தங்கம் பற்றிய சில தகவல் thanks to wikipedia

தங்கம் அல்லது பொன் (Gold) என்பது மஞ்சள் நிறமுள்ள வார்ப்பதற்கு எளிதான ஓர் உலோகமாகும். தங்கம் Au என்ற குறியீட்டினால் குறிக்கப்படுகிறது. இதன் அணு எண் 79. இதன் சாரடர்த்தி 19.3 ஆகும். அதாவது நீரைப்போல் ஏறத்தாழ 19 மடங்கு எடையுள்ளது. இது மென்மையான ஆபரணங்கள் செய்வதற்கும் முற்காலத்தில் நாணயமாகவும்பயன்படுத்தப்பட்டு வந்தது. இது வெப்பத்தை நன்கு கடத்த வல்லது.

பொருளடக்கம்

தங்கத்தின் தன்மைதொகுதங்கத்தை மிக மெல்லிய தகடாக அடிக்கலாம்; கம்பியாக நீட்டலாம்;[1] வெப்பத்தையும் மின்சாரத்தையும் நன்கு கடத்தும்; காற்றில் இதன் நிறம் மங்குவதில்லை. இதில் துருப் பிடிக்காது. எனவே, எப்போதும் பளபளப்பாகவே இருக்கும். ஒருபங்கு நைத்திரிக் அமிலமும் மூன்று பங்கு ஐதரோகுளோரிக் அமிலமும்சேர்ந்த இராஜ திரவம் என்ற கலவையில் மட்டுமே தங்கம் கரையும்.[2] தங்கம் சிவப்பு, மஞ்சள் ஆகிய நிறங்களை வெகுவாகத் தெறிக்கவிடும் தன்மையைக் கொண்டுள்ளது.[3] அத்துடன் இது செங்கீழ்க்கதிர்களைத் தெறிக்கவிடும் ஆற்றலையும் கொண்டுள்ளது. இத்த்ன்மையின் காரணமாக வெப்பத் தடுப்பு உடைகள், சூரியக் கண்ணாடிகள், விண்வெளி உடைகளில் இது பயன்படுத்தப்படுகின்றது.[4]

நச்சுத்தன்மைதொகு

தூய தங்கம் நச்சுத்தன்மை அற்றதாகும். ஆதலாலேயே தங்கம் தங்க இலை போன்ற உணவுகளில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.[5] and is sometimes used as a food decoration in the form of gold leaf.[6]அதுமட்டுமன்றி கோல்ட்ச்லாஜர்., கோல்ட் ஸ்ரைக், கோல்ட் வாஜர் போன்ற மதுசாரங்களிலும் உலோக நிலைத் தங்கம் பயன்படுகின்றது.அத்தோடு, உலோகத் தங்கம் உணவு சேர்பொருளாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது. எனினும் தங்கத்தின் அயன் நச்சுத்தன்மை கொண்டதாகும். தங்க உப்புகள் மற்றும் தங்கக் குளோரைட் ஆகியவையும் ஈரலுக்கும், சிறுநீரகத்துக்கும் ஆபத்தை ஏற்படுத்தக்கூடியவை ஆகும்.

தங்கத்தின் மதிப்புதொகு

தங்கமானது வரலாற்று ரீதியாக அரிய உலோகமாகவே கருதப்பட்டு வந்தது.[7] தங்கத்தின் காரட் என்ற அலகால் மதிப்பிடப்படுகிறது. 24 காரட் என்பது சுத்தத் தங்கமாகும். இதில் ஆபரணங்கள் செய்ய முடியாது. 22 காரட் முதல் 9 காரட் வரை தங்க நகைகள் செய்யப்படுகின்றன. 22காரட் தங்கம் என்பது 91.6 சதவீதம் தங்கமும் 8.4 சதவீதம் செம்பு, வெள்ளி போன்ற மற்ற உலோகமும் கலந்ததாகும். 18 காரட் என்பது 75சதவீதம் தங்கமும், 14 காரட் என்பது 58.5 சதம் தங்கமும், 9 காரட் என்பது 37.5 சதவீதம் தங்கமும் கலந்ததாகும். சேர்க்கப்படும் உலோகங்களுக்கேற்ப தஙத்தின் மதிப்பு கிடைக்கிறது. 22 காரட்டில் செய்யும் தங்க நகைகள் எளிதில் சேதம் அடையக்கூடியவை. காரட் குறையக் குறைய தங்க நகைகளின் தன்மை கெட்டியாகவும் உறுதியுடனும் இருக்கும். 2015 ஆம் ஆண்டளவில் நிலத்தின் கீழ் 186,700 தொன் எடையான தங்கம் காணப்படுகின்றது.[8] ஐக்கிய அமெரிக்காவில் 2001 ஆம் ஆண்டில் "இவ்வருடத்தின் ஒவ்வாமையை ஏற்படுத்துவான்" எனும் தேர்தலில் தங்கமானது அதிக வாக்குகள் பெற்றது.[9] தூய தங்கம் பெண்களையே அதிகம் ஒவ்வாமையால் பாதித்தது. எனினும் நிக்கல் போன்றவற்றுடன் கலந்து செய்யும் தங்கம் பாதிப்பினை ஏற்படுத்தவில்லை. [10]


