சிந்தனை முத்துக்கள்!


சிந்தனை முத்துக்கள்!

💋உரிய நேரத்தில் திறக்காத உதடுகளே.... தயவு கூர்ந்து தகாத நேரத்திலும் மூடியே இருந்து விடுங்கள்!!!!

🕊️எவ்வளவு தூரமானாலும் பற. ஆனால் நினைவில் கொள் சிறகுகள் தான் சொந்தம் வானமில்லை!!

📚கிழிந்த எண்ணங்களை நல்ல நூல்களால் தைக்கலாம்!!!

💭நினைவு ஒரு முதியவரின் பயணம். கனவு ஒரு குழந்தையின் பயணம்!!!


💒கோயில்களில் சாமியைக் கும்பிட்டு சண்டைப் போடுபவர்களைப் பார்த்தால் எனக்குத் தோன்றும்.... 'உங்களுக்குப் போக மிச்சமிருந்தால் எனக்குக் கிடைக்கட்டும் இறைவனருள்!!!'

👁️முகம் அகம் என அனைத்தும் தொட்டுக் காய்ச்சும் வெயில் அவ்வளவு ஒன்றும் உக்கிரமானதாக இல்லையெனக்கு.... ஆணின் பார்வையைவிட!!!

😭விலையுயர்ந்த பொம்மை அழ வைக்கிறது குழந்தையோடு அப்பாவையும்!!!

📖முதலில் சக மனிதனைப் படியுங்கள்... அவனை விட சுவாரஸ்யமான புத்தகம் வேறு என்ன இருந்துவிடப் போகிறது!!!?

🍝ஒரு ஹோட்டல் திறக்கும் நேரத்தில் சத்தமில்லாமல் ஒரு பார்மஸியும் திறக்கப்படுகிறது என்பது இன்னும் நமக்கு உறைக்கவில்லை. மிகச் சிறந்த சுகாதார உணவு, அவரவர் வீட்டில் செய்யப்படுவதுதான்!!!

💼எந்த வித தீங்கும் விளைவிக்காத ' சாக்குப்பை' யைக் கொண்டு வருபவனுக்கு பேர் பட்டிக்காட்டான், மண்ணின் எமனான பிளாஸ்டிக் கவரை கொண்டு வருபவன் நாகரிகவாதி!!!

👀இரவில் விழித்திருப்பவர்கள் தூக்கத்தை வெறுத்தவர்கள் அல்ல.... துன்பத்தைக் கரை சேர்க்கத் தெரியாமல் துடிப்பவர்கள்!!!

⛰️நாம் அனைவரும் மலையுச்சியில்தான் வாழ நினைக்கிறோம். ஆனால் பின்னர் தான் தெரியும், மகிழ்ச்சியும் வளர்ச்சியும் ஏறும்வரைதான்!!!

🚲ஆண்களின் கோபம் பைக் கிக் ஸ்டார்டரிலும், பெண்களின் கோபம் துவைக்கும் துணிகளிலும் அதிகம் வெளிப்படுகிறது!!!

🍃வெற்றிலையை மென்று கொண்டே திண்ணையில் பேசிக் கொண்டிருந்த பாட்டிகளின் பரிணாம வளர்ச்சியே ஃபேஸ்புக் குரூப்புகள்!!!

🦅உதிர்ந்துவிழும் இறகை பொருட்படுத்தாது பறக்கிறது பறவை, விழுந்த இறகினை பத்திரப்படுத்தி வைக்கிறான் பறவையை ரசிக்கும் ஒருவன்!!! 

படித்ததில் ரசித்தது.

மேலும் தகவல்களுக்கு 👇 Please click 👇 http://vimaljewelswork.business.site https://sites.google.com/site/nsvimalgolden/www-goldenvimal-com Writing by Goldenvimal ♥♥♥♥ இவன் விமல் உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள் தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்

👇🌎 Website Link's முக்கிய இணைப்புகள் 🌎👇

Top Post Ad

Below Post Ad