ஐயப்பனுக்கு விரதம் இருக்கும் முறைகள் பற்றி தெரியுமா?


      ஐயப்பனுக்கு விரதம் இருக்கும் முறைகள் பற்றி தெரியுமா?
ஐயப்பன் விரத விதிமுறைகள் பற்றி தெரியுமா? - 

சாமியே சரணம் !!!
💥 பலரும் சபரிமலை ஐயப்பன் சுவாமிக்கு மண்டல விரதம் இருந்து இருமுடி கட்டி கோவிலுக்கு செல்லும் வேண்டுதல் உடையவர்களாக இருப்பார்கள். பலபேர் புதிதாக மாலை போடுபவர்களாகவும் இருப்பார்கள். ஐயப்பனுக்கு விரதமிருந்து சபரிமலைக்கு செல்ல பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் பற்றி பலருக்கும் தெரியாமல் இருக்கும் இதோ அவர்களுக்காக!

ஐயப்பன் விரத விதிமுறைகள் :


💥 முதல்முறையாக மாலை அணியும் பக்தர்களை கன்னி சுவாமி என அழைப்பார்கள்.

💥 ஐந்து அல்லது ஏழு முறை மாலையணிந்து மலைக்குச் சென்ற ஒருவரை குரு சுவாமியாய் ஏற்று தாய், தந்தையரை வணங்கி குருவின் கையால் மாலை அணிதல் வேண்டும்.

💥 அவரவர் வசதிக்கேற்ப குருவிற்கு தட்சணை கொடுத்து குருவின் அனுகிரகத்தை பெறுதல் வேண்டும். கொடுக்கும் தட்சணை ஒரு ரூபாய் ஆனாலும் குரு ஐயப்பனே தந்ததாக அன்புடன் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

💥 கார்த்திகை 1ம் தேதி மாலையணிதல் வேண்டும். ஒரு மண்டலம் எனப்படும் 48 நாட்கள் விரதமிருக்க வேண்டும். காலை உணவை விடுத்து மதிய உணவை ஐயப்பனிற்கு நிவேதனம் செய்து உண்ண வேண்டும். மாலை பால், பழம், பலகாரம் உண்ணலாம்.

💥 ருத்திராட்சம் அல்லது துளசிமாலை 54 அல்லது 108 மணிகள் உடையதாக வாங்கி, அதில் ஐயப்பன் பதக்கம் ஒன்றையும் சேர்த்து அணிதல் வேண்டும். துணை மாலை ஒன்றையும் சேர்த்து அணிதல் வேண்டும்.

💥 விரதகாலத்தில் கருப்பு, நீலம், பச்சை நிறமுள்ள ஆடைகளை அணியவேண்டும். கன்னி சுவாமிகள் கருப்பு மட்டும் தான் அணிய வேண்டும்.

💥 காலை, மாலை குளிர்ந்த நீரில் குளித்து விட்டு ஐயப்பனிற்கு துளசி, பால், பழம், கற்கண்டு போன்றவற்றில் ஒன்றை நிவேதனம் செய்து 108 சரணம் சொல்லி வழிபட வேண்டும்.

💥 விரதகாலத்தில் முடிவெட்டிக் கொள்ளுதல், முகச்சவரம் செய்தல் கூடாது. காலணி, குடை, மழைக்கு போடும் கவசம் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். மது அருந்துதல், பொய் பேசுதல், மாமிசம் உண்ணுதல், கோபம் கொள்ளுதல், கடும் சொற்கள் பேசுதல் கூடாது.

💥 விரதகாலத்தில் எவருடன் பேச நேர்ந்தாலும் பேச தொடங்கும் போதும், பேசி முடிக்கும் போதும் சுவாமி சரணம் என்றே கூறவேண்டும். மாலையணிந்தால் விரதம் பூர்த்தியாவதற்கு முன்னர் அதை எக்காரணம் கொண்டும் கழற்றக்கூடாது. நெருங்கிய உறவினரின் இறப்பால் தீட்டு நேர்ந்தால் மாலையை கழற்றி ஐயப்பன் படத்தில் போட்டு விடவேண்டும். பின்னர் மறுவருடம் தான் மாலை அணிய வேண்டும்.

💥 விரதகாலத்தில் பகலில் தூங்கக்கூடாது. இரவில் பாய், தலையணை போன்றவற்றை தவிர்த்து வஸ்திரத்தை விரித்து தூங்க வேண்டும்.
   
      சரணம் ஐயப்பா
 சுவாமி  சரணம் ஐயப்பாWriting by Goldenvimal ♥♥♥♥♥ இவன் விமல் உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள் தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்

👇🌎 Website Link's முக்கிய இணைப்புகள் 🌎👇

Top Post Ad

Below Post Ad