ஹோட்டல் சாம்பார் இந்த முறையில் ஒரு முறை சாம்பார் செய்து பாருங்கள்.

ஹோட்டல் சாம்பார்

இந்த முறையில் ஒரு முறை சாம்பார் செய்து பாருங்கள்.சாப்பிடுபவர்கள்  ஹோட்டல் சாம்பாரா என்பார்கள்.டிபனுக்கு செய்யும் சாம்பாருக்கு தக்காளியின் புளிப்பே போதுமானது.டிபன் சாம்பாருக்கு காய்களும் தேவை இல்லை.புளி இல்லாமல் சாம்பாரா என புருவத்தை தூக்குபவர்கள் தக்காளியை குறைத்துக்கொண்டு சிறிது புளி சேர்த்துக்கொள்ளலாம்.சுவை மாறு படும்.

துவரம் பருப்பு-100 கிராம்
பெரிய வெங்காயம்-1
சிறிய வெங்காயம்-6
பழுந்த தக்காளி-3கட்டி பெருங்காயம்- சுண்டைக்காயளவு
மஞ்சள் பொடி- 1/2 டீஸ்பூன்
பச்சை மிளகாய்-1
சாம்பார்பொடி -1 டேபிள் ஸ்பூன்

தாளிக்க:
நல்லெண்ணெய்-2 டீஸ்பூன்
கடுகு-1 டீஸ்பூன்
சீரகம்-1/4 டீஸ்பூன்
வெந்தயம்-1 பின்ச்
கறிவேப்பிலை- சிறிது
மிளகாய் வற்றல்-2
மல்லித்தழை-சிறிது
வெல்லம்-1/2 இஞ்ச் துண்டு

பருப்புடன் வெங்காயம் தக்காளியை பெரிய துண்டுகளாக்கி சின்ன வெங்காயத்தை தோலுறித்தும் அனைத்தும் மூழ்கும் அளவு நீர் விட்டு மஞ்சள் பெருங்காயம் சேர்த்து குக்கரில் வேக விடவும்.

 வெந்ததும் நன்கு மசித்து விடவும்.அரை டம்ளர் நீரில் சாம்பார் பொடியை கரைத்து விட்டு போதுமான உப்பு,வெல்லம் இரண்டாக கீறிய பச்சை மிளகாய் சேர்த்து மேலும் நீர் தேவைப்பட்டால் சேர்த்து அடுப்பில் வைக்கவும்.

தாளிப்பு சட்டியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெந்தயம் கடுகு சீரகம் கருவேப்பிலை மிளகாய் வற்றல் தாளிக்கவும்.

கொதித்துக்கொண்டிருக்கும் சாம்பாரில் தாளிப்பை ஊற்றி  பொடியாக நறுக்கிய மல்லி இலை தூவி அடுப்பை அணைக்கவும்.

கமகமக்கும் சுவையான ஹோட்டல் சாம்பார் தயார்.


Writing by Goldenvimal ♥♥♥♥♥ இவன் விமல் உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள் தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்

👇🌎 Website Link's முக்கிய இணைப்புகள் 🌎👇

Top Post Ad

Below Post Ad