மிஸ் பண்ணாம தெரிஞ்சுகோங்க! வெற்றிகரமான வாழ்க்கைக்கான ஐந்து காலை பழக்கங்கள்!

மிஸ் பண்ணாம தெரிஞ்சுகோங்க!
வெற்றிகரமான வாழ்க்கைக்கான ஐந்து காலை பழக்கங்கள்! 


       உங்களின் காலை பழக்கவழக்கங்கள் தான் நீங்கள் நாள் முழுவதும் எப்படி இருக்கப் போகிறீர்கள் என்பதை தீர்மானிக்கிறது. சர்வே ஒன்றில் அதிகாலையில் வேகமாக எழும் நபர்களின் மூளை மற்றவர்களை விட நன்கு செயல்படுவதாக தெரிய வந்துள்ளது.
மேலும் பெரும்பாலான தலைவர்களும் தங்களின் வாழ்க்கையில் நல்ல நிலையைப் பெற அதிகாலையில் வேகமாக எழும் பழக்கங்களைக் கொண்டதோடு,வேறுசில ஆரோக்கியமான பழக்கங்களைக் கொண்டதனால் தான்.
எனவே நீங்களும் உங்கள் வாழ்க்கையில் நல்ல நிலையை அடைய, நாள் முழுவதும் சுறுசுறுப்பாக செயல்பட, விழிப்புணர்வுடன் இருக்க, காலையில் எழுந்ததும் மேற்கொள்ள வேண்டிய சில பழக்கவழக்கங்கள் உள்ளன. இங்கு அவை பட்டியலிடப்பட்டுள்ளன.

அதிகாலையில் எழவும்
அதிகாலை என்றதும் பலரும் காலை 7 மணியைத் தான் சொல்கிறார்கள் என்று நினைப்போம். ஆனால் அதிகாலை என்பது காலை 4.30 அல்லது 5 மணியாகும். இந்நேரத்தில் எழுவதால் உங்கள் மனம் மற்றும் உடல் இரண்டுமே மேம்படும். மேலும் அன்றைய நாளில் உங்களது இலக்கை அடைய சிந்திப்பதற்கு போதிய அளவு நேரம் கிடைக்கும்.

வெளியே செல்லவும்
அதிகாலையில் எழுந்ததும் காபி, டீ குடித்துக் கொண்டு உட்காராமல், அதிகாலை சூரியக்கதிர்கள் நம் உடலின் மேல் படுமாறு வாக்கிங், ரன்னிங், ஜாக்கிங் போன்ற செயல்களில் ஈடுபட வேண்டும். மேலும் அதிகாலையில் நல்ல சுத்தமாக காற்றை சுவாசிக்கலாம். இப்படி செய்வதன் மூலம் உங்கள் உடலில் ஆற்றல் அதிகரித்து, வேலையில் உங்களின் உற்பத்தி திறன் அதிகரிக்கும்.

குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடவும்
இவ்வுலகில் குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடுவோரின் எண்ணிக்கை மிகவும் குறைவு. இதனால் தான் பல குடும்பத்தில் பிரச்சனைகள் எழுகின்றன. இதன் காரணமாக மன அழுத்தமும் அதிகரிக்கிறது. ஆகவே அதிகாலையில் வேகமாக எழுவதன் மூலம் உங்களுக்கு நீண்ட நேரம் கிடைக்கும். இந்நேரத்தில் குடும்பத்தினருடன் நன்கு சந்தோஷமாக பேசி, விளையாடிக் கொண்டே பொறுமையாக அலுவலகத்திற்கு கிளம்பலாம். இதனால் நீங்கள் மன அழுத்தத்திற்கு உள்ளாவது தடுக்கப்படும்.

உலக நடப்புகளைத் தெரிந்து கொள்ளவும்
எப்போதும் வேலை, வீடு என்று மட்டும் இருக்காமல், உலகில் என்ன நடக்கிறது என்பதையும் காலையில் தெரிந்து கொள்ளுங்கள். அதற்கு செய்தித்தாள்களை வாங்கி ஒரு 1/2 மணிநேரம் படியுங்கள். உலகில் என்ன நடக்கிறது என்பதைத் தெரியாமல் வாழ்வது மிகவும் கடினம். எனவே புத்திசாலித்தனமாக நடந்து கொள்ளுங்கள்.

குறிப்புக்களை எடுங்கள்
அதிகாலையில் 5 மணிக்கெல்லாம் எழுந்துவிட்டால், நிச்சயம் உங்களுக்கு போதிய அளவு நேரம் கிடைக்கும். அந்நேரத்தில் ஒரு 10 நிமிடம் அன்றைய நாளில் என்ன ஸ்பெஷல், என்ன செய்ய வேண்டும் என்பதை யோசித்து குறிப்புக்களை எடுத்துக் கொள்ளுங்கள். இதனால் அன்றைய நாளில் நீங்கள் செய்ய வேண்டிய உங்களது வேலைகள் அனைத்தும் பதற்றமின்றி முழுமையடையும்.

குறிப்பு
இப்படி மேற்கூறிய பழக்கங்களை ஒருவர் தினந்தோறும் மேற்கொண்டு வந்தால், நிச்சயம் பல குடும்ப பிரச்சனைகள், அலுவலகப் பிரச்சனைகள் மற்றும் உடல் நல பிரச்சனைகளைத் தடுத்து, ஆரோக்கியமான மற்றும் சந்தோஷமான வாழ்க்கை வாழ முடியும்


Writing by Goldenvimal ♥♥♥♥♥ இவன் விமல் உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள் தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

👇🌎 Website Link's முக்கிய இணைப்புகள் 🌎👇

Top Post Ad

Below Post Ad