தலைமுடி ஆரோக்கியமாக இருக்க கோடையில் தயிரை எப்படி பயன்படுத்துவது?

       தலைமுடி ஆரோக்கியமாக இருக்க        கோடையில்  தயிரை எப்படி பயன்படுத்துவது ?
கோடைக்காலத்தில் தலைமுடி ஆரோக்கியமாக இருக்க தயிரைக் கொண்டு எப்படியெல்லாம் தலைமுடிக்கு மாஸ்க் போடலாம் என்பது குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.
கோடைக்காலத்தில் சூரியனின் புறஊதாக் கதிர்கள் தலைமுடியை நேரடியாக தாக்கும் போது, முடி அதிகளவு பாதிப்பிற்கு உள்ளாகும். சாதாரணமாகவே பலருக்கும் தலைமுடி பிரச்சனை அதிகம் இருக்கும். அதிலும் கோடையில் என்றால் சொல்லவா வேண்டும்.

எனவே கோடைக்காலத்தில் தலைமுடி ஆரோக்கியமாக இருக்க, சற்று அதிகளவு பராமரிப்பைக் கொடுக்க வேண்டியது அவசியம். அதிலும் வீட்டு சமையலறையில் உள்ள தயிரைக் கொண்டு தலைமுடிக்கு பராமரிப்பு கொடுத்தால், ஸ்கால்ப் குளிர்ச்சியாக இருக்கும்.
சரி, இப்போது கோடைக்காலத்தில் தலைமுடி ஆரோக்கியமாக இருக்க தயிரைக் கொண்டு எப்படியெல்லாம் தலைமுடிக்கு மாஸ்க் போடலாம் எனக் காண்போம்.

ஹேர் பேக் #1
3 டேபிள் ஸ்பூன் தயிருடன், 5 டேபிள் ஸ்பூன் வெந்தயப் பவுடர் மற்றும் 2 டேபிள் ஸ்பூன் வெங்காய சாறு சேர்த்து கலந்து, ஸ்கால்ப்பில் தடவி 1 மணிநேரம் ஊற வைத்து, பின் மைல்டு ஷாம்பு போட்டு அலச வேண்டும். இப்படி வாரத்திற்கு 2 முறை பின்பற்றினால், தலையில் உள்ள பொடுகுத் தொல்லை மற்றும் அரிப்பு உடனே நீங்கும்.

ஹேர் பேக் #2
ஒரு கையளவு மருதாணி இலை மற்றும் ஒரு கையளவு கறிவேப்பிலை ஆகியவற்றை ஒன்றாக அரைத்து, அத்துடன் தயிர் சேர்த்து கலந்து, தலையில் தடவி 30-45 நிமிடம் ஊற வைத்து, பின் மைல்டு ஷாம்பு போட்டு அலச வேண்டும். இதனால் தலைமுடி உதிர்வது மற்றும் நரைமுடி பிரச்சனை போன்றவற்றிற்கு தீர்வு கிடைக்கும்

ஹேர் பேக் #3
ஒரு கையளவு செம்பருத்தி இலையை தயிர் சேர்த்து கெட்டியாக அரைத்து, சிறு உருண்டைகளாக செய்து, கொதிக்கும் தேங்காய் எண்ணெயில் போட்டு 5-10 நிமிடம் ஊற வைத்து இறக்கி, ஸ்கால்ப்பில் படும்படி தடவி, 1 மணிநேரம் ஊற வைத்து, பின் அலச வேண்டும். இந்த எண்ணெயை தொடர்ச்சியாக பயன்படுத்தி வந்தால், தலைமுடி நன்கு வளரும்.

ஹேர் பேக் #4
தலைமுடி அதிகமாக உதிர்ந்தால், தயிருடன் மிளகுத் தூள் சேர்த்து கலந்து, ஸ்கால்ப்பில் படும்படி தடவி 10-15 நிமிடம் ஊற வைத்து, பின் அலசுங்கள்.

ஹேர் பேக் #5
நெல்லிக்காய் பொடியை தயிர் சேர்த்து பேஸ்ட் செய்து, ஸ்கால்ப்பில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து, மைல்டு ஷாம்பு போட்டு அலச, தலைமுடி கொட்டும் பிரச்சனையில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்.

ஹேர் பேக் #6.  
கோடையில் தலைமுடி அதிகம் வறட்சியுடன் இருந்தால், தயிருடன் ஆலிவ் ஆயில் சேர்த்து கலந்து, ஸ்கால்ப்பில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து, 1/2 மணிநேரம் கழித்து, மைல்டு ஷாம்பு போட்டு அலசுங்கள்....


Writing by Goldenvimal ♥♥♥♥♥ இவன் விமல் உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள் தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

👇🌎 Website Link's முக்கிய இணைப்புகள் 🌎👇

Top Post Ad

Below Post Ad