இரவில் தூங்கும் முன் இதை செய்தால் அதிர்ஷ்டமாம் சாஸ்திரங்கள்:

இரவில் தூங்கும் முன் இதை செய்தால் அதிர்ஷ்டமாம் சாஸ்திரங்கள்: தூங்குவதன் மூலம் உடலுக்கு ஓய்வு கிடைக்க மட்டுமின்றி, அந்த நேரத்தில் வாழ்வில் அதிர்ஷ்டத்தை வரவழைக்கலாம் என்று சாஸ்திரங்கள் கூறுகிறது.

இரவில் தூங்குவதற்கு முன் ஒருவர் கட்டாயம் செய்ய வேண்டியதாக சாஸ்திரங்கள் கூறுவது இதோ!

உறங்குவதற்கு முன் என்ன செய்ய வேண்டும்?

இரவில் படுக்கும் முன் தலையணைக்கு அடியில் சோம்பில் நிரப்பிய ஒரு சிறிய பையை வைத்துக் கொண்டு தூங்க வேண்டும். இதனால் இரவில் கெட்ட கனவு வருவதை தடுக்கலாம்.


இரவில் படுப்பதற்கு முன், ஒரு வெண்கல சொம்பில் நீரை நிரப்பி, தலைக்கு பக்கவாட்டில் வைத்துக் கொண்டு, மறுநாள் காலையில் அந்நீரை செடிகளுக்கு ஊற்றினால் அதிர்ஷ்டம் அதிகரிக்குமாம்.

இரவில் தூங்கும் முன், நல்ல புத்தகத்தைப் படிக்க வேண்டும். மேலும் தென் திசையில் தலையை வைத்துக் கொண்டு தூங்கினால், இரவில் நல்ல ஆழ்ந்த தூக்கத்தைப் பெறலாம்.

இரவு நேரத்தில் மொபைலை கைக்கு எட்டாத தூரத்தில் வைத்துவிட்டு, 10 நிமிடம் தியானம் செய்தால், மனதை ஒருமுகப்படுத்தும் திறன் மற்றும் மூளையின் ஆற்றலை மேம்படுத்தலாம்.

இரவில் படுக்கும் முன், பாதங்களை வெதுவெதுப்பான நீரால் கழுவி விட்டு, கற்பூரத்தை பொடி செய்து தேங்காய் எண்ணெயுடன் கலந்து, குதிகாலில் தடவி தூங்கினால், நல்ல நிம்மதியான தூக்கம் கிடைக்கும்.

இரவில் தூங்கும் முன் குறைந்தது 15 நிமிடம் நடைப்பயிற்சியை செய்து, விஷ்ணு மந்திரத்தை சொன்னால், வாழ்க்கை சிறப்பாக இருக்குமாம்.
Writing by Goldenvimal ♥♥♥♥♥ இவன் விமல் உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள் தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்

👇🌎 Website Link's முக்கிய இணைப்புகள் 🌎👇

Top Post Ad

Below Post Ad