தங்கம் காரட் என்ற அலகால் மதிப்பிடப்படுகிறது. 24 காரட் என்பது சுத்தத் தங்கமாகும். இதில் ஆபரணங்கள் செய்ய முடியாது. 22 காரட் முதல் 9 காரட் வரை தங்க நகைகள் செய்யப்படுகின்றன. 22காரட் தங்கம் என்பது 91.6 சதவீதம் தங்கமும் 8.4 சதவீதம் செம்பு, வெள்ளி போன்ற மற்ற உலோகமும் கலந்ததாகும். 18 காரட் என்பது 75 சதவீதம் தங்கமும், 14 காரட் என்பது 58.5 சதம் தங்கமும், 9 காரட் என்பது 37.5 சதவீதம் தங்கமும் கலந்ததாகும். சேர்க்கப்படும் உலோகங்களுக்கேற்ப தஙத்தின் மதிப்பு கிடைக்கிறது. 22 காரட்டில் செய்யும் தங்க நகைகள் எளிதில் சேதம் அடையக்கூடியவை. காரட் குறையக் குறைய தங்க நகைகளின் தன்மை கெட்டியாகவும் உறுதியுடனும் இருக்கும்.

தங்கச் சுரங்கம்தொகு

தங்கம் பெரும்பாலும் நிலத்தடியில் தனி நிலையிலேயே ரேகை போல பாறைகளில் படர்ந்திருக்கும். தங்கம், சுரங்கங்கள் மூலம் தோண்டி எடுக்கப்படுகிறது.பாறைகளில் வெடி வைத்துத் தகர்த்துத் தங்கத்தை இரசாயன (வேதியியல்) முறையில் பிரித்தெடுக்கிறார்கள். அதன்பின் மின்பகுப்பு முறையில் சுத்தம் செய்யப்படுகிறது.
உலகில் கிடைக்கக் கூடிய தங்கத்தில் பாதி தென் ஆப்பிரிக்கா வில் வெட்டி எடுக்கப்படுகிறது. கனடா, அமெரிக்க ஐக்கிய நாடுகள், ஆஸ்திரேலியா, கொரியா ஆகிய நாடுகளிலும், தென் அமெரிக்கா விலும், இந்தியா வில் கர்நாடகா மாநிலத்தில் கோலார் என்னுமிடத்திலும் தங்கம் கிடைக்கிறது. இலங்கையிலுள்ள பூகொடை என்னுமிடத்திற் களனி ஆற்றுப் பகுதியில் ஆற்றுமண் படிவுகளில் தங்கம் அண்மைக் காலமாக பெறப்படுவதாகவும் கூறப்படுகின்றது. ஆயினும் இப்படிவுகள் மிகச் சொற்ப அளவுடையதாகவே கூறப்படுகின்றது.

விலைதொகு

2004-ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து விலை உயர்ந்து கொண்டிருந்தபோதிலும், 2013-ஆம் ஆண்டு முதல் தங்கத்தின் விலை படிப்படியாக குறைய ஆரம்பித்துள்ளது. 2013-ஆம் ஆண்டு முதல் கால் இறுதியில் தங்கத்தின் விலை சர்வதேச அளவில் சுமார் 6 சதவீதம் குறைந்துள்ளது.[11] 2015 ஆம் ஆண்டளவில் ஒரு கிராம் தங்கத்தின் பெறுமதி 39 அமெரிக்க டொலர்கள் ஆகும்.

