நாம் கோயிலிலும் பூஜையிலும் ஏன் தேங்காய் உடைக்கிறோம் என்று தெரியுமா?
கோயில்களிலும் வீடுகளிலும் பூஜை செய்யும் போது தேங்காய் உடைப்பதை நாம் வழக்கமாகக் கொண்டிருக்கிறோம். அது ஏன்? அதற்கான காரணம் என்ன என்பதை நாம் என்றைக்காவது யோசித்துப் பார்த்திருக்கிறோமா? நம்முடைய முன்னோர் செய்த ஒவ்வொரு செயலுக்குப் பின்னாலும் ஏராளமான காரண காரியங்கள் உண்டு. தேங்காய் உடைப்பதில் அப்படியென்ன விஷயம் அடங்கியிருக்கிறது?
பூஜையின் போது தேங்காய் உடைப்பதற்கு ஏராளமான தத்துவ காரணங்கள் இருக்கின்றன. தேங்காய் ஒரு மனிதனின் தலை போன்ற அமைப்புடையது. மனிதனின் ஆணவத்தை, கர்வத்தை தான் நாம் தலைக்கணம் என்று குறிப்பிடுகிறோம். பூஜையின் போது தேங்காய் உடைப்பது, தன்னுடைய தலைக்கணத்தை விட்டு உன்னுடைய பாதத்தில் வந்து சரணடைகிறேன். எனக்கு அருள் புரிவாயாக என்று இறைவனிடம் வேண்டுவது ஒரு பொருள்.
தேங்காயின் மேல் ஓடு மனிதனின் கடுமையான மண்டைஓடு மனிதனின் அறியாமை மற்றும் கர்வத்தை உணர்த்துவது. அதனுள் இருக்கும் வெண்மையான பருப்பு தூய்மையான ஞான நிலையை உணர்த்துகிறது. உள்ளே இருக்கும் நீர் ஆத்ம ஞானத்தால் விளையும் பரமானந்தம். அறியாமை, கர்வம், மாயை என்ற கெட்டியான ஓடு உடைந்தால் மட்டுமே ஆத்மஞானம் கிடைக்கும். அதனுள் இருக்கும் பரமானந்த நீரை மனிதன் பருக முடியும் என்னும் தத்துவத்தைத் தான் தேங்காய் உடைப்பது உணர்த்துகிறது.
மேலும் மூன்று முக்கிய காரணங்களும் உண்டு.
1. தேங்காய் தன்னுடைய அகப்பற்றான நீரை அகற்றிவிடுகிறது.
2. அந்த நீரின் உண்மையான சுவையையும் சத்தையும் தன்னுள் இணைத்துக் கொண்டுவிடுகிறது.
3. புறப்பற்றான ஓட்டை விட்டு விலகிவிடுகிறது.
இதனாலேயே ஞானிகள் கொப்பரைத் தேங்காயை ஞானத்தோடு ஒப்பிட்டுப் பாடுகிறார்கள்.
இந்த ஆன்மீகக் காரணங்களுக்காகவே கோயில்களில் தேங்காய் உடைக்கப்படுகிறது
Writing by Goldenvimal ♥♥♥♥♥ இவன் விமல் உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள் தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்