பாண்டவர்களின் எதிரியான துரியோதனனுக்கு இருக்கும் கோவில் பற்றி தெரியுமா ?


பாண்டவர்களின் எதிரியான துரியோதனனுக்கு இருக்கும் கோவில் பற்றி தெரியுமா ?

மகாபாரதத்தில் பாண்டவர்களுக்கு முதல் எதிரியாக இருந்தவன் துரியோதனன். இன்றளவும் மகாபாரத கதையை அறிந்த பலர் இவனை வெறுக்கத்தான் செய்கின்றனர். ஆனாலும் இவனை தெய்வமாக வணங்கிக்கொண்டிருக்கிறார்கள் ஒரு குறிப்பிட்ட பகுதியை சேர்ந்தவர்கள். வாருங்கள் இது குறித்து விரிவாக பார்ப்போம்.

கேரளாவில் உள்ள கொல்லம் என்னும் ஊருக்கு அருகே தான் துரியோதனனுக்கு ஒரு கோவில் இருக்கிறது. தென்னிந்தியாவில் துரியோதனனுக்கு இருக்கும் ஒரே கோவில் இது மட்டும் தான்.
ஒரு சிறிய குன்றின் மீது அமைந்துள்ள இந்த கோவிலின் பெயர் பொருவழி பெருவிருத்தி மலநாட‌ கோவில்

இந்த ஊரில் துரியனுக்கு கோவில் அமைந்ததற்கு பின்பு ஒரு வரலாறு உள்ளது. பாண்டவர்களை தேடி துரியோதனன் அலைந்து திரிகையில் இந்த ஊருக்கு வந்துள்ளான். அப்போது அவன் மிகவும் களைப்புற்று இருந்ததால் ஒரு குருக்கள் வீட்டிற்கு சென்று குடிக்க தண்ணீர் கேட்டுள்ளான். அவன் தாகத்தை தீர்த்ததோடு அல்லாமல் அவனை நன்கு உபசரித்துள்ளனர் அங்கு இருந்தவர்கள்.

இதனால் துரியன் மனம் மகிழ்ந்து அந்த ஊருக்கு நிறைய நல்ல காரியங்களை செய்துள்ளான். அதோடு இப்போது துரியோதனனுக்கு கோவில் இருக்கும் அந்த குன்றின் மீது அமர்ந்து அந்த ஊரின் நலனுக்காக தவம் புரிந்துள்ளான். அவன் அன்று செய்த நல்லவைகளையும் அந்த ஊருக்காக அவன் புரிந்த தவத்தையும் போற்றும் வகையில் அவனுக்கு அங்கு கோவில் கட்டி இன்றளவும் அந்த ஊர் மக்கள் அவனுக்குரிய மரியாதையை செய்துவருகின்றனர்.

Writing by Goldenvimal ♥♥♥♥♥ இவன் விமல் உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள் தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்

👇🌎 Website Link's முக்கிய இணைப்புகள் 🌎👇

Top Post Ad

Below Post Ad