**என்றும் அன்புடன் விமல் ** 98651-38410 ** 82203-03410 ** திண்டுக்கல் ** Goldenvimal ** www.goldenvimal.ml ** குருசாமி பிள்ளை சந்து ** திண்டுக்கல் ** வி.பரமேஸ்வரி & விமல் **  

28 Feb 2018

மனைவியின்_கை

#மனைவியின்_கை
      (இவன் விமல்)

 ♥திருமணமாகி 35வருடங்கள் அவருக்கு 61வயது. கடந்த மாதம் ஓய்வபெற்று வீட்டில் மனைவியோடு சாகவாசமாக இருக்கிறார்.

♥வேலை நாட்களில் காலை மற்றும் இரவு தான் மனைவியை பார்ப்பதே... ஒரு சில வார்த்தைகள் பேசுவதோடு சரி. ஞாயிறில் கூட அங்க இங்க என சென்றுவிடுவது.. கடுமையா உழைத்து குடும்பத்தை பார்த்தார்...

♥இப்போது தான் ஆற அமர பொறுமையாக உட்கார்ந்து மனைவியுடன் பேச முடிகிறது.. வீட்டில் எது எங்க இருக்கு என அறியமுடிகிறது...

♥வீட்டு வராந்தாவில் உட்காந்திருந்தவர் மனைவியை கூப்பிட்டார்... மனைவி இவரை விட 8 வயது இளமையானவள்.. அதனால் 52 வயதிலும் சுறுசுறுப்பாக இருந்தால்...

வந்து பக்கத்தில் நின்றவள் கூப்பிட்டீங்களா என பார்த்தாள்..

♥ஆமா... ஆமா.. வா உட்காரு உன்கூட மனசு விட்டு பேசி எவ்ளவு காலமாச்சு... 

♥அவளும் உட்கார அவள் கையை பற்றி... ஏதோ பேச வந்தவர்... அவள் கை சொர சொரப்பாக இருக்க அவளின் உள்ளங்கையை திருப்பி பார்த்தார்.. முகங்கள் சுருங்கியது... கண்கள் கலங்கியது.. அம்மு என்னது.. கை பூரா வெட்டுக்காயமா இருக்கே... நகம் கூட வெடிச்சிருக்கே.. ஒரே தழும்பா இருக்கு என்னது.. நீ என்னய திருமணம் செய்துவரும்போது பட்டு மாதரி இருந்தாயே.. உன் கை பளபளப்பா  வழுவழுப்பா இருந்ததே என நிமிர்ந்தார்... 

♥அவள் மெல்லிய சிரிப்புடன் 
நா எதை என்னவென்று சொல்ல.. 35 வருசதில சமையல்ல எண்ணெய் தெறிச்சதா இருக்கலாம்.. காய்கறி நறுக்கும்போது அருவாள் கத்தி கீறியிருக்கலாம்... அடுப்பில் இருந்து பாத்திரம் இறக்கும்போது சூடு பட்டிருக்கலாம்... இப்படி எதேதோ நடந்திருக்கும்... என்றால்... மெல்லிய கோடாய் அவளின் கண்களின் ஓரத்தில் கண்ணீர் வடிந்தது... 

♥என்னம்மு சொல்றாய் அது என்ன கையில் மேல அவ்ள பெரிய தீக்காயம் மாதிரி என்று அதிர்ந்தார்... 

♥நீங்க என்னய வண்டில உள்ள கவர எடுத்துவா என 4 வருசத்திற்கு முன்னாடி ஒரு நாள் கூறினீங்க... நானும் எடுத்துவர போனன் கவர் கீழ விழ நான் எடுக்கும்போது உங்க வண்டி சைலன்சர் சுட்டுடுச்சு.. அப்பதானே வந்தீங்க... அதான் சூடா இருந்தது என்றாள்...

♥இது என்ன குழந்தையாட்டம் நீ என்கிட்ட சொல்லவே இல்லயே.. அம்மு...

