நம் வீட்டில் நாம் அபசகுனமாக கருதும் சில மூடநம்பிக்கைகள்!

கண்ணாடி உடைவதில் இருந்து காக்காவின் வருகை வரை நாம் வீடுகளில் நம்பும் மூட நம்பிக்கைகள் பல இருக்கின்றன.,
மொபைலில் உலகை இயக்கி கொண்டிருக்கும் இந்த ஸ்மார்ட் போன் யுகத்தில் இன்றும் வீட்டில் கண்ணாடி உடைந்தால், விளக்கு தானாக அணைந்துபோனது என்றால் உடனே கேட்ட சகுனம் என கூறி புலம்புவார்கள். இன்னும் எத்தனை நாட்களுக்கு தான் தெளிவான காரணம் தெரியாத, காரணமே இல்லாமல் இந்த மூட நம்பிக்கைகளை நம்பிக் கொண்டிருக்க போகிறோம்…

மூட நம்பிக்கை #1
திறந்த ஜன்னல் வழியாக பறவை பறப்பது காண்பது கெட்ட சகுனம். இது மரணத்தை வெளிப்படுத்தும் சகுனம் என கருதப்படுகிறது.

மூட நம்பிக்கை #2
தானாக விளக்கு அணைந்தால் ஏதேனும் அபசகுனமாக நடந்துவிடும் என்பது பல காலமாக நம் வீடுகளில் நம்பப்படும் மூட நம்பிக்கை.

மூட நம்பிக்கை #3
தேனீக்கள் கடவுளிடம் இருந்து செய்தி கொண்டுவருவதாக நம்பப்படுகிறது, வீட்டில் தேனீக்கள் தங்கினால், வீட்டில் இருக்கும் யாருக்காவது மரணம் ஏற்படும் என நம்பப்படுகிறது.

மூட நம்பிக்கை #4
புதிய வீட்டிற்கு செல்லும் போது பழைய துடப்பத்தை எடுத்து செல்வது நல்லதல்ல. இது எதிர்வினை விளைவுகளை உண்டாக்கும் என கருதப்படுகிறது.

மூட நம்பிக்கை #5
வீட்டில் இருக்கும் கண்ணாடி உடைந்தால் வீட்டில் மரணம் அல்லது தீய சம்பவங்கள் நடக்கும் என நம்பப்படுகிறது.

மூட நம்பிக்கை #6
கடிகாரம் உடைவதும் மரணத்தை வெளிப்படுத்தும் மணி ஓசை என கருதப்படுகிறது. அதே போல, தானாக கடிகாரம் ஓடுவது நின்றாலும் கூட அது அபசகுனமாக தான் கருதபடுகிறது.

என்ன சொல்றது…
இவற்றுக்கு பின்னணியில் வேறு ஏதேனும் காரணங்கள் இருக்கலாம். காலப் போக்கில் அது காரணம் அறியப்படாத மூட நம்பிக்கையாக மாறி இருக்கலாம். ஆனால், இன்றைய அறிவியல் யுகத்திலும் இதை நம்பிக் கொண்டிருப்பது அவசியமற்றது.
Writing by Goldenvimal ♥♥♥♥♥ இவன் விமல் உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள் தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்