உங்கள் உடலில் தீப்பிடித்து விட்டால் உடனடியாக இதை செய்திடுங்கள்!

உங்கள் உடலில் தீப்பிடித்து விட்டால் உடனடியாக இதை செய்திடுங்கள்!
தீ விபத்து ஏற்பட்டால் பதற்றப்படாமல் நிதானமாக செயல்பட்டு தீயை அணைக்க வேண்டும்.
பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெயால் தீப்பற்றி இருந்தால் அதன் பாதிப்பு ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம்.
அதே போல் தீப்பற்றும் போது அணிந்திருக்கும் ஆடையும், பாதிப்பின் தீவிரத்தை முடிவு செய்கிறது.
தீப்பற்றிக் கொண்டால் என்னதான் செய்ய வேண்டும்?
துணியில் தீப்பற்றிக் கொண்டால் அங்குமிங்கும் ஓடக்கூடாது. உடனே நின்று உடைகளை களைந்து தீ அணையும் வரை மண்ணில் உருளவும்.
கம்பளி போன்ற கனமான போர்வையை உடலில் சுற்றி, தீயை அணைத்து விட வேண்டும்.
தீ விபத்து நேர்ந்தால், கூச்சலிட்டு மற்றவர்களின் உதவியை நாடுவது நல்லது. விபத்திற்குள்ளான நபர்களை, உடனடியாக மருத்துவ உதவிக்காக, அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்வது அவசியம்.
வீட்டில் தீ பிடித்து விட்டால்
வீட்டில் தீ பிடித்துவிட்டால் மூடிய கதவுகளை திறக்கும் முன்பு, அவற்றின் வெளிப்புறத்தில் தீ பற்றாததை உறுதிபடுத்தி கொள்வது அவசியம்.
வீட்டுக்கு வெளியே வந்தபின், மீண்டும் உள்ளே போகாமல், தீயணைப்பு வீரர்களை உடனே அழைப்பது புத்திசாலித்தனமாகும்.
சிறிய தீயை அணைக்க, அவசர காலத்திற்கு சமையல் சோடாவை பயன்படுத்தலாம்.
புகை எச்சரிக்கை கருவி
புகையானது விட்டத்தை நோக்கி பரவுவதால், புகையுணர்வு கருவியை உயரமான இடத்தில் பொருத்துவது நல்லது.
புகை எச்சரிக்கை கருவி பத்து ஆண்டுகளுக்கு மேல் பழுதாகிவிட்டால், புதிய கருவியை வாங்கி உபயோகிப்பது நல்லது.
தீயணைப்பு நிலையத்துக்கு தகவல்
தீ விபத்து நேர்ந்தால் அருகாமையில் உள்ள தீயணைப்பு நிலையம் மற்றும் காவல் நிலையத்திற்கு உடனடியாக தகவல் அளிக்க வேண்டும்.
இத்துறைகளின் தொலைபேசி எண்களை தெரிந்து வைத்திருப்பது அவசியமாகும்.
தீ விபத்து நேர்ந்த இடத்தின், தெளிவான முகவரியையும், விரைவாக வந்து சேர சரியான வழியையும் தெரிவிக்கவும்.
தீயணைப்பான் எச்சரிக்கை மணி கேட்டதும் வழி ஏற்படுத்தி கொடுக்கவும்.
தீயணைப்பு படை, நெருப்பை அணைக்கப் போராடும் போது, அவர்களை தொல்லை செய்யாதீர்கள்.
மக்கள் நெரிசல் அதிகரித்தால் தீயணைப்பு மற்றும் மீட்பு பணி தடைபடும் என்பது குறிப்பிடத்தக்கது

Writing by Goldenvimal ♥♥♥♥♥ இவன் விமல் உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள் தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

👇🌎 Website Link's முக்கிய இணைப்புகள் 🌎👇

Top Post Ad

Below Post Ad