உங்க முகத்தில் எண்ணெய் ரொம்ப வழிகிறதா? இதை ட்ரை பண்ணுங்க சூப்பர் பலன் கிடைக்கும்!!

உங்க முகத்தில் எண்ணெய் ரொம்ப வழிகிறதா? இதை ட்ரை பண்ணுங்க சூப்பர் பலன் கிடைக்கும்!!

பொதுவாக வெயில் அதிகம் இருந்தாலே, அதிக வியர்வையின் காரணமாக முகத்தில் எண்ணெய் வழிவது போன்று இருக்கும். அதிலும் எண்ணெய் பசை சருமத்தினருக்கு என்றால் சொல்லவே வேண்டாம், நிலைமை மிகவும் படு மோசமாக இருக்கும்.

இதனால் அவர்களுக்காக சில ஆயுர்வேத டிப்ஸ்…

தயிர் மற்றும் மஞ்சள் பேஸ் மாஸ்க்

தயிர் – 1/2 கப்

மஞ்சள் தூள் – 1 ஸ்பூன்

தேன் – 1 ஸ்பூன்


எலுமிச்சை சாறு ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து, முகம், கழுத்து, கை, கால்களில் தடவி நன்கு காய வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

இதனால் சருமத்தில் சுரக்கும் அதிகப்படியான எண்ணெய் பசை கட்டுப்படுத்தப்பட்டு, ப்ளீச்சிங் செய்த தோற்றத்தைக் கொடுக்கும்.

பப்பாளி

பப்பாளியை அரைத்து முகத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து, பின் நீரில் கழுவ வேண்டும். இதனால் பப்பாளி சருமத்துளைகளை ஆழமாக சுத்தம் செய்வதோடு, எண்ணெய் சுரப்பையும் சரிசெய்ய உதவும்.

ஆரஞ்சு

ஆரஞ்சு பழத்தில் உள்ள வைட்டமின் சி மற்றும் கனிமச்சத்துக்கள், சருமத்தில் உள்ள எண்ணெய் பசையைக் கட்டுப்படுத்த உதவியாக இருக்கும். அதற்கு ஆரஞ்சு பழத்தை பாதியாக வெட்டி, சாறு எடுத்து, முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து நீரில் கழுவ வேண்டும்


Writing by Goldenvimal ♥♥♥♥♥ இவன் விமல் உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள் தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்

👇🌎 Website Link's முக்கிய இணைப்புகள் 🌎👇

Top Post Ad

Below Post Ad