உங்கள் பற்களில் படிந்திருக்கும் மஞ்சள் கரையை போக்கும் எளிய வீட்டுமுறை!   உங்கள் பற்களில் படிந்திருக்கும் மஞ்சள் கரையை போக்கும் எளிய          வீட்டுமுறை!
    பலரும் எதிர்கொள்ளும் சங்கோஜமான நிலை இது. சரியாக பல் துலக்கினாலும் கூட சிலருக்கு பற்களில் இருக்கும் மஞ்சள் கரை போகாது. அதிலும் பற்களின் உட்புறம் படியும் மஞ்சள் கரையை போக்க வேண்டும் என்றால் மருத்துவரிடம் தான் செல்ல வேண்டும் என்ற நிலை தான் நிலவுகிறது.

   ஆனால், நமது வீட்டில் இருக்கும் சில பொருட்களை வைத்தே எளிதாக பற்களில் படியும் மஞ்சள் கரையை போக்க முடியும். பற்களின் மஞ்சள் கரையை போக்க உதவும் இந்த வீட்டு முறை நிவாரணி பொருளை எப்படி தயாரிப்பது, அதற்கு என்னவெல்லாம் வேண்டும் என தொடர்ந்து பார்க்கலாம்….

   தேவையான பொருட்கள்:

பேக்கிங் சோடா டூத்பிரஷ் ஹைட்ரஜன் பெராக்ஸைடு உப்பு தண்ணீர் டென்டல் பிக் ஆண்டிசெப்டிக் மவுத்வாஷ்

   செயலாக்க முறை

முதலில் 1 டேபிள்ஸ்பூன் பேக்கிங் சோடாவுடன், 1/2 டீஸ்பூன் உப்பை சேர்த்து ஒரு கப்பில் கலந்துக் கொள்ளவும்.பிறகு தண்ணீரில் நனைத்த டூத்பிரஷ் கொண்டு பற்களில் மெல்ல தேய்த்து, துப்புங்கள். இதை தொடர்ந்து ஐந்து முறை செய்ய வேண்டும்.
செயலாக்க முறை

ஒரு கப் ஹைட்ரஜன் பெராக்ஸைடு மற்றும் அரை கப் தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ளவும். இதை ஒரு நிமிடம் வாயில் கொப்பளிக்க வேண்டும். கொப்பளித்த பிறகு குளிர்ந்து நீரில் ஒரு முறை வாய் கொப்பளியிங்கள்.

   செயலாக்க முறை 3

டென்டல் பிக் பயன்படுத்தி பற்களில் மஞ்சள் கரை படிந்திருக்கும் இடத்தில் தேய்க்கவும். தேய்க்கும் போது ஈறுகளில் படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். இல்லையேல் ஈறுகளில் சேதம் அல்லது எரிச்சல் உண்டாக வாய்ப்புகள் உண்டு.

   செயலாக்க முறை 4

ஆண்டிசெப்டிக் மவுத்வாஷ் கொண்டு இரண்டு நாளுக்கு ஒருமுறை வாய் கொப்பளித்து வர வேண்டும். இப்படி செய்து வந்தால் பற்களில் இருக்கும் மஞ்சள் கரையை எளிதாக போக்கிவிடலாம்.

தக்காளி, ஸ்ட்ராபெர்ரி

தக்காளி மற்றும் ஸ்ட்ராபெர்ரி-ல் வைட்டமின் சி இருக்கின்றன. இது பற்களின் ஆரோக்கியத்திற்கு நல்லது. மஞ்சள் கரை படிந்திருக்கும் இடத்தில் இந்த பழங்களை தேய்த்து கொடுப்பதால் கடினமாக இருக்கும் மஞ்சள் கரை இலகுவாகும்.

சிட்ரிக் பழங்கள்!

எலுமிச்சை, ஆரஞ்சு போன்ற சிட்ரிக் பழங்களின் தோல்களும் கூட பற்களில் படிந்திருக்கும் மஞ்சள் கரையை போக்க உதவுகிறது....


Writing by Goldenvimal ♥♥♥♥♥ இவன் விமல் உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள் தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

👇🌎 Website Link's முக்கிய இணைப்புகள் 🌎👇

Top Post Ad

Below Post Ad