நமது மிக முக்கியமான மெசேஜ்களை இனி வாட்ஸ் அப்பில் பின்-அப் செய்யலாம்!
நமது  மிக முக்கியமான மெசேஜ்களை இனி வாட்ஸ் அப்பில் பின்-அப் செய்யலாம்!

     


நியூயார்க்: முக்கியமானவர்களின் உரையாடகளை மட்டும் பின்-அப் செய்து கொள்ளும் வகையில் புதிய வசதியை வாட்ஸ் அப் நிறுவனம் அளித்துள்ளது.பேஸ்புக்கின் வாட்ஸ் அப் நிறுவனம்  தனது ஆப்பில் புதிய வசதிகளை அளித்துள்ளது.  இதன்படி முக்கியமான உரையாடல்களை மட்டும் ஸ்கிரீனின் டாப் சைடில் பின் -அப் செய்து கொள்ளும் வசதியை ஆப்பில் அளிக்கப்பட்டுள்ளது. 

தினசரி ஏராளமான உரையாடல்கள் மெசேஜ்கள் ஒவ்வொருவருக்கும் வரும். அதில் முக்கியமான உரையாடல்கள், மெசேஜ்களை பார்க்க வேண்டுமெனில் ஸ்க்ரோல் செய்து பார்க்க வேண்டிய நிலை உள்ளது. 

 இனி நீங்கள் உங்களுக்கு வேண்டியவர்களின் முக்கியமான மெசேஜ்களை ஸ்கிரீனின் டாப் சைடில் பின்-அப்  செய்து வைத்துக் கொள்ளலாம். இந்த  "pin important chats"  வசதி அப்டேட் வாட்ஸ் அப் வெர்சனில் உள்ளது.  

இது போன்று முக்கியமான உரையாடல்களை பின் செய்யும் வசதி பேஸ்புக் மற்றும் டுவிட்டரில்  ஏற்கனவே உள்ளது.

தற்போது  WhatsApp beta 2.17.162 or 163 பீடா யூசர்களுக்கு மட்டும் இந்த "pin important chats"  வசதி  உள்ளது. பரிசோதனை முயற்சியில் உள்ள இந்த வசதி பின்னர் ஆன்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இயங்குதளங்களில் கிடைக்கும்.

முக்கிய உரையாடல்களை எப்படி ஸ்கிரீனில் பின் செய்வது என்று பார்ப்போம்

முதலில் வாட்ஸ் அப் மெசஞ்சரை உங்கள் ஆன்ட்ராய்டு அல்லது ஐஓஎஸ் போனில் ஓபன் செய்ய வேண்டும்.

அதன் பிறகு முக்கியமான மெசேஜ்களை  லாங்க் பிரஸ் செய்ய வேண்டும். 

அப்போது பின் ஆப்ஃசன் ஸ்கிரீன்  தோன்றும் .அத்துடன் டெலிட், மியூட், மற்றும் ஆர்சிவ் ஐகான்  டாப் சைட் ஸ்கிரீனில் தோன்றும். 

இதில் பின் ஐகானை கிளிக் செய்ய வேண்டும். அதன் பின்னர் உங்கள் உரையாடல்கள் டாப் ஸ்கிரீனில் பின் செய்து கொள்ளலாம்Writing by Goldenvimal ♥♥♥♥♥ இவன் விமல் உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள் தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

👇🌎 Website Link's முக்கிய இணைப்புகள் 🌎👇

Top Post Ad

Below Post Ad