♥நா சொல்லலதாங்க... எந்த காயத்தையும் நா சொல்லலங்க... அப்ப நா சொன்னா கூட நீங்க என்னய தானே திட்டுவீங்க பொறுப்பிள்ளையா ... பார்த்து நடக்கமாட்டியா... என.. என்றாள்

♥என் கண்களில்  கூட படலயே அம்மு இதெல்லாம்...  என்றார் வலி நிறைந்த குரலில்..

♥என்னை நீங்க அருகில சந்திக்கிறதே இரவு இருட்டில தானே அதுகூட சில நிமிடம்தான்
அப்ப எப்படிங்க என் உடல் காயங்கள் உங்களுக்கு தெரியும் என்றாள்...

♥அம்மு... அப்படி நினைக்காதே.. நமக்காக தானே நா இப்படி ஓடாய் உழைத்தேன் பசங்கள படிக்க வச்சு வெளிநாட்டுக்கு அனுப்பினன்.. உன்னயும் ஒரு குறயும் இல்லாம பார்த்தன்... என்றார்..

♥உடல்காயங்களே உங்க கண்ணுக்கு இப்பதான் தெரியுது என் மனக்காயங்கள் உங்களுக்கு எப்பவுமே தெரியாதுங்க...

♥என்னய மன்னிச்சிடு அம்மு... பணம் சேர்க்கும் பரபரப்பில் இயந்திரமாக இருந்துவிட்டேன்.. 
என்று அவளின் கையை மெதுவாக அழுத்தினார்...

♥எனக்கொரு ஆசைங்க... அத இப்பவாவது கேக்கமுடியுமா ... என்றாள் குரல் சுருதி குறைவாக...

♥கேளு அம்மு... என்றார்

♥நாம திருமணமான புதிதில சில நாட்கள் நா உங்க மடியிலயும் நீங்க என் மடியிலயும் தலை வைத்து படுத்திருக்கோம்... அப்புறம் 35 வருசமா தலையனிலதான் நாம தலை வைத்து படுத்திருக்கம்... இப்ப உங்க மடியில கொஞ்சம் தலை வைத்து படுத்துக்கவா... என அம்மு கேக்க அவருக்கும் அம்முக்கும் கண்கள் கலங்கியே விட்டது... அவளை அணைத்து தன் மடியில் படுக்க வைத்தவர் குழந்தையைப்போல் அவளை பார்த்தார்.

♥மனசு நிறைய பாசம் அன்பு இருந்தாலும் அதை ஆண்களுக்கு வெளிப்படுத்த தெரிவதில்லை அதற்கான நேரம் வரும்வரை....

♥இதே போல்தான் பெரும்பாளும் எல்லா பெண்களின் வாழ்வும்.. திருமணமாகும் போது இருந்த மென்மையை அவர்களின் கை மட்டுமல்ல உடலும் மனமும் கூட இழந்து மரத்துப்போகிறது...

♥எத்தனை கணவன் மார் மனைவிக்கென நேரம் ஒதுக்கி அவளின் மனக்குறைகளை கேக்கிறார்கள்.. மனம் விட்டு பேசுகிறார்கள்... 

♥ஆண்களே உங்கள் மனைவியின் கையை பிடித்து பாருங்கள் எத்தனை கீறல்கள் காயங்கள் இருக்கும் என... இவை ஏன் வந்தது என கேளுங்கள்... 
அவளின் மனக்காயம் வெளிவரும்.... மேலும் தகவல்களுக்கு 👇 Please click 👇 http://vimaljewelswork.business.site https://sites.google.com/site/nsvimalgolden/www-goldenvimal-com Writing by Goldenvimal ♥♥♥♥♥ இவன் விமல் உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள் தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்

1 comments:

cricet live

maps

My Logo,,

My Logo,,
                                               மிக பிடித்தவை

Fireworks

snows

Background music on & off

No Copy-paste- on