தங்கத்தை இறக்குமதி செய்வது குறைத்து இந்தியாவிற்குள்ளே இருக்கும் தங்கம் சுழற்சி செய்யப்பட்டால் சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை குறையவும், குறிப்பாக இந்திய சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சி அடையவும் வழி உருவாக்கும். ( தங்கத்தின் விலை ஏறுகிறதா, ஏமாற்றுகிறதா, க. மாரிக்கனி, ஓருலகம் பதிப்பகம், புதிய எண் 75, முதல் மாடி, லேக் வியூ ரோடு, மேற்கு மாம்பலம், சென்னை-33 )

நாணயச் செலாவணிதொகு

ஒவ்வொரு நாட்டின் நாணயச் செலாவணியிலும் (பண மதிப்பு) தங்கம் பெரும்பங்கு வகிக்கிறது. அந்தந்த நாட்டின் செலாவணியை குறிப்பிட்ட எடையளவு தங்கத்திற்கு மதிப்பிடுவார்கள். ஒவ்வொரு நாடும் அதன் மத்திய வங்கி ( ரிசர்வ் வங்கி) யில் தங்கத்தை கையிருப்பில் வைத்திருக்கும். இவ்வாறு இருப்பு வைத்துள்ள தங்கத்தினுடைய மதிப்பிற்கு ஏற்றாவாறு அந்த நாட்டு அரசாங்கம் செலாவணி அல்லது நாணயம் அல்லது ரூபாய் நோட்டுகளை வெளியிடுகிறது. தங்க இருப்பை வைத்தே ஒரு நாட்டின் நாணய மதிப்பு கணக்கிடப்படுகிறது.

பயன்பாடுதொகு

தங்கத்தில் அதிகமாக ஆபரணங்கள், போன்றவற்றைச் செய்வர். தங்கம் மென்மையான உலோகம்ஆதலால் சுத்தத் தங்கத்தில் செய்யப்பட்ட நகை உறுதியாக இருக்காது. தங்கத்துடன் ஒரு குறிப்பிட்ட அளவு செம்பு அல்லது வெள்ளி யைக் கலந்து செய்யப்பட்ட நகை , நாணயம், பாத்திரம் முதலியவை உறுதியாக இருக்கும். தங்க பாத்திரங்கள் மட்டுமின்றி பேனாமுள், கைக்கடிகார உறுப்புகள் ஆகியவையும் தங்கத்தால் செய்யப்படுகின்றன. இன்றைய நகை ஆசாரிகள் நகை செய்ய வசதியாக இருக்குமென்பதற்காக காட்மியம் உலோகத்தையும் சிறிதளவு சேர்க்கிறார்கள். வைன் அல்லது சாராயத்தில் சிறிதளவு அரைத்து பொடியாக்கிப் பருகுவர் . இதனை தங்கபஸ்பம் என்று கூறுவார் . தங்கபஸ்பம் பருகினால் மேனி பொலிவடையும் என்பது பலரது நம்பிக்கை.தங்கத்தை மறு பயன்பாடு செய்ய முடியும். இவை அன்றைய சந்தை விலைக்கேற்ப மதிப்பிடப்படுகின்றன. எனவே தங்கம் ஒரு சிறந்த முதலீடாக கருதப்படுகிறது. உலகிலேயே அதிகமான தங்கம் கையிருப்பு வைத்திருக்கும் நாடு அமெரிக்கா[சான்று தேவை].நியூயார்க்பெடரல்வங்கி தங்கபெட்டகம்

ஜப்பான் தாய் தங்கம் அருங்காட்சியகத்திலுள்ளஉலகிலேயே மிகப்பெரிய 250 கிலோ எடையுள்ள தங்ககட்டி

பஞ்சாப் மாநிலம்அம்ரித்சர்பொற்கோயில்

உற்பத்திதொகுநாடுகள் வாரியாகத் தங்க ஏற்றுமதி (2014).[12]

உலகத் தங்கச் சபையின் கூற்றுக்கு அமைவாக 2014 ஆம் ஆண்டளவில் பூமிக்குக் கீழே 183,600 தொன் எடையுள்ள தங்கம் காணப்படுகின்றது. இது 21 மீற்றர் நீளமுள்ள சதுரமுகி ஒன்றின் கனவளவிற்குச் சமமானதாகும்.[13] இதன் மதிப்பு 6.3 ரில்லியன் அமெரிக்க் டொலர்கள் ஆகும்.

