வரலாறு

 இந்திய தேசியக் காெடியின் வரலாறு


20ம் நூற்றாண்டின் தொடக்கத்தில்,ஆங்கிலேயர்களிடம் இருந்து சுதந்திரம் பெறுவதற்கான இந்திய சுதந்திர போராட்டத்தில்,மக்களின் போராட்ட ஆளுமையை தகுந்தவாறு ஒருமைப்படுத்தஒரு கொடி
தேவைப்பட்டது. 1904ஆம் ஆண்டுசுவாமி விவேகானந்தரைக் குருவாக கொண்ட நிவேதிதா அவர்கள் முதன்முதலாகஒரு கொடியை உருவாக்கினார். அதுவே பின்னர் நிவேதிதாவின் கொடி என கூற்று கொண்டது.
                       
கோல்கத்தாவில் பார்சி பாகன் சதுக்கத்தில் 1906 ம் ஆண்டு ஓர் இந்தியக்கொடி ஏற்றபட்டது. அது சிவப்புபச்சைமஞ்சள் என்று கிடைமட்டமாக அமைந்துபச்சை நிறம் மேலிலும்இளஞ்சிவப்பு நடுவிலும்சிவப்பு அடியிலும் கொண்டது. பச்சை நிறம் இசுலாமியத்தை குறிப்பதாகவும்,இளஞ்சிவப்பு நிறம் இந்துத்துவத்தையும் புத்த மதத்தையும் குறிப்பதாகவும் அமைந்தன. அக்கொடிபச்சை பாகத்தில் பட்டைகளில் வெண்தாமரை மலர்கள்வந்தேமாதரம் என்ற வார்த்தைகள்கதிர்வீசும் ஆதவன்,பிறைசந்திரன்நட்சத்திரங்கள் என்று அந்தக்கொடி ஆங்கிலேயரின் கீழ் இருந்த எட்டு மாகாணங்களை குறிக்கும் வகையில்,வரிசையாக எட்டு தாமரைகளை கொண்டது. நடுபாகத்தில்தேவனகிரி எழுத்துருவில்வந்தே மாதரம் என்ற வார்த்தைகள் எழுதப் பட்டது. அடி பாகத்தின் கொடிக் கம்பத்திற்கு அருகில் உள்ள மூலையில்ஒரு பிறைநிலாவையும்இன்னொரு மூலையில் சூரியனையும் கொண்டது.
பின்னர், 1907 ல் அந்தக் கொடியில் சில மாற்றங்கள் செய்யப்பட்டது. 8வெண்தாமரைகளுக்குப் பதிலாகவானில் ஒளிவீசும் 7 நட்சத்திரங்கள் உருவாக்கப்பட்டு,அந்தக் கொடி பிக்காய்ஜிரஸ் டோம்ஜிகமா அம்மையாரும்அவரது கூட்டாளிகளும் பாரிஸ் நகரில் 1907 ம் ஆண்டு இந்தக்கொடியை ஏற்றி மகிழ்ந்தனர்.
1917 ம் ஆண்டு மீண்டும் தேசிய கொடி 3ம் முறையாக மாற்றப்பட்டது. இதை டாக்டர் அன்னிபெசன்ட் அம்மையாரும்,பாலகங்காதரதிலகரும் சிவப்புநிற பட்டை (5)பச்சைநிற பட்டை (4 ), அடுத்தடுத்து அமைந்த இந்தகொடியின் மேற்பகுதி இடது புறம் சிறிதளவு யூனியன் ஜாக்கும்வலது புறம் பிறைச்சந்திரன் கூடிய நட்சத்திரமும்நடுவில் சில நட்சத்திரங்களும் சித்தரிக்கப்பட்டிருந்தன. இக்கொடி மக்கள் மத்தியில் பெரிதும் வரவேற்பைப் பெறவில்லை.
பின்னர் 1921 ம் ஆண்டு விஜயவாடாவில் இந்திய தேசிய காங்கிரஸ் கமிட்டி கூட்டம் நடந்தபோது,பிங்கிலி வெங்கையா என்ற இளைஞர் இந்து,முஸ்லீம் ஒற்றுமையை வலியுறுத்தி காவிபச்சை நிறங்களில் ஒரு கொடியை வடிவமைத்து காந்தியிடம் கொடுத்தார். இந்தக்கொடி அனைத்து காங்கிரஸ் கூட்டங்களிலும் பறக்கவிடப்பட்டது.
ஆயினும் பெரும்பாலானோர்வெவ்வேறு மதங்களை உணர்த்துமாறு கொண்ட பொருளை விரும்பவில்லை. 1924ஆம் ஆண்டு கொல்கத்தாவில் குழுமிய அனைத்திந்திய சமசுகிருத குழுமம்இந்துக்களின் கடவுளான விஷ்ணுவின் கதத்தை உணர்த்தும் வகையில் காவி நிறத்தை கொடியில் சேர்க்குமாறு வலியுறுத்தியது. பின்னர்அதே வருடம்மற்ற மதத்தினரும் தத்தம் மதத்தை குறிக்க வெவ்வேறு மாற்றங்களை வலியுறுத்தினர்.
இதனை தொடர்ந்து, 2 ஏப்ரல் 1931ல் காங்கிரசு ஆட்சிக் குழுஅமைத்த ஏழு நபர்கள் அடங்கிய ஒரு கொடிக் குழுமூன்று வர்ணங்களும் மத உணர்வுகளை தூண்டும் வகையில் அமைந்துள்ளன என்றும்அதற்கு பதிலாகஒரே வர்ணமாககாவி நிறமும் அதில் சக்கரமும் இருக்குமாறு மாற்றியமைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியது. ஆனால் இந்திய தேசிய காங்கிரசு அதனை ஏற்கவில்லை.
பின்னர், 1931 கராச்சியில் கூடிய காங்கிரசு குழு,பிங்கலி வெங்கய்யா வடிவமைத்தகாவி,வெள்ளைபச்சை வர்ணங்களுடன் நடுவில் சக்கரத்தை கொண்ட கொடியை ஏற்றது. அதிலமைந்த வர்ணங்கள் பின்வருமாறுகாவி நிறம் தைரியத்திற்கெனவும்வெள்ளை நிறம் சத்தியம் மற்றும் அமைதிக்கெனவும்பச்சை நிறம் நம்பிக்கை மற்றும் செம்மைக்கெனவும் பொருளுணரப் பட்டன.

