Sri,,, அப்படியென்ன ஸ்பெஷல் தந்தை - மகள் உறவில்....வாங்க தெரிஞ்சுக்கலாம்!.... | www.goldenvimal.com
      **என்றும் அன்புடன் விமல் ** 98651-38410 ** 82203-03410 ** திண்டுக்கல் ** Goldenvimal ** www.goldenvimal.ml ** குருசாமி பிள்ளை சந்து ** திண்டுக்கல் ** வி.பரமேஸ்வரி & விமல் **  

23 Jan 2018

அப்படியென்ன ஸ்பெஷல் தந்தை - மகள் உறவில்....வாங்க தெரிஞ்சுக்கலாம்!....அப்படியென்ன ஸ்பெஷல் தந்தை - மகள் உறவில்....வாங்க தெரிஞ்சுக்கலாம்!....

வயதுக்கு வந்த மகளை வளர்க்க வேண்டியது அம்மாவா? அப்பாவா?
  பெண்களுக்கு, உறவு முறைகளில் மிகவும் முக்கியமான உறவு தன்னை பெற்றெடுத்த தந்தை. உறவு முறைகளிலேயே மிகவும் அழுத்தமானது தந்தைக்கும் மகளுக்குமுள்ள உறவுதான் என்கிறார்கள் பல அறிஞர்கள். அதேபோல ஸ்ட்ராங் ஃபாதர்ஸ், ஸ்ட்ராங் டாட்டர்ஸ் எனும் நு}லில் அப்பாவின் வழிகாட்டுதலே டீன் ஏஜ் பெண்களுக்கு மிகமிகத் தேவையென்று சொல்லப்பட்டு உள்ளது.

டீன் ஏஜ் மகளுக்கு அப்பா என்பவர் :


அப்பா என்பவர் தனது டீன் ஏஜ் மகளுக்கு ஒரு சிறந்த வழிகாட்டி, அன்பு, அரவணைப்பு நிறைந்தவர், ஒரு நண்பன், பாதுகாவலன், ஊக்கமூட்டுபவர், உற்சாகப்படுத்துபவர், தன்னம்பிக்கையை வளர்ப்பவர், பண்புகளை ஊட்டுபவர் என எக்கச்சக்க முகங்கள் அவருக்கு இருக்க வேண்டும்.

ஒரு பெண் சந்திக்கும் முதல் ஆண் :

ஒரு பெண் முதலில் சந்திக்கும் ஆண் அவளுடைய அப்பா தான். அவரிடம் இருந்துதான் அவள் ஒரு ஆணுக்குரிய இலக்கணங்களைக் கற்றுக்கொள்கிறாள். ஆண் என்பவனின் குணாதிசயங்களைக் கற்றுக்கொள்கிறாள். ஆண் என்பவரின் தேவையைக் கண்டு கொள்கிறாள்.

சின்ன வயதில் மழலையாக இருக்கும் போதிலிருந்து அவளுக்கு தேவையான எல்லாவற்றையும் தேடித் தேடி வாங்குவீர்கள். திடீரென ஒரு நாள் வளர்ந்து நிற்பாள். என் டாடி சு ப்பர் என்று சொல்லிக் கொண்டிருந்தவள், டாடிக்கு ஒண்ணும் தெரியாது என்று பல்டி அடிப்பாள்.

உடனே நீங்கள் பதட்டப்படுவீர்கள். ஆனால் உண்மையில் அவள் உங்களுடைய அனுமதியை எதிர்பார்த்து நிற்கிறாள். அப்பாவின் அனுமதி இருந்தால்தான் அவளுக்கு அதில் ஒரு ஆத்ம திருப்தி. நல்லதுன்னா அப்பா ஒத்துப்பார் எனும் நிலைமைதான் இருக்க வேண்டுமே தவிர அவர்கிட்டே என்ன சொன்னாலும் வேலைக்காவாது என்ற நிலைக்கு நீங்கள் வந்து விடவேக்கூடாது.