2014 ஆம் ஆண்டில் தங்கத்தினை அதிகம் உற்பத்தி செய்த நாடாக சீனா விளங்குகிறது.[14] சீனா 430 தொன் தங்கத்தை உற்பத்தி செய்தது. சீனாவைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவும், உருசியாவும் அதிக தங்கத்தை உற்பத்தி செய்த நாடுகளாக விளங்குகின்றன. இவை முறையே 274 மற்றும் 247 தொன் எடையுள்ள தங்கத்தை உற்பத்தி செய்துள்ளன. எனினும் தங்க உற்பத்தி மூலம் பாரிய ஆபத்தான மாசு சூழலில் இடம்பெறுகின்றது.[15][16]

அகழ்தல்தொகு

முதன்மை கட்டுரை: தங்கம் அகழ்தல்

1880களிலிருந்து தென்னாபிரிக்காவே உலகின் தங்க விநியோகத்தின் முக்கிய நாடாகவும் வளமாகவும் விளங்குகின்றது. இன்றுள்ள 50 விழுக்காடு தங்கம் இந்நாட்டிலிருந்தே அகழப்பட்டுள்ளது. 1970 ஆம் ஆண்டில் 1,480 தொன் எடையுள்ள தங்கத்தை இந்நாடு உற்பத்தி செய்ததுடன் இது உலகின் அவ்வாண்டின் 79%ஆன உற்பத்தி ஆகும். எனினும், 1905 ஆம் ஆண்டிலிருந்து முதன்மை வகித்த தென்னாபிரிக்காவை, சீனா 2007 ஆம் ஆண்டில் 276 தொன் தங்கத்தை அகழ்ந்து பின்தள்ளியது.[17]

2014 ஆம் ஆண்டில் தங்கத்தினை அதிகம் உற்பத்தி செய்த நாடுகளில், முதன்மையானதாக சீனாவும்அதனைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா, உருசியா, ஐக்கிய அமெரிக்கா, கனடா, பெரு ஆகிய நாடுகளும் விளங்கின. 20ஆம் நூற்றாண்டில் தங்க அகழ்வில் முன்னணி வகித்த தென்னாபிரிக்கா ஏழாம் இடத்தில் இருந்தது. [14] இந்நாடுகளுடன் கானா, மாலி, புர்கினா ஃபசோ, இந்தோனேசியா, உஸ்பெஸ்கிஸ்தான் ஆகியவையும் பிரதான தங்க உற்பத்தி நாடுகள் ஆகும்.

நுகர்வுதொகு

தொன் அடிப்படையில் நாடுகளின் நிலை[18][19][20]நாடு20092010201120122013 இந்தியா442.37745.70986.3864974 சீனா376.96428.00921.5817.51120.1 அமெரிக்கா150.28128.61199.5161190 துருக்கி75.1674.07143118175.2 சவூதி அரேபியா77.7572.9569.158.572.2 உருசியா60.1267.5076.781.973.3 ஐக்கிய அரபு அமீரகம்67.6063.3760.958.177.1 எகிப்து56.6853.433647.857.3 இந்தோனேசியா41.0032.755552.368 ஐக்கிய இராச்சியம்31.7527.3522.621.123.4Other Persian Gulf Countries24.1021.972219.924.6 சப்பான்21.8518.50−30.17.621.3 தென் கொரியா18.8315.8715.512.117.5 வியட்நாம்15.0814.36100.87792.2 தாய்லாந்து7.336.28107.480.9140.1மொத்தம்1508.701805.60வேறு நாடுகள்251.6254.0390.4393.5450.7உலக மொத்தம்1760.32059.63487.53163.63863.5

முக்கியத்துவம்தொகு

தங்கம் என்பது ஒரு குடும்பத்தின் செல்வ நிலையை மதிப்பிட உதவுகிறது. இது ஒரு ஆடம்பர பொருளாவும் பாவிக்கப்படுகிறது. தமிழர்கள் தங்கள் பெண்ணின் திருமணத்தின் போது நகைகள் அணிவித்து கணவன் வீட்டிற்கு அனுப்புவது வழக்கம். மேலும், தமிழில் தங்களின் குழந்தைகளுக்கு தங்கம் என்று பெயர் சூட்டுவதும் வழக்கம். இந்தியாவின் செல்வ நிலையைக் கேட்ட பிற நாட்டவர்கள், கடல்வழிப் பயணமாக வந்து வாணிபத்தொடர்பு கொண்டிருந்தனர்.

Writing by Goldenvimal ♥♥♥♥♥ இவன் விமல் உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள் தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்

👇🌎 Website Link's முக்கிய இணைப்புகள் 🌎👇

Top Post Ad

Below Post Ad