கணவன் மனைவி( காதல் வரம் )

கணவன் மனைவி( காதல் வரம் )

கணவன் ******ஹே என்ன ஓவரா பண்ற ?

மனைவி*******ஆமா ஓவரா பண்ற மாதுரி தான் தெரியும் ...

கணவன் ********ஆத்தாடி என்ன பாத்திரம் வெளில வந்து விழுது ,,,,சமாளிப்போம் ...வேற வழி...என் புஜ்ஜு குட்டி பூனை குட்டி  என்னாச்சு ?

மனைவி********தயவு செஞ்சு போய்டுங்க ஆபிசர் சார் .....இல்லின்னா ஒரு பொணம் விழும் ...

கணவன் *********அய்யயோ  அம்மு குட்டி நான் இருக்குற வரைக்கும் தற்கொலைக்கு விட மாட்டேன் 


மனைவி*********சாரி ஆபிசர் சார் ...இப்டி கேவலமான காமெடி பண்ணுனா கண்டிப்பா அடி படுவீங்க ...போய்டு அமைதியா ....

கணவன்******ரொம்ப கோவமா இருக்காளே எப்படி சமாளிக்க ....ஒரே செம பசி என் பொண்டாட்டி கையாள தான் சாப்பிடணும்னு  ட்ராபிக்ல பூந்து பூந்து வந்துருக்கேன் .....நான் ரெடி

மனைவி********சோறெல்லாம் இல்ல வெளில போய் சாப்பிடு இல்லின்னா பட்னியா இரு ...

கணவன் ********எப்படி பால் போட்டாலும் நோ  பால்  ஆகிடுதே  ....இப்போ சோறு கிடைக்குமா இல்ல பட்னியா தூங்கட்டுமா ?

மனைவி *********நீ அஞ்சு மணிக்கே வந்துருவேன் சொன்ன நான் சமைக்கல.....தப்பு உன் மேல தான் ..

கணவன்**********சரி சரி ஒரு வேளை சாப்பிடலைனா ஒன்னும் ஆகாது ...கரையூராளா பாரு பாவி .....ஓகே குட் நைட் ...குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில்  நிம்மதி என்பது ஏது...

மனைவி********டாய் ....

கணவன்******ஆத்தாடி நான் தூங்கிட்டேன் ....

மனைவி*****டாய் நடிக்கதாடா.....வா சாப்பிடலாம் ...

கணவன்*******சாரி நான் தூங்குறப்போ டிஸ்டர்ப் பண்ணாத ....பை ...குட் நைட் 

மனைவி *******அய்யயோ  நிஜமாவே தூங்குறானோ ...என்ன பண்லாம் ?..டாய் மாமா எந்திரிடா ..சாப்பிடலாம் 

கணவன்******எனக்கு பசிக்கல

மனைவி******டாய் நீ  வெளில கூட்டிட்டு போறேன் சொல்லி ஏமாத்துனல்ல...உனக்கு ஒரு சட்டம் எனக்கு ஒரு சட்டமா 

கணவன்******வேலை உங்கப்பாவை கலெக்டெர் வேலை வாங்கி தர சொல்லுடி சாயங்காலம் அஞ்சு மணிக்குலாம் வீட்டுக்கு வந்துரன் 

மனைவி ******எங்கப்பாவை இழுக்களினா உனக்கு தூக்கம் வராதே ...சரி வா வா சாப்பிடலாம் 

கணவன்*******சாப்பிடலாம் சாப்பிடலாம் அதுக்கு முன்னாடி 

மனைவி******டாய் என்ன வளையுற நெளியுற ?

கணவன்******ஈஈ அது வந்து சும்மா தான் ...

மனைவி ******ஹா ஹா டாய் என்ன தாண்டா பண்ற ?

கணவன்*********ம்ம்ம் ரொமான்ஸ் பன்னலாம்னு பாத்தேன் ...எங்க எனக்கு வரத்து போல 

மனைவி********ஆஹான்  ....உங்க கம்பெனி கம்ப்யூட்டர் கூட பண்ணுடா ரொமான்ஸ் ....வந்துட்டான் 

கணவன் *********அப்டிங்குற .....ஆனா அது உன்ன மாதுரி சிரிச்சுட்டு அழகா இல்லியே ?

மனைவி******ஹா ஹா டாய் பொய் சொல்லி புருஷா இப்டி பேசி பேசியே ஏமாத்திடுற டா ....

கணவன்******ஈ ஈ ஈ வேற வழி...

மனைவி*******அடேய் கைய்ய எடுடா என்னடா சொன்ன ?

கணவன் *********அய்யயோ கண்டு புடிச்சுட்டா ...அயோ பசி தங்க முடில மயக்கமா வருது நான் மயங்கிட்டேன் 

மனைவி*******ஹா ஹா கேவலமா நடிக்காதிங்க மாமா ...சீக்கிரம் சாப்பிட வந்தா ஊட்டி விடுவேன்...

கணவன்******ஐ இதோ வந்துட்டேன் Writing by Goldenvimal ♥♥♥♥♥ இவன் விமல் உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள் தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்

👇🌎 Website Link's முக்கிய இணைப்புகள் 🌎👇

Top Post Ad

Below Post Ad