இன்னும் பசங்க டெவலப் ஆகணும், அப்டேட் பெண்கள் கூறும் அறிவுரை! இன்னும்  பசங்க  டெவலப் ஆகணும், அப்டேட் பெண்கள் கூறும் அறிவுரை!

தாமஸ் ஆல்வா எடிசன் விளக்கை கண்டுபிடிக்க முயற்சித்ததை விட, அதிக முறைகளில் நமது தமிழ் ஆண்கள் தங்கள் காதலை, தாங்கள் விரும்பும் பெண்ணிடம் வெளிப்படுத்த முயற்சித்திருப்பார்கள். ஆனால், அவர் கூட கடைசியாக ஒருமுறை வென்றுவிட்டார். நம்ம பசங்க இன்னமும் மனம் தளராது முயற்சித்துக் கொண்டே இருக்கிறார்கள்.

இதற்கு காரணம், “ஒவ்வொரு பொண்ணுக்கும் ஒவ்வொரு ஃபீலிங் மச்சி..”. என்னவெல்லாம் முயற்சி செய்யலாம் என்று யோசிக்கும் அதே தருணம், என்னவெல்லாம் செய்யக் கூடாது என்றும் தெரிந்துக் கொள்ள வேண்டும். முன்பு போல சென்டிமென்டாக பேசியெல்லாம் பெண்களை கவிழ்க்க முடியாது.


இன்னமும் ஆண்கள் காதலை வெளிபடுத்த, தங்களை ஈர்க்க பழைய முறைகளை முயற்சிப்பது எல்லாம் வீண். இயல்பாக நடந்துக் கொண்டாலே போதுமானது என பெண்கள் எதிர்பார்க்கிறார்கள். இனி ஆண்கள் தாங்கள் விரும்பும் பெண்கள் முன்பு எதெல்லாம் செய்யக் கூடாது என பெண்களே கூறிய சிலவற்றை பற்றி பார்க்கலாம்…

நானும் ரௌடி தான்
வெட்டி பந்தாக் காட்டிக் கொண்டு, நாங்கெல்லாம் யார் தெரியும்’ல, தர்ஷாயிடும் என்று உதார் விடுவதால், யாரும் உங்களை ஏறெடுத்தும் பார்க்க மாட்டார்கள். எனவே, நீங்கள் விரும்பும் பெண் முன்பு டீசண்டாக இல்லாவிட்டாலும், பில்டப் செய்து அலப்பறையைக் கூட்ட வேண்டாம்.

போக்கிரி
1990-களுடன் பெண்கள் போக்கிரித்தனம் செய்யும் ஆண்களை காதலிக்கும் முறைக்கு மூடுவிழா நடத்திவிட்டார்கள். இன்னமும் கூட போக்கிரித்தனம் செய்தால் பெண்கள் விரும்புவார்கள் என்று எண்ண வேண்டாம். கெத்து என்று வேண்டுமானால் கூறுவார்கள். அதற்காக காதலில் விழ இப்போது யாரும் தயாராக இல்லை.

ரெமோ
தமிழ் திரையுலக ரசிகர்கள் மட்டுமல்ல, பெண்களும் கூட இப்போது ரியாலிட்டியை எதிர்பார்க்கிறார்கள். உங்களுக்கு சுத்தமாக ஒத்துவராத ஸ்டைல்களை அவர்களுக்காக பின்பற்றி கோமாளி ஆகிவிட வேண்டாம்.

பரட்டை என்கிற அழகுசுந்தரம்
இப்போதெல்லாம் இயல்பாகவும், முகப்புத்தகத்தில் பெயரை மாற்றி வைத்துக் கொள்வது மிகவும் பிரபலம். இது எல்லாம் வேண்டாத வேலை. பெண்கள் கூட்டு சேர்ந்து நக்கலடிக்க மட்டுமே இந்த ஸ்டைல்ஸ் பெயர்கள் உதவுகிறது.

கண்ணா லட்டு தின்ன ஆசையா
பெண்களுக்கு கோவில் கட்டி கும்பிடாவிட்டாலும் சரி, இகழ்ந்து எதையும் செய்துவிட வேண்டாம். “பிட்டு படம்”, “பீப் சாங்” என அவர்கள் கடும் கோபத்தில் இருக்கிறார்கள். முக்கியமாக இரட்டை அர்த்த வசனங்கள் கூடவே கூடாது.

போங்கடி நீங்களும் உங்க காதலும்
சிலர் பெண்களை தங்கள் பக்கம் ஈர்க்கிறேன் என நியூட்டனின் மூன்றாம் விதியை பின்பற்றுவர்கள். பெண்களை தரம் குறைத்து பேசுவது, காதல் எல்லாம் எனக்கு புடிக்காது என்பது போல காட்டிக் கொள்வது, இவை எல்லாம் சுத்தமாக ஒத்துவராது. ஏற்கனவே ஆண்களுக்கு திருமணம் செய்துக் கொள்ள பெண்கள் பற்றாக்குறை நிலவி வருகிறது. ஏடாகூடமாக ஏதாவது செய்தால் காசிக்கு தான் செல்ல வேண்டி வரும்.

அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது
“ப்ப்ப்ப்ப்ப்பபபபபபபா…..” என்ற ரியாக்ஷன் எல்லாம் கொடுத்துவிடாதீர்கள். அதற்கு முன் முகத்தை கொஞ்சம் கண்ணாடியில் பார்த்துக் கொள்ள வேண்டும். ஏற்கனவே லட்சங்களில் சம்பாதிக்கும் ஐ.டி வாசிகளுக்கு மனம் முடித்து கொடுக்க பெற்றோர்கள் முண்டியடித்துக் கொண்டிருக்கிறார்கள். இதில் புதியதாக வங்கி அதிகாரிகள் வேறு வரிசையில் இருக்கிறார்கள். எனவே, முடிந்த வரை எதார்த்தமாக பழகி காதலில் விழ வைக்க முயற்சி செய்யுங்கள்.


Writing by Goldenvimal ♥♥♥♥♥ இவன் விமல் உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள் தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்

👇🌎 Website Link's முக்கிய இணைப்புகள் 🌎👇

Top Post Ad

Below Post Ad