திங்கட்கிழமை வந்தாலே உங்களுக்கு ராெம்ப சோம்பேறித்தனமா இருக்கா? இத ட்ரை பண்ணுங்க…


திங்கட்கிழமை வந்தாலே உங்களுக்கு ராெம்ப சோம்பேறித்தனமா இருக்கா? இத ட்ரை பண்ணுங்க…
இங்கு நாள் முழுவதும் சுறுசுறுப்புடன் இருக்க காலையில் குடிக்க வேண்டிய பானங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
ஒரு நாளைக்கு காலை உணவு மிகவும் இன்றியமையாதது. நாம் சாப்பிடும் காலை உணவைப் பொறுத்து தான், அன்றைய தினத்தில் நாம் எவ்வளவு சுறுசுறுப்புடன் இருப்போம் என்பதே உள்ளது. ஆனால் நம்மில் பலர் காலை உணவைத் தேர்ந்தெடுப்பதில் பல தவறுகளை செய்வோம்.

குறிப்பாக பலருக்கு காலையில் ஆரோக்கியமான உணவைத் தயாரிக்க போதிய நேரம் கிடைக்காமல், ஏனோ தானோவென்று சமைத்து சாப்பிடுகிறோம். இப்படியே நீடித்தால், உடலுக்கு வேண்டிய சத்துக்கள் கிடைக்காமல் உடலில் சோம்பேறித்தனம் அதிகரித்து, நாள் முழுவதும் சுறுசுறுப்பாக செயல்பட தேவையான ஆற்றல் கிடைக்காமல் போகும்.
ஆகவே ஒவ்வொரு நாளும் சோம்பேறியாக இல்லாமல், சுறுசுறுப்பாக இருக்க காலையில் குடிக்க வேண்டிய சில பானங்கள் குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.

ஜூஸ் #1
தேவையான பொருட்கள்:
கேரட் – 2
பச்சை ஆப்பிள் – 2
செலரி – 3 தண்டு
ஆரஞ்சு – 1
பேரிக்காய் – 2

செய்முறை:
மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்தையும் துண்டுகளாக்கி மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்து, காலை உணவின் போது குடித்தால், உடலுக்கு வேண்டிய சத்துக்கள் கிடைத்து, நாள் முழுவதும் சுறுசுறுப்புடன் இருக்கலாம்.

ஜூஸ் #2
தேவையான பொருட்கள்:
சிவப்பு முட்டைக்கோஸ் – சிறிது
பேரிக்காய் – 2
எலுமிச்சை – 1/2

செய்முறை:
சிவப்பு முட்டைக்கோஸை பொடியாக நறுக்கி, அதனை மிக்ஸியில் போட்டு அரைத்து வடிகட்டி சாறு எடுத்துக் கொள்ள வேண்டும். பின் மிக்ஸியில் தனியாக பேரிக்காயை துண்டுகளாக்கி சேர்த்து நன்கு அரைத்து, முட்டைக்கோஸ் ஜூஸ் உடன் சேர்த்து, அதோடு எலுமிச்சை சாற்றினை பிழிந்து நன்கு கலந்து குடிக்க வேண்டும். இப்படி குடித்தால், அதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உடலில் இரத்த அளவை அதிகரித்து, நாள் முழுவதும் உடலுக்கு வேண்டிய ஆற்றலை கிடைக்கச் செய்யும்.

ஜூஸ் #3
தேவையான பொருட்கள்:
ஸ்ட்ராபெர்ரி – 2 கப்
தக்காளி – 2
கேரட் – 4
ஆரஞ்சு – 1

செய்முறை:
ஆரஞ்சு பழத்தை சாறு எடுத்துக் கொள்ள வேண்டும். பின் மிக்ஸியில் ஸ்ட்ராப்பெர்ரி, தக்காளி, கேரட் ஆகியவற்றை போட்டு நன்கு அரைத்து, ஆரஞ்சு பழச்சாறுடன் சேர்த்து கலந்து குடிக்க வேண்டும். இந்த ஜூஸில் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் போன்றவை உள்ளது. இதனால் இந்த ஜூஸ் உடலுக்கு ஒரு பாதுகாப்பு கவசத்தை உருவாக்கி, உடலை புத்துணர்ச்சியுடன் வைத்துக் கொள்ளும்

Writing by Goldenvimal ♥♥♥♥♥ இவன் விமல் உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள் தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

👇🌎 Website Link's முக்கிய இணைப்புகள் 🌎👇

Top Post Ad

Below Post Ad