ஓர் புதிய வழி வயிற்றில் வளர்வது ஆணா, பெண்ணா என்பதை அறிய உதவும் !!!ஓர் புதிய வழி வயிற்றில் வளர்வது ஆணா, பெண்ணா என்பதை அறிய உதவும் !!!


கருத்தரித்த பின் ஒவ்வொருவரின் மனதில் எழும் கேள்வி, நம் வயிற்றில் வளர்வது ஆண் குழந்தையா, பெண் குழந்தையா என்று தான். நம் நாட்டில் வயிற்றில் வளரும் குழந்தையை அறிந்து கொள்ள முனைவது சட்டத்திற்கு புறம்பானது. இருப்பினும் பல பெற்றோர்கள் நம் முன்னோர்கள் கூறும் சில வழிகளைக் கொண்டு, வயிற்றில் வளரும் குழந்தையைக் கணித்துக் கொண்டு தான் உள்ளார்கள்.

அக்காலத்தில் தான் பெண் குழந்தை என்றால் கருவை கலைத்துவிடுவார்கள். ஆனால் இக்காலத்தில் குழந்தை பிறப்பதே கஷ்டமான ஒன்றாக இருக்கையில், எந்த குழந்தையாக இருந்தாலும் பரவாயில்லை என்று தான் பல பெற்றோர்களும் நினைக்கிறார்கள். சமீபத்திய ஆய்வு ஒன்றில் வயிற்றில் வளரும் குழந்தையின் பாலினம் கர்ப்பிணிகளின் ஆரோக்கியத்தை பாதிப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. அந்த ஆய்வு குறித்து தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

ஆய்வு Brain, Behaviour And Immunity என்ற பத்திரிக்கையில் வெளிவந்த ஆய்வு ஒன்றில் குழந்தையின் பாலினத்திற்கும், கர்ப்பிணிகளின் உடல்நலத்திற்கும் தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
                            
ஓஹியோ பல்கலைகழகம்

ஓஹியோ பல்கலைகழகத்தில் உள்ள ஆய்வு மையத்தில், 80 கர்ப்பிணிகள் உடல்நலம் மற்றும் குழந்தையின் பாலினம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

பெண் குழந்தை

இந்த ஆய்வில் பெண் குழந்தைகளைச் சுமக்கும் பெண்களின் இரத்தத்தில் அழற்சி செல்களின் அளவு அதிகம் இருப்பது கண்டறியப்பட்டது.


அழற்சி செல்கள்

அழற்சி செல்கள் உடலில் அதிகம் இருந்தால், நோயெதிர்ப்பு சக்தி குறைந்து, அதனால் அடிக்கடி நோய்வாய்படக்கூடும்.

ஆண் குழந்தை

அதுவே ஆண் குழந்தைகளை சுமக்கும் பெண்களின் உடலில் அழற்சி செல்களின் அளவு குறைவாக இருப்பதும் தெரிய வந்தது.

ஆய்வு முடிவு

இந்த ஆய்வின் முடிவில் பெண் குழந்தைகளை சுமக்கும் பெண்கள், ஆண் குழந்தைகளை சுமக்கும் பெண்களை விட அதிக அளவில் நோய்களால் அவஸ்தைப்படக்கூடும் என்பது தெரிய வந்துள்ளதுWriting by Goldenvimal ♥♥♥♥♥ இவன் விமல் உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள் தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

👇🌎 Website Link's முக்கிய இணைப்புகள் 🌎👇

Top Post Ad

Below Post Ad