அதே சமயம்ஆசாத் ஹிந்த் என்ற எழுத்துகள் பொறிக்கப்பட்டசக்கரத்திற்கு பதிலாக தாவும் புலியை நடுவில் கொண்ட ஒரு கொடியை இந்திய தேசிய படை பயன்படுத்தியது. சக்கரத்திற்குப் பதிலாக அமைந்த புலியின் உருவம்மகாத்மா காந்தியின் அகிம்சை வழிகளுக்கு நேர் எதிர் மாறான சுபாசு சந்திரபோசின் வழிகளை உணர்த்துவதாக அமைந்தது.. இரண்டாம் உலகப் போரின்போதுசுபாஸ் சந்திர போஸின் இந்திய தேசியப் படை பயன்படுத்திய இந்தக் கொடி தேசியக் கொடியாக இல்லாவிடிலும் முதல் முதலாக மணிப்பூரில்சுபாசு சந்திர போசு அவர்களால் கொடியேற்றப்பட்டது.
விடுதலைக்குச் சில நாட்களுக்கு முன்னர்ஒரு சிறப்புக் குழுமம்சில மாறுதல்களுக்கு உட்படுத்தப்பட்ட இந்திய தேசிய காங்கிரசின் மூவண்ணக் கொடியை இந்தியர்கள் அனைத்து சமூகத்தினரும் ஏற்கும் வகையில்இந்திய தேசியக் கொடியாக ஏற்றது. முன்னிருந்த சக்கரத்திற்கு பதிலாகஅசோக சக்கரம் இக்கொடியில் பயன்பாட்டுக்கு வந்தது.
அடர் காவிஅடர் பச்சைமத்தியில் தூய வெண்மை ஆகிய மூன்று நிறங்களும்,மத்தியிலுள்ள வெண்பட்டையில் கடல்நீல வண்ணத்தில் 24அரும்புக் கால்களும் கொண்ட ஓர் அசோகச் சக்கரமும் கொண்டு வரையறுக்கபட்ட நீள அகலத்தில் கொடி உருவாக்கப்பட்டது.

இதை 22 - 07 - 1947 ல் இந்திய அரசியல் நிர்ணய சபைகூடிய போது இந்திய தேசியக் கொடியாக அறிவித்துஅதன்பின்முதன்முதலில் டில்லி செங்கோட்டையில் அதிகாரபூர்வமாக 1947 ம் ஆண்டு ஆகஸ்ட் 15 ம் தேதி ஏற்றப்பட்டது.
இந்தியா குடியரசு நாடாகிய பிறகு, 1951-ல் [இந்திய தரக்கட்டுப்பாட்டுத்துறை]யால் தேசியக்கொடிக்கு முதன்முதலாக அளவுமுறை நிர்ணயிக்கப்பட்டது. இவ்வளவு முறை சர்வதேச அளவுமுறைக்கு ஏற்ப மெட்ரிக் அளவுமுறையாக 1964-ல் மாற்றப்பட்டது. பின்னர் ஆகஸ்ட் 17, 1968 இல் இவ்வளவு முறை மேம்படுத்தப்பட்டது. இவ்வளவு முறை கொடியின் நீளஅகலம்நிறங்களின் அளவு (அடர்த்தி,பளபளப்பு)துணியின் தரம் மற்றும் கொடிக்கயிற்றின் தரத்தைப் பற்றியும் விவரிக்கின்றது. கொடித்தயாரிப்பில் இவ்விகிதாச்சாரங்களை மீறுவது மிகப்பெரிய குற்றமாக கருதப்பட்டு அபராதம் அல்லது சிறைவாசமோ அல்லது இரண்டும் தண்டனையாக வழங்கப்படுகிறது.
கொடித்துணிகாதி என்கிற கைத்தறித் துணியில் மட்டுமே இருக்கவேண்டும். பருத்திபட்டு மற்றும் ஆட்டு உரோமம்(உல்லன்) இவற்றில் ஒன்றால் நெய்யப்பட்ட கைத்தறித்துணியாகத்தான் இருக்கவேண்டும். கொடியின் முக்கிய மூவர்ண பாகம் காதி-பண்டிங் என்கிற நெசவாலும்பழுப்பு நிற கம்பத்தில் இணைக்கும் பாகம் காதி-டக் என்கிற நெசவுஆகிய இரு வகை கைத்தறித்துணியால் உருவாக்கப்படுகிறது.


மேலும் தகவல்களுக்கு 👇 Please click 👇 http://vimaljewelswork.business.site https://sites.google.com/site/nsvimalgolden/www-goldenvimal-com Writing by Goldenvimal ♥♥♥♥ இவன் விமல் உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள் தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்

👇🌎 Website Link's முக்கிய இணைப்புகள் 🌎👇

Top Post Ad

Below Post Ad