பெண்கள் நகை அணிவதில் இவ்வளவு நன்மைகளா?

பெண்கள் நகைகளை அணிவது ஆடம்பரத்திற்கு அல்லது அழகிற்கு என்று தான் பெரும்பாலானவர்கள் நினைக்கின்றனர்.
கொஞ்சம் செலவு வைத்தாலும் தங்க நகைகளை அணிவதால் கிடைக்கும் பலன்கள் ஏராளமாகும்.
அதிலும் திருமணமான பெண்கள் கட்டாயம் நகைகளை அணிந்து கொள்ளவேண்டும் என பெரியோர்கள் வலியுறுத்துவார்கள். பார்ப்பதற்கு மங்கலகரமாக இருப்பர் என்பது மட்டும் இதற்கு காரணமல்ல.
நம் உடலின் ஒவ்வொரு பகுதியிலும் அணியும் நகைகள் உடலில் உள்ள நரம்புகள் அனைத்தும் ஒன்று சேரும் புள்ளிகளில் அழுத்தம் கொடுக்கிறது. இதனால் உடலுக்கு ஏராளமான நன்மைகள் கிட்டுகிறது.

மோதிரம்
ஆண் மற்றும் பெண் இருபாலருக்கும் விரலில் மோதிரம் அணியும் பழக்கமுண்டு. மோதிர விரல் அணியும் போது அவ்விரலில் உள்ள நரம்பானது இதயத்தின் வழியாக மூளையுடன் இணைக்கப்படுகிறது. இதனால் மூளையின் சிந்திக்கும் திறனானது அதிகமாக இருக்கும்.
நடுவிரலில் மோதிரம் போடக்கூடாது எனக் கூறுவர். இதற்கு காரணம் மோதிர விரலில் இருந்து செல்லும் நரம்பானது மூளையினை இரண்டாக பிரிக்கிறது. இதனால் முடிவெடுக்கும் ஆற்றலானது குறையும்.

தோடு
பெண்கள் காதில் அணிந்தே இருப்பர். காதில் உள்ள ஒரு நரம்பானது கண் நரம்புடன் இணைக்கப்பட்டு இருக்கும். தோடு அணிவதால் கண் பார்வையானது மேம்படும்.

மூக்குத்தி
பெரும்பாலான பெண்கள் மூக்குத்தி குத்தி கொள்வது வழக்கமாகும். மூக்குத்தி போட்டு கொள்வதால் மாதவிடாய் காலத்தில் உண்டாகும் வலியானது குறையும். மேலும் குழந்தை பிறப்பானது எளிதாகும்.
ஒரு சிலர் மூக்குத்திக்கு பதிலாக வளையத்தினை போட்டு கொள்வர். இந்த வளையத்தினை போட்டு கொள்ளும் இடத்தில் உள்ள நரம்பானது கர்ப்பப்பையுடன் இணைக்கப்பட்டு இருக்கும்.

மாங்கல்யம்
மாங்கல்யத்தினை அணியும் போது நம்மை சுற்றியுள்ள நேர்மறையான எண்ணங்களை ஈர்த்து கொள்ளும். மாங்கல்யத்துடன் கூம்பு வடிவ இரு கிண்ணம் போன்ற அமைப்பானது இணைக்கப்பட்டு இருக்கும்.
அதன் குழிந்த பகுதியானது உடலை பார்த்தவாறு இருக்கும். அதன்கூம்பு வடிவ பக்கத்தின் மூலமாக நேர்மறை எண்ணங்களானது ஈர்க்கப்பட்டு உடலில் சேரும். மேலும் மாங்கல்யத்தினை அணியும் போது இரத்த ஓட்டமானது சீராகும்.

வளையல்
திருமணமான பெண்கள் கட்டாயம் வளையல் அணிவதற்கு அறிவுறுத்தப்படுவார்கள். வளையலை அணிவதால் உடலில் இரத்த ஓட்டமானது சீராகும்.
மேலும் உடலில் மின்காந்தம் ஆற்றலானது உருவாகி வளையலின் வடிவத்தின் மூலமாகவே உடல் முழுதும் அனுப்பப்படுகிறது.

நெற்றி சுட்டி
தற்போது திருமணத்தின் போதே பெண்கள் நெற்றிசுட்டியினை அணிகின்றனர். இதனை அணிவதால் உடலின் வெப்பநிலையானது சமநிலையில் இருக்கும்.

ஒட்டியாணம்
நெற்றிச்சுட்டியினை போன்றே ஒட்டியாணம் அணிவதும் வழக்கத்தில் இல்லை. ஆனால் ஒட்டியாணம் அணிவதன் மூலம் மாதவிடாய் சுழற்றியானது சீராகும். மேலும் வெள்ளியாலான ஒட்டியாணத்தினை அணிவதால் தொப்பை ஏற்படுவது தடுக்கப்படுகிறது.

கால் கொலுசு
காலையும் பாதத்தினையும் இணைக்கும் இடத்தில் கொலுசானது போடப்படுகிறது. இதன் மூலம் இணைப்புகள் ஏற்படும் வலி போன்றவை குறையும். மேலும் கொலுசில் இருந்து வரும் ஒலியானது நேர்மறையான எண்ணங்களை உருவாக்கும்.

மெட்டி
திருமணத்திற்கு பின் பெண்கள் அணியும் அணிகலனாகும். மெட்டி அணியும் விரலில் உள்ள நரம்பானது இதயத்தின் வழியே கர்ப்பப்பையுடன் இணைக்கப்பட்டு இருக்கும். இதனால் மாதவிடாய் சீராகி கரு உருவதற்கு வாய்ப்புகள் உண்டாகும். மேலும் இரத்த அழுத்தத்தினை குறைக்கும்.
Writing by Goldenvimal ♥♥♥♥♥ இவன் விமல் உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள் தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்