திண்டுக்கல் வரலாறு

திண்டுக்கல் வரலாறுவரலாறு
திண்டுக்கல் மாவட்டத்தின் வரலாறு அங்குள்ள கோட்டையை சுற்றி அமைந்துள்ளது. 17 மற்றும் 18ம் நூற்றாண்டுகளில் திண்டுக்கல் கோட்டை மராட்டியர்கள் மற்றும் ஹைதர் அலியின் படைகளமாக விளங்கியது. 1767, 1783, 1790 வருடங்களில் 3 முறை ஆங்கிலேயர்கள் இந்த கோட்டையை கைப்பற்றினர். பின்னர் ஹைதர் அலியிடம் கோட்டையை ஆங்கிலேயர்கள் திருப்பி தந்தனர். இங்கு முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ மக்களின் தொகை அதிகமாகவே இருந்தது.அமைப்பு : கடல் மட்டத்தில் இருந்து 268மீ உயரத்தில் அமைந்துள்ளது.மக்கள் தொகை : 2001ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி 196619 ஆகும். ஆண்களும் பெண்களும் சம விகிதத்தில் உள்ளனர். கல்வியறிவு பெற்றவர்கள் 79 சதவீதம் ஆகும். கல்வியறிவு பெற்ற ஆண்கள் - 84%, பெண்கள் - 74%.


தொழிற்சாலைகள்


திண்டுக்கல்தோல் பதப்படுத்தும் தொழிலுக்கு பெயர் பெற்றதாகும். டெக்ஸ்டைல், நூற்பாலை தொழிலில் கோவைக்கு அடுத்தபடியாக திண்டுக்கல் உள்ளது. திண்டுக்கல் பூட்டு உற்பத்திக்கும் பெயர் பெற்றதாகும். திண்டுக்கல்லில் இருந்து 11 கி.மீ தொலைவில் உள்ள சின்னாளபட்டியில் கைத்தறி தொழில் சிறந்து விளங்குகிறது. மேலும் சுங்குடி, கலை நயமிக்க பட்டு புடவைகள் ஆகியவையும் இங்கு உற்பத்தி செய்யப்படுகிறது. அதனால் இந்த ஊர் சின்னாளபட்டு எனவும் அழைக்கப்படுகிறது. திண்டுக்கல் மார்க்கெட், வெங்காயம் மற்றும் நிலக்கடலை மொத்த விற்பனைக்கு முக்கிய இடமாகும்.


புகையிலை : ஆங்கிலேயர்கள் ஆட்சி காலம் முதலே திண்டுக்கல் புகையிலை வர்த்தகத்தின் முக்கிய இடமாக விளங்குகிறது. ஆங்கிலேயர்கள் காலத்தில் 2 சிகரெட் தயாரிக்கும் தொழிற்சாலைகள் இங்கு இருந்தன. இங்கு தயாரிக்கப்பட்ட சிகரெட்டுகள் பிரிட்டனுக்கு கொண்டு செல்லப்பட்டது. தற்போதும் புகையிலை வர்த்தக மையமாக திகழ்கிறது. அங்கு விலாஸ் புகையிலை, ரோஜா சுபாரி, போன்ற புகழ்பெற்ற நிறுவன புகையிலைகள் இங்கு தயாரிக்கப்பட்டு இந்தியா முழுவதும் விற்பனை செய்யப்படுகிறது.


பேரணை மற்றும் சிறுமலை மலைப்பகுதி திண்டுக்கல்லின் அருமையான சுற்றுலா தலங்களாக விளங்குகின்றன. பாலார் பொருண்டலார், வரதமாநதி, பரப்பலாறு, மருதநதி ஆகிய 4 அணைகள் திண்டுக்கல்லில் உள்ளன. நிலக்கோட்டை பித்தளை பாத்திரங்கள் தயாரிப்பிற்கு புகழ் பெற்றதாகும். மேலும் இங்கு திராட்சை மற்றும் பூக்கள் பயிரிடப்படுகின்றன. ஒட்டன்சத்திரம் காய்கறி வர்த்தகத்திற்கும், வத்தலகுண்டு தக்காளி வர்த்தகத்திற்கு முக்கிய இடங்களாகும். மேலும் வெண்ணை ஏற்றுமதியிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.திண்டுக்கல் சிறப்புதிண்டுக்கல் மாவட்டத்தின் வரலாறு அங்குள்ள கோட்டையை சுற்றி அமைந்துள்ளது. 17 மற்றும் 18ம் நூற்றாண்டுகளில் திண்டுக்கல் கோட்டை மராட்டியர்கள் மற்றும் ஹைதர் அலியின் படைகளமாக விளங்கியது. 1767, 1783, 1790 வருடங்களில் 3 முறை ஆங்கிலேயர்கள் இந்த கோட்டையை கைப்பற்றினர். பின்னர் ஹைதர் அலியிடம் கோட்டையை ஆங்கிலேயர்கள் திருப்பி தந்தனர். இங்கு முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ மக்களின் தொகை அதிகமாகவே இருந்தது.

அமைப்பு : கடல் மட்டத்தில் இருந்து 268மீ உயரத்தில் அமைந்துள்ளது. மக்கள் தொகை : 2001ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி 196619 ஆகும். ஆண்களும் பெண்களும் சம விகிதத்தில் உள்ளனர். கல்வியறிவு பெற்றவர்கள் 79 சதவீதம் ஆகும். கல்வியறிவு பெற்ற ஆண்கள் - 84%, பெண்கள் - 74%.பரப்பளவு : 6068 சதுர கிலோமீட்டர்
மக்கள் தொகை : 1,96,619 


Writing by Goldenvimal ♥♥♥♥♥ இவன் விமல் உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள் தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்

👇🌎 Website Link's முக்கிய இணைப்புகள் 🌎👇

Top Post Ad

Below Post Ad