நமது பூஜை அறையில் எதை எதை வைக்கணும்? எதை வைக்கக்கூடாது?
இந்து மரபில் பூஜை அறை என்பது மிகவும் புனிதமானதாகக் கருதப்படுகிறது. அது தான் நம்முடைய இல்லத்துக்கு அமைதியையும் வளத்தையும் ஆரோக்கியத்தையும் தரக்கூடியது என்பதால், பூஜையறையை நாம் வடிவமைக்கும் போது, வாஸ்துவில் இன்னும் கொஞ்சம் கூடுதல் அக்கறை செலுத்துகிறோம்.
பார்த்து பார்த்து கட்டிய நம்முடைய பூஜை அறையில் என்னென்ன பொருட்களை வைக்க வேண்டும் என்றும் சில சம்பிரதாய முறைகள் உண்டு.
சில பொருட்களை பூஜை அறைக்குள்ளே அனுமதிக்கவே கூடாது. அதனால் வீட்டில் சஞ்சலங்கள் உண்டாகும். அப்படி என்னென்ன பொருட்களைத் தவிர்க்க வேண்டும்?
முக்கோண வடிவத்துக்குள் வரையப்பட்ட எந்த கடவுளின் படமும் பூஜையறையில் வைத்திருத்தல் கூடாது.
கோவில் கோபுரங்கள், ஸ்ரீசக்கரம் போன்றவற்றைத் தவிர்த்தல் வேண்டும்.
உடைந்த மற்றும் விரிசலுற்ற சிலைகளை வீட்டில் வைத்திருத்தல் கூடாது.
பூஜையின் போதோ அல்லது யோகா செய்யும் போதோ தரையைப் பார்த்து பூஜையறையில் அமர்ந்திருத்தல் கூடாது.
கடவுளின் படங்களுக்கு அருகில் இறந்தவர்களின் புகைப்படங்களை வைத்திருக்கக் கூடாது.
கடவுளின் படங்களோ, சிலைகளோ வீட்டின் நடு வாசலுக்கு நேராக இருக்கக்கூடாது.
இன்னொரு முக்கியமான விஷயம் பூஜையறையில் எப்போதும் தூங்கக் கூடாது.
பூஜையறையின் சுவரைக் குளியலறையின் சுவரோடு இணைத்துக் கட்டக்கூடாது.
Writing by Goldenvimal ♥♥♥♥♥ இவன் விமல் உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள் தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்