சுவையான காய்கறி கோலா உருண்டை!!

சுவையான காய்கறி கோலா உருண்டை!!


 காய்கறி கோலா உருண்டைக் குழம்பு செய்வது மிகவும் எளிமையானது. இப்போது இந்த காய்கறி கோலா உருண்டைக் குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையானப் பொருட்கள் :

கேரட் - 50 கிராம் (பொடியாக நறுக்கவும்)

பீன்ஸ் - 50 கிராம் (பொடியாக நறுக்கவும்)

உருளைக்கிழங்கு - 150 கிராம் (நறுக்கியது)

முட்டைகோஸ் - 50 கிராம் (பொடியாக நறுக்கவும்)

பச்சைப் பட்டாணி - 50 கிராம்

பெரிய வெங்காயம் - 4 (பொடியாக நறுக்கவும்)

பெரிய தக்காளி - 3 (பொடியாக நறுக்கவும்)

இஞ்சி-பு ண்டு விழுது - 1 டேபிள்ஸ்பு ன் 

இலவங்கப்பட்டை, கிராம்பு, ஏலக்காய் - தலா 4

மிளகாய்த்தூள் - 1 டேபிள்ஸ்பு ன்


மஞ்சள் தூள் - 1 டீஸ்பு ன்

கரம்மசாலாத் தூள் - 1 டேபிள்ஸ்பு ன்

கொத்தமல்லித்தழை - தேவையான அளவு

தேங்காய்த்துருவல் - 1 மூடி (அரைத்தது)

சோம்புத்தூள் - 2 டீஸ்பு ன்

பச்சை மிளகாய் - 2 (இரண்டாக நறுக்கிக் கொள்ளவும்)

எண்ணெய் - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

தண்ணீர் - தேவையான அளவு

செய்முறை : 

🍪 முதலில் ஒரு பாத்திரத்தில் உருளைக்கிழங்குடன் சிறிதளவு உப்பு சேர்த்து அடுப்பில் வைத்து வேகவிட்டு இறக்குவதற்கு முன், மற்ற காய்களைச் சேர்த்து 2 நிமிடம் கழித்து தண்ணீரை வடித்து வைத்துக் கொள்ளவும். 

🍪 பின்னர் அதனுடன் தலா 2 சிட்டிகை மிளகாய்த்தூள், கரம்மசாலாத் தூள், சோம்புத்தூள், பாதியளவு வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லித்தழை சேர்த்துப் பிசைந்து, சின்னச் சின்ன உருண்டைகளாக்கிக் கொள்ளவும். இதை எண்ணெயில் பொரித்து எடுத்து வைக்கவும்.

🍪 பிறகு வாணலியில் எண்ணெய் ஊற்றி இலவங்கப்பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டுத் தாளித்து மீதம் இருக்கும் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். பின் இதனுடன் இஞ்சி-பு ண்டு விழுது, தக்காளிச் சேர்த்து வதக்கவும். 

🍪 பின் இதனுடன் மீதம் இருக்கும் மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், சோம்புத்தூள், கரம்மசாலாத் தூள் சேர்க்கவும். பிறகு, அரைத்த தேங்காய் சேர்த்து வதக்கி தேவையான அளவு தண்ணீர், உப்பு சேர்த்து வேக விடவும். பிறகு கலவையின் பச்சை வாசனைப் போனதும், பொரித்த காய்கறி உருண்டைகளைப் போட்டு ஒரு கொதி வந்ததும் கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறினால், சத்தான காய்கறி கோலா உருண்டை குழம்பு தயார்!
Writing by Goldenvimal ♥♥♥♥♥ இவன் விமல் உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள் தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்

👇🌎 Website Link's முக்கிய இணைப்புகள் 🌎👇

Top Post Ad

Below Post Ad