தாயிடம் அன்பை கற்றுக்கொள்வோம்!..
தந்தையிடம் உழைப்பை கற்றுக்கொள்வோம்!..
நித்ராவின் தமிழோடு-விளையாடு செயலியுடன் இணைந்து
வாருங்கள் தமிழையும் தமிழ்நாட்டையும் வலிமைபடுத்துவோம்!!..
தமிழோடு விளையாடு - சொல்லியடி னுழறடெழயன செய்ய!

இங்கே க்ளிக் செய்யுங்கள்!
என் அப்பா டெக்னாலஜியில் என்னைப் போல ஹைடெக். என கருதுவதில் உங்கள் மகளுக்கு இருக்கும் மகிழ்ச்சி அலாதியானது. நீங்கள் அந்த டெக்னாலஜி உலகுக்குள் நுழைந்தால்தான் அதிலுள்ள நன்மை தீமைகளை நாசூக்காக உங்கள் மகளுக்குச் சொல்லவும் முடியும்.

மகளுடன் நிறைய நேரம் செலவிடுங்கள். நீங்கள் பேசுவதை விட, உங்கள் மகள் பேசுவதை அதிகமாய் கேட்கவேண்டும். நிறைய நேரத்தை நீங்கள் அவளுடன் செலவிடும்போது, நினைத்ததை எப்படியேனும் வெளிப்படுத்தி விடுவாள். வெறுமனே நீங்கள் அவளுடன் இருந்தால் போதும் அவள் உங்களை ரொம்பவே கொண்டாடுவாள்!

அவளுடைய படிப்பு, நட்பு, எல்லாவற்றிலும் உங்கள் அளவான ஈடுபாடு இருக்கட்டும். குறிப்பாக ஆண்களைப் பற்றியும், ஆண்களின் குணாதிசயங்கள், சிந்தனைகள், எதிர்பார்ப்புகள் போன்றவற்றைப் பற்றியும் அவளுக்குப் புரியும் வகையில் அவ்வப்போது சொல்வது அவசியம்.

சமூகம் சார்ந்த பல விஷயங்களையும் அப்பாதான் அவளுக்குச் சொல்லித் தர வேண்டும். ஒரு பெண்ணுக்கு பதின் வயதுத் தொடக்கத்தில் இருக்கும் மனோபாவம் நாள் செல்லச் செல்லப் பக்குவப்படும்.

பெண்ணின் திருமண வயது வரும்போது, என் அப்பாவைப் போல நல்ல ஓர் ஆண் எனக்குக் கணவனாக வர வேண்டும் என உங்கள் மகள் நினைக்க வேண்டும். அப்படி நடந்தால் நீங்கள் ஒரு அப்பாவாக வெற்றி பெற்று விட்டீர்கள் என்று பொருள்!

சின்ன வயதிலிருந்தே தந்தையின் வழிகாட்டுதலிலும், அன்பிலும் வளரும் குழந்தைகள் நல்ல மன வளர்ச்சி அடையும் என்கிறார் எழுத்தாளரும் மருத்துவருமான மெக் மீக்கர்.

இது மகளை பெற்ற அப்பாக்களுக்கு விமலின் சமர்ப்பணம்...!!!Writing by Goldenvimal ♥♥♥♥♥ இவன் விமல் உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள் தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்

உங்கள் கருத்துக்கள் பதிவிட

Name

Email *

Message *

வாசிக்க வந்து சென்றவர்கள் ,,

Sign Up

photo

photo

👇🌎 Website Link's 🌎👇

                                      Sri...

**********************🌎***********************
👨‍💻 👨‍💻 👨‍💻
👉 TNPDS 👉 FLIGHTS timetable 👉 EB Bill
👉 Railway 👉 Gold rate dindigul 👉 Google
👉 Lic 👉 Vikaspedia 👉 DINDIGUL
👉 G Photos 👉 Wixsite 👉 Exchange rates
👉 G Mail 👉 Blog template 👉 G Notes
👉 G Site 👉 G Business 👉 G Drive
👉 My Real games 👉 paramu 👉 VIMAL
👨‍💻 👨‍💻 👨‍💻
**********************🌎***********************

cricet live

maps