பிறப்பு முதல் ஒரு வருடம் வரை குழந்தைகளுக்கான உணவு முறைகள்!


பிறப்பு முதல் ஒரு வருடம் வரை குழந்தைகளுக்கான உணவு முறைகள்!

குழந்தைக்கு முதல் மற்றும் முக்கியமான உணவே தாய்ப்பால் தான். குழந்தை பிறந்தது முதல் ஒரு வருட காலம் வரை தாய்ப்பால் கொடுப்பது சிறந்தது.

குழந்தை பிறந்து முதல் நான்கு மாதங்களுக்கு

தாய்ப்பால் மட்டுமே போதுமானது. அதற்குப் பிறகு பசும்பால் அல்லது எருமைப்பால் கொடுக்கலாம். ஆனால் பால் சுகாதாரமான முறையில் தயாரிக்கப்பட்டிருக்க வேண்டும்.
முடிந்தவரை நள்ளிரவில் குழந்தைக்கு பால் கொடுப்பதை தவிர்க்கப் பாருங்கள். காரணம், நாளடைவில் குழந்தையின் பற்களில் சொத்தை விழ இது காரணமாக அமையலாம் என்பதோடு பால் காதுக்குள் நுழைந்து அப்படியே அசையாமல் குழந்தை தூங்கிவிடலாம். காதில் சில தொற்று நோய்கள் உண்டாகக்கூடும்.

நான்காவது மாதம்


குழந்தை பிறந்து நான்கு மாதம் ஆகிவிட்டால், பருப்புத் தண்ணீர் அல்லது கரட் தண்ணீரை கொடுத்து பழக்கலாம்.

ஐந்தாவது மாதம் 

குழந்தை பிறந்து ஐந்து மாதங்கள் ஆனவுடன் காய்கறி மற்றும் பழங்களைக் கொடுக்கத் தொடங்கலாம். பழங்களில் ஆப்பிள், வாழைப்பழம், பழுத்த பப்பாளி ஆகியவை உங்களது முதல் விருப்பமாக இருப்பது நல்லது.

மலை வாழைப்பழம் கொடுக்கலாம். பச்சை வாழை மற்றும் ரஸ்தாளி அளிப்பதை தவிர்க்கலாம்.
வைட்டமின் சி சத்து நிறைய அடங்கியவை – சாத்துக்குடி, கமலா ஆரஞ்சு, எலுமிச்சை ஆகியவை குழந்தைக்குத் தவறாமல் கொடுக்கலாம். பெற்றோருக்கு இந்த சிட்ரஸ் வகைப்பழங்கள்அலர்ஜி என்றால், குழந்தைக்கு சுமார் ஒன்றரை வயது ஆனபிறகு இதுபோன்ற பழங்களைக் கொடுத்துப் பார்க்கலாம்.

குழந்தைகளால் சீக்கிரம் ஜீரணிக்கக் கூடியவைகளும், அவர்களால் விரும்பப்படுவதுமான பிசைந்த வாழைப்பழங்களும், கடைந்த ஆப்பிள்களும் குழந்தைகளுக்கு ஆரம்பத்தில் கொடுக்கும் உணவு வகைகளில் சிறந்தது.

பெரும்பான்மையான எல்லா பழங்களையும், காய்கறிகளையும் மிக்ஸியில் அரைத்து குழந்தைகளுக்கு கூழ் போலாக்கி கொடுக்கலாம். பருப்பு வகைகளையும் இப்படி கொடுக்கலாம்.

ஆறாவது மாதம்

முட்டையில் உள்ள மஞ்சள் கருவை கொடுக்கலாம். இட்லியும் கொடுக்கத் தொடங்கலாம். அரை ஸ்பூன் நெய் அல்லது எண்ணெய் சேர்த்துக் கொடுக்கலாம்.

இட்லிக்கு சர்க்கரையை தொட்டு கொடுப்பதைவிட தெளிவான ரசம் போன்றவற்றைத் தொட்டுக் கொள்ளலாம். ஏனென்றால் இனிப்பு மட்டுமல்லாது மீதி சுவைகளும் குழந்தையின் நாக்குக்கு பிடிபடுவது நல்லது. அப்போதுதான் வளர்ந்தபிறகு பலவகை உணவுகளை குழந்தை உண்ணத் தயாராகும்.

சிறுகச் சிறுக புதிய உணவு வகைகளில் குழந்தையின் அனுபவத்தை வளர்க்க வேண்டும். குழந்தை ஆறு மாதக் குழந்தையாகும்போது உணவில் சிறு பகுதி புரதம் செறிந்த மீன், முட்டை, கோழிக் குஞ்சின் இறைச்சி இவைகளைச் சேர்க்கலாம். ஆனால் இவை நன்றாக பக்குவப்படுத்தப் பட்டதாகவும், மிருதுவாகவும் உள்ளதாயும் இருத்தல் அவசியம்.

ஏழாவது மாதம்

ஏழாவது மாதத்தில் சப்போட்டா போன்ற பழங்களைக் கொடுக்கலாம்.
தோசை, பால் குறைவான சப்பாத்தி, தானிய சுண்டல், மிக்ஸ்ட் ரைஸ், கிச்சடி, உப்புமா, பழங்கள் சாப்பிடக் கொடுத்துப் பழக வேண்டும்.

பத்தாவது மாதம்

குழந்தைக்கு பத்து மாதம் ஆனதும் சாதத்தையும் பருப்பையும் குழைத்துப் பிசைந்து வெண் பொங்கல் போலாக்கி காய்கறித் துண்டுகளையும் சேர்த்துக் கொடுக்கலாம்.

குழந்தைகள் காய்கறிகளை துப்பிவிடுகிறது என்றால் அவற்றை சூப்பாக்கி கொடுக்கலாம். தினமும் ஒருமுறை இப்படி சாப்பிடலாம். நடுவே வெரைட்டிக்கு ரொட்டித் துண்டில் வெண்ணெய் மற்றும் ஜாம் தடவித் தரலாம்.

காய்ந்த திராட்சை, பேரிச்சம்பழம் ஆகியவை குழந்தையின் உடலுக்கு நல்லது. ஆனால் இவற்றை சாப்பிட்ட பிறகு மறக்காமல் பற்களைச் சுத்தம் செய்து விடுங்கள்.

எப்போதுமே ஒரே நாளில் இரண்டுவித புதிய உணவுகளைக் குழந்தைக்கு அறிமுகப்படுத்த வேண்டாம். சில நாட்கள் இடைவெளிக்குப் பிறகே அடுத்த புதிய உணவுப் பொருளை அறிமுகப்படுத்துங்கள். அப்போதுதான் குழந்தைக்கு வயிற்றுப்போக்கோ வேறு ஏதாவது சிக்கலோ ஏற்பட்டால் அது எந்த உணவினால் என்பதைத் துல்லியமாகக் கண்டுபிடிக்க முடியும்.

பயனுள்ள தகவல். அனைவருக்கும் பகிருங்கள்.

Writing by Goldenvimal ♥♥♥♥♥ இவன் விமல் உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள் தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்

👇🌎 Website Link's முக்கிய இணைப்புகள் 🌎👇

Top Post Ad

Below Post Ad