பறவைகளிலிருந்து வெளிப்படும் அதிர்வுகள்...!பறவைகளிலிருந்து வெளிப்படும் அதிர்வுகள்...!
  பறவைகள் மனிதர்களுக்குப் பிடித்தமானவை. அதனாலேயே பலரும் தங்கள் வீடுகளில் தனியாக ஒரு குடில் அமைத்து பறவைகளை வளர்த்து வருகிறார்கள். மனதுக்கு மகிழ்ச்சி தருகிறது என்பதற்காகவே பறவையை வளர்க்க ஆரம்பித்தார்கள்.

✼ அவ்வாறு நாம் வளர்க்கும் பறவைகள் நமக்கு நன்மை செய்யக் கூடியவைகளும் உண்டு. நாம் எந்தெந்த பறவைகள் வளர்ப்பதன் மூலம் நமக்கு நல்ல பலன்களும், தீய பலன்களும் ஏற்படுகின்றன என்பதை தெரிந்து கொள்வோம்.

கிளி :


✼ சாத்வீக அதிர்வுகளை வெளிப்படுத்தும். இதன் அதிர்வுகள் மூளைக்கு நல்லதாகும். அறிவை வளர்க்கும். அதனால் கிளி வீட்டில் வளர்க்கப்படுகிறது.

மயில் :

✼ சாத்வீக அதிர்வுகளை வெளிப்படுத்தும். மயில் இறகு இருக்கும் இடத்தை தீய சக்திகள் அண்டாது. மயில் இறகை பு ஜை அறையில் வைக்கும் நோக்கமே நல்ல அதிர்வுகளைப் பெறுவது தான்.

புறா :

✼ சாத்வீக அதிர்வுகளை வெளிப்படுத்தும். அதனால் வீட்டில் வளர்க்கப்படுகிறது.

காகம் :

✼ தீய அதிர்வுகளை வெளிப்படுத்தும். இறந்தவர்களின் பிரதிநிதியாகும். கிரகங்களின் சனியின் வாகனமாகும். காக்கைக்கு உணவு வைத்தால் இறந்து போன நம் முன்னோர்களுக்கு உணவு படைத்தற்கு சமமாகும்.

சிட்டுக்குருவி :

✼ இதை கிராமங்களில் அடைக்கவான் குருவி என்று அழைப்பார்கள். இது ராகு கிரகத்தின் பிரதிநிதியாகும். சிட்டுக்குருவி வீட்டிற்குள் கூடு கட்டினால் ராகுவால் உண்டாகும் தோஷம் எல்லாம் விலகி விட்டதாக அர்த்தம். முஸ்லிம்கள் தோஷ பரிகாரமாக சிட்டுக்குருவிகளை வாங்கி, அதை தங்கள் உடலில் உள்ள ஏழு பாகங்களைப் தொட்டு பறக்கவிடுகிறார்கள், சிட்டுக்குருவிக்கு உளவு தானியங்களை உணவாக வைத்தால் ராகுவால் உண்டாகும் தோஷங்கள் எல்லாம் விலகும்.

சேவல் :

✼ சாத்வீக அதிர்வுகளை வெளிப்படுத்தும். அதனால் வீடுகளில் வளர்க்கப்படுகிறது.

ஆந்தை :

✼ தீய அதிர்வுகளை வெளிப்படுத்தும். இதன் இறகுகள், எலும்புகள் மந்திரவாதிகளால் பயன்படுத்தப்படுகிறது. இதைக் காண்பது அபசகுணமாகும்.

பருந்து :

✼ சாத்வீக அதிர்வுகளை வெளிப்படுத்தும். கருடன் விஷ்ணுவின் வாகனமாகும். கருட தரிசனம் நன்மை பயக்கும்.

✼ பொதுவாக கொண்டையுள்ள பறவைகள் சாத்வீக அதிர்வுகளை வெளிப்படுத்தும். கொண்டை உள்ள பறவைகள் மயில், சேவல், கிளி போன்றவையாகும். சில புறாக்களுக்கும் தலையில் கொண்டை இருக்கும்.

✼ பெரும்பாலும் வீடுகளில் சாத்வீக அதிர்வுகளை வெளிப்படுத்தும் பறவைகளே வளர்க்கப்படுகின்றன. பறவைகளை வேட்டையாடுவது பாவமாகும். தெய்வகுற்றமாகும்.   நல்லவனோ கெட்டவனோ !!!
 நான் நானாகவே  இருக்க விரும்புகிறேன் !
யாருக்காகவும் நான் மாற தயாரில்லை 
   பிடித்திருந்தால்  கூட இரு  
   பிடிக்கலையா  போய்கிட்டே இரு   
  
இவன் விமல்


Writing by Goldenvimal ♥♥♥♥♥ இவன் விமல் உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள் தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்

👇🌎 Website Link's முக்கிய இணைப்புகள் 🌎👇

Top Post Ad

Below Post Ad