*காதலை இசைக்க காத்திருக்கிறேன்*


*காதலை இசைக்க காத்திருக்கிறேன்*

உன்னை காணாத 
தருணங்களில்
உடைந்து 
விடுவதில்லை 
நான் –
உன்னை கண்ட 

பொழுதுகளை 
எண்ணி
உருகிடவே நேரம் போதாததால்…

நீ புன்னகைத்தால்
மயங்காமல் 
வருந்துகிறேன்-
உன் மௌனங்களின் அழகிற்கே
சிதைந்து போனவன்
இதனால் 
என்னாவேனோ 
என்று…

நிதமும் உன்னிடம் தெறிக்கும் 
அழகுகளை
என்னுள் சுமந்து 
சுவைப்பதே போதும்
நானும் 
அழகாகிவிடுவேன் போலும்..

உன்னை காண்பேன் என்ற எண்ணமே
தித்திக்க வைக்கும்
நான் தனித்திருக்கும் ஒவ்வொரு 
கணத்தையும்..

என் ஏக்கங்களின் 
தயக்கங்களின்
சுமை பெருகப் 
பெருக
இன்னும் சொல்லாத என் காதலில்
சுவை கூடி 
வழிந்தோடும்..

மூங்கில் காட்டின் தீ போல
உரக்க சொல்வதல்லகாதல்,
மூங்கிலின் காதில் சொல்லும்
இசையின் 
ரகசியமாய்,
வாசிக்க 
காத்திருக்கிறேன்…!!!

*இனிய இரவு வணக்கம் இவன் விமல்*


Writing by Goldenvimal ♥♥♥♥♥ இவன் விமல் உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள் தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்

👇🌎 Website Link's முக்கிய இணைப்புகள் 🌎👇

Top Post Ad

Below